Saturday, May 31, 2014

பூவரசம் பீப்பீ - சினிமா விமர்சனம்

 

மாமூல் மசாலாப்படங்களையே பார்த்து சலித்த கண்களுக்கு அவ்வப்போது அபூர்வமான கலைப்படங்கள் வியாபார ரீதியான அம்சங்களுடன் மின்னி மறையும் . அப்படிப்பட்ட அபூர்வமான படங்களில்  தாராபுரம் பெண் இயக்குநர்-ன் இந்தப்படமும் இடம்  பிடித்ததில்  மெத்த மகிழ்ச்சி .


ஒரு கிராமம்.அதுல ஆறாவது படிச்ச 3 பசங்க,3 பேரும் புத்திசாலிங்க , தனித்திறமைகள் உள்ளவங்க.கிராமத்தில்  ஒரு மழை நாளில் ஆத்தோரமா விளையாடிட்டிருக்கும்போது   சலவைத்தொழிலாளியின்  மனைவியை 4 பேர்  கேங்க்  ரேப் பண்றதைப்பார்த்துடறாங்க.அடுத்த நாள் ஊரே  கூடி ஆத்தில் அடிச்சுட்டுப்போன  பிணம்னு  முடிவு கட்டிடறதைப்பார்த்து  குற்றவாளீகளை ஆதாரத்துடன் பிடிக்க முடிவு பண்றாங்க. 


ரிட்டயர்டு  மிலிட்ரி தாத்தா  ஒருவர் மிலிட்ரில இருந்து கொண்டு வந்த  தொலை தொடர்புக்கருவி 1 இவங்க கைக்கு சிக்குது.அதை வெச்சு பீப்பி எஃப் எம் அப்டினு அங்கீகாரம் இல்லாத  ரேடியோ உருவாக்கி தினமும் மாலை 4 மணிக்கு  கிராமத்து மக்களுக்கு  ஒரு புரோகிராம் பண்றாங்க .அதுல அந்த  ஊர் மக்களின்  நடைமுறை வாழ்க்கை , கிண்டல் கேலியோட  சொல்லி மக்கள் மனம் கவர்றாங்க . 


 க்ளைமாக்சில்  அந்தக்கொலையாளிகளை  அந்த  எஃப் எம்  மூலமாவே எப்படி பிடிக்கறாங்க என்ப்தே  கதை .  சும்மா சொல்லக்கூடாது , இயக்குநர்  இது முதல் படம் என்ற   தடுமாற்றமோ தயக்கமோ  ஒரு சீனில்;  கூட காட்டாம  பிரமாதமா திரைக்கதை எழுதி  இயக்கி இருக்காரு . சின்ன வயசில் சுபா, பி கே பி , சுஜாதா நாவல்கள் அதிகம் படிச்சிருப்பார்  போல . க்ரைம் இன்வெஸ்டிகேஷன் காட்சிகளில்  சீன் பை சீன் நாவல் படிப்பது  போலவே  இருக்கு 

சின்னப்பசங்க எப்படி இந்த மாதிரி செய்ய  முடியும் ? என்ற கேள்வியே எழாத வண்ணம் இவர் அமைத்திருக்கும் திரைக்கதை  புருவங்களை  வியப்பால்  உயர்த்தச்சொல்லும் 


 இயக்குநர்  மிஷ்கின் , சமுத்திரக்கனி ,புஷ்பா -காயத்ரி ஆகியோரிடம்  உதவி இயக்குநராக 7 வருடங்கள் பணி ஆற்றிய  ஹலீதா சாமீம்  தாரபுரத்துக்காரர் என்பதால்  படப்பிடிப்பையும்  முழுக்க முழுக்க தாராபுரம், பொள்ளாச்சியில்  முடித்திருக்கிறார் . இவர் எலக்ட்ரானிக்ஸ் ல்  டிகிரி முடித்திருப்பதால் அதே சப்ஜெக்ட் நாலெட்சை யூஸ் பண்ணி  திரைக்கதை அமைத்திருக்கிறார். டி ஆர் பாணியில்  இவரே எடிட்டிங்க் , கலரிங்க் , பாடல்கள் ,கதை , திரைக்கதை , வசனம், இயக்கம்  என  7 பணிகளை செய்திருக்கிறார்.இவருக்கு ஒரு அழகிய பூங்கொத்து வரவேற்பு

3 பசங்களோட அறிமுகக்காட்சி ,  அவங்களுக்குள் ஏற்படும்   சினேகம் , பின்  ஒரு சிறுமியால் ஏற்படும்  பிரிவு  என சின்னப்பசங்க  உலகத்தில்  புகுந்த மாதிரி  ஒரு குட் ஃபீல்  வருது . அபாரம் 

 3 பசங்க நடிப்பும்  பிரமாதம் .குறிப்பா ஆரண்ய காண்டம் , வெயில் படத்தில் வந்த  வசந்த் கலக்கறார். பிரவீன் கிஷோர் , கவுரவ் காலை இருவரும் அவருக்கு சளைத்தவர்கள் இல்லை என  முதல் பட புதுமுகம் என்ற பயம்  இல்லாமல் அசால்ட்டாக நடித்து அரங்கு நிறைந்த கை தட்டல் பெறுகிறார்கள்


 வில்லன்களாக  வரும்  காளி, சாய்ஹரி, சுந்தர், கார்த்திக் 4 பேரும்  நல்லா பண்ணி இருக்காங்க .கிராமத்து ஆட்களிடம் காணப்படும்  முரட்டுத்தனம் அப்படியே கண்  முன் நிறுத்தறாங்க 
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1. பசங்க 3 பேரும் சந்தையில்  பொன் வண்டு  விற்கும் காட்சியும் அதைத்தொடர்ந்து வரும் காமெடி சீனும் 


2  பட்ட மரத்தில்   காதலிக்குப்பிடித்த பட்டம் தனை பல கலரில்  தொங்க விட்டு பட்ட மரத்தை பட்டம் மரமாக்கிய அழகியல் ரசனை கவிதையான காட்சி . பாரதிராஜா படத்துக்கு இணையான ஒளிப்பதிவு  


3  க்ளாஸ் லீடரான பொண்ணு  தினமும் இவங்க 3 பேரை  போர்டில் எழுதி போட்டுக்குடுக்கும் போது  ஒரு நாள்  “ ஏம்மா இன்னைக்கு அவன் லீவ்” என கலாய்க்கும் இடம் . குறிப்பா ஸ்கூலில் நடக்கும் எல்லாக்காட்சிகளுமே  கொண்டாட்டமான காட்சிகளே 4  வில்லனில்  ஒருவன் மேரேஜ் ஆனவன் என்பதை அவ புதுக்காதலிக்கு  தெரியப்படுத்த  அவன்  வீட்டின்  முன்  டயர் எல்லாம் போட்டு பஞ்சர் கடை போல் செட்டப் செய்து    புதுக்காதலி  மோகனா  வரும் வழியில் பஞ்சர் ஆக்குவது,அதைத்தொடர்ந்து வரும் காமெடி கலாட்டாக்கள்


5  கெமிஸ்ட்ரி வாத்தியாரிடம் எக்சாம் பேப்பர் அபேஸ் பண்ணி மரம்  பூரா  ஒட்ட வைத்த ஆர்ட் டைரக்சன் அபாரம்


6 வில்லன்கள்  துரத்தும்போது   ஓடி வரும் 3 சிறுவர்களூம் மரத்தில் மாட்டிய பட்டத்தை பிடிக்கவே வந்தார்கள் என டைவர்ட் செய்யும் காட்சி   கை தட்டலை அள்ளியது 


 7    மதக்கலவர காச்ட்சிகளை  அனிமேஷனில் காட்டியது . அது  ஒரு சிறுகதை  போல் பிரமாதமாக அமைந்தது 


8   சுடர்க்கொடியை  சுடர்மணி என  மாத்தி  க்கூப்பிட்ட பின் கோபித்த காதலிடம்  இனி சுடர் மணி  சம்பந்தப்பட்ட எந்த டிரஸ்ம் போட மாட்டேன் என கூறுவது ( இந்த சீனில்  ட்விட்டரில்  இருக்கும்  சுடர்க்கொடி நினைவு வர்லை, நல்ல வேளை ) 

 9 எல்லாவற்றுக்கும்  சிகரம் வைத்தது  போல்  வயசுக்கு வரும் பையனின் உணர்வை செம காமெடியாக , கவிதையாக சொல்லி இருக்கும்  இயக்குநருக்கு  ஒரு ஷொட்டு /. இதுவரை எந்த தமிழ் சினிமாவிலும் இந்த சீன் வரவில்லை 


10  லாலிபாப் ஆக வரும் வர்ஷினி , அகல்யா  இருவர் நடிப்பும் கண்ணுக்குள்  நிக்குது 

இயக்குநரிடம் சில கேள்விகள் 


1.  சம்பவம் நடந்ததை நேரில் பார்க்கும்போது அவர்கள் அதிர்ச்சியில்  உறைகிறார்கள்  சரி , ஏன் சத்தம்  போட்டு ஊரைக்கூட்டலை?  3 பேரும் 3 திசையில்  ஓடிப்போய்  ஆட்களை வர வைக்கலாமே? 

2  அந்த சின்ன  கிராமத்தில்  3 பேரும்  ரெகுலராக மாலை 4 மணிக்கு அந்த மலையில் போய் எஃப் எம் ஒலிபரப்புவதை  யார் கண்ணிலும் மாட்டாமல் எப்படி செய்ய முடியும் ? 3  இடைவேளைக்குப்பின் காட்சிகள்  ரொம்ப நீளம் , இன்னும் எடிட்டிங்க் பண்ணி    இருக்கலாம். கடைசி 30  நிமிடங்கள்  லேசாக போர் அடிக்குது


 

 மனம் கவர்ந்த வசனங்கள்


1.   ஜெட் விமானம் , சாதா விமானம் என்னடா வித்தியாசம்?

 ஜெட்  விமானம்  போற பக்கம் எல்லாம் குசு  விட்டுட்டே  போகும் . சாதா விமானம் சும்மா போகும் 


2  பொன் வண்டு எப்படி டால் அடிக்குது பாத்தியா ? பி டி வாத்தியார் மண்டை மாதிரி 


3  தலை நரைச்சு 4 மாசம் கூட ஆகலை, அதுக்குள்ளே தத்துவம் சொல்ல வந்துடறாங்க 


4  கண்ணும் காதும்  உனக்கு அவுட்டு , நாக்கை மட்டும் நீட்டு 


5 நீங்க என்ன பச்சா பாய்ஸா? \\


 பின்னே வயசுக்கு வந்துட்டு வர்லைன்னா சொல்றோம் ? 6 வளர்ந்து பெரிய ஆள் ஆனதும்  என்ன செய்யப்போறே ? 

 யாருக்குத்தெரியும் ? 


7  நாங்க  பெரிய ஆள் ஆனாலும்  , நீ எப்பவும் இதே மாதிரி சின்னப்பொண்ணாவே   இருக்கனும் 


8  லைஃஃப்  பாய்  சோப் மட்டும்தான் ஆம்பளைங்க சோப், மீதி எல்லாம் பொம்பளைங்க   போடுவது 

 உனக்கெல்லாம் 501 தாண்டா சரி ., டபுள் பர்பஸ்


உனக்காக வானவில்லையே வளைச்சுத்தருவேன்

தேங்க்ஸ், ஆனா அது ஆல்ரெடி வளைஞ்சுதானே இருக்கு?

சரி, நேராக்கித்தர்றேன் # பூவரசம்பீப்பீ


10 நீயே  உன் மன்சை  ஓப்பன் பண்ணிடு,இல்லாட்டி  மத்தவங்க  உன் மன்சை  கிழிச்சு  ஓப்பன் பண்ணற மாதிரி ஆகிடும் # பூவரசம்பீப்பீ


11   ஏம்மா , எல்லாரும்  செத்துத்தான் ஆகனுமா? 


12 ஏண்டி. என்னதா  உனக்குத்தெரியாது ?


 என்னைத்தான் உனக்குத்தெரியாதுபடம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S


1. மிக எளிமையான ,அழகான டைட்டில் டிசைன் # பூவரசம்பீப்பீ2 பசங்க ,கோலிசோடா வரிசையில் சின்னப்பசங்க ராஜ்ஜியம் # பூவரசம்பீப்பீ


3 கலர் கோட்டிங் வெயில் வசந்தபாலன் பாணி ,பாடல் படமாக்கத்தில் அஞ்சலி மணிரத்ன உற்சாகம்.அறிமுக இயக்குநர் தாராபுரம் தாரகை ராக்கிங் # பூபீப்பி4 13 வயசுப்பையன் வயசுக்கு வரும் காட்சியை மஞ்சள் நீராட்டு விழா கொண்டாடாமல் சூட்சுமமாய் உணர்த்தும் இயக்குநருக்கு ஷொட்டு # பூவரசம்பீப்பீ


சி பி கமெண்ட் -பூவரசம்பீப்பீ - அழகியல் ரசனையுடன் காட்சிப்படுத்தப்பட்ட மாறுபட்ட கிராமத்துப்பின்னணி த்ரில்லர் மூவி - விகடன் மார்க்=45 ,ரேட்டிங் = 3/5


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =45

குமுதம் ரேட்டிங்க் =நன்று


 ரேட்டிங்= 3 / 5


கரூர் கலையரங்கம்
Embedded image permalink

 டிஸ்கி -  வழக்கமா அட்ரா சக்க ல ஹீரோயின்  ஃபோட்டோஸ் நிறைய போடுவோம், ஆனா இது சிறுவர்களுக்கான மழலை சினிமா. நோ ஹீரோயின் .ஆனா நமக்கு கொள்கை தானே முக்கியம்? அதனால இயக்குநரை ஹீரோயின் ஆக்கிட்டேன் . இந்தியாவிலேயே இது  முதல்  முறை . ஹி ஹி  


டிஸ்கி 2 -

அப்சரஸ் - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2014/05/32-34-36.html

Track listing
No. Title Singer(s) Length
1. "Gnayiru Dhinangalin (Version 1)"   Abhay Jodhpurkar
2. "Angry Birds"   Ranjith, Aajeedh Khalique, Gautham
3. "En Ulagam"   Karthik
4. "Ko Ko Ko"   Aajeedh Khalique, Gautham, Vignesh, Iyshwarya, Swetha, Reagan
5. "Enakkondrum Vaanveli"   Aajeedh Khalique
6. "Gnayiru Dhinangalin (Version 2)"   Karthik
7. "Theme Music"   Instrumental


 • Gaurav Kalai as Venu Kanna
 • Pravin Kishore as Harish
 • Vasanth as Kapil Dev
 • Varshini as 'Lollypop'
 • Agalya
 • Kaali Venkat as Magudi
 • Sai Hari as RS Shanmugam
 • Sundar as Manjunathan
 • Karthik as Muniyan
 • Samuthirakani (Cameo appearance)[7]Directed by Halitha Shameem
Produced by Manoj Paramahamsa
Sujatha Chenthilnathan
Written by Halitha Shameem
Starring Gaurav Kalai
Pravin Kishore
Vasanth
Music by Aruldev
Cinematography Manoj Paramahamsa
Editing by Halitha Shameem
Studio V Talkies
Baby Shoe Productions
Distributed by SPI Cinemas
Release dates
 • May 30, 2014
Country India
Language Tamil


1 comments:

குரங்குபெடல் said...

விமர்சன வீரன் செந்தில் வாழ்க. . .