Thursday, May 01, 2014

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (2 5.2014 ) 8 படங்கள் முன்னோட்ட பார்வை

1. நீ எங்கே என் அன்பே -

வித்யா பாலன் நடித்த இந்திப் படமான கஹானி பெரும் வெற்றி பெற்றது. நெரிசல் மிகுந்த நகர்புறத்தில் காணாமல் போன கணவனைத் தேடும் கர்ப்பிணி மனைவியின் கதை. இந்தியில் இயக்கிய சேகர் காமுலா கஹானியை தெலுங்கில் அனாமிகா என்ற டைட்டிலுடன் டைரக்ட் செய்து வருகிறார். இதில் வித்யா பாலன் நடித்த கேரக்டரில் நயன்தாரா நடிக்கிறார். ஆனால் ஒரு வித்தியாசம் வித்யா பாலன் கர்ப்பிணியாக நடித்தார். நயன்தாரா கர்ப்பிணியாக நடிக்க மறுத்து விட்டதால் அவருக்காக உயிருக்கு ஆபத்தான நோய் கொண்ட பெண்ணாக கேரக்டரை மாற்றிவிட்டார்.

தெலுங்கில் தயாராகும் அனாமிகாவை தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்கள். அதற்கு நீ எங்கே என் அன்பே என்ற சின்னத்தம்பி படப் பாடலின் முதல் வரியை டைட்டிலாக வைத்திருக்கிறார்கள். நயன்தாராவிற்கு தமிழில் இருக்கும் மார்க்கெட்டை கருத்தில் கொண்டு இதனை தமிழில் வெளியிடுகிறார். இதற்கிடையில் நயன்தாரா நடித்த மற்றொரு தெலுங்கு படம் ரிப்போர்ட்டர் என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீசாகிறது.

2 எப்போதும் வென்றான்
 
-8–வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஆர்.ரங்கநாதன் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:–

எப்போதும் வென்றான் படத்தை எடுக்க அதன் தயாரிப்பாளர் ராஜாராம் என் தந்தையிடம் ரூ.95 லட்சம் பெற்றார். என் தந்தை இறந்து விட்டதால் பணத்தை திருப்பி கேட்டேன். படத்தை வெளியிடுவதற்கு முன் தந்து விடுவதாக கூறினார். தற்போது பணத்தை தராமல் படத்தை 4–ந்தேதி வெளியிடுவதாக விளம்பரம் செய்துள்ளனர். எனவே படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.டி.அம்பிகா எப்போதும் வென்றான் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தார்.3 அமேசிங் ஸ்பைடர்மேன் 2!

தமிழ் 3டியில் ரிலீசாகிறது அமேசிங் ஸ்பைடர்மேன் 2!

Amazing Spiderman-2 in 3D
உலகம் முழுவதும் உள்ள குட்டீஸ் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் அமேசிங் ஸ்பைடர் மேன் 2. கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கி உள்ள இந்தப் படத்தை இந்தியாவில் சோனி நிறுவனம் வெளியிடுகிறது.

முதல் பாகத்தில் ஸ்டைபர் மேன் பீட்சா கம்பெனியில் ஹோம் டெலிவரி பாயாக வேலை செய்தார். 2ம் பாகத்தில் யுனிவர்சிட்டியில் படிக்கிறார். ஸ்பைடர் மேனாக ஆண்ட்ரீவ் கேர்பில்டு நடித்திருக்கிறார். உடன் படிக்கும் மாணவியாகவும், காதலியாகவும் எம்மா ஸ்டோன் நடித்துள்ளார். 2ம் பாகத்தில் ஸ்பைடர் மேனின் வில்லன் நிஜமான பவர் ஸ்டார். ஆம் மின்சாரத்தை உறிஞ்சிக் குடித்து மின்சாரத்தை வெளியிட்டு மக்களை அழிப்பவன். ஒரு சிட்டிக்கு தேவையான மின்சாரம்தான் வில்லனின் ஒருவேளை உணவு என்றால் பவரை பார்த்துக் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட வில்லனை ஸ்டைபர் மேன் எப்படி அழிக்கிறார் என்பதுதான் கதை. வில்லனாக நடித்திருக்கிறவர் ஜெம்மி பாக்ஸ். ஹன்ஸ் சிம்மர் இசை அமைத்துள்ளார். டேனியல் மிண்டல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மார்க் வெப் இயக்கி உள்ளார்.

படத்தில் இதுவரை இல்லாத நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 3டி, ஐமேக்ஸ் 3டி தொழில்நுட்பத்திலும் வெளிவருகிறது. இந்தியாவில் ஆங்கிலத்துடன் இந்தி, தெலுங்கு, தமிழ் மொழியிலும் வருகிற மே 1ந் தேதி ரிலீசாகிறது. குட்டீசுக்கு ஒரு கோடை விருந்து ரெடியாகிக் கொண்டிருக்கிறது.4. அங்குசம்

தூத்துக்குடி, : தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களிடையே கொண்டு செல்வதற்காகவே "அங்குசம்' படம் தயாரிக்கப்பட்டுள்ளது, என அதன் கதைக்கு கருவாக இருந்த சீனிவாசன் தெரிவித்தார்.தூத்துக்குடியில் அவர் தெரிவித்ததாவது: தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து திருச்சியை சேர்ந்த நான் தொடர்ந்து போராடி வெற்றி கண்டேன். அதற்கு நான் பல அச்சுறுத்தல்கள், உட்பட பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தேன். இதனை பத்திரிகையில் செய்தியாக வெளியிடப்பட்டது.இதனைப்படித்த இப் படத்தின் இயக்குனர் மனுக்கண்ணன், அரபு நாட்டில் இன்ஜினியரான அவர்,தகவல் அறியும் உரிமை சட்டத்தினையும், நான் பட்ட கஷ்டங்களையும், கருவாக கொண்டு படம் தயாரித்துள்ளார். இந்தப்படம் மக்களிடம் சென்று சேர வேண்டும். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்பதே இப்படத்தின் நோக்கமாகும். பிப். 21 ல் தமிழகம் முழுவதும் இப்படம் திரையிடப்படவுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் பார்த்து பயன் பெற வேண்டும், என அவர் தெரிவித்தார். இதன் பாடலாசிரியர் திரவியன் உடனிருந்தார்.

5.நீ என் உயிரே -

ஸ்ரீலட்சுமி விருஷாத்திரி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம் 'நீ என் உயிரே'. இதில் புதுமுகங்கள் நவரசன் நாயகனாகவும் வைஷாலி நாயகியாகவும் நடிக்கின்றனர். வில்லனாக தங்கவேல் வருகிறார். ரவி, அட்சயா, அபூர்வா உதயஸ்ரீ, பூமிகா, மகந்தகுமார் பவர்டெக்ஸ் செல்வராஜ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தை லலித்ராஜா இயக்குகிறார். படம் பற்றி அவர் சொல்கிறார்.கார்மெக்கானிக்கை கல்லூரி மாணவி காதலிக்கிறாள். எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். காதலித்தவளை கண்கலங்காமல் காப்பாற்ற கார்மெக்கானிக் போராடுகிறான். அவன் வாழ்வில் எதிர் பாராத சம்பவங்கள் நடக்கின்றன. காதல் கணவனை நம்பி வந்தவள் வாழ்க்கை சீரானதா சீரழிந்ததா என்ற கருவில் இப்படம் தயாராகிறது.

இசை: விஜய் மந்த்ரா, ஒளிப்பதிவு: மோகன், ஜீவன் ஆண்டனி, பாடல்: பிறைசூடன், கதை, திரைக்கதை: நவரசன், இணை தயாரிப்பு: பவர்டெக்ஸ் செல்வராஜ், கரூர், கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

6. தாவணிக் காற்று - 

இயக்குனர் வி.ஆர்.பி.மனோகர் இயக்கத்தில் சஸ்பென்ஸ், திரில்லர் படமாக உருவாகி வரும் மே மாதம் முதல் தேதியில் வெளிவர காத்திருக்கும் படம் ‘தாவணிக் காற்று’. இப்படத்தின் கதாநாயகனாக தமிழ், கதாநாயகியாக ஆராத்யா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், முரளி, ரேகா, சுரேஷ், ரவிக்குமார், ஷோகிப், பேபி ஐஸ்வர்யா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இவர்களுடன் இயக்குனர் வி.ஆர்.பி.மனோகரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தை பற்றி இயக்குனர் கூறும்போது, இன்றைய கால சினிமா ரசிகர்களை கவரும்படியான ஒரு சஸ்பென்ஸ், திரில்லரை படமாக இயக்கியிருக்கிறேன். இப்படம் இயல்பான தமிழ் படங்களைப் போல் அல்லாமல் ஆங்கிலப் படத்துக்கு இணையாக இருக்கும்.

குறைவான கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து தெளிவான திரைக்கதை அமைத்து படமாக்கியிருக்கிறோம். படம் பார்ப்பவர்களுக்கு எந்தவொரு இடத்திலும் சலிப்பு ஏற்படாதவாறு விறுவிறுப்பான படமாக இருக்கும்.இப்படத்தின் படப்பிடிப்பை குற்றாலத்தில் இதுவரை எந்த படப்பிடிப்பும் நடைபெறாத இடத்தில் பாடல்கள் காட்சிகளையும், பிற காட்சிகளையும் படமாக்கியுள்ளோம். கிளைமாக்ஸ் காட்சிக்காக சென்னையில் உள்ள ஒரு பங்களா ஒன்றுக்கு முழுமையாக பெயிண்ட் அடித்து, புத்தம் புதிய தோற்றம் கொண்டு எடுக்கப்பட்ட காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

நாயகி ஆராத்யாவிற்கு இது முதல்படமாக இருந்தாலும் மிக அற்புதமாக நடிப்புத் திறமையை வெளியிப்படுத்தியிருக்கிறார். நாயகனுக்கு இந்த படம் நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும். மிக குறுகியகால தயாரிப்பான இப்படம் வருகிற மே மாதம் 1-ம் தேதி வெளிவரவிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இப்படத்துக்கு உதயன் என்பவர் இசையமைக்கிறார். முத்ரா ஒளிப்பதிவை கவனிக்கிறார். ஸ்டுடியோ சந்தோஷ் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு வசனம் மற்றும் பாடல்களை இயக்குனர் வி.ஆர்.பி.மனோகரே எழுதியுள்ளார்.7. ஆதி தப்பு - அழகிரியை கட்சியிலிருந்து சேர்த்தது தப்பா? நீக்கியது தப்பா ? என்று நீங்கள் குழம்பி யோசிக்காதீர்கள். இந்த 'தப்பு'க் கருணாநிதி புதுமுக இயக்குநர் கருணாநிதி என்பதைச் சொல்லிவிடுகிறோம். இவர் இயக்கவிருக்கும் படம் தான் 'ஆதி தப்பு'."சில தொழில்களுக்கான சமூக மரியாதை இன்னும் ஏற்படவில்லை. சமத்துவம், சகோதரத்துவம், என தெருவுக்குத் தெரு பேசிக்கொண்டிருந்தாலும் சாதீய ரீதியான தொழில்கலைஞர்களாகவே இன்னும் சிலர் பார்க்கப்படுகின்றனர். ஆதிமனிதன் விலங்குகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள தயாரித்த இசைக்கருவி தான் 'தப்பு' என்பார்கள். இன்று அந்த தப்புக்கருவிக்கான சமூக அங்கீகாரம் என்பது தாழ்ந்ததாகவே உள்ளது.


தலைமுறைகள் கடந்தும் அதை ஒரு நல்ல இசைக்கருவியாக அங்கீகரிக்கத் தவறிவிட்டோம். அதன் மதிப்பை எடுத்துரைக்கும் படமாக 'ஆதி தப்பு' இருக்கும். சமூக ஏற்றத்தாழ்வுகள் நீங்கி மனிதர்கள் அனைவரும் சமமாக நடத்தப்படவேண்டும் என்பதே படத்தின் மையக்கரு.


சந்தோஷ்குமார், யுகவர்த்தினி, பவானி சிவம் போன்ற புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். சேலம் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பரம்பரை தப்பாட்டக் கலைஞர்களைக் கொண்டு பெரும்பான்மையான காட்சிகளை எடுத்துள்ளேன்" என்கிறார் கதை, வசனம், எழுதி இயக்கும் இந்த இளைஞர் கருணாநிதி. அது 90 வயது இளைஞர் கருணாநிதியின் பழைய பராசக்தி போல் புதுமையாய் வர வாழ்த்துக்கள்.

8. மோக மந்திரம் - வட மாநிலங்களில் வெற்றி பெற்ற இந்தி படம், "மாசூக்கா." இந்த படத்தை, "மோக மந்திரம்" என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்கிறார்கள்.


மேக்னா நாயுடு கதாநாயகியாக நடித்துள்ளார். இவருடன் வித்யா மாளவடே, ஆதித்யா பால் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.


கதாநாயகனுக்கும், இரண்டு பெண்களுக்கும் இடையே நடைபெறும் உறவுமுறை சிக்கல் பற்றிய கதையில் சஸ்பென்ஸ்-திகில் கலந்து படமாக்கப்பட்டுள்ளது.


அபிஸல் அகமத் டைரடு செய்துள்ளார். தீபு சினி ஆர்ட்ஸ் சார்பில் தீபக்குமார் தயாரித்து இருக்கிறார். படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது0 comments: