Sunday, May 18, 2014

கொச்சியில் நிச்சயம் , சென்னையில் திருமணம், அப்போ.......

1. சிறந்த நிர்வாகி மோடியும் இல்லை.தமிழ்நாட்டு லேடியும் இல்லை.என் டாடி தான் -ஸ்டாலின்: # அழகிரியை சமயம் பார்த்து கழட்டி விட்டதைச்சொல்றார்?


=================


2  அமலா பால் - இயக்குநர் விஜய். கொச்சியில் நிச்சயதார்த்தம்; சென்னையில் திருமணம்! # அப்டியே அடுத்த முக்கிய தகவல் ஸ்தலம் எதுனும் சொல்லிடுங்க


====================


3 மக்களை தவறாக வழிநடத்துவதில் எல்லைகளை கடந்துவிட்டார் மோடி: சோனியா..# இத்தாலி எல்லையைத்தாண்டி வந்தவங்க அதை சொல்லக்கூடாது


======================4 மோடி மூத்த தலைவர்களை ஓரங்கட்டிவிட்டார்: ராகுல் குற்றச்சாட்டு...# எல்லாம் உங்களைக்கட்டம் கட்டத்தான்====================5 வழக்கை முடிக்காத கட்சிக்கு எதற்கு வாக்களிக்க வேண்டும்-சீமான்# பெனால்டி சான்சில் கூட சேம் சைடு கோல் போட்டுட்டறாங்க சிலர்


=================


6 தோல்வி பயத்தால் ஆளுங்கட்சியால் 40 தொகுதிகளிலும் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது -மு.க.ஸ்டாலின்# இது உண்மை தான்.200 டூ 500


=============================7 ஏராளமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரம் பழுது @ புதியதலைமுறை செய்திகள் # இதெல்லாம் செக் பண்ணி கொண்டார மாட்டீங்களாய்யா?


===================


8 அமைதியாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடக்கிறது…: ஜெயலலிதா # ஆமா மேடம். "200" % உண்மை ;-))"


=====================9 பத்து மணிக்கு வாக்களிக்கிறார் விஜய்.. இடம்: அடையாறு மாநகராட்சி பள்ளி # இதுலயும் அஜித் முந்திக்கிட்டாரே மிஸ்டர் கத்தி !


=================


10  பேஸ்புக் காதலியுடன் கணவன் தலைமறைவு : மனைவி பொலிசில் புகார்..@ கோவை வடவள்ளி # மருதமலை ல நல்லா தேடுங்க தெய்வானை=====================


11 வாக்களிக்க ஊழியர்களுக்கு லீவு கொடுக்காத சென்னை சில்க்ஸ்.. சீல் வைப்பு # இழுத்து மூடிட்டாங்களா? சபாஷ்!


========================


12  முரசு சின்னத்தை காணவில்லை -விஜயகாந்த், இது கூட்டணி தொகுதி தாமரை சின்னத்திற்கு போடுங்கள் -பிரேமலதா # இதுக்குத்தான் சம்சாரம் வேணும்கறது=======================


13 அஜித் புதுப்பட பரிசீலனை டைட்டில்கள் ஆயிரம் தோட்டாக்கள், துடிக்குது புஜம்  # 2 வது டைட்டிலே ஓக்கே தான் , ஜெயிப்பது நிஜம்னு ரைமிங்கா வருது


====================


14 திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: கருணாநிதி # அணையப்போகும் விளக்குகூட பிரகாசமாத்தான் எரியும் , தெரியும் கிகி கி ====================


15 தேர்தலில் நல்லவர் வெல்வது நிச்சயம்: விஜயகாந்த்  #   அப்படி  ஒரு அசம்பாவிதம் இதுவரை நடக்கவே இல்லையே , பார்ப்போம்======================16 அதிமுகவினர் பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை EVKS # தடுக்காதே என்னைத்தடுக்காதே சந்திரபாபு பாட்டு ஓடிட்டிருந்திருக்கும்===========


17  தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட சந்திரபாபு நாயுடு மீது, தெலங்கானா வாதிகள் முட்டைகளை வீசினர். # அடிக்கற வெய்யிலுக்கு  ஆம்லெட் ஆகி இருக்கும்


==================


18 பறக்கும் படையினர் சோதனையில் ரூ.240 கோடி சிக்கியது: ஆந்திரம், தமிழகமே பணப் பட்டுவாடாவில் முன்னிலை # அம்மா-னா  சும்மா இல்ல======================19 60 ஆண்டுகளில் நேரு குடும்பம் மட்டுமே வளர்ந்திருக்கிறது: பிரியங்காவுக்கு மோடி பதிலடி # சரி, இந்த 5 வருசம் உங்களுக்கு ஒரு வாய்ப்பு======================


20 தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா - ராணி முகர்ஜி திருமணம் #  ஹே ராம் பட சீன் பார்த்திருப்பாரா? தெரியலையே!


==========================

0 comments: