Sunday, May 04, 2014

சமூக வலைத்தளங்களில் உங்கள் ஜாதி எது?

1. ரயில் தண்டவாளமும் ப்ஸ் சாலையும் அருகருகே வருகையில் சின்னக்குழந்தைகளுக்கு இனம் புரியா சந்தோஷம்=====================


2  கள்ளக்குறிச்சி ல இருந்து 42 கிமீ தொலைவில் கல்வராயன் மலை இருக்காம்.உச்சில ஒரு அருவி .தண்ணி மூலிகைத்தண்ணீராம்.அடுத்த விசிட் அங்கே போகனும்


==============


3 இம்சை அரசன் மாதிரி படம் எடுப்பாங்கனு பார்த்தா அதையே ஜெராக்ஸ்.எடுத்து வெச்சிருக்காங்க # தெனாலிராமன் ட்ரெய்லர்

==================

4  சமூக வலைத்தளங்களில் உங்கள் ஜாதி எது? என்பதை யாரிடமும் பகிராதீர்கள்.நாம் எதிர்பாராத ஒரு தருணத்தில் நமக்கு தர்ம்சங்கடத்தை விளைவிக்கலாம்============


5 ஏப்ரல் ,மே மாசம் பொண்டாட்டிங்களுக்கு கொண்டாட்டமான மாசம் # வெய்யில் ,வெக்கை ,வேக்காடு னு சாக்காடு சொல்லி எஸ் ஆகிடுவாங்க


===================


6 விருதாச்சலம் ஏரியாவில் நான் பயணிக்கையில் கண்ணி ல் த்ட்டுப்பட்ட வித்தியாச ஊர்கள் 1 முகா சாப ரூர் 2 கருவேப்பிலங்குறிச்சி ( ஆண்டிமடம் அருகே)


================


7 பொண்ணுங்க கிட்டே பசங்க பேசறதை கவனிங்க.எப்படி எல்லாம் பேசக்கூடாது என்பதை கத்துக்கலாம்


=================

8  மிடில் க்ளாஸ் மக்களைப்பத்தி மிட் நைட் ல கவலைப்படறான் நைட். 12 ஆனாலும் குட் நைட் சொல்லாத கேரளத்தமிழன்=================


9 எக்சாமுக்கு விடிய விடியப்படிக்க மாட்டான்.நைட் ஷிப்ட்ல ஒழுங்கா வேலை செய்ய மாட்டான்.கடலை சாகுபடின்னா மட்டும் சாப்பாடு ,தூக்கம் பாக்கமாட்டான்==================


10 எச்சரிக்கை - நான் சிகப்பு மனிதன் - பெண்கள் தங்கள் குடும்பத்துடன் பார்ப்பதைத்தவிர்க்கவும் # பாரீன் ட்வீட்டர் அப்டேட்படி===================


11 நிஜ வாழ்வில் தன் காதலியை அடுத்தவன் பாத்தாலேகோபம் பத்திக்கும்.தமிழ் சினிமாவில் மட்டும் காதலியை தன் காதலைப்பயன்படுத்தி சித்ரவதைப்படுத்திங்


=================


12 தன் காதலை கருவியாக்கி காதலியை வியாபாரம் ஆக்கியோர் பட்டியல் 1 செல்வராகவன் 2 சிம்பு 3,பிரபுதேவா 4 விஷால்


================


13 பெரும்பாலான ஊர்களில் பெருமாள் கோவிலும் ,சிவன் கோவிலும் பக்கத்து பக்கத்துலயே இருக்கே? இதுக்கு ஏதாவது ஸ்தல புராணம் இருக்கா?================


14  அழகை ரசிக்கறவங்க ,அழகை வர்ணிக்கறவங்க அழகா இருக்கனும்னு அவசியம் இல்லை.நல்ல கலா ரசிகனா இருந்தாப்போதும்


==============


15 நிஜ வாழ்வில் பெண்ணிடம் பேசவே தயங்கி சமூக வலைத்தளத்தில் மட்டும் நேருக்கு நேர் புகழ்ந்து அந்தப்பொண்ணுக்கே மென்சன் போடும் தில்லானவன் தமிழன்


==============


16 சொந்த வாழ்க்கைல சுடுதண்ணி கூட வைக்காம சமையல் குறிப்பை மாங்கு மாங்குனு படிச்சு எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி டிப்ஸ் போடுவான் தமிழன்


================


17 இயற்கைக்குளிரூட்டி மண் பானை ஜில் நீரைவெய்யிலுக்கு குடிக்காம பிரிட்ஜ் வாட்டரை கவுரத்துக்காகக்குடிச்சு உடல் சூட்டை கிளப்பிக்குவான் தமிழன்


==============


18 காதலியின் கன்னத்தை உதட்டால் அடிக்கடி புரட்டிப்பார்க்கும் எல்லோருமே இதழாளர்களே!


===============

19 விட்டா நம்ம தலைவரு " மோடி பிரதமர் ஆவது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு" னு சொல்லிடுவார் போல.==============

20 கத்தி படம் ரிலீஸ் ஆகும் வரை விஜய் திக் விஜய் ஆகத்தான் இருப்பார் # திக் திக் -னு இருக்கும் , ============================

0 comments: