Sunday, May 04, 2014

உங்கமேலயும் ஏதாவது ரேப் கேஸ் இருக்கா?

1. பொருளாதாரம் பற்றி ஜெ.விற்கு ஒன்றும் தெரியாது! - ப.சி# ஏழைகளின் வாழ்வாதாரம் பற்றி காங்கிரசுக்கு ஏதும் தெரியாதே அது போல?===================


2 அண்ணாவிடம் அறிவை பெறலாம், அம்மாவிடம் அத்தனையையும் பெறலாம்-நாஞ்சில் சம்பத் # கோர்ட்டாலயே அந்த அளவுக்குமீறி சேர்த்த சொத்தைப்பெற முடியலையாம்


===================


3  என் தொண்டர்கள் குடிக்கமாட்டார்கள்-அன்புமணி# தவிச்ச வாய்க்குத்தண்ணி கூட குடிக்க மாட்டாங்களா? தொண்டை வறண்டுடாது?


==================


4 தமிழர்களை நாங்கள் வஞ்சித்தது இல்லை-தங்கபாலு# எங்களை வஞ்சித்தவனை கிஞ்சித்தும் மறப்பதும் இல்லை.தேர்தலில் மன்னிப்பதும் இல்லை"


======================


5  வடிவேலுவை மிரட்டினால் கடும் விளைவுகள் ஏற்படும் - சீமான் # தெனாலி நீ காலி ,முடிஞ்சுது உன் ஜோலி
===========================


6 அம்மா ஆட்சியில் கடைக்கு போக காசு தேவையில்லை-பாத்திமா பாபு#சாக்கடைக்குப்போனாலும் 5 ரூபா வேணும்=================


7 காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது-வாசன்# அப்புறம் ஏன் காங் விஐபி ங்க எல்லாம் சீட் வேணாம்னு பம்மறாங்க?====================


8 மோடி அலை இல்லை-பிரியங்கா # அலையைப்பார்க்கனும்னா மக்கள் கடல் இருக்கும் BJPகூட்டத்துக்கு வாங்க.பாலைவன்ம் மாதிரி வெறிச்சோடிய காங் மேடை்


===================

9 கன்னத்தில் பளார் விட்ட ஆட்டோ ஓட்டுநரை சந்தித்தார் அரவிந்த் கேஜ்ரிவால் # எதுக்காக என்னை அடிச்சே? எனக்குப்பிடிக்கலை அதான் அடிச்சேன்.


==================


10 நட்பு என்பது பாலின வேறுபாடுகளைக் கடந்ததாக இருக்க வேண்டும்" - பெண் நீதிபதி # ஓக்கே மச்சி.உன் போன் நெம்பர் குடு னு எவனாவது கேட்டுடப்போறான்


=======================


11 பாமகவைத் தவிர 'வேறு யாரும்' டெபாசிட் வாங்கக் கூடாது... ராமதாஸின் 'டபுள் மீனிங்' பேச்சு!# தேர்தல் முடிவுக்குப்பின் ஜகா வாங்கக்கூடாது


===================


12 ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தில் ஜெயலலிதாவுக்கு அக்கறை இல்லை: மு.க.ஸ்டாலின்: # ஓக்கே.நக்கல் பண்றாரு.


==================


13  நல்லது செய்வாரென நினைத்தால் பதவியை ராஜினாமா செய்து நிற்கிறார்' கெஜ்ரிவால் - ஷீலா தீட்சித் # அது தான் நாட்டு மக்களுக்கு செய்யும் நன்மை


=======================


14  ஜே.கே. ரித்தீஸ் அதிமுகவில் இணைந்தார் # போத்தீஸ் ரெடிமேட்ஸ் ராமராஜ் வேட்டி ல இணைஞ்சாலே தமிழன் கண்டுக்க மாட்டான்.இவர் இணைஞ்சா என்ன?


===================

15  கங்கையே சூதகமானால் எங்கே போய் மூழ்குவது -கலைஞர் # தலைவரே விரக்தியாப்பேசுனா தொண்டர்களை என்ன சொல்லி நோவது?


===================


16  காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. காப்பி அடித்திருக்கிறது: ராகுல். # மோடி ன்னா டீ தான் னு எல்லாருக்கும் தெரியும்.காங் தான் காபி
================


17  கூடங்் உதயகுமாருக்கு 3 மணிநேரம் அரசியல் பாடம் எடுத்தேன் - சீமான் # சொல்லிக்குடுத்தது நல்ல வாத்தியார்னா அதை வெளில சொல்லிட்டிருக்கமாட்டார்=================


18 என்னை அடித்தால் தாங்கி கொள்வேன். திரும்பி அடிக்கமாட்டேன் : கெஜ்ரிவால்# எல்லாம் செட்டப்புனு பேசிக்கறாங்க்ளே?


==================


19 கற்பழிப்புக்கு மரண தண்டனை கூடாது - முலாயம் சிங்#இப்டி எல்லாம் ஏடாகூடமா கருத்து சொன்னா"ஏன்?உங்கமேலயும் ஏதாவது ரேப் கேஸ் இருக்கா?ம்பாங்க=================20 2 லிப் கிஸ்.சீன் இருப்பதால் நான் சிகப்பு மனிதன் க்கு U/A - சென்சார். # தமிழ் சினிமாவுல கமல் மாதிரி கிஸ் தர ஆளில்லை.


======================

0 comments: