Sunday, July 17, 2011

வெற்றிகரமான 366 வது நாள் -அட்ரா சக்க -2ஆம் ஆண்டு துவக்க விழா

http://www.thedipaar.com/pictures/resize_20110322194501.jpg 

எப்படி ஸ்டார்ட் பண்றதுன்னே தெரில.. (அப்போ விட்டுடு)..சும்மா விளையாட்டாக எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருடம் பூர்த்தி ஆகிறது.. இந்த சமயத்தில் எனக்கு ஆதரவாக இருந்தவர்கள்,நான் வளரக்காரணமாக இருந்தவர்கள் அனைவரையும் ஒரு முறை நினைவு படுத்திக்கொள்வது எனக்கு நானே என்னை  புதுப்பித்துக்கொள்ள உதவும்..

640 பதிவுகள் (அதுல காப்பி பேஸ்ட் 89) ,  643 ஃபாலோயர்ஸ் ,10,80,000 ஹிட்ஸ் , அலெக்ஸா ரேங்க்கிங்க்ல 49,000 & ட்விட்டர்ல 3290 ட்வீட்ஸ்,அதுல ஃபாலோயர்ஸ் 655 ,இண்ட்லியில் 603 போஸ்ட்கள் ஹிட் (சப்மிட்டட் 658)என  முன்னேற்றப்பாதையில் ....செல்ல உறு துணையாக இருந்தவர்கள்...

1.நல்லநேரம் சதீஷ்குமார் - http://www.astrosuper.com/பத்திரிக்கைகளில் ஜோக்ஸ் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்தே இவர் எனக்கு பழக்கம். நிரஞ்சனா,ரிப்போர்ட்டர் போன்ற இதழ்களில் இருவரும் பணி ஆற்றினோம்.. இருவருக்கும் உள்ள பொதுவான அம்சம் நகைச்சுவை உணர்வு,கலாய்த்தல்...இருவருக்கும் உள்ள வேறுபாடு கடவுள் நம்பிக்கை,ஜோதிடம்.. அவருக்கு 2லும் அளவு கடந்த நம்பிக்கை....கால ஓட்டத்தில் அவர் ஜோதிடராகவே ஆகி விட்டார்.. எனக்கு இன்னும் கடவுள் நம்பிக்கை வரவில்லை.. அவர் பிளாக்கில் களவாணி பட விமர்சனம் முதன் முதலில் எழுதினேன்..படம் சூப்பர் ஹிட் என்று ரிலீஸ் ஆன அன்றே மாலை 3 மணிக்கு விமர்சனம் போட்டேன்..  பிறகு 2 மாதங்களில் தனி பிளாக் அவரே ஓப்பன் பண்ணிக்கொடுத்தார்.. நான் ஈரோடு,அவர் சித்தோடு என்பதால் அடிக்கடி இருவரும் சந்திக்க வாய்ப்பு உண்டு. அளவளாவுவோம்.. கருத்துப்பரிமாற்றங்கள் காரசாரமாக நடக்கும்.. 

2. ரமேஷ் ரொம்ப நல்லவன் சத்தியமா -   http://sirippupolice.blogspot.com/2011/07/1.htmlநான் எழுதிய 640 போஸ்ட்களில் 184 போஸ்ட்களுக்கு மீ த ஃபர்ஸ்ட் என கமெண்ட் போட்டவர்..ஆரம்ப நாட்களிலேயே இவர் எனக்கு அளித்த ஊக்குவிப்பு என் எழுத்தை மேம்படுத்த உதவியது.. செம காமெடியான ஆள்.. மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவார்.. சென்னை சென்ற போது ஒரு முறை சந்தித்து எங்கள் நட்பை பலப்படுத்திக்கொண்டோம்..பிறகு விகடன் காப்பி பேஸ்ட் போஸ்ட்,பிளாக்கில் ஃபிகர்கள் ஃபோட்டோ போடுவது என அவருக்கு சில விஷயங்கள் பிடிக்காத போது, ஓப்பனாக ஃபோன் பண்ணி எதிர்ப்பு தெரிவித்தார்.. என்னை நேரடியாக தாக்கி 3 பஸ்கள் விட்டார்.. இருந்தாலும் இன்னும் நட்பு நீடிக்கிறது.. அவரது ஆசைப்படி அந்த இரண்டையும் முழுதாக என்னால் தவிர்க்க முடியா விட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறேன்..

3. திருப்பூர் புரட்சித்தலைவன் - இவரும் ஆரம்ப கட்ட நண்பர் + வாசகர்.. என் பதிவுகள் நன்றாக இருந்தால் ஓக்கே என்பார், குறை இருந்தால் ஓப்பனாக சொல்வார்.. இந்த மாதிரி ஓப்பன் மைண்ட் வாசகர்கள் தான் ஒரு படைப்பாளிக்குத்தேவை.. கண்ணாடி போல.. ஏன்னா நாம எது எழுதுனாலும் அது செம அப்டின்னு தான் நாம் நினைப்போம்.. ஆனா மற்றவர்களுக்குத்தான் உண்மை நிலவரம் புரியும்.. 

4. பன்னிக்குட்டி ராம்சாமிhttp://shilppakumar.blogspot.com/ ஒரே அலை வரிசை எண்ணம் கொண்ட இருவர் நண்பராக அமைந்து விட்டால் அதை விட ஒரு நல்ல கொடுப்பினை ஒரு மனிதனுக்குக்கிடைக்காது.. என்னை விட படிப்பு,அனுபவம்,திறமை அனைத்திலும் முன்னே இருந்தாலும் எங்களை கண்ணுக்குத்தெரியாத ஒரு பாச வலையால் கட்டியது இருவருக்கும் பொதுவான காமெடி உணர்வு, கலாய்க்கும் கலாட்டாத்தனம்.. என் பதிவுகளுக்கு இவரது கமெண்ட்கள் மேலும் மெருகு சேர்த்தது.. பல வாசகர்கள் ஃபோன் பண்ணி இதை தெரிவித்தார்கள்..ஈரோட்டில் இவர் ஒரு முறை வந்த போது நேரில் சந்தித்தோம். அது பற்றி தனியே ஒரு பதிவு விரைவில் போடுவேன்..எனது பஸ்கள் களை கட்ட இவரது கமெண்ட்ஸ் முக்கிய காரணம்..

5. விக்கி உலகம் தக்காளி  http://vikkiulagam.blogspot.com/
காதல் கோட்டை படத்தில் வருவது போல் இருவரும் பார்க்காமலேயே நட்பு வளர்த்தோம்.. தினமும் 8 டூ 9 ஃபோனில் பேசுவார்.. (அவர் தான் பேசுவார் ஹி ஹி )பதிவுலகம் பற்றி பரிமாறிக்கொள்வோம்.. இவர் ஒரு ராணுவ வீரர் என்பது சமீபத்தில் தான் தெரிந்தது.என் மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது..வியட்நாமில் இருக்கிறார்.. நான் பழகிய வரை தன் மனைவியைத்தவிர எந்த ஒரு பெண்ணையும் மனதாலும் நினைக்காத அபூர்வ மனிதர்.. ஆனால் நான் சும்மா கமெண்ட்ல கலாய்ப்பேன்.. இப்போது அவர் மனைவி வியட்நாம் வந்த பிறகு சரியாக என்னிடம் பேசுவதில்லை.. ( மனைவிட்ட திட்டு வாங்கவே நேரம் சரியா இருக்காம்)

http://edesibabes.com/wp-content/uploads/2009/02/superior_college_girls.2q7woacrj9yc0w4csowgkkww8.agtqkzp57u8sw4wcokksok0g0.th-595x394.jpg

6. லேப்டாப் மனோ - http://nanjilmano.blogspot.com/பதிவுலகில் என்னை டேய் என உரிமையுடன் அழைக்கும் ஒரே பதிவர். (இதுதான் சாக்குன்னு ஆளாளுக்கு அப்படி கூப்பிடக்கூடாது)நெல்லை பதிவர் சந்திப்பில் தான் நேரில் சந்தித்தோம்.. ஆள் புரோஃபைலில் கேப்டன் மாதிரி மிரட்னாலும் நேரில் உதய கீதம் மோகன் மாதிரி சாஃப்ட் டைப். 

7.இலங்கை அதிரடிப்பதிவர் நிரூபன்http://www.thamilnattu.com/
எனது பிளாக் பாஸ்வோர்டு இவரிடம் உண்டு.. எப்போ வேணும்னாலும் உதவின்னு கேட்டா செஞ்சு குடுப்பார், (ஆளாளுக்கு தொந்தரவு  பண்ணாதீங்கப்பா.. அப்புறம் எனக்கு பண்ண மாட்டார்)நல்ல மனிதர்.. இவரது பல கட்டுரைகள் என்னை வியப்பில் ஆழ்த்தியதுண்டு.. 

8. மாத்தி யோசி ஜீவன் - http://maaththiyosi-maaththiyosi.blogspot.com/ஃபிரான்சில் பணியாற்றிய இவர் என் ஆத்மார்த்த நண்பர். பதிவுலகில் விக்கி தக்காளிக்கு என் நட்பில் முதல் இடம் என்றால் இவருக்கு அடுத்த இடம்.. நான் பல சமயம் மனம் கலங்கிய நாட்களில் எல்லாம் எனக்கு ஆறுதல் அளித்து உதவி செய்தவர்.. ஒத்தடம் கொடுத்தவர்.

எனது பிளாக்கிற்கு பின்னூட்டம் போட்டது மூலம் அறிமுகம் ஆனவர்.. நான் ஆஃபீஸ் வேலையாக வெளியே ஃபீல்டு ஒர்க்கில் இருக்கும்போது என் பிளாக்கில் பதிவு போடுபவர் இவர் தான். கோவை பெண் பதிவர் கொலை வழக்கு என்னும் ஒரு தொடர் பதிவுக்கு காரண கர்த்தா இவரே.. அந்தப்பதிவு விரைவில் வெளிவரும்.. உண்மைக்கதை அது..

10. சித்தர்கள் ராஜ்ஜியம் தோழி - http://siththarkal.blogspot.com/இவர் ஒரு இலங்கைப்பதிவர்.என் பிளாக்கில் பல லே அவுட் மாற்றங்களை கொண்டு வந்தவர். நான் மற்ற விகடன் பதிவுகளை காப்பி பேஸ்ட் செய்தாலும் என் பதிவை யாரும் காப்பி பேஸ்ட் பண்ணி விடக்கூடாது (!!!!) எனும் உயர்ந்த கொள்கைக்கு உதவி செய்தவர்..  

( ரொம்ப தொல்லைப்பா)

இந்தக்கட்டுரை நீண்டு கொண்டே போய் விடும் அபாயம் இருப்பதால் இத்துடன் நன்றி நவிலல் நிகழ்ச்சியை நிறுத்துகிறேன்.. 

காமெடி,சினிமா,கலாய்த்தல் என்ற பாதையிலிருந்து கொஞ்சம் விலகி இனி சமூகம் சார்ந்த  விழிப்புணர்வுப்பதிவுகள்,அனுபவப்பதிவுகள் அதிகம் போட உத்தேசித்து உள்ளேன்..  கமெண்ட் போடும் நண்பர்கள் தங்கள் கருத்தை கூறவும்.. 

 அன்பு உள்ளங்கள்க்கு நன்றி 

கருண்,உணவுலகம்அண்ணன், செங்கோவி, ம தி சுதா ,டகால்டி,ஹேமா, மைந்தன் சிவா பட்டா பட்டி,வைகை,கவிதைக்காதலன்,யாதவன்,ராஜபேட்டை ராஜா,டெரர் கும்மி குரூப்ஸ்,உண்மைத்தமிழன்,கேபிள் சங்கர்,அப்துல்லா அண்ணன்,ராஜராஜேஸ்வரி,சங்கவி,ஜேம்ஸ்பாண்ட் சதீஷ், ஃபிலாசஃபி பிரபாகரன்,தமிழ்வாசி,,பாபு,சேட்டைக்காரன்,பிரகாஷ்,கூடல்பாலா,ராம்வி,கடம்பவனக்குயில்,மணிவண்னன்,ராஜராஜெஸ்வரி,
ஆஞ்சலின்,சவுந்தர்,குணசேகரன்,கோவை நேரம் ,மதுரன்,காங்கேயம் நந்தகுமார்,செல்வா,சசிகுமார்,ரமேஷ்பாபு,ஜீ,அமைதி அப்பா,ரியாஸ் அகமது ,கோகுல்,மைந்தன் சிவா,ஷிவா ஸ்கை,சரியல்ல,சத்யா,நிகழ்வுகள்,கானோ வரோ,கல்பனா ,உமாகிருஷ்,சசிகா மேனகா,லக்‌ஷ்மி,ஹேமா, சித்ரா, நாய்க்குட்டி மனசு ரூபினா,ஜோசஃபின் ,துஷ்யந்தன்,மற்றும் விடுபட்ட உள்ளங்கள் என்னை மன்னிக்கவும் ( சி பி பிளாக்ல மன்னிப்பு கேட்காம இருந்தா எப்படி? ஹி ஹி )

தொடர்ந்து ஆதரவு அளிக்க அனைவரையும் வேண்டி  விரும்பி கேட்டுக்கொல்கிறேன்.. அடச்சே கொள்கிறேன்....


டிஸ்கி - மேலும் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை கமெண்ட்டில் போடவும் ( பண உதவி  எல்லாம் கேட்கக்கூடாது ஹி ஹி )

160 comments:

தோழி said...

முதலாவது பிறந்த நாள் வாழ்த்துக்கள் சி.பி ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாழ்த்துக்கள் சிபி!

ஆர்வா said...

வாழ்த்துக்கள் சிபி சார்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

வாழ்த்துக்கள் சிபி

முத்தரசு said...

வாழ்த்துக்கள்

சேலம் தேவா said...

மென்மேலும் உங்கள் பிளாக் வளர்ந்து டாட்காமாக மாறி பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன்.வளர்க உங்கள் சேவை(?!)... :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எல்லாரையும் நினைவு கூர்ந்திருக்கிறீங்க...!

முத்தரசு said...

நிறைய விஷயம் இருக்கு பொறுமையாக படிக்க அவகாசம் தேவை - படிச்சுட்டு வாரேன்

ஆர்வா said...

முதன் முதலில் உங்கள் பிளாக்கில் வருகை புரிந்த போது தவழும் குழந்தையாக அறிமுகம் ஆனீர்கள். ஆனால் இன்றோ, ஒலிம்பிக் ஓட்டம் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள். தமிழ்மணம் முன்னணி, அலெக்ஸா ரேங்கிங் என தங்களின் அட்டகாச முன்னேற்றத்தின் பின்னால் தெரியக்கூடியது உங்களின் உழைப்பு மட்டுமே.. தொடர்ந்து எழுதுங்கள், பல வெற்றிகள் உங்களுக்கு காத்திருக்கிறது. வாழ்த்துக்கள் செந்தில் சார்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னையும் குறிப்பிட்டு சொன்னதை பாராட்டுகிறேன்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது ரமேஷ் 184 போஸ்ட்களுக்கு மீ த ஃபர்ஸ்ட் போட்டாரா? (அப்போ அது மட்டும் தானே பண்ணிக்கிட்டு இருந்தாரு?)

முத்தரசு said...

என்னமோ சமூகம் - அதாம்ப்பா அதிலேயும் மூக்கை நுழைக்கவும். அதே நேரத்தில் இப்ப இருப்பதில் இருந்து விலக வேண்டாமே

முத்தரசு said...

சிபி உமது சேவை இப் பதிவுலகத்திற்கு தேவை - தொடரட்டும். மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது ஈரோட்ல மீட் பண்ணமா? அது நான் தான்னு நம்பிட்டீங்களா?

நிரூபன் said...

வணக்கம் பாஸ், முதலில் வாழ்த்துக்கள், விரிவான கமெண்டோடு வருகிறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

விக்கி கூட டெய்லி ஒருமணி நேரம் கடலையா? அப்போ விக்கிக்கு நீங்கதான் ஊறுகாயா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஹஹஹா... லேப்டாப் மனோ டேய்னு மட்டுமா கூப்புடுறாரு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நிரூபன் கிட்ட உங்க பாஸ்வெர்ட் இருக்கா, எப்படியாவது வாங்கிடுறேன்....!

மாலதி said...

வாழ்த்துக்கள் சிபி சார்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மாத்தி யோசி றஜீவன் எனக்கும் நல்ல நண்பர், இப்போ தொழில்ல கொஞ்சம் பிசியாகிட்டார்!

ராஜி said...

டிஸ்கி - மேலும் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை கமெண்ட்டில் போடவும் ( பண உதவி எல்லாம் கேட்கக்கூடாது ஹி ஹி

>>
இனியாவது "படிக்குறதுக்கு" பதிவை போடுங்க.ப்ளீஸ்.

மாலதி said...

உண்மையில் உங்களின் இந்த சாதனை பாட்டுகளுக்குரியது தொடர்ந்து எழுதுங்கள் உளம் கனிந்த பாராட்டுகள்

ராஜி said...

640 பதிவுகள் (அதுல காப்பி பேஸ்ட் 89) , 643 ஃபாலோயர்ஸ் ,10,80,000 ஹிட்ஸ் , அலெக்ஸா ரேங்க்கிங்க்ல 49,000 & ட்வீட்டர்ல 3290 ட்வீட்ஸ்,அதுல ஃபாலோயர்ஸ் 655 என முன்னேற்றப்பாதையில் ....செல்ல உறு துணையாக இருந்தவர்கள்...
>>>>>
தமிழ்மனத்துல தொடர்ந்து முதலிடம், இன்ட்லில தொடர்ந்து எல்லா பதிவுகளும் ஹிட்ஸ்,........னு இன்னும் சொல்லி விளம்பரம் தேடிக்கவேண்டியதுதானே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நான் எதிர்பார்ப்பது, அனுபவ பதிவுகள் போடலாம்...அப்புறம் வலைப்பூவிலேயே நின்னுட்டா எப்படி, அடுத்த கட்டமா இணைய இதழ் மாதிரி தொடங்கலாம்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ப்ளாக் ஓனர் எங்க? இன்னிக்கும் தண்ணியடிச்சிட்டு பிட்டுப்படத்துக்கு போய்ட்டாரா?

ராஜி said...

என்னையும் இத்திருநாளில் நினைவு கூர்ந்ததுக்கு நன்றி. ஆனால், பேங்க் பேலன்ஸ்ல கட்ட வேண்டிய அமவுண்டை கட்ட மறந்துடாதீங்க.

நிரூபன் said...

வெற்றிகரமான 366 வது நாள் -அட்ரா சக்க -2ஆம் ஆண்டு துவக்க விழா//

வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளும் இந் நேரம்,
தொடர்ந்தும் புதிய பாதையில், பதிவுலகில் பலருக்கு இது வரை தெரிந்திராத தமிழ்ப் பத்திரிகை உலகம், இலங்கை விகடன் வாசகர்கள் அறிந்த நகைச்சுவைப் படைப்பாளியாகிய நீங்கள்,
வருங் காலத்தில் அற்புதமான நகைச்சுவை உணர்வுகளுடன் கூடிய படைப்புக்களை சிறிய டுவிட்ஸ் ஆக அல்லாது, நகைச்சுவைத் தொடராக, நகைச்சுவைப் படைப்புக்களாகத் தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

நிரூபன் said...

உங்களோடு ஒருவராக, என்னையும் இணைத்துக் கொண்டு, நினைவு கூர்ந்தமைக்கு நன்றி பாஸ்...

இப்போது நன்றி என்று மட்டும் தான் சொல்ல முடிகிறது.

நிரூபன் said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி said...
நிரூபன் கிட்ட உங்க பாஸ்வெர்ட் இருக்கா, எப்படியாவது வாங்கிடுறேன்....!//

அதெல்லாம் முடியாது, வேணும்னா...அரபுக் கன்னிகளைத் தானமாக கொடுங்க. அப்புறம் யோசிச்சு முடிவு பண்ணிக்கிறேன்.

நிரூபன் said...

இன்னும் கடவுள் நம்பிக்கை வரவில்லை.. அவர் பிளாக்கில் களவாணி பட விமர்சனம் முதன் முதலில் எழுதினேன்..படம் சூப்பர் ஹிட் என்று ரிலீஸ் ஆன அன்றே மாலை 3 மணிக்கு விமர்சனம் போட்டேன்.. பிறகு 2 மாதங்களில் தனி பிளாக் அவரே ஓப்பன் பண்ணிக்கொடுத்தார்.. நான் ஈரோடு,அவர் சித்தோடு என்பதால் அடிக்கடி இருவரும் சந்திக்க வாய்ப்பு உண்டு. அளவளாவுவோம்.. கருத்துப்பரிமாற்றங்கள் காரசாரமாக நடக்கும்.. //

ஆகா....இவரா இதுக்கெல்லாம் காரணம், நம்ம ஜோதிடருக்கு இந் நேரத்தில் நாங்களும் நன்றி சொல்லிக் கொள்வோம்.

கூடல் பாலா said...

எனக்கு பிடித்த என்டர்டைனிங் பதிவர்களில் முக்கியமானவர் நீங்கள் .....நல்வாழ்த்துக்கள் !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// நிரூபன் said...
@ பன்னிக்குட்டி ராம்சாமி said...
நிரூபன் கிட்ட உங்க பாஸ்வெர்ட் இருக்கா, எப்படியாவது வாங்கிடுறேன்....!//

அதெல்லாம் முடியாது, வேணும்னா...அரபுக் கன்னிகளைத் தானமாக கொடுங்க. அப்புறம் யோசிச்சு முடிவு பண்ணிக்கிறேன்.
///////

இந்த டீல் ஓக்கே, நீங்க பாஸ்வெர்ட அனுப்பி வைங்க, நானும் அதை அனுப்பி வைக்கிறேன்......

நிரூபன் said...

ரமேஷ் ரொம்ப நல்லவன் சத்தியமா - நான் எழுதிய 640 போஸ்ட்களில் 184 போஸ்ட்களுக்கு மீ த ஃபர்ஸ்ட் என கமெண்ட் போட்டவர்..//

ஆகா....இது வேறையா...
கணக்கிலை நீங்க ஒரு புலியாக இருக்கிறீங்களே.

ஹி...ஹி...

நிரூபன் said...

திருப்பூர் புரட்சித்தலைவன் -//

யாருங்க அவர் பாஸ்?
அவரோடை ப்ளாக் லிங் இல்லையா.

நிரூபன் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி said...
இந்த டீல் ஓக்கே, நீங்க பாஸ்வெர்ட அனுப்பி வைங்க, நானும் அதை அனுப்பி வைக்கிறேன்......//

அவ்...அவ்..
அதெல்லாம் முடியாது, பாஸ்வேர்ட் வேணும்னா ஒரு நிமிசத்திலை அனுப்பிடலாம். ஆனால் அவங்க நம்ம ஊருக்கு வர நாளாகுமோ;-))

நான் எப்படி நம்பிறது.

நிரூபன் said...

என் பதிவுகளுக்கு இவரது கமெண்ட்கள் மேலும் மெருகு சேர்த்தது.. பல வாசகர்கள் ஃபோன் பண்ணி இதை தெரிவித்தார்கள்..ஈரோட்டில் இவர் ஒரு முறை வந்த போது நேரில் சந்தித்தோம். அது பற்றி தனியே ஒரு பதிவு விரைவில் போடுவேன்..எனது பஸ்கள் களை கட்ட இவரது கமெண்ட்ஸ் முக்கிய காரணம்..//

ஆகா....அது தான் நான் இப்போதும் நினைத்து நினைத்து நினைக்கும் ஒரு கமெண்டும் இந்த வரிசையில் இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஜும்பலக்கடி பம்பா! ஆபிரிக்கா அங்கிள் கமெண்ட்..

ஹா...ஹா...அவ்..

நிரூபன் said...

பன்னிக்குட்டி ராம்சாமி - http://shilppakumar.blogspot.com/ ஒரே அலை வரிசை எண்ணம் கொண்ட இருவர் நண்பராக அமைந்து விட்டால் அதை விட//

ஏன் நீங்க ரெண்டு பேரும் எப் எம் ரெடியோவா வைச்சிருக்கிறீங்க. என்னது...ரெண்டு பேரு மீட்டரும் ஒன்றா;-)))

Unknown said...

மன்னிப்பு திலகம் திரு. சிபி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!.......

முதல் வருட பிறந்த நாள் (பளோகுக்கு!) வாழ்த்துக்கள்!......பதிவுகளில் பெரிய விமர்சகனாக தெரிந்தாலும், யார் மனமும் வருத்தப்படக்கூடாது என்று அமைதி காக்கும் பண்பு உம்மிடத்தில எனக்கு பிடித்தது......

கேட்டுக்கொள்வது - கமர்சியல் பதிவுகளின் நடுவில் ரிவிட் பதிவுகளையும் எதிர் பார்க்கும் உங்கள் அன்பான மாக்கான் விக்கி!

நண்பா உன் பதிவுகள் தொடரட்டும் விரைவில் சிந்திப்போம் வாழ்த்துக்கள்!

'பரிவை' சே.குமார் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நிரூபன் said...

காதல் கோட்டை படத்தில் வருவது போல் இருவரும் பார்க்காமலேயே நட்பு வளர்த்தோம்.. தினமும் 8 டூ 9 ஃபோனில் பேசுவார்.//

விக்கி அண்ணாவின் அண்ணி, கொஞ்சம் பார்த்துங்க.

ரூட் மாறுது போல...உங்களை வேணாம்னு, சிபி பக்கம் விக்கி ஓடிடப் போறாரு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// நிரூபன் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
இந்த டீல் ஓக்கே, நீங்க பாஸ்வெர்ட அனுப்பி வைங்க, நானும் அதை அனுப்பி வைக்கிறேன்......//

அவ்...அவ்..
அதெல்லாம் முடியாது, பாஸ்வேர்ட் வேணும்னா ஒரு நிமிசத்திலை அனுப்பிடலாம். ஆனால் அவங்க நம்ம ஊருக்கு வர நாளாகுமோ;-))

நான் எப்படி நம்பிறது.

////////

மேட்டர் வேணும்னா நம்பித்தானே ஆகனும்?

ராஜி said...

எல்லாம் சரி இன்று உங்க பதிவுல எழுத்துப்பிழைகள் அதிகமா இருக்கே. என்ன காரணம்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாழ்த்துக்கள் சிபி!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்னை புரிந்து கொண்டதற்கு நன்றி சிபி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////நிரூபன் said...
என் பதிவுகளுக்கு இவரது கமெண்ட்கள் மேலும் மெருகு சேர்த்தது.. பல வாசகர்கள் ஃபோன் பண்ணி இதை தெரிவித்தார்கள்..ஈரோட்டில் இவர் ஒரு முறை வந்த போது நேரில் சந்தித்தோம். அது பற்றி தனியே ஒரு பதிவு விரைவில் போடுவேன்..எனது பஸ்கள் களை கட்ட இவரது கமெண்ட்ஸ் முக்கிய காரணம்..//

ஆகா....அது தான் நான் இப்போதும் நினைத்து நினைத்து நினைக்கும் ஒரு கமெண்டும் இந்த வரிசையில் இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஜும்பலக்கடி பம்பா! ஆபிரிக்கா அங்கிள் கமெண்ட்..

ஹா...ஹா...அவ்..

///////

அடப்பாவி மக்கா.............

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது ரமேஷ் 184 போஸ்ட்களுக்கு மீ த ஃபர்ஸ்ட் போட்டாரா? (அப்போ அது மட்டும் தானே பண்ணிக்கிட்டு இருந்தாரு?)//

ஆமா அப்போ இவரு அமெரிக்க ஜனாதிபதியா இருந்தாரு..

நிரூபன் said...

லேப்டாப் மனோ - http://nanjilmano.blogspot.com/பதிவுலகில் என்னை டேய் என உரிமையுடன் அழைக்கும் ஒரே பதிவர். (இதுதான் சாக்குன்னு ஆளாளுக்கு அப்படி கூப்பிடக்கூடாது)//

அவ்....முன்னெச்சரிக்கை. இருங்க அவர் கூட டீல் பண்ணிக்கிறேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ராஜி said...

டிஸ்கி - மேலும் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை கமெண்ட்டில் போடவும் ( பண உதவி எல்லாம் கேட்கக்கூடாது ஹி ஹி

>>
இனியாவது "படிக்குறதுக்கு" பதிவை போடுங்க.ப்ளீஸ்.//

repeattuuuuuuuuuuuu. hehe

ராஜி said...

Neatness ம் missing.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

50

நிரூபன் said...

மாத்தி யோசி ஜீவன் - http://maaththiyosi-maaththiyosi.blogspot.com/ஃபிரான்சில் பணியாற்றிய இவர் என் ஆத்மார்த்த நண்பர். பதிவுலகில் விக்கி தக்காளிக்கு என் நட்பில் முதல் இடம் என்றால் இவருக்கு அடுத்த இடம்.. நான் பல சமயம் மனம் கலங்கிய நாட்களில் எல்லாம் எனக்கு ஆறுதல் அளித்து உதவி செய்தவர்.. ஒத்தடம் கொடுத்தவர்.//

ஏன் குவாட்டர் பாட்டில் வாங்கித் தந்தாரா...
இல்லே மயிலிறகு பிரான்ஸில் இருந்து வாங்கி அனுப்பினாரா.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ராஜி said...

Neatness ம் missing.//

வடை போச்சே. ஹிஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
என்னை புரிந்து கொண்டதற்கு நன்றி சிபி
////////

ஆமா இவரு பெரிய பின்நவீனத்துவ இலக்கியம், இவரை படிச்சு புரிஞ்சிக்கிறாங்க.....

நிரூபன் said...

ராஜி - http://rajiyinkanavugal.blogspot.com/

எனது பிளாக்கிற்கு பின்னூட்டம் போட்டது மூலம் அறிமுகம் ஆனவர்.. நான் ஆஃபீஸ் வேலையாக வெளியே ஃபீல்டு ஒர்க்கில் இருக்கும்போது என் பிளாக்கில் பதிவு போடுபவர் இவர் தான். ட்விட்டர் அக்கவுண்ட்ஸில் வரும் பல ட்வீட்களுக்கு ஐடியா கொடுப்பார்.. ( காப்பி பேஸ்ட் ஹி ஹி ). இது போக கோவை பெண் பதிவர் கொலை வழக்கு என்னும் ஒரு தொடர் பதிவுக்கு காரண கர்த்தா இவரே.. அந்தப்பதிவு விரைவில் வெளிவரும்.. உண்மைக்கதை அது..//

என்னய்யா பயமுறுத்துறீங்க...
அடடா...இவர் தானா உங்க அஸிஸ்டெண்ட்...
இனிமே ஜாக்கிரதையாக இருக்கனுமே.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////// நிரூபன் said...
மாத்தி யோசி ஜீவன் - http://maaththiyosi-maaththiyosi.blogspot.com/ஃபிரான்சில் பணியாற்றிய இவர் என் ஆத்மார்த்த நண்பர். பதிவுலகில் விக்கி தக்காளிக்கு என் நட்பில் முதல் இடம் என்றால் இவருக்கு அடுத்த இடம்.. நான் பல சமயம் மனம் கலங்கிய நாட்களில் எல்லாம் எனக்கு ஆறுதல் அளித்து உதவி செய்தவர்.. ஒத்தடம் கொடுத்தவர்.//

ஏன் குவாட்டர் பாட்டில் வாங்கித் தந்தாரா...
இல்லே மயிலிறகு பிரான்ஸில் இருந்து வாங்கி அனுப்பினாரா.
///////

மாத்தி யோசி எனக்கு இதுலாம் வாங்கித்தரலியே? படுவா வரட்டும் கவனிச்சுக்கிறேன்.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது ரமேஷ் 184 போஸ்ட்களுக்கு மீ த ஃபர்ஸ்ட் போட்டாரா? (அப்போ அது மட்டும் தானே பண்ணிக்கிட்டு இருந்தாரு?)//

ஆமா அப்போ இவரு அமெரிக்க ஜனாதிபதியா இருந்தாரு...///

தேங்க் யூ....

நிரூபன் said...

சித்தர்கள் ராஜ்ஜியம் தோழி - http://siththarkal.blogspot.com/இவர் ஒரு இலங்கைப்பதிவர்.என் பிளாக்கில் பல லே அவுட் மாற்றங்களை கொண்டு வந்தவர். நான் மற்ற விகடன் பதிவுகளை காப்பி பேஸ்ட் செய்தாலும் என் பதிவை யாரும் காப்பி பேஸ்ட் பண்ணி விடக்கூடாது (!!!!) எனும் உயர்ந்த கொள்கைக்கு உதவி செய்தவர்.. //

சிபியின் பதிவுகளை காப்பி பேஸ்ட் பண்ண முடியாது தவிக்கும் இணையத்தளங்களே, நீங்க எதுவாக இருந்தாலும் இனிமேல் சகோதரி தோழியிடம் டீல் பண்ணிக் கொள்ளுங்க. அவர் தான் உங்கள் சிபியின் பதிவுகளை காப்பி பேஸ்ட் செய்யும் தொழிலுக்கு ஆப்பு வைத்துள்ளார்.

settaikkaran said...

எனக்குத் தெரிந்து ஒரு வருடத்தில் இவ்வளவு பிரபலமான பதிவர் நீங்கள் ஒருவர் மட்டும்தான் தல! நன்றி மறப்பது நன்றன்று...என்ற குறளுக்கு ஏற்ப, உங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களை இங்கே குறிப்பிட்டிருப்பது மிகவும் சிறப்பு.

என் பெயரை சேர்த்திருப்பது குளுகுளுவென்றிருந்தாலும், ’நான் என்ன செய்தேன்?’ என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.

வெற்றிப்பயணம் தொடரட்டும்.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

வெற்றிகரமான 366 வது நாளா? அட்ரா சக்க !அட்ரா சக்க !!
சமூகம் சார்ந்த விழிப்புணர்வு பதிவு எழுத முடிவு சிததர்க்கு இன்னுமொரு அட்ரா சக்க!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நிரூபன் said...
பன்னிக்குட்டி ராம்சாமி - http://shilppakumar.blogspot.com/ ஒரே அலை வரிசை எண்ணம் கொண்ட இருவர் நண்பராக அமைந்து விட்டால் அதை விட//

ஏன் நீங்க ரெண்டு பேரும் எப் எம் ரெடியோவா வைச்சிருக்கிறீங்க. என்னது...ரெண்டு பேரு மீட்டரும் ஒன்றா;-)))
/////////

ஷேம் ஷேம் பப்பி ஷேம்....

Unknown said...

பய புள்ளைய இன்னிக்கி கிண்ட கூடாதுன்னு பாத்தா எந்த 10 மணி ஷோவுக்கு போயிடுச்சி தெரியலியே ஹிஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வழக்கம் போல இன்றும் போட்டோவில் உள்ள பிகர்களின் பெயர் போடவில்லை....? நாங்க என்ன பிகரோட போன் நம்பர், ஈமெயிலா கேட்டோம்.... வெறும் பேர் தானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// விக்கியுலகம் said...
பய புள்ளைய இன்னிக்கி கிண்ட கூடாதுன்னு பாத்தா எந்த 10 மணி ஷோவுக்கு போயிடுச்சி தெரியலியே ஹிஹி!
////////

இன்னிக்கு பிட்டு இருக்காதே மாப்ள?

சி.பி.செந்தில்குமார் said...

@விக்கியுலகம்

ராஸ்கல்.. எல்லாம் பார்த்துட்டு தாண்டா இருக்கேன்

சி.பி.செந்தில்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி


ட்விட்டர்ல 2 ஃபிகருங்க செட் ஆகிட்டாங்களாம். அதான் அண்ணன் அங்கே யே ஹி ஹி

Unknown said...

"பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// விக்கியுலகம் said...
பய புள்ளைய இன்னிக்கி கிண்ட கூடாதுன்னு பாத்தா எந்த 10 மணி ஷோவுக்கு போயிடுச்சி தெரியலியே ஹிஹி!
////////

இன்னிக்கு பிட்டு இருக்காதே மாப்ள?"

>>>>>>>

மாப்ள இன்னிக்கி சண்டே ஆச்சே...இவருக்கு மட்டும் தனி ஷோ போடுவாங்களோ!

சி.பி.செந்தில்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

ஆமா. பெரிய தங்கமலை ரகசியம்.. பிளாக் உலகத்துல 13 பேருக்கு பாஸ்வோர்டு தெரியும்.. பேசாம பப்ளிக்கா டிஸ்கிலயே அதை போட்டுடலாம்னு பார்க்கறேன் ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

sari sari சரி சரி பப்ளீக் பப்ளீக்

ஜானகிராமன் said...

பத்து வருஷத்துக்கு எழுத வேண்டியதை, ஒரே வருஷத்துல பதிவு செஞ்சிருக்கீங்க. இருபது வருஷத்துக்கப்புறம் கிடைக்கக்கூடிய ரீச்சை 366 நாளில் வாங்கியிருக்கீங்க. இதுக்கெல்லாம் காரணமான கடின உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும், வெறித்தனமான ஈடுபாட்டுக்கும், இன்னும் எல்லாத்துக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். (யப்பா, சும்மா ஒரு கமெண்ட்டை போடவே இப்படி நாக்கு தள்ளுதே, நீங்கள்ளாம் எப்படி சிபி, விடாம எழுதறீங்க?)

Unknown said...

சிங்கம்(!) கெளம்பிருச்சிi

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////விக்கியுலகம் said...
"பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// விக்கியுலகம் said...
பய புள்ளைய இன்னிக்கி கிண்ட கூடாதுன்னு பாத்தா எந்த 10 மணி ஷோவுக்கு போயிடுச்சி தெரியலியே ஹிஹி!
////////

இன்னிக்கு பிட்டு இருக்காதே மாப்ள?"

>>>>>>>

மாப்ள இன்னிக்கி சண்டே ஆச்சே...இவருக்கு மட்டும் தனி ஷோ போடுவாங்களோ!
/////////

2 டவுசர் வாங்குனா ஒண்ணு ஃப்ரீ மாதிரியா?

Unknown said...

இததான் Back round உள்ள ஆளுன்னு சொல்றாங்களோ ஹிஹி!

Unknown said...

வாழ்த்துக்கள் பாஸ்! :-)

Unknown said...

ஒரு வருஷத்தில அசுர வளர்ச்சி! இன்னும் வளரட்டும் உங்கள் தளம்!
உங்கள் நன்றி உணர்வுக்கு ஒரு சல்யூட்! :-)

சி.பி.செந்தில்குமார் said...

@தோழி

வழக்கமா நீங்க நைட்ல தானே விழிச்சிருப்பீங்க?

சி.பி.செந்தில்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

நன்றி நண்பா

சி.பி.செந்தில்குமார் said...

@சேலம் தேவா

இதுல ஏதோ உள்குத்து? மாசாமாசம் எனக்கு ரூ 500 செலவு ஆகனுமா?

சி.பி.செந்தில்குமார் said...

@கவிதை காதலன்

நன்றி மணி

சி.பி.செந்தில்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

yoov நீங்க எழுதிக்கொடுத்தபடி போட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

நினைச்சேன்.. அதுவும் பினாமியா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சி.பி.செந்தில்குமார் said...

@ராஜி

appa அப்போ இத்தனை நாளா போட்டது>?

சி.பி.செந்தில்குமார் said...

@ராஜி

அதான் தமிழ்மணம் அரோகரா பாடியச்சே?

சி.பி.செந்தில்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

அதேன்னா இன்னைக்கும்.. யோவ்.. ராச்கல்ஸ்

சி.பி.செந்தில்குமார் said...

@ராஜி

என்னாது? பணமா? மீ த எஸ்கேப்

சி.பி.செந்தில்குமார் said...

@நிரூபன்

அவர் இன்னும் பிளாக் ஓப்பன் பண்னலை

சி.பி.செந்தில்குமார் said...

@விக்கியுலகம்

அடியே.. எதுக்கு>? என்னை ரிவீட் அடிக்கவா? அடிங்கோ

செங்கோவி said...

//வெற்றிகரமான 366 வது நாள் -அட்ரா சக்க -2ஆம் ஆண்டு துவக்க விழா //

அட்ரா சக்க..அட்ரா சக்க..அட்ரா சக்க..

தமிழ்மண ஹீரோவே

எங்கள் ஆதர்ச நாயகனே

கில்மா படத்துக்கு விமரிசனம் போடும் சிங்கமே

உமது சேவை

எங்களுக்குத் தேவை.

வாழ்த்துகள் சிபி...

செங்கோவி said...

//காமெடி,சினிமா,கலாய்த்தல் என்ற பாதையிலிருந்து கொஞ்சம் விலகி இனி சமூகம் சார்ந்த விழிப்புணர்வுப்பதிவுகள்,அனுபவப்பதிவுகள் அதிகம் போட உத்தேசித்து உள்ளேன்.//

இதைத் தான் நான் ரொம்ப நாளாக் கேட்டுக்கிட்டு இருந்தேன். களத்துல இறந்ங்குங்க பாஸ்.

செங்கோவி said...

//கருண்,உணவுலகம்அண்ணன், செங்கோவி,//

எனக்கு ஒத்தை வார்த்தை வார்த்தை தானா? அநியாயம்..அநியாயம்..

Philosophy Prabhakaran said...

நம்பவே முடியல சிபி... ஒரே ஆண்டில் நீங்கள் கண்ட வளர்ச்சி அபாரமானது... வாழ்த்துக்கள்...

Philosophy Prabhakaran said...

முதன்முதலில் எதோ ஒரு மொக்கைப்பட விமர்சனம் மூலமாக உங்கள் தளத்தின் அறிமுகம் கிடைத்தது... நீங்கள் போடும் வசனதொகுப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது...

Rekha raghavan said...

இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் உங்களை அம்பத்தூர் பனிரெண்டாவது வட்டத்தின் சார்பாக வருக வருக என்று வரவேற்கிறேன். உங்கள் ப்ளாக்கின் முதல் பாலோயர் நான் தான் என்பதை மிகவும் தன்னடக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Unknown said...

CONGRATS

Speed Master said...

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்


வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணா வாழ்த்துகள்டா செல்லம்....

J.P Josephine Baba said...

சி.பி என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! என்னையும் உங்கள் தோழியாய் நினைத்தமைக்கு மிக்க ரொம்ப நன்றி!

Sivakumar said...

இரண்டாம் ஆண்டு மேலும் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள். நான் சொன்ன விஷயங்கள் தங்கள் பதிவுகளில் வந்தால் சந்தோஷப்படுவேன்!!

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
"பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// விக்கியுலகம் said...
பய புள்ளைய இன்னிக்கி கிண்ட கூடாதுன்னு பாத்தா எந்த 10 மணி ஷோவுக்கு போயிடுச்சி தெரியலியே ஹிஹி!
////////

இன்னிக்கு பிட்டு இருக்காதே மாப்ள?"

>>>>>>>

மாப்ள இன்னிக்கி சண்டே ஆச்சே...இவருக்கு மட்டும் தனி ஷோ போடுவாங்களோ!//

முதல்ல இந்த ராஸ்கல் போற தியேட்டருக்கு எல்லாம் செல்வாகிட்டே சொல்லி பாம் வைக்கணும்....

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணா நான் நூறு ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே இதுக்கு பார்ட்டி உண்டா அண்ணே...??? விக்கி கேக்க சொன்னான். அவனுக்கு கேக்க கேவலமா இருக்காம் ஹே ஹே ஹே ஹே...

Mohamed Faaique said...

உங்க வளர்ச்சிய பாத்து ஆடிப் போயிட்டேன்.
நானும் ஒரு வருசமா எழுதுரேன். 55 பதிவு, 60 Followers, 20, 000 ஹிட்ஸ். உங்க வளர்ச்சி அபாரம்.

சிரிப்பு போலீஸ் சொல்ரதுக்காக கொபி + பேஸ்ட் பதிவு போடாம இருந்துராதீங்க... நமக்கு இங்கு ஆனந்த விகடன் கிடைக்குரதில்ல. உங்க பதிவுல வர்ரததான் (ஓசி’ல) படிக்கிறோம். சோ, அதைத் தொடர்ந்து செய்யுங்கள்.

Sivakumar said...

“அட்ராசக்கை இரண்டாம் ஆண்டை முன்னிட்டு சிபிக்கு, மனோவின் சொந்த செலவில் பஹ்ரைன் உல்லாசப்பயணம் ஏற்பாடு செய்யப்படும்” – இவண், மனோ மக்கள் மாமன்றம்.

Unknown said...

வாழ்த்துக்கள்....

Kousalya Raj said...

உங்களின் பல போஸ்டுகளை படித்துவிட்டு என்ன கமென்ட் போட என்று யோசித்து (கொஞ்சம் குழம்பி) விட்டு சைலெண்டா சென்றுவிடும் மிக சிலரில் நானும் ஒருத்தி !! :))

இந்த அசூர முன்னேற்றத்திற்கு பின்னால் உங்களின் கடின உழைப்பு இருக்கிறது. உங்களின் வெளிப்படையான பேச்சுக்கள் உங்களுக்கு பல நல்ல நட்புகளை கொடுத்திருக்கிறது, அவர்களை இங்கே நினைவு படுத்தி மகிழ்ந்த குணத்திற்கு பாராட்டுகிறேன், மகிழ்கிறேன் !!

உங்கள் எழுத்தில் இன்னும் பல பதிவுகளை படிக்க ஆர்வமாக இருக்கிறேன்...

வாழ்த்துக்கள் செந்தில் சார் !!

Kousalya Raj said...

//விழிப்புணர்வுப்பதிவுகள்,அனுபவப்பதிவுகள் அதிகம் போட உத்தேசித்து உள்ளேன்//

நான் எதிர்பார்த்ததை நீங்களே சொல்லிடீங்க ! மிக்க நன்றி.தொடரட்டும் உங்களின் சீரிய எழுத்து பணி !

சென்னை பித்தன் said...

குழந்தை பிற்ந்ததும் நீந்தும்,தவழும் அமரும், நிற்கும்,நடக்கும் பின் ஓடும்.
ஆனால் இக்குழந்தை பிறந்தவுடன் பந்தயத்தில் ஓடி வெற்றி பெற்று விட்டதே!
வாழ்த்துகள் சிபி!

Unknown said...

//சென்னை பித்தன் said...
குழந்தை பிற்ந்ததும் நீந்தும்,தவழும் அமரும், நிற்கும்,நடக்கும் பின் ஓடும்.
ஆனால் இக்குழந்தை பிறந்தவுடன் பந்தயத்தில் ஓடி வெற்றி பெற்று விட்டதே!
வாழ்த்துகள் சிபி!//
ரிப்பீட்டு. எனது வாழ்த்துக்களும் சிபிக்கு.

Unknown said...

என் பங்கிற்கு:
http://unavuulagam.blogspot.com/2011/07/blog-post_17.html
வந்து பாருங்கள் சிபி.

Unknown said...

வாழ்த்துக்கள் தல!!!
பதிவுலகில் புரட்சிய ஏற்படுத்தியவர்கள்...
ஒன்னு சி பி
ரெண்டு நிருபன்!!!

MoonramKonam Magazine Group said...

ஒரு வருடத்தில் பத்து லட்சம் ஹிட்ஸ் தாண்டியிருப்பது அபார வியத்தகு சாதனை ! உங்கள் கலாய்ப்பு கிண்டல் பதிவுகளுக்குள் ஒளிந்திருக்கும் ஒரு ஜனரஞ்சசகத்தனம்தான் உங்கள் இந்த மகத்தான வெற்றிக்கு காரணம் நண்பரே... மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் சிபி!

M.R said...

சிபி : மேலும் என்னிடம் என்ன எதிர்பார்கிறீர்கள் என்பதை கமண்டில் போடவும் (பண உதவி எல்லாம் கேட்ககூடாது )

நான் : மேலும் உங்களிடம் என்னங்க கேட்க போறேன் , ஓய்வா இருந்தா நம்ம தளத்திற்கும் கொஞ்சம் வந்து போங்க நண்பா .

thulithuliyaai.blogspot.com

Jey said...

வாழ்த்துக்கள். சிபி நீ கண்டினியூ....

பன்னி+டேமேஜருக்கும் வாத்துக்கள், ஏன் எதுக்குனு எல்லாம் கேக்கக் கூடாது...

rajamelaiyur said...

Congratulation my dear friend

தமிழ்வாசி பிரகாஷ் said...

"அட்ராசக்க" பிறந்தநாள் பரிசாக நாளை என் வலைப்பூவில் அவரது பேட்டி இடம்பெற இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

விழிப்புணர்வு, அனுபவ பதிவுகள் போட போறிங்களா? தல ஒருமுறைக்கு ரெண்டு முறை யோசிச்சுக்கங்க.... ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்பிடற மாதிரின்னு நெனச்சிராதிங்க.....

RAMA RAVI (RAMVI) said...

366! அட்ரா சக்க, வாழ்த்துக்கள் செந்தில்குமார்.
thanks for mentioning me.

Napoo Sounthar said...

வெற்றி மீது வெற்றி வந்து சிபியைச் சேரும்..

KANA VARO said...

வாழ்த்துக்கள் சி.பி

Unknown said...

ஜனரஞ்சக பதிவர் சிபிக்கு,அட்ரா சக்க,அட்ரா சக்க,என கூறுமளவுக்கு, மென்மேலும் பதிவுலகில் கோலோச்ச வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!!!!!!

அமர பாரதி said...

வாழ்த்துக்கள்...

கோவை நேரம் said...

வாழ்த்துக்கள் சிபி..ஒரு வருடம் தானா..? நம்ப முடியவில்லை ...பதிவுலகில் பழம் தின்று கொட்டை போட்டவர் என்று நினைத்திருந்தேன் ..உங்களின் அசுர வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள்...

கவி அழகன் said...

வாழ்த்துக்கள் தலைவா வாழ்க வளமுடன் நம்மட பெயரும் இருக்குதப்பா உங்கட லிஸ்டில சந்தோசம் சந்தோசம்

வைகை said...

வாழ்த்துக்கள் சிபி அண்ணா!

வைகை said...

நான் முன்பே உங்களிடம் சொன்னதுபோல...நான் முதலில் படித்து உங்கள் தளம்தான்..என்னை எழுத தூண்டியது உங்கள் எழுத்துக்கள்தான்..( தக்காளி இவனே எழுதுறான்?..நாம எழுத முடியாதா?ஹி..ஹி )

KANA VARO said...

கடவுள் சத்தியமா என் பேர் இருப்பதை இப்ப தான் பாக்கிறன். நானும் கொலரை தூக்கி விடட்டோ! (பின்ன சி.பி பதிவில வந்துட்டோம்ல)

வைகை said...

மாற்றங்கள் என்ன வேண்டும் என்று கேட்டால்... ஒரு நாளைக்கு ஒரு பதிவு போட்டால் நாங்கள் படித்து கருத்து சொல்ல எதுவாக இருக்கும்.. இப்பொழுதும் அனைத்தையும் படிக்கிறேன்.. ஆனால் போன்ல படிச்சு வீட்டுக்கு வந்து கமென்ட் போடறதுக்குள்ள அடுத்த பதிவு வந்துருது..அதான் இப்ப வெறும் வாசகனா மட்டும் இருக்கேன்!

வைகை said...

உங்க வளர்ச்சிக்கு என் பெயரையும் குறிப்பிட்டது உங்கள் பெருந்தன்மை! என் வளர்ச்சிக்கு உங்களை பயன்படுத்தினேன் என்பதே உண்மை!( அப்பிடி என்ன வளந்துட்டேன்னு கேக்காதிங்க...நான் 6.2 ஹைட்!)

கோகுல் said...

அட்ரா சக்க.....

அட்ரா சக்க
அட்ரா சக்க
அட்ரா சக்க
அட்ரா சக்க
அட்ரா சக்க
அட்ரா சக்க
அட்ரா சக்க
அட்ரா சக்க

டெல்லி பிரபு said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் காமெடி (கவர்ச்சி) நாயகரே.......

அன்பு said...

வாழ்த்துக்கள் நண்பரே.....!

Anonymous said...

வாழ்த்துக்கள்! நண்பரே!

Subbu's said...

vanakkam brother,
unga oorkaran-kara muraila i am really proud of u. I think i am the one of the longest reader of you.naan ungal eluthukkalai ennoda 10 vayasula irunthe padichuttu varugiren.ippo enakku 32 vayasu.chennimalai public library la neenga kaiyeluthu pirathi veliyidum pothe naan padichiruken.ungaludya pala punai peyarkal like k-priyan,B-priayan,p-priyan ellam enakku gyabagam irukku.naan padipirkaga chennimalaiyai vittu vandhapiragu touch vittuponaalum ungalodo eluthukkala pala weely magazinela padichiruken. neenga eluthiya oru sirukadhaiya (real hindi tution story) naan padichen.kumudhama vikatana endru gyabagam illa.
sari palasa ellam vidunga athai edhukku gyabaga paduthittu.
aana neenga irukku vendiya idam idhumattumalla.neenga innum uyarathula irupeenga ninachen.oru periya writeragavo,script writeragavo alldhu directoragavo irupeengannu naan ethirparthen.neenga munneri antha idathukku varuveengannu enakku nambikai iruku.aanaal athuku undana muyarchikalai neenga sariya edukalayonnu thonuthu.
any how all the best.neenga aduthakattathukku pogonum enbathuthaan en aasai.ethavathu thappa eluthi iruntha mannikavum,

மாய உலகம் said...

1 வருடத்தை எட்டி உள்ளீர்கள்......வாழ்த்துக்கள்....

(எந்த பதிவு சென்றாலும் உங்கள் விமர்சனமும், போட்டோவும் இருப்பதைப்பார்த்தேன்.....அதே போல் ராஜேஸ்வரி மேடம் விமர்சனமும் , தாமரைப்பூ படமும் அதிக பதிவுகளில் இருக்கும் ...) என்னைப்போன்றவர்க்ள் - நண்பர்கள் பதிவுகளுக்கு விமர்சனம் போடும் ஆர்வத்தை மேலும் தூண்டியது நீங்கள் இருவர் தான் ..... மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்....

பாரி தாண்டவமூர்த்தி said...

வாழ்த்துக்கள் சார்....

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
ம.தி.சுதா said...

வணக்கம் சீபி..

மிகவும் சந்தோசமாயிருக்கு ஆனால் முன்னர் போல் சுடுசோறு தர முடியாமையையிட்டுத் தான் கவலைப்பா...

வாழ்த்துக்கள் சீபி... இதே தன்னடக்கத்துடன் என்றும் நீங்கள் வளர என் உளம் கனிந்த வாழ்த்துக்கள்...

சரியில்ல....... said...

ப்ளாக் ஆரம்பித்து ஒரு வருடங்கள் தான் ஆச்சு.

தமிழில் நெ.01 பதிவர்.

எப்படி சாத்தியம் ஆச்சு...?

சரியில்ல....... said...

01 ) நகைச்சுவை திலகம்.

ஒவ்வொரு பதிவிலும் நகைச்சுவை கலந்தே இருக்கும்... அது அவருக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதம்... எழுத்தில் நகைச்சுவையை கலந்து ஆங்காங்கே தூவி.. வாசகர்களுக்கு பிடித்த மாதிரி எழுதுவது எல்லோருக்கும் வாய்த்திடாது.... சிபிக்கு மட்டும் அது கொஞ்சம் ஓவராகவே வாய்த்திருக்கிறது....

சரியில்ல....... said...

02 ) அப் டு டேட் அய்யாசாமி.....

இது கட்டாயமாக குறிப்பிட படவேண்டும்... அரசியலாக இருக்கட்டும், சினிமாவாக இருக்கட்டும்... ஆன்மிகம், ஆரோக்கியம், வேறு எதுவாக இருக்கட்டும்... எல்லாவற்றிலும் அப் டு டேட்'டாக இருப்பது சிபியின் இன்னொரு வெற்றி மந்திரம்... அதை உடனுக்குடன் பதிவில் ஏற்றுவது கூடுதல் ப்ளஸ்.

சரியில்ல....... said...

03 ) எல்லோருக்கும் ஓட்டு...

பதிவுலகத்தில் இவர் கமெண்ட்ஸ் சரமாரியாக எல்லோருக்கும் போடுவார்.. (நேரம் எப்பிடித்தான் கிடைக்குதோ?) யாரோட பதிவை படிக்க சென்றாலும் நமக்கு முன்னே செந்திலின் கமெண்ட்ஸ் இருக்கும்... தேவைப்பட்டால் இலவசமாக சில அட்வைசும் கொடுப்பார்...

சரியில்ல....... said...

04 ) கோவப்படாதே கோபாலா...

ஹிஹிஹி... இது நான் சிபியிடம் கற்றுக்கொண்டது... ஏதாவது திட்டினாலோ... கோவப்பட்டாலோ உடனே வெள்ளைக்கொடி தூக்கிடுவார்...

பகிரங்க மன்னிப்பு கேட்பார்.. தவறை உடனே ஒத்துக்கொள்வார்... போயும் போயும் இவரையா திட்டினோம் என நம்மளையே நெனைக்க வச்சிடுவார்...

சரியில்ல....... said...

05 ) மனதார பாராட்டு.. சீராட்டு...

இது இவரின் நட்பு வட்டத்தை பெரிக்கிக்கொள்ள காரணமாய் அமைந்தது...

நல்ல பதிவு போட்டால் போதும் பாராட்டி தள்ளிடுவார்.. சிபியிடம் பாராட்டு வாங்கினால் போதுமே... நல்ல பதிவுகள் தானே வருமே.. புதிது புதிதாக நட்பு வட்டம் பெருகிக்கொண்டே செல்கிறது இன்னமும்......

சரியில்ல....... said...

06 )சினிமாவும் நானே சீரியலும் நானே...

சின்னத்திரையை ப்ளாக்'கிற்குள் கொண்டு வது அதற்கும் விமர்சனம் போடுவார்... (நாளைய இயக்குனர் ) இவரிடம் மட்டும் எழுதுவதற்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கும்..

சரியில்ல....... said...

இதுபோல் பல பெர்போமான்ஸ்களை வெரைட்டி வெரைட்டியா கொடுத்தி வின் பண்ணி வந்திருக்காரு நம்ம சிபி.

சரியில்ல....... said...

மனதார வாழ்த்துக்கள் நண்பா... இன்னும் பல படிகள் கடந்து மேலே செல்ல வாழ்த்துக்கள்...!!

புதிது புதிதாக கற்றிட வேண்டும்... கற்பித்திட வேண்டும்... உடல் நலம் பேணிட வேண்டும்... பணிவு வேண்டும்... பகுத்தறிவு வேண்டும்... பல்லாயிரக்கணக்கான நண்பர்கள் அன்பு வேண்டும்...

ஹேமா said...

அப்பாடி...இவ்ளோ வாழ்த்துக் கிடைச்சிட்டுதா.நான் கடைசிப் பந்திக்கு வந்திருக்கேன்.பரவால்ல சிபி.மனம் நிறந்த வாழ்த்து எப்போதும்.

அரசியலோ நகைச்சுவையோ சினிமா விமர்சனமோ விமர்சனம் தெளிவாக இருக்கும்.ஏன் சமையல்கூட.என்ன சில பதிவுகளின் படங்கள்தான் பிரமாண்டம்.பின்னூட்டம் போடக் கூசும்.ஆனாலும் உங்கள் ரசிகர்கள் விரும்புகிறார்கள்.தொடருங்கள் சிபி !

நீச்சல்காரன் said...

வாழ்த்துகள்
இது இந்த தளத்தில் போடப்படும் 27635வது கமெண்ட் {source}

Angel said...

வாழ்த்துகள் !!!!
felicitaciones
gong xi
félicitations
Glückwünsche
congratulazioni
Gelukwens
parabéns
поздравления
congratulations
omedetou
mubarak ho
badhai ho

உலக சினிமா ரசிகன் said...

வாழ்த்துக்கள் நண்பரே!
உங்கள் நட்பு வட்டாரம் மிகப்பெரியது...வலியது.
மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.

நெல்லி. மூர்த்தி said...

உங்களுடன் நாங்களும் 2ம் ஆண்டு துவக்க விழாவின் மகிழ்ச்சியினைப் பகிர்ந்துக் கொள்கின்றோம்! வழக்கம் போல அசத்துங்க. மொக்கைப் பதிவுகள் ரிலாக்ஸிற்காக அவ்வப்போது இருந்து விட்டுப் போகட்டும். சமூக நோக்குடன் கூடிய பதிவுகளை தங்கள் பாணியில் நகைச்சுவையுடனோ அல்லது நறுக் சுறுக் என்றோ அல்லது இரண்டும் கலந்த கலவையாகவோ தரவும்.

கடம்பவன குயில் said...

முதல் வருட பிறந்தநாள் வாழ்த்துக்கள் பேபி. மேலும் மேலும் ஆலமரம் போல் தழைத்தோங்க ஆண்டவனை வேண்டுகிறேன். தங்களின் பதிவில் நேச்சுரல் சீன் ஸ்டில்ஸ் அடிக்கடி தென்படுவதற்கு ஆண்டுவிழாவும் ஒரு காரணமா? தொடர்க. வாழ்த்துக்கள்.

கடம்பவன குயில் said...

வலையுலகில் யார் புதிதாய் நுழைந்தாலும் ஊக்குவிக்கும் தங்களின் பண்பே தங்களின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று என்று நான் நினைக்கிறேன்.

கடம்பவன குயில் said...

உங்களிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயமே உங்களை ஹார்ஸாக யாரும் விமர்சித்தாலும் அவர்களை சுலபமாய் மன்னித்து கூடகொஞ்சம் சிநேகம் பாராட்டும் தங்கள் பண்பு . ரஜினி சாருக்குப் பிறகு தங்களிடம் தான் அந்தப் பண்பைப் பார்த்தேன். வெல்டன்.

மேலும் மேலும் பல சிறப்புகளைப் பெற்று பதிவு்லகில் சிறந்த பல சாதனைகளை நீஙகள் தரவேண்டுமென்று ஆசைப்படுகிறேன். வாழ்க வளர்க.

Rishi said...

வாழ்த்துக்கள் சிபி. உங்களின் திறமை, உழைப்புக்கு கிடைத்த வெற்றி இந்த குறுகிய காலத்தில் உங்களுக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம். இன்னும் தரமான பதிவுகள் , புதுப்புது முயற்சிகள் தொடர்ந்து மேற்கொண்டு, உங்களுக்கு அனைத்திலும் ஜெயம் உண்டாக , இறைவன் கருணை புரியட்டும்.. !! மனம் கனிந்த வாழ்த்துக்கள்..!

Bibiliobibuli said...

நடத்திரப் பதிவர் வாழ்த்துக்கள்.

அப்புறமா, நான் சொல்ல நினைத்த ஒன்றை ஹேமா சொல்லிவிட்டார். ஹி....ஹி....ஹி...ஹி... அது வேறை ஒண்டுமில்லை. எழுத்து கால், படங்கள் முக்கால் என்று பதிவு எழுதி போட்டு தாக்குங்க.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நானும் வாழ்த்து சொல்லிக்கிறேன்...

Shiva sky said...

வாழ்த்துக்கள் அண்ணா...

Shiva sky said...

குறைந்த நாட்களில் மிக பெரிய வெற்றியடைந்து உள்ளிர்கள் பதிவுலகில்.......

Shiva sky said...

நான்கு நாட்களுக்கு பிறகு ..இன்று தான் வந்தேன்.......உங்களை வாழ்த்தும் கடைசி நபராகிவிட்டேன்,,,,,,,,

சக்தி கல்வி மையம் said...

முதல்ல வாழ்த்துக்கள்..
நான் வந்தது ரொம்ப லேட்டு..
இருந்தாலும்.. நன்பேண்டா ..
எத்தனை நாள் கழிச்சு பாத்தாலும் வந்து கமென்ட் போடுவோமில்ல..