Friday, April 17, 2015

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 17 /4/ 2015 ) 3 படங்கள் முன்னோட்ட பார்வை

1 ஓ காதல்  கண்மணி -ஈரோடு அபிராமி,ஆனூர்
2 காஞ்சனா -2 = ராயல் ,அன்னபூரணி,சீனிவாசா,சண்டிகா
3 MR X ( HINDI) = ஸ்ரீகிருஷ்ணா # 17/4/2015


o kathal kanmani
‘கடல்’ படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கி வரும் படம் ‘ஓ காதல் கண்மணி’. துல்கர் சல்மான் ஹீரோவாகவும், நித்யாமேனன் ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், கனிகா, ரம்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

‘அலைபாயுதே’ பாணியிலான ரொமான்டிக் படமாக இப்படத்தை இயக்கி வருகிறார் மணிரத்னம். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் ஒரு பாடல் வெளியிடப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டது.
இது ரசிகர்கள் கேட்டு ரசித்து வருகின்றனர். இப்படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. தற்போது இப்படம் ஏப்ரல் 17ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

சென்னை,: மணிரத்னம் இயக்கி உள்ள படம், ‘ஓ காதல் கண்மணி’. துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் நடிக்கின்றனர். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் மணிரத்னம் பேசியதாவது:இன்னும் சில நாட்களில் படம் ரிலீசாகிறது. படத்தைப் பார்த்துவிட்டு எல்லாவற்றையும் மக்கள் முடிவு செய்ய வேண்டும். இது ‘லிவிங் டு கெதர்’ கதையா என்று கேட்கிறார்கள். சமூகப் பிரச்னைகளை என் படங்களில் கையாள்கிறேன். சொல்லப்படுகின்ற விஷயம் சரியா, தவறா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். ‘அலைபாயுதே’ போன்று அதிர்வு ஏற்படுத்துமா என்பது பற்றி தெரியவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.பிறகு வைரமுத்து பேசும்போது, ‘ஒவ்வொரு படத்தையும் தனித்தன்மை யோடு இயக்குவார் மணிரத்னம். இந்தப் படம் சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தும். இன்னும் 50 ஆண்டுகளில் திருமணம் என்ற சடங்கு இருப்பதற்கு வாய்ப்பில்லை. அதுபற்றி பேசுகிறது இந்தப் படம்’ என்றார்.ஏ.ஆர்.ரகுமான் பேசுகையில், ‘ஒரு படம் முடிந்து அடுத்த படத்துக்கு இசை அமைக்கும்போது தடுமாற்றம் வரத்தான் செய்கிறது. என் நண்பர்கள், நன்றாகத்தானே செய்கிறாய் என்று சொன்னாலும், அந்த தடுமாற்றம் இருக்கிறது. எல்லா படத்தையும் முதல் படம்போன்று உற்சாகத்தோடு பணியாற்ற முயற்சிக்கிறேன். 23 வருடங்களாக மணிரத்னம் அதற்கான பிளாட்பாரத்தை அமைத்து தருகிறார்’ என்றார்.இந்நிகழ்ச்சியில் துல்கர் சல்மான், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், நடனக் கலைஞர் லீமா சான்சன் ஆகியோரும் பேசினார்கள். படத்தை வரும் 17ம் தேதி ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா வெளியிடுகிறார். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=16109&id1=3#sthash.LLEjXi8b.dpuf

மணிரத்னம் இயக்கத்தில் ஏப்ரல் 19ம் தேதி ஓ காதல் கண்மணி திரைப்படம் ரிலிஸாகவுள்ளது. இப்படத்தில் துல்கர், நித்யா மேனன், கனிகா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டரைலர் கடந்த மாதம் வெளிவந்தது. தற்போது வரை இப்படத்தின் ட்ரைலரை 40 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
இதற்கு முன்பு ரஜினி, அஜித், விக்ரம் படங்கள் மட்டுமே 40 லட்சம் ஹிட்ஸை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.


காஞ்சனா-2 லாரன்ஸின் 6 வித தோற்றங்கள் ரஜினிகாந்த் பாராட்டு
சென்னை

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கியுள்ள படம் 'காஞ்சனா-2’ தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ளது.இந்த படம் வருகிற 17-ந்தேதி உலகம் முழுவதும் 1000 தியேட்டர்களில் வெளியாகிறது.
காஞ்சனா படம் ஏற்கனவே ஹிட்டானதால் 2-ம் பாகமாக தயாராகியுள்ள இந்த படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த படத்தில் 'லாரன்ஸ்’ 6  வெவ்வேறு விதமான கேரகடர்களில் நடிக்கிறார். இதில் 7 வயது சிறுமி கேரக்டரும் உண்டு. அதுபோல்  70 வயது கிழவியாகவும் நடித்து உள்ளார் இதன் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியானது.

லாரன்சின் இந்த பல்வேறு விதமான  தோற்றங்களை பார்த்து ரஜினிகாந்த் வியந்துள்ளார் உடனடியாக அவரை தொடர்பு கொண்டு இப்படி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நீ நடித்திருக்கிறாய். உனக்கு அந்த ராகவேந்திரர் ஆசி எப்போதும் உண்டு. இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று பாராட்டினார்.

இந்த படத்தில் டாப்சி, கோவை சரளா போன்றோரும் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தை வெளியிடுகிறது.

நன்றி -தினத்தந்தி   மாலைமலர் தினமணி3  After gaining the power of invisibility; a man becomes a vigilante, in order to take revenge on those who have wronged him.

Director:

 

Writers:

  (story),  (dialogue)
0 comments: