Tuesday, May 27, 2014

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிச்சதுல பல பெண்களுக்கு சந்தோசம், ஏன்?

1. சோகமாய் நீ இருக்கையில் தருவேன் முத்த ஒத்தடம்.கோபமே முத்தத்தால் தான் எனில் நான் செல்லும் வழி எத்தடம்/?


==================


2 நீ விழித்திருக்கும்பொழுதெல்லாம் உன் மீன் கண் வலை பாயுதே என் மேல்.=====================


3 அக்கடான்னு நான் உன்னுடன் அமர்ந்து பக்கோடா சாப்பிடும்போதெல்லாம் துக்கடாவாய் ஓடி மறையும் துன்பங்கள்======================


4 ச்சீய் நீங்க ரொம்ப மோசம் என நீ சிணுங்கும்போது முழு நேர மோசக்காரனாகவே ஆகி விடலாமா? என நான் யோசிப்பேன்


=======================


5 அன்பே! ஏன் கதவை படீர் என சாத்துகிறாய்? முல்லை பெரியாறு தீர்ப்புக்கு கண்டனம் தெரிவிக்க நீ என்ன கேரளாவா?==========================


6 அன்பே! உன் காதலைச்சொல்லும் நாளை ஏன் தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கிறாய்? மனசுக்குள் கோச்சடையான் என்று நினப்பா?


=====================


7 இந்த பொண்டாட்டிங்களுக்கு எப்டித்தான் மூக்குல வேர்க்குமோ? ரிசப்ஷனிஸ்ட் கிட்டே கடலை போடும்போது போன் " என்ன பண்ணி ட்டு இருக்கீ ங்க?"


=====================


8 மழையில் நீ மகிழ்ச்சியுடன் நனைகையில் வருண பகவான் மீது எனக்கு செம கடுப்பு ஆவது ஏனோ?======================


9 இந்தப்பொண்ணுங்க எதையாவது கொளுத்திப்போட்டுட்டு சமைக்கப்போய்டறாங்க.இருக்கறவங்க சண்டை போட்டுட்டு இருக்காங்க====================

10 மோடியை சந்திச்ச ரஜினி படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல்.போணி ஆகலை.இதே ராசி கத்திக்கும் வருமோ?னு யாரும் இன்னும் கிளம்பலையா?


======================


11 மடியில் படுத்துக்கோ என காதலி அனுமதித்தால் குப்புறப்படுக்கவா? மல்லாக்கப்படுக்கவா? என கேள்வி கேட்டு படுத்தி எடுப்பான் புதுக்காதலன்=====================


12 நவீன விஞ்ஞான வசதிகள் மனிதரிடையே நெருக்கத்தைக்குறைத்து நேரத்தை தின்று விடுகிறது


=====================
13 செஸ் விளையாட்டில் உடனடியாக செக்  மேட் சொல்ல எங்கள் டேபிள் மேட் பயன்படுத்துங்கள் # ஐடியா


======================


14 விஞ்ஞானப்பூர்வமா செய்யும் ஊழலை  விஞ்ஞான வளர்ச்சி சாதனம்  மூலமாவே பதிவு செய்வான் தமிழன் # கனிமொழி வாக்குமூலம் @ பென் ட்ரைவ்


=====================


15 சிஸ்டம் முன் அமர்ந்தால் கண் வலி , தலைவலி, வரும்னு தெரிஞ்சும்  FB ல எனக்குத்தலைவலி” னு ஸ்டேட்டஸ் போடுவார் மாடர்ன் நெட் தமிழச்சி!======================


16  உனக்கு LAW  தெரியுமா? சட்டம் தெரியாம பேசாதேன்னு  கோபமா சொன்னாக்கூட எனக்கு லாவண்யா தெரியும்னு மொக்கை போடுவான் தமிழன்


=======================


17 இந்தப்பொண்ணுங்க  ஊசில  நூல் கோர்க்காட்டியும் , உதிரிப்பூவை நூல்ல கோர்க்காட்டியும் , நம்மை எங்காவது  கோர்த்து விட்டுடறாங்க ;-)=====================


18 குல்பி ஐஸ் மாதிரி இருக்கும் காதலி காதலனை ஓமக்குச்சினு கிண்டல் செஞ்சா அவன் அவளுக்கு குல்பி ஐஸ், குச்சி ஐஸ் எது வாங்கித்தருவான்?==========================


19  ஜல்லிக்கட்டுக்கு தடை விதிச்சதுல பல பெண்களுக்கு சந்தோசம், இனி யாரும் கன்னிப்பருவத்திலே ராஜேஷ் மாதிரி ஆகிட மாட்டாங்க=======================20 என்னை வேலை செய்ய விடு என் கிறாயே! உன்னை வேலை செய்ய விடாமல் தொந்தரவு செய்வது தானே என் முதல் வேலை # காலை மாலை இரு வேளை======================

0 comments: