Sunday, May 11, 2014

30 நாள் பல் துலக்காம டிமிக்கி கொடுக்க ஒரு கிராமத்தானின் ஐடியா

1, ஜில்லா 100 வது நாள். மோடி விஜய் சந்தித்து 2 வது நாள் # கவுண்ட் டவுண் ஸ்டார்ட்


===========


2 மோடிக்கு ஒரு பொண்ணு இருந்து ராகுல் அந்தப்பொண்ணைக்கட்டி மாப்ளை ஆகிட்டா பிஜேபி காங் இணைப்பு விழா நடந்துடுமில்ல? # கற்பனை ட்விஸ்ட்

============

3 அய்யய்யோ என் கையைப்பிடிச்சு இழுத்துட்டார் ராகுல் னு இன்னும் எந்தப்பொண்ணும் கிளம்பலையா? #பப்ளிசிட்டி ,எலக்சன் ஸ்டண்ட்

==============

மங்கல்யக்காரின்னா மாசம் ஒருக்கா பூசை போடனுமாம் #,பழமொழி = பொண்டாட்டின்னா மாசம் ஒருக்கா அடிக்கனுமாம் .ஹூம்.கனவுல கூட நடக்காது======================


5 ஈரோடு மாவட்ட வாய்க்கால்களில் தண்ணி நிறுத்திட்டாங்க.கடைசி இரு தினம்.துணி துவைக்கறவங்க நாளை துவைச்சுக்குங்க ( 20 4 2014 )=======================


6 வாய்க்காலில் துணி துவைக்கப்போவதால் ஏற்படும் நன்மைகள் 1 துணி அலாச ஏராளமான தண்ணீர்.2 ஆனந்த டைவ் குளியல் 3 பொண்ணுங்களை லாங்க் ஷாட்டில் சைட்


==================


7 நேற்று - விஜய் தான் மாஸ் .நான் எட்டாங்கிளாஸ் பாஸ் .இன்று = அம்மா தான் மாஸ் .பிடுங்கிடுச்சு கரண்ட் கம்ப FUSE # இட்ஸ் கான் சல்மான் கான்


====================


8 சந்துல யாரையும் காணோமே? தமிழன் திருந்தீட்டானா?சனிக்கிழமை நைட் சரக்கு அடிச்சது இன்னும் தெளியலையா?


=====================


9 கோடையில் காலையில் வேப்பமரத்தின் கீழ் நின்று வேப்பம்பூக்களின் மணத்தை நுகர்வது பிராணயாமத்துக்கு இணையான பலனைத்தரும்=====================


10 நுங்கு சாப்பிடவோ ,பனம்பழம் ,பனங்கிழங்கு ,தெளுவு ( பதநீர் சுண்ணாம்பு )க்காகவோ நீ பனைமரத்தின் கீழ் நின்னாலும் சமூகம் கள் என நினைக்கும்


=====================


11 அந்தக்காலத்தில் எல்லாம் ரெகுலரா ஒரே பால்காரர்ட்ட பால் வாங்குனா கன்னுக்குட்டி போட்டா சீம்பால் இலவசம்.இப்போ கிடையாது


=====================


12 தமிழனின் காலைப்பொழுதுகள் டீக்கடைகளுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது.ஒரு டீக்கடைக்கு குறைந்த பட்சம் 10 பேர்


=====================13 எந்தப்பரிசை நீ தந்தாலும் வலது கையில் வாங்கிக்கொள்வேன்.பரிசே நீ தான் எனும்போது ஏந்திக்கொள்ள இரு கை போதாது என்பேன் # இன்னா வெயிட்டு


======================


14 பச்சை நிறப்புடவை உடுத்தும்போது நீ இயற்கையின் கை வண்ணம். நீல நிறப்புடவை உடுத்தும்போது ஸ்கை (SKY)வண்ணம்


=====================


15 தமிழ் நாட்டு மக்களின் நன்மைக்காக புரட்சித்தலைவியும் ,தமிழ் இனத்தலைவரும் வெய்யிலில் சிரமப்படுவதைப்பார்த்தால் எனக்கு ரத்தக்கண்ணீர் வருது


======================


16 பனம்பழம் முழுசா சாப்ட்டா 30 நாள் பல் துலக்குனதுக்கு சமம்.


====================

17 தமிழன் சொல்லாமல் செய்தவை - ஊழல் ,செய்தும் சொல்லாதவை - பதுக்கல்


=====================18 நேசித்த பெண்ணிடம் சுடு சொல் வேண்டாம்.அது காதலுக்கு நல்லது.ஒவ்வொரு வேளை உணவுக்குப்பின்னும் ஒரு டம்ளர் சுடுநீர் குடிக்கவும்.ஆரோக்யம்====================1 9மக்கள் டி வி ல கேப்டன் தட்டுப்படுவதே இல்லை.ஆனா கேப்டன் டிவில ராமதாஸ் ,அன்புமணி யை அடிக்கடி காட்றாங்க # கேப்டன் ராக்ஸ்====================


20 25 4 2014 வெள்ளி 8 படம் ரிலீஸ் ஆகுது.அதுல பாதிப்படங்களை 24 4 2014 வியாழன் ரிலீஸ் செஞ்சா தேவலை.லீவ் நாள்.செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா ?


=============================

1 comments:

Unknown said...

செந்திலி,

இப்போது யெல்லாம் உங்கள் தளத்துக்கு வருவதே இல்லை. காரணம் நீங்கள் எழுதும் இந்த மலினமான ஜோக்குகள் தான் காரணம். எதோ வாரத்துக் ஒரு முறை எழுதினால் பாரவில்லை தினமும் நாலா? முன்பெல்லாம் அவ்வெப்போது சிறுகதை, பத்திரிக்கை செய்திகள் என்று அருமையாக இருக்கும். உங்கள் தளம் உங்கள் இஷ்டம் ஆனால் முன்னால் வாசகனாக என் கருத்து. நன்றி.