Thursday, May 15, 2014

பாதிரி ஒரு மாதிரி

1. வதந்திகளை நம்ப வேண்டாம் ‘கோச்சடையான்’ 23–ந் தேதி உறுதியாக திரைக்கு வரும் - சவுந்தர்யா #  மேடம், இந்த  நியூசே ஒரு வதந்திதான்னு சொல்றாங்க?======================


2 2 குழந்தைகளுடன் கள்ளக்காதலனோடு பெண் ஓட்டம் மனைவியை கடத்தியதாக கணவர் போலீசில் புகார் # 2 தோள் லயும் 2 குழந்தை, எப்படி வேகமா ஓடுச்சு?======================3 கருத்துக்கணிப்பு பொய்யாகி ராகுல் தலைமையில் ஆட்சி: நாராயணசாமி பேட்டி # இவரு வேற ஜெயமோகன் மாதிரியே காமெடி பண்ணிட்டிருகாரு======================4 திருமணம் செய்யாமல் ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது சமூகநெறிக்கு எதிரானது- மதுரை கோர்ட் # பக்கத்து வீட்ல குடி வெச்ட்டா ஓக்கேவா?


====================


5 யார் ஆதரவு அளித்தாலும் அது 1 எம்.பி. கொண்ட கட்சியாக இருந்தாலும் பாஜக ஏற்கும்: அமிதஷா# விட்டா காங்கிரஸ்ட்டயே ஆதரவு கேட்பாக போல


====================


6 சீனாவில் ஹோட்டலின் 11வது மாடி ஜன்னலில் நிர்வாணமாக ஆடிய பெண் # ஏம்மா மின்னல். முதல் மாடிலயே ஆடி இருந்தா ஆடியன்ஸ் அதிகம் ஆகி இருப்பாங்கில்ல?


=====================


 7 இனி சுப்ரீம் ஸ்டார் இல்லை.. புரட்சித் திலகம்! - சரத்குமார் # உச்சத்தில் இருந்த பாக்யராஜ் மார்க்கெட் அதலபாதாளத்தில் இறங்குனதே அதாலதான்=================================


8 இலங்கைத் தமிழர்களுக்காக 3 முறை சிறை சென்றவன் நான் தான் - மு.க # தலைவா! உங்க சொத்துல இருந்து 3% குடுங்க பார்க்கலாம்


==================9 மத்தியில் புதிய அரசு பதவி ஏற்றதும் தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரிக்கும்: உளவுத்துறை.# மோடி வரும் முன்னே வெடி வரும் பின்னே?


=====================


10 தேர்தல் முடிவுகள் நமக்கு மிகப்பெரிய பலத்தைத் தரும்! - வைகோ # இந்த டைம் எல்லா இடத்துலயும் மதிமுக டெபாசிட் வாங்கிடும்


===================
11 கருத்து கணிப்புகள் ஜெ.வுக்கு பயந்து வெளியிடப்பட்டவை- ஸ்டாலின் #   தேர்தல் முடிவு வந்தபின் “மக்கள் ஜெ வுக்கு பயந்து வாக்களித்தனர்?ம்பாரோ

================

12 பார்வையை மறைத்திடும் பனித்திரை விலகியே தீரும்! - மு.க  # சுக்ரன் பார்வை சரி இல்லை. ராகு பார்வை, ராகுல் பார்வை எல்லாம் கண்டம் தான்
====================
13 கருத்துக் கணிப்புகளை நம்பி நொந்துபோக வேண்டாம்! - வைகோ #  ஈரோட்லயும் , விருதுநகர்லயும் மதிமுக தான் ஜெயிக்கும்னாங்க, அதை நம்ப வேணாமா?


====================
14அத்வானிக்கு கவுரவமான பதவி வழங்கப்படும்! - சுஷ்மா ஸ்வராஜ் #  ஓஹோ, அப்போ அகவுரவமான பதவினு ஏதாவது இருக்கா? அது யாருக்கு  வழங்கப்படும் ?


=====================
15 ஜெ.வின் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை தமிழகமே எதிர்பார்க்கிறது! - கருணாநிதி #  குவிச்ச சொத்துல 10 %  வாக்குக்கு  200 ரூ  கரைச்ட்டாரே?
==================
16 போக்குவரத்து விதி மீறல்:ராகுலுக்கு அபராதம் # ராங்க் ரூட் ராகுல்


===================17 தேர்தலில் காங். தோல்வி அடைந்தால், யாரும் பிரதமரை குறை சொல்ல வேண்டாம்-சோனியா# டம்மிகளை விட்டுடுங்க. மம்மிகளை தட்டி வைங்க


=======================


18 சிறுமியிடம் சில்மிஷம்: அமெரிக்காவில் இருந்து பாதிரியார் வெளியேற்றம்..# பாதிரி ஒரு மாதிரி இந்தியா வந்திட்டா ஆன்மீகத்க்கு நீங்க முன் மாதிரி========================19 கொளுத்தும் வெயில் கமிஷனர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த எஸ்.ஐ# லீவ் கேட்டிருப்பாரு மாமா.கிடைக்கலைன்னதும் போட்டிருப்பாரு டிராமா========================


20  பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இன்று பிரிவு உபசார விருந்து:சோனியா நினைவு பரிசு அளிக்கிறார் # தஞ்சாவூர் தலையாட்டி மவுன பொம்மை?==========================

0 comments: