Friday, May 30, 2014

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (30 5.2014 ) 8 படங்கள் முன்னோட்ட பார்வை

1. அப்சரஸ் - ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் மலையாளத்தில் நடித்த படம், ‘மகர மஞ்சு’. இந்தப் படத்தை தமிழில் அன்பு இமேஜின்ஸ் நிறுவனம் ‘அப்சரஸ்’ என்ற பெயரில் டப் செய்துள்ளது.  லெனின் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு மது அம்பாட், இசை, ரமேஷ் நாராயணன். வசனம், பாடல்கள்: மருதபரணி.

சரஸ்வதி, மகாலட்சுமி, திரவுபதி ஆகிய பெண் தெய்வங்களுக்கு உருவம் படைத்து வரைந்தவர், புகழ்பெற்ற ஓவியர் ரவிவர்மன். நாட்டியக்காரி, விதவை, தாசி, மன்னரின் மகள் ஆகிய  பெண்களை அவர் சந்தித்தபோது ஏற்பட்ட சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. அந்த பெண்களாக கார்த்திகா, பூர்ணா, நித்யா மேனன், மல்லிகா கபூர் நடித்துள்ளனர்

புருவ அழகி கார்த்திகா பருவ அழகியாக வந்த முதல் மலையாளப் படமான ‘மகரமஞ்சு”(தமிழில் அப்சரஸ்) ஒரு கில்மாப்படமா? - கார்த்திகா பேட்டி


 

2 கல்பனா ஹவுஸ் - அவன் இவன் படத்திற்கு பிறகு மதுஷாலினி தமிழில் நடிக்கும் புதிய படம் ‘கல்பனா ஹவுஸ்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் குமார் இயக்குகிறார்.


கல்பனா ஹவுஸ் படம் ஏற்கெனவே கன்னடம், தெலுங்கில் எடுக்கப்பட்டு வெற்றியை கண்டுள்ளது.
 
 
இப்படத்தில் வேணு, கார்த்திக், திரில்லர் மஞ்சு மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். லியாண்டர் இசையமைக்கிறார், ஜி. பார்த்திபன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
 
 
பிரபல  என்கவுண்டர்  போலீஸ்  அதிகாரி  தனது  குடும்பத்துடன் ஓய்வெடுப்பதற்காக  காட்டுக்குள்  இருக்கும்  கெஸ்ட்  ஹவுஸில்  வந்து தங்குகிறார்.
 
 
அங்கு தங்கியிருப்பவர்களில்  ஒவ்வொருவராக  பழி  வாங்கப்பட்டு  கொலை செய்யப்படுகிறார்கள்.  இதற்கு  காரணம்  என்ன என்பதை  மைசூர்  காட்டுக்குள் திகிலூட்டும்  பேய்  படமாக  உருவாக்கி  வருகிறார்கள்.
 
 
படத்தின்  பரபரப்பும்,  விறுவிறுப்பும் குறையாமல்  இருப்பதற்காக  பாடல்கள் இல்லாத  படமாக  தயாரித்து  வருகிறார்கள்.
 
 
 
 
3 ஒகேனக்கல் - எழில் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக எ.தமிழ்வாணன், எஸ்.மூர்த்தி, பி.டி.எஸ்.திருப்பதி ஆகிய மூவரும் இணைந்து  தயாரித்திருக்கும் படம் ‘ஒகேனக்கல்’. 


இந்த படத்தில் பாபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக மும்பையைச் சேர்ந்த ஜோதிதத்தா நடிக்கிறார். இன்னொரு நாயகனாக பிருத்வி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ராவியா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பி.டி.எஸ்.திருப்பதி நடிக்கிறார். மற்றும்  உமாபத்மநாபன், நளினி, லதாராவ், நிழல்கள்ரவி, டெல்லிகணேஷ், காதல்தண்டபாணி, கராத்தே ராஜா, ஆனந்த், அருள்மணி, முத்துகாளை, கிரேன் மனோகர், பிளாக்பாண்டி, காந்தராஜ், தீப்பெட்டி கணேசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.பி.ஜி.வெற்றி ஓளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சரண் பிரகாஷ் இசையமைத்துள்ளார். விவேகா, எழில்வாணன், தென்றல் செந்தில் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். பி.மோகன்ராஜ் படத்தொகுபை கவனிக்க, துரைவர்மன் கலையை நிர்மாணித்துள்ளார். தினா, நசீர்பாபு, ரமேஷ் ரெட்டி ஆகியோர் நடனம் அமைத்துள்ளனர். இந்தியன் பாஸ்கர் சண்டைப்பயிற்சி அமைக்க, சிவா தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்கிறார்.இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி எம்.ஆர்.மூர்த்தி இயக்குகிறார். படம் குறித்து இயக்குநர் எம்.ஆர்.மூர்த்தி கூறுகையில், “ஒகேனக்கல்லில் நடந்த நிஜ சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது.  சீட்டுகம்பெனி மோசடியை இந்த படத்தில் கையாண்டிருக்கிறேன். நாட்டில் இன்று அடிக்கடி பரபரப்பாக பேசப்படும் சீட்டு கம்பெனி மோசடியால் எத்தனையோ குடும்பங்கள் எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பது தான் கதை.  இந்த கதையுடன் காதலை சேர்த்து கமர்ஷியலாகப் படமாக்கி இருக்கிறோம். இப்படத்தின் பெரும்பகுதி ஒகேனக்கல்லில் படமாக்கப்பட்டுள்ளது.” என்றார்.
இப்படத்தின் மூர்த்தி கன்னடத்தில் மூன்று வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். தமிழில் இதுதான் இவருக்கு முதல் படம்.
 4 “அதுவேற இதுவேற” -படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் பாராட்டியுள்ளனர்.


களிகை G.ஜெயசீலன் வழங்க ஜெனி பவர்புல் மீடியா படநிறுவனம் சார்பாக பெல்சி ஜெயசீலன் தயாரிக்கும் படம் “அதுவேற இதுவேற”. இந்த படத்தில் வர்ஷன் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடி சானியாதாரா. மற்றும் இமான் அண்ணாச்சி, கஞ்சாகருப்பு, பொன்னம்பலம், சிங்கமுத்து, தளபதி தினேஷ், தியாகு, ஷகீலா, போண்டாமணி, சுப்புராஜ், வேல்முருகன், யோகிபாபு,ஆகியோர் நடிக்கிறார்கள். இமான் அண்ணாச்சி முழுக்க முழுக்க நகைச்சுவை நடிகராக வளம் வருகிறார். படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் M.திலகராஜன். இசையமைப்பாளர் தாஜ் நூர். ஒளிப்பதிவு ரவிஷங்கர். படம் பற்றி இயக்குனர் திலகராஜனிடம் கேட்டோம்…..
 படத்தை பார்க்க வரும் ரசிகர்கள் அனைவரும் இரண்டு மணி நேரம் சந்தோஷமாக சிரித்துவிட்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே உருவாக்கப்பட்டுள்ள படம். சென்னைக்கு எவ்வளவோ பேர் என்னன்னவோ ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் வருவார்கள். ஆனால் தாதாவாக வேண்டும் என்று வரும் ஒருவனது காமெடி கதைதான் இது. இந்த படத்தை பார்த்த சென்சார் உறுபினர்கள் பார்த்து ரசித்துவிட்டு சான்றிதழ் வழங்கி நல்ல படம் என்று பாராட்டினார்கள். இதை கேள்விப்பட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் படத்தை வாங்க போட்டி போட்டு கொண்டு இருக்கிறார்கள்.


 இதுவே சின்ன படத்திற்கு கிடைத்த பெரிய வெற்றி என்கிறார்.

5 அம்மா...அம்மம்மா. - தமிழ் சினிமாவின்  மோஸ்ட்வாண்டட் அம்மா சரண்யாதான். இப்போது அவர் "அம்மா...அம்மம்மா..." என்ற முழுநீள அம்மா சென்டிமென்ட் படத்தில் நடிக்கிறார். சம்பத் சரண்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். ஆனந்த், சுஜிதா, தேவதர்ஷினி, சாந்தி, வில்லியம்ஸ் என நிறைய டி.வி. நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள். மோகமுள், பாரதி, பெரியார் படங்களில் ஞானராஜசேகரனிடம் உதவியாளராக இருந்த பாலுமணிவண்ணன் டைரக்ட் செய்கிறார்.

படம் பற்றி அவர் இப்படிக் கூறுகிறார். "சம்பத், சரண்யா ஜோடிக்கு 15 வருடங்களாக குழந்தை இல்லை. இரண்டு ஆண்குழந்தை கொண்ட தேவதர்ஷினிக்கு மூன்றாவது பெண்குழந்தை பிறக்கும்போது தேவதர்ஷினி இறந்து விடுகிறார். அந்தக் குழந்தையை சரண்யா தம்பதிகள் தத்தெடுத்து வளர்க்கிறார்கள். ஆனால் குழந்தையின் இரண்டு அண்ணன்களும் தங்களுக்கு தங்கச்சி பாப்பா வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள். காரணம் அந்த குழந்தையின் வடிவில் தங்கள் தாயை பார்க்கிறார்கள். இந்த பாசச் சிக்கல் எப்படி தீர்க்கப்படுகிறது என்பதுதான் படத்தின் ஸ்கிரீன்ப்ளே என்கிறார் பாலுமணிவண்ணன்.


 
6 பூவரசம்பீப்பி’ -எல்லோருக்கும் அவரவர் பால்ய காலத்தை நினைவுபடுத்திப் பார்ப்பதை விட சந்தோஷம் தரும் விஷயம் வேறு ஏதாவது இருக்க முடியுமா என்ன? அதிலும் பால்ய காலத்தின் பள்ளி விடுமுறை காலம் அற்புதமானது. கிராமத்து சிறுவர்களுக்கு பீப்பி ஊதுவதும், பொன்வண்டு பிடிப்பதும், நீச்சல் அடிப்பதும், கில்லி விளையாடுவதும்தான் பிடித்தமான பொழுதுபோக்கு.அப்படி விளையாடித் திரியும் மூன்று சிறுவர்கள் ஒரு கொடூரமான வன்முறையை நேரில் பார்க்க நேரிடுகிறது. அந்த காட்சி அவர்களை எப்படி மாற்றுகிறது, அதன் பாதிப்புகள், விளைவுகள், போக்குகள் என்ன என்பதை அவர்களின் மனநிலையில் இருந்து பேசுகிற படம் தான் ‘பூவரசம்பீப்பி’


இந்தப்படத்தை இயக்கியுள்ள ஹலிதா சமீமின் சொந்த ஊர் தாராபுரம். தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ள மற்றுமொரு பெண் இயக்குனர். இயக்குனர் மிஸ்கின், சமுத்திரகனி, புஷ்கர்-காயத்ரி ஆகியோரிடம் பணியாற்றியவர்.ஆனால் அவர்களின் சாயலோ பாதிப்போ இந்தப்படத்தில் தெரியாது என்கிறார் ஹலிதா ஷமீம். இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளரான மனோஜ் பரமஹம்சா இந்தப்படத்தின் இரண்டு தயாரிப்பாளர்களுள் ஒருவரும் கூட.. வரும் மே-30ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸ் ஆகிறது.

 

7 THE  TOWER - On Christmas Eve at Tower Sky, an ultra-luxurious building complex, a White Christmas party is held to dazzle its equally high-end tenants and VIP guests. Dae-ho, the manager of the building and single father, is forced to cancel plans with his daughter Hana to work the event. 

 
His Christmas is saved when Yoon-hee, the food mall manager with a secret crush on Dae-ho, offers to babysit Hana during the party. Meanwhile, Young-ki the legendary fire chief of Yoido Station has finally promised his first holiday date night to his long suffering wife. The party is in full swing with the spectacular sight of two helicopters flying overhead just to spray snow on the partygoers and make everything perfect.


 When unthinkable disaster strikes, Dae-ho and Young-ki must summon all their strength and courage to save the lives of thousands but at what cost to themselves and their loved ones?
 Manthagini

8  மந்தாகினி

0 comments: