Sunday, May 11, 2014

ராம்தாசின் விருந்து டூ கேப்டனின் மருந்து

1. அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்யும் மதுரை ஆதீனத்தை கோமாளியகாவே பார்க்கிறேன்: ராம. கோபாலன் # நாங்க ஏமாளியாகவே பார்க்கிறோம்


================


2 வாஜ்பாய்- மோடி கடிதங்களை பகிரங்கப்படுத்தலாமா? குஜராத்திடம் கருத்து கோரிய பிரதமர் அலுவலகம்.# படுத்தி எடுக்கலாம்னு பகல் கனவுகாணுவாங்க போல


================


3 மோடி நினைப்பது வெற்றியடைய வாழ்த்துகள்!- ரஜினி # உங்க கிட்டே ஆதரவு கேட்கலாம்னு நினைச்சாராம்


====================


4  ஜெ கூறுவது போல் மின்தடையில் சதி இல்லை. மின் வாரிய தொழிற்சங்கம் விளக்கம் # அந்த தொழிற்சங்கமே திமுக ஆதரவு னு ஜெ அடிச்சு விடுவாரு பாருங்க


================


5  மோடியை ஆதரிக்க கோரி ரஜினியை நேரில் சந்தித்த வைகோ! ஜெத்மலானியின் தூதராக சென்றார்!! # மன்னரே தூது போய் வேலைக்கு ஆகல.இனி போர் வாள் போய்?


=================


6 கேப்டனின் 23 படங்களை ஜெயா டிவி வாங்கி முடக்கி வைத்துள்ளது - பிரேமலதா # தானிக்கு தீனி.ஜெ நடிச்ச படங்களை கேப்டன் டிவி வாங்கி முடக்கனும்


=================


7 காங்கிரஸும், திமுகவும் புருஷன் பொண்டாட்டி மாதிரி சண்டை போடுறாங்க:நடிகர் - செந்தில் # ஓஹோ.அதான் தலைவர் " மன்னிப்புக்கேட்டால் ஓக்கே"ன்னாரா?


==================


8 விஜயகாந்துக்கு வைகோ அல்வா கொடுத்துவிட்டார்: பண்ருட்டி ராமச்சந்திரன் # ஊறுகாய் கொடுத்திருந்தா யூஸ் ஆகி இருக்கும்


================


9  திமுக மீதான விமர்சனம்- மோடிக்கு கருணாநிதி கடும் கண்டனம்# தலைவரே! பிஜேபியை நீங்க விமர்சிக்கும்போது பிஜேபி "நம்மை விமர்சிச்சா என்ன தப்பு?


==================


10 வடிவேலு படத்தை எதிர்த்தால் இங்கும் தாக்கரேக்கள் தோன்றுவார்கள்! - பாரதிராஜா # அப்படித்தோன்றினால் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவர் -ஜெ


=====================


11 அதிமுகவுக்கு எமனே நான்தான்... : விஜயகாந்த் # இப்டி பேசுங்க னு சொல்லிக்குடுத்த விமனே பிரேமலதா தானே?


====================


12 பா.ஜனதா ஆளும் மாநிலமான சத்தீஸ்கரில் 20 ஆயிரம் பெண்கள் மாயம்: ராகுல் பரபரப்பு குற்றச்சாட்டு # சினிமா ஆசைல பாலிவுட் போய் இருப்பாங்க.==============13 குஜராத்தை விட தமிழ் நாடு வளர்ந்துள்ளது - கனி மொழி

# அதனால் உங்கள் வாக்கு தாமரைக்கு வேணாம்.இரட்டை இலைக்கே போடுங்கனு சொல்ல வர்றாரா?


===========


14 தவறு செய்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு ஓராண்டுக்குள் சிறை: மோடி சபதம்.. # எல்லாரும் உள்ளே போய்ட்டா நிர்வாகத்தை கவனிப்பது யாரு?

=============

15 அதிமுக பிஜேபி உடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளது - மு க ஸ்்டாலின் # அதாவது திமுக - காங்கிரஸ் மாதிரி?

==============

16 அதிமுக 22- திமுக 14- பாஜக அணி- 3 தொகுதிகளில் வெல்லும்: என்.டி.டி.வி சர்வே # ஜெ வின் பிரதமர் கனவுக்கு ஆப்பு வெச்சுட்டியே மாப்பு

===========


17 அமெரிக்காவில் நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணி # கதவைத்திற காற்று வரட்டும் தத்ஸை அப்போ தான் படிச்சாராம்

===========

18 பிரியங்கா காந்தி அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர்: சு. சாமி # அருகில் இருந்து ஊற்றிக்கொடுத்தாரா?னு கேட்பார் பாருங்க


=============

19 தொண்டைப் பிரச்சனையினால் விஜய்காந்த் அன்புமணிக்காக பிரச்சாரம் செய்யவில்லை # கஜேந்திரா படப்பெட்டியைத்தூக்கிட்டு போன பழைய சண்டைப்பிரச்னையால

================

20 விஜய்காந்துக்கு விருந்து கொடுத்தால் தைலாபுரத்தில் கால்வைக்க மாட்டேன்- எச்சரித்த ராமதாஸ் # அய்யா!90 எம் எல் மருந்து குடுக்கலாமுங்க்ளா?


==============0 comments: