Friday, April 24, 2015

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 21 /4/ 2015 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை


1 கங்காரு
2 யுகன்
3 இரிடியம்
4 AVENGERS 2 # 24/4/15

நன்றி - தினமணி மாலைமலர் வெப்துனியா1 கங்காரு -உயிர், மிருகம், சிந்துசமவெளி என்று மிட்நைட் மசாலா கண்களுடன் திரிந்த இயக்குனர் சாமி, குடும்பம், பாசத்தை வைத்து முதல்முறையா ஒரு படத்தை இயக்குறேன், பெயர் கங்காரு என்று சொன்ன போது, அட, சாமியும் திரிந்திட்டாரே என்று கோடம்பாக்கம் சந்தோஷப்பட்டது. ஆனால் கங்காருக்குள்ளும் ஒரு தகராறை ஒளித்து வைத்திருக்கிறார் சாமி.
FILE

முதல் படம் உயிரில் தொடங்கியது சாமியின் திருவிளையாடல். உயிர் படத்தில் ப்ரேம் வைக்க சாமி தடுமாறியதைப் பார்த்து தயாரிப்பாளர் பாலாஜி படத்தையே ட்ராப் செய்ய முன்வந்தார். சினிமாவில் முதல் கோணல் முற்றிலும் கோணல். எழும்பவே முடியாது. பாலாஜியின் முடிவை அறிந்த சாமி, இந்தப் படத்தை மட்டும் ட்ராப் செய்தால் எழுதி வைத்து தற்கொலை பண்ணிப்பேன் என்று தடாலடியாக ஒரு போடு போட்டார். ஆடிப்போனார் பாலாஜி. படத்தை ட்ராப் பண்ணணுவும் முடியாது. நல்லபடியாக முடிக்கவும் வேண்டும். இதற்கு அவர் நியமித்தவர் சாய்பிரசாத். அவர்தான் சாமிக்கு துணையாக இருந்து உயிர் படத்தை முடிக்க உதவினார்

சாமியின் முதல் படம் உயிர், கொழுந்தனுக்கு ஆசைப்படும் அண்ணியின் கதை. சேலையைப் பார்த்தாலே பாய்ந்து பந்தக்கால் நாட்டும் பெண் பித்தன்தான் மிருகம் படத்தின் நாயகன். சிந்துசமவெளி பற்றி சொல்லவே வேண்டாம். மாமனாரின் இன்பவெறி என்று பெயர் வைக்க வேண்டிய படம்.
FILE


சாமி என்றாலே முகம் சுழிக்கிற அளவுக்கு முந்தைய சரித்திரத்தை வைத்திருப்பவர் அதனை கழுவித் துடைக்க கங்காருவைதான் நம்பிக் கொண்டிருக்கிறார். அந்தக் கதையை எழுதியவருக்குதான் சாமி ஆட்டம் காட்டுகிறார். எனில் மற்றவர்கள் கதி...?


சிந்துசமவெளிக்குப் பிறகு சாமியை யாரும் சீண்டவில்லை. சொந்தமாக படமெடுப்பது என்றாலும் சிக்கல். கதை வேண்டும். சாமிக்கு கதை எழுதுவதில் தகராறு. இந்த நேரத்தில் சாய்பிரசாத்திடம் நல்ல கதை இருப்பதை அறிந்து அவரை தொடர்பு கொண்டிருக்கிறார். சாய்பிரசாத்துக்கு பண நெருக்கடி. தான் படம் செய்ய வைத்திருந்த கங்காருவை சாமிக்கு தர முன் வந்தார். கதைக்கு இரண்டு லட்சம் தருவதாக உடன்பாடானது. 
FILE


கதை விவாதம் முடிந்து படப்பிடிப்புக்கு கிளம்பும்போது, கதைக்கு இரண்டு லட்சம் தர முடியாது, ஒன்றரை லட்சம்தான் முடியும் என ஐம்பதாயிரம் ரூபாய் செக் மூன்று தந்திருக்கிறார். மூன்றும் பணம் இல்லாமல் திரும்பியிருக்கிறது. சாய்பிரசாத் சாமியை தொடர்பு கொள்ள, சாமி போன் எடுப்பதை தவிர்க்க... இந்த கண்ணாமூச்சி ஆட்டத்துக்கிடையில் பாதி படத்தை சாமி முடித்துவிட்டார்.


பொறுக்க முடியாது என்ற நிலையில் இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமனிடம் பிரச்சனையை எடுத்துப் போனார் சாய்பிரசாத். பேச்சுவார்த்தையில் ஒன்றரை லட்சம் தர முடியாது, எழுபத்தைந்தாயிரம்தான் தர முடியும் என சாமி அடம்பிடிக்க, சரி, அதையாவது தரட்டும் என சாய்பிரசாத்தும் உடன்பட்டார். ஆனால் அதற்குப் பிறகும் சாமியிடமிருந்து பணம் பெயரவில்லை. 
FILE


படத்தின் விளம்பரங்களில் சாய்பிரசாத்தின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. படத்தின் முதல்பாதி வசனத்தையும் அவர்தான் எழுதி தந்திருக்கிறார். ஆனால் அதற்கு பணம் கிடையாது, பெயர் கிரெடிட்டும் கிடையாது. இப்போது இரண்டாம் பகுதிக்கான வசனத்தையும் எழுதித் தந்தால் பணம் தருகிறேன் என்கிறார் சாமி. அதற்கும் சாய்பிரசாத் தயார். சாமிதான் தட்டிக் கழித்துக் கொண்டிருக்கிறார்.

சாய்பிரசாத்திடம் சாமி தந்த ஒன்றரை லட்சத்துக்கான மூன்று காசோலைகள் உள்ளன. சங்கத்துக்கு சாமி கட்டுப்படாத நிலையில் செக் மோசடி வழக்குக்காக கோர்ட்டுக்குப் போகலாமா என்ற யோசனை சாய்பிரசாத்துக்கு. 
உயிர்’, ‘மிருகம்’, ‘சிந்து சமவெளி’ போன்ற சர்ச்சைப் படங்களுக்குப் பெயர் பெற்ற சாமி நல்ல பிள்ளையாக மாறி இயக்கும் படம் ‘கங்காரு’. பரபரப்புக்காக முறையற்ற உறவுகளைச் சித்தரிக்கிறார் என்கிற விமர்சனம் சாமியைத் துரத்தி வருகிறது. 

சாமி படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று முத்திரை குத்தப்பட்டு அவரை விடாமல் தொடர்ந்து  வருகிறது. 'நான் அப்படிப்பட்ட இயக்குநரல்ல. ஆளை விடுங்கப்பா சாமி’ என்று வேறு பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார் சாமி. 

இதுவரை பாலுணர்வை உயர்த்திப் பிடித்ததாக சர்ச்சைக்குள்ளான சாமி இப்போது பாசவுணர்வை தூக்கிப்பிடிக்கிறார். அதுதான் ‘கங்காரு’. எப்படி ஒரு கங்காரு தன் குட்டியை வயிற்றுப் பையில் சுமக்கிறதோ அப்படி தன் தங்கையை மார்பிலும் தோளிலும் சுமக்கும் அண்ணனின் கதைதான் கங்காரு என்கிறார் சாமி. 

நானும் பெரிய பெரிய இயக்குநர்கள் மாதிரி விதவிதமான கதைகளில் ரகம் ரகமான நிறங்களில் புதுப்புது படம் இயக்க வேண்டும் என்று நினைத்துதான் இங்கு வந்தேன். ஆனால் நினைத்த மாதிரி இங்கே நிலைமை இல்லை. யாரும் என்னைக் கண்டுகொள்ளவில்லை.

என்மீது கவனமும் மற்றவர் பார்வையும் படவேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் ஒரு பரபரப்புக்காக இப்படிப்பட்ட படங்களை இயக்கினேன். நான் கவனிக்கப்பட்டேன். ஆனால் பெயர் கெட்டு விட்டது. சாமி இப்படிப்பட்ட ஆசாமி என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். 

என் படங்களை விமர்சித்தவர்கள்கூட சாமி அழுத்தமாகக் கதை சொல்லத் தெரிந்தவன் என்பதை ஒப்புக் கொள்ளவே செய்தார்கள். அழுத்தமாகச் சொல்லத் தெரிந்ததால்தான் இவ்வளவு விமர்சனங்கள் வந்தன என்றும் என் நண்பர்கள் சொல்வதுண்டு. 

எது எப்படியோ அது என் தவறுதான். பெயர் கெட்டுவிட்டது. மாற்ற வேண்டும். இனி நான் வேறு சாமி. இந்த சாமிக்குள் நிறைய கனவுகள் படைப்புகள் உள்ளன. அதற்குள் என்னை இப்படி தவறான முத்திரை குத்தி குறுகிய வட்டத்துக்குள் போட்டு அமுக்கி விட வேண்டாம். 

இந்த கெட்ட பெயரை மாற்றவேண்டும். துடைத்தெறிய வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் இப்போது ‘கங்காரு’ எடுக்கிறேன். இதன் மூலம் என் கெட்ட பெயரை மாற்றுவேன். இந்தப் படம் நிச்சயம் என் பெயரை மாற்றும். 

‘கங்காரு’ நவீன பாசமலர் என்று சொல்வேன். நிச்சயம் இது பேசப்படும். பாராட்டப்படும். எதுவும் மிகையில்லாதபடி சொல்லி இருப்பது நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும் என்றார். 

இப்படத்தில் நாயகனாக அர்ஜுன் நடிக்கிறார். மேலும், தங்கையாக ஸ்ரீபிரியங்கா என்பவர் நடித்திருக்கிறார். மேலும் வர்ஷா அஸ்வதி, தம்பிராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு, ஆர். சுந்தர்ராஜன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஸ்ரீநிவாஸ் என்பவர் இசையமைத்திருக்கிறார். 

2 யூகன்

 ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் ‘யுகன்’ - அபிராமி ராமநாதன் வெளியிடுகிறார்
சென்னை,மார்ச் 26 (டி.என்.எஸ்) ஐ.டி நிறுவனத்தில் நடைபெறும் பிரச்சினைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள திகில் படம் ‘யூகன்’. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் யாஸ்மித், சித்து, ஷாம் கீர்த்திவாசன், பிரதீப் பாலாஜி, ஆயிஷா, தருண் சக்ரவர்த்தி, சுரேஷ் பிள்ளை, மனோஜ் ஆகிய புதுமுகங்கள் நடித்துள்ளார்கள்.

நாயகியாக சாக்‌ஷி அகர்வால் நடித்துள்ளார். கமல்குமார் என்ற புதுமுக இயக்குநர் இப்படத்தை இயக்குவதுடன், தயாரித்து படத்தொகுப்பும் செய்துள்ளார்.

ஐ.டி கம்பெனியில் வேலை செய்யும் 5 பேர்களின் எண்ணங்களை நகைச்சுவை கலந்து திகில் மற்றும் பல திருப்பங்களுடன் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். இப்படத்தின் சிறப்பம்சமாக கிராபிக்ஸ் காட்சிகள் இல்லாமல் கேமரா தந்திரம் மற்றும் ஒப்பனைகள் மூலமாக திகில் காட்சிகளை மிகவும் நேர்த்தியாக படம்பிடித்திருக்கிறார்கள்.

வரும் ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் ரிலீஸாகும் இப்படத்தினை தமிழகம் முழுவதும் அபிராமி ராமநாதன் வெளியிடுகிறார்.
3  இரிடியம்

Iridiyam is a upcoming feature film. with a message creating social awareness to the people. Also the message is delivered in a full comedy screenplay. We had put our full effort to give audience a 2 hour power pack comedy movie.


ஏம்மா , இவரு  உன்மாமாவா?

இல்ல, அதுக்கும் மேல

அப்போ  மாமாவுக்கெல்லாம்   மாமாவா? # இரிடியம்


4  
  1. When Tony Stark (Robert Downey Jr.) jumpstarts a dormant peacekeeping program, things go terribly awry, forcing him, Thor (Chris Hemsworth), the Incredible Hulk (Mark Ruffalo) and the rest of the Avengers to reassemble. As the fate of Earth hangs in the balance, the team is put to the ultimate test as they battle Ultron (James Spader), a technological terror hell-bent on human extinction. Along the way, they encounter two mysterious and powerful newcomers, Pietro and Wanda Maximoff.
  2. Initial releaseApril 22, 2015 (France)
  3. Running time142 minutes

0 comments: