Thursday, May 15, 2014

கன்னி ராசி அன்பர்களே!

1. பெண்களின் கூந்தலில் சூட்டப்பட்ட மலர்ச்சரம் அவர்கள் குதூகலமான மன நிலையைச்சொல்லும்.


==================


2  பூச்சூடிய பெண்ணின் கூந்தலை விட அழகானது பூக்கட்டும் பெண்ணின் விரல் லாவகம்


=================3 நெருக்கமான பூச்சரத்துக்கு ஊசியில் பூவைக்கோர்ப்பதே சிற்ந்த வழி.ஆனால் பெண்கள் கால விரயத்தைத்தவிர்க்க பெரும்பாலும் நூலில் பூ கட்டுகிறார்கள்


==================


4 காமெடி டிராக் - விவேக் என முதன் முதலில் டைட்டிலில் வந்தது வாலி படத்தில் தான்.அதற்கான காமெடி ஸ்க்ரிப்ட் ரைட்டர் ் செல் முருகன்


====================


5 சொந்த ஊர் ,பூர்வீக வீடு ,காதலி வசிக்கும் / வசித்த தெரு இவை மூன்றும் தரும் மகிழ்ச்சிக்கு இணை இல்லை.=====================6 பெண் போல் பொறுமைசாலி யாரும் இல்லை.ஆண் போல் அவசரக்குடுக்கை யாரும் இல்லை # அன்பு காட்டுவதில் ,நேசிப்பதில்====================


 7 வெண் பொங்கலைத்தனியே சாப்பிட்டாலும் ருசி எனினும்் தேங்காய் சட்னி ,முருங்கைக்காய் சாம்பார் இரண்டையும் ஊற்றி பாத்தி கட்டி அடிப்பான் தமிழன்


====================8 வீட்டில் நமக்காக மனைவி காத்திருக்கிறாள் எனும் நினைவு மனதில் உள்ளவன் வெளியில் சாப்பிடமாட்டான்====================


9 வீட்டுச்சாப்பாட்டைத்தவிர வெளியில் எங்கும் சாப்பிடாத மனக்கட்டுப்பாடு உள்ள அனைவரும் சாப்பாட்டு ராமன் களே!


=================


10 எந்த அம்மாவும் தன் மகனுக்கு சமைக்கக்கற்றுத்தரமாட்டார்.ஆனால் மனைவி கர்ப்பம் ஆகி பிறந்தகம் போய் விட்டால் உதவட்டும் என் சமையல் கற்பிப்பார்


=================


11 நான் சின்னப்பையனா இருக்கும்போது பார்க்கிங் ஏரியான்னா பொண்ணுங்க கிட்டே பேசும்போது பார்க்கற ஏரியா னு நினைச்சேன்==================12 ஆணைபெண் கிண்டல் அடித்தால் அவன் தன் குடும்பத்துடன் சேர்ந்து ரசிப்பான்.ஆண் பெண்ணை கிண்டல் செய்தால் பெண் ஆணின் குடும்பத்தைவம்புக்கிழுப்பாள்==================


13 கன்னி ராசி அன்பர்களே! இன்னைக்கு எந்த கன்னி கூடயும் சகவாசம் வெச்சுக்காதீங்க.சம்சாரம் க்ண்காணிச்ட்டு இருக்கும்.அப்புறம் திண்ணை தான்


=================


14 தமிழனை தமிழ் இனத்தலைவர் திட்ட ஆரம்பிச்ட்டார்னா அவருக்கு தோல்வி பயம் வந்துடுச்சுனு அர்த்தம்


================15 உலகிலேயே கேவலமானது அரசியல்வாதியின் நாக்குதான்=====================


16 உங்கள் கோபம் மதிக்கப்பட வேண்டும் ,எதிரிக்குப்பயம் வர வேண்டும் எனில் மவுனமாக இருந்தால் போதும் .வார்த்தைகளை அள்ளி இறைக்கத்தேவை இல்லை==================17 பொண்ணுங்களோட நெத்தி பல அடுக்களைக்கொண்ட அழகுதளம். திருநீறு ,சந்தனம் ,குங்குமம் ,ஆஞ்ச நேயர் கோயில் சாந்து ,மை ,நீள் பொட்டு


=====================


18 தலைவரோட ஒப்பிடும்போது தளபதி எவ்வளவோ தேவலை.வார்த்தைகளில் கண்ணியம் காப்பதில் ,பொறுமையில் ,அண்ணனை சமாளிப்பதில்


=================

19 அழகு நிலையம் செல்லாமலேயே மயில் தோகையால் செய்யப்பட்ட இரு அலங்கார வளைவுகளாய் ,கருப்பு தோரணமாய் அவள் இரு புருவங்கள்====================20 40 தொகுதிகளிலும் ஜெயிக்கும் வெறியில் ஜெWIN  கட்டளைப்படி வாக்குக்குப்பணம் தரும் பிரம்மாஸ்திரத்தை பிரயோகிக்கத்தொடங்கி விட்டார்.========================

0 comments: