Friday, May 09, 2014

ராகு(ல்) காலம்

1. கருணாநிதி மதுரை வருகையின் போது மு.க.அழகிரி அமெரிக்கா செல்ல திட்டம்...# ஒபாமாவுடன் கூட்டணியா? நீ கலக்கு சித்தப்பு


=============

2 பா.ஜனதாவின் அதிக நம்பிக்கை ஆபத்தில் முடியும்: சரத் பவார்.# மோடி பிரதமர் ஆகிட்டா காங்கிரஸ்க்கு ஆபத்தில் தான் முடியும்.ஒய் டவுட்?


============

3 எந்த நேரத்திலும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவோம்-ஞானதேசிகன்

# யோக காலத்தில் வெளியிட்டாலும் அது ராகு காலமே!
============


4 தொகுதி உடன்பாடு பிஜேபி-8

தேமுதிக-14


பாமக-8
7 கொமக-1

மதிமுக
-
கே-1 # இது பிஜேபி கூட்டணியா? கேப்டன் கூட்டணியா?

ஜே===============


5 நான் கொள்கையில் சமரசம் செய்து கொள்வதில்லை.் -- வைகோ # மிளகு ரசம் ,பூண்டு ரசம் செய்யச்சொல்லி சாப்பிடுங்க.


==============

6 புலி எந்த கூண்டில் இருந்தாலும் உறுமும் -- வைகோ # புலி கூண்டுல இருக்கும்போது உறுமுனா என்ன? கம்முனு இருந்தா என்ன? எல்லாம் 1 தான்


============

7 திருப்பூர் தொகுதி யாருக்குன்னு சத்தியமா தெரியலை : விஜயகாந்த் # உங்களுக்கே தெரியலைன்னா தொண்டர்கள்  இனி திரு திருன்னு விழிப்பாங்களே? ==================


மோடி பிரதமரானால்தான் இந்தியா வல்லரசாகும்: விஜயகாந்த்  # அப்போ கூட்டணில 2 வல்லரசு இருக்கு==================


9  ஒரே மேடையில் விஜயகாந்த்,வைகோ,ராமதாஸ்,பொன்.ராதா# எல்லாரும் கை கோர்த்து போஸ் தரும்போதுஇந்தப்பக்க கார்னர்லகேப்டனும்அந்தப்பக்க கார்னர்ல DRம்


================

10 ஒரு புதிய இந்தியாவை படைக்க அம்மாவால் மட்டுமே முடியும்-சம்பத்# விட்டா படையல் போட்டுடுவீங்க.ஆனா மக்கள் விடமாட்டாங்க


===============


11 திடீர்னு காங் ஜெயிக்கபோகுது பாருங்க-EVKS # படீர்னு சிரிச்சுட்டேன்.செம காமெடி போங்க.


===============

12 வர போகிறது,"அமரர் ஊர்தி இலவச திட்டம்-OPS தகவல்# கல்யாணம் ,கருமாதி ,காதுகுத்து எல்லாத்தையும் இலவசம் ஆக்கிய பெருமை இலை வசம் மட்டுமே


===============

13 நான் போட்டியிடுவதாக நினைத்து ஓட்டு போடுங்கள்-ப.சி.# நாங்கள் ஓட்டுப்போடுவதாக நினைத்து நீங்கள் மனதைத்தேற்றிக்கொள்ளுங்கள்


=================


14 அதிமுகவை தோற்கடிக்கவே கூட்டணி: அன்புமணி ராமதாஸ்# நல்ல வேளை சொன்னீங்க.நாங்க கூட மக்களுக்கு நல்லது செய்யத்தான் சேர்ந்தீங்கனு நினச்ட்டோம்


=================

15 தேர்தலில் ப.சிதம்பரம் போட்டியில்லை #  இவர் கிட்டே உள்ள கெட்ட பழக்கமே இதான், மத்தவங்களை மாட்டி விட்டுட்டு இவர் எஸ் ஆகிடுவாரு

==================

16 காலங்காத்தாலயே எனக்கு 20 மெயில்,30 மிஸ்டு கால் மகிழ்ச்சி - ஹன்சிகா # உங்களுக்கு அனுப்ச்சவன் குரூப் மெசேஜ்ல எல்லாருக்கும் அனுப்பி இருப்பான்==================


17 நிஜ வாழ்க்கையில் நான் குடிச்சதே இல்லீங்க! - சிவகார்த்திகேயன் # நீங்க விஜய் ஆகலாம் ,ரஜ்னி ஆகலாம்.ஆனா கேப்டனா மட்டும் ஆகவே முடியாது.ஆங்=====================


18 தூத்துக்குடி: பின் தங்குகிறது அதிமுக. மதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு? # டாக்டர் அய்யாக்கு குடின்னா தான் ஆகாது.தூத்துக்குடி வெற்றி தேடி=====================


19 சபதத்தை நிறைவேற்றிய ராமதாஸ்… விஜயகாந்துடன் மேடை ஏறவில்லை # இவரு பெரிய நாட்டிய சிகாமணி! நாட்டுக்காக சபதத்தை காப்பாத்திட்டாரு


================


20 தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சால்வை அணித்து ராசியானது பா.ம.க.!! # அந்த வானத்தைப்போல மனம் படைச்ச மன்னவரே! (பிஜிஎம்)


=======================

0 comments: