Tuesday, May 13, 2014

ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் மோடி

1. மோடி - விஜய் சந்திப்பு @ கோவை.இதனால் கத்தி படத்தின் புக்கிங்க்க்கு தியேட்டர் ஓனர்கள் எம்ஜி ( மினிமம் கேரண்டி) 50% அதிகம் கட்டனுமாம்


===========


2 மோடி இன்னுமா சிவகார்த்திகேயன் கிட்டே ஆதரவு கேட்கலை.அவர் அடுத்த ரஜினி ஆச்சே?


===========


3 மோடி விஜய் வீட்டுக்குப்போனாலும் விஜய் மோடி வீட்டுக்குப்போனாலும் விஜய் தன் குடும்பத்தோட ஜெ வீட்டுக்குப்போக வேண்டி இருக்கும்

=============


4 மோடி புரொடக்சன்ஸ் வழங்கும் இளைய தளபதி நடிக்கும் " நான் காவி மனிதன் " இன்று போயஸ் தோட்டத்துக்கு எதிரே பூஜை


===============

5 விஜய் - டிரைவர்.மோடி வரச்சொன்னார்னு கார்ல கூட்டிட்டு வந்து போயஸ் தோட்டத்துக்கு வந்திட்டே?  


அப்டி சொன்னாதான் வருவீங்கனு சொன்னாங்க.


===============\

6 விஜயை கலாய்ச்சா எந்த பத்திரிக்கைலயும் உன் படைப்பு வராது னு ஒரு ரசிகர் மிரட்றாரு.அய்யோ ராமா! என்னை கலாய்க்கச்சொன்னதே அவங்கதான்யா! ;-))

==============


7 விஜயைக்கலாய்ச்சா அவன் அஜித் ரசிகன் ,ரஜினியை கலாய்ச்சா அவன் கமல் ரசிகன் இது தான் தமிழ் சினிமா ரசிகனின் லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு

=============


8 மோடிக்குப்போட்டியாக ராகுல் நமீதா வை சந்தித்து கை க்கு வலு சேர்க்க முடிவு.இது வும் மரியாதை நிமித்தமான சந்திப்பே!


===================


9 சினிமாவை ரசிப்பான்.சினிமா ஹீரோ களத்தில் இறங்குனா ஆதரிப்பான்.ஆனா அவர் கை காட்டும் கட்சிக்கு வாக்களிக்க மாட்டான்.அவன் தான் தமிழன்

============


10 மோடியைப்பொருத்தவரை அவருக்கு வந்த வரை லாபம்.ஆனா ரஜினி ,விஜய் க்கு இதனால் பல பிரச்சனைகள் நெருக்கடிகள் ஜெ வால் வரலாம்

============


11 ஒரு பெண்ணின் அதிக பட்ச அழகு அவள் தன் குழந்தையைக்கொஞ்சும்போது வெளிப்படும். ஆணின் அழகு அவன் தன் மனைவிக்கு தன் தோளில் அடைக்கலம் தரும்போது

=============

12 மோடி - விஜய் சந்திப்பு வெற்றிகரமான 2 வது நாள்.எந்தப்பிரச்சனையும் ஜெ வால் விஜய்க்கு இது வரை வரவில்லை # கவுன்ட் டவுன் கண்ணாயிரம்


============


13 யார் யாரையோ சந்திக்கும் மோடி பழசை எல்லாம் மறந்து தன் மனைவி யசோதா வை சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்தால் இவருக்கு மக்கள் ஆதரவு பெருகும்

============


14 ஆபீசுக்கு தினமும் டக் இன் சர்ட் பண்ணி பழக்கமானதால் பைஜாமா ,வேட்டி,லுங்கி அணியும்போது கூட சர்ட்டை இன் பண்ணிடறேன்


===============


15 அபிமான ஆதர்ச ஹீரோ ஹீரோயினை டிபி யாக வைத்திருப்பவர்கள் தங்கள் வாழ்க்கைத்துணை டிபி வைப்பது அரிது # நெட் அவதானிப்பு

=================


16 4 பேர் முன்னிலையில் அவமானப்படும்போது பெண் அழுது சமாளித்து விடுகிறாள் .ஆனால் ஆண் அப்படியே கூனிக்குறுகி விடுகிறான்


============


17 எதிர் வீட்டில் தென்னந்தோப்பும் பக்கத்து வீட்டில் மாந்தோப்பும் இருப்பவன் வீட்டில் தினம் தினம் தேங்கா சாதம் மாங்கா சாதம் தான்


==============


18 ஒரு பெண்ணுக்கான அதிக பட்ச அவமானம் அவள் கற்பை சந்தேகித்தல் , ஒரு ஆணின் அதிகபட்ச அவமானம் அவன் ஏழ்மையை எள்ளி நகையாடல்


=============

19 நகைக்கடைல 10 பவுன் தங்க நகை வாங்குனாக்கூட 1 கிராம் கொசுறு கேட்டு வாங்குபவள் தான் அக்மார்க் அக்கப்போர் தமிழச்சி 


==========

20 ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் மோடி என்னைப்பார்த்து பொத்தாம்பொதுவாக சிரித்தார்.நாட்டின் வருங்காலப்பிரதமரே என்னைத்தெரிந்து வைத்திருக்காரே?!


=============0 comments: