Wednesday, May 07, 2014

பார்வதி ஓமனக்குட்டன் தான் பாரதப்பிரதமர்!!!!!

1. திருப்பதி கோவிலுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு..# வெய்யில் தாங்காம திருடங்க மொட்டை போட வர்றாங்கனு உளவுத்துறை தகவலா?


==================


2 தண்ணீரை விற்கும் அதிமுக அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும்: மு.க.ஸ்டாலின்.# குடுக்கறதைத்தடுக்கும் திமுகவுக்குத்தான் மக்கள் பாடம் கற்பிப்பாங்க


=====================


3 ஈழத் தமிழர்களுக்கு காங்கிரஸ் கட்சி துரோகம் செய்துவிட்டது: அன்பழகன்..# உங்க கூட கூட்டணி ல இருந்தப்ப இந்த ஈர வெங்காயம் தெரிலீங்ளா?


==================

4 காங்கிரசின் வெற்றி பாதையை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது: ஜி.கே.வாசன். # கிடைக்கற கொஞ்ச நஞ்ச ஓட்டையும் இவர் தடுத்துடுவாரு போல


==================


5 கூட்டணி கட்சிகளை வித்தியாசமாக பார்ப்பதில்லை: விஜயகாந்த் பேச்சு.# கூட்டணிலயே எப்பவும் தெளிவா இருப்பவர் நீங்கதான்னு பேசிக்கறாங்க


====================


6 எங்கள் வேட்பாளர்கள் விலைபோக மாட்டார்கள்: வைகோ .# நல்லவிலை படியும் வரை காத்திருப்பார்கள்?


=====================


7 இந்தியாவிலேயே 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் கட்சி அதிமுக: சரத்குமார் # யாரிடமும் சேரா மாரி ஓரி என இதை கிராமங்கள்ல சொல்வாங்க


=================


8 மோடிதான் உண்மையான ஹீரோ: நடிகர் சத்ருகன்சின்கா # அப்போ உண்மையான ஹீரோயின் யசோதாவா?


==================


9 தமிழகத்தின் பிரச்சினைகள் தீர ஜெ பிரதமராக வேண்டும்: அனிதா குப்புசாமி.# அப்போ இந்தியாவின் பிரச்னை தீரனும்னா யார் என்னவா ஆகனும்?


=================


10 கற்பழிப்புக்கு ஆளாகிற பெண்ணுக்கும் தண்டனை விதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி..#,வாய்க்கு வந்தபடி உளறும் ஆசாமிக வாய்க்கு சூடு வைக்கனும்


==================

11 மின்வெட்டுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-ஜெ # வாவ்! உங்களை நீங்களே ஜெயில்ல தள்ளி தண்டனை த்ந்துக்கப்போறீங்களா?


=================

12 அம்மா பிரதமராக சிவபூஜையை தவறாமல் செய்கிறேன் -மதுரை ஆதினம்# சிவனுக்குப்பிடிச்சவங்கதான் பிஎம் னா பார்வதி ஓமனக்குட்டன் தான் பாரதப்பிரதமர்


==================


13 தமிழகத்தில் மின்பற்றாக்குறை திட்டமிட்ட சதி-ஜெயலலிதா # எதிர்க்கட்சியின் திட்டமிட்ட சதினு அடிச்சு விடுங்க மேடம்.ஒரே கல்லில் 2 மாங்கா


====================


14 எம்மதமும் சம்மதம் என்ற நிலையை உருவாக்குவது எங்கள் கொள்கை: கருணாநிதி...# மூத்தவரோ ,இளையவரோ எம்மகனும் சம்மதம்னு நினைக்கலையா?


==================


15 முதல்இரவை தியாகம்செய்து போராடசென்றவர் கலைஞர்-துரைமுருகன்# கடமை கண்ணியம் கட்டுப்பாட்டு டன் பேசுங்க ்னா பர்ஸ்ட்நைட் செகன்ட் ஒயிfனு பேசிட்டு


==================


16 தமிழ் நாட்டு மக்களுக்காகத்தன் மூன்று முதல் இரவுகளையும் தியாகம் செய்தவர் தான் எங்கள் தானைத்தலைவர்னு யாரும் இன்னும் கிளம்பலையா ?


=================


17 தேர்தலுக்கு பிறகு பாஜகவுடன் அதிமுகவை சேர விடமாட்டேன்: வைகோ # ஜெ பார்முலா தெரியாம பேசாதீங்க.உங்களை சேர விடமாட்டாரு==================


18 பா.ஜ.க.-தெலுங்குதேசம் கூட்டணி அரசியல் சுனாமி போன்றது: சந்திரபாபு நாயுடு...# உதாரணமே தப்பு.சுனாமின்னா அழிவு தானே?==================


19 விஜயகாந்த் என்ன பேசுகிறார்னே புரியவில்லை: சரத்குமார்# நீங்க கேப்டன் மீட்டிங் போய் இருக்கீங்கனு யாராவதுஜெ கிட்டே வத்தி வெச்சுடப்போறாங்க


=================


20 பிரதமர் பதவியை ஏற்க தயார்: ராகுல்காந்தி சொல்கிறார். # கம்பெனிக்குள்ளேயே அலோ பண்ணலையாம்.எம் டி ஆக நான் ரெடின்னானாம்.அது மாதிரி


============================

0 comments: