Saturday, April 18, 2015

29 வயசு லட்சுமிராய் VS 92 வயசு பெருசு - வாட்சப் கலாட்டா

1  ஏப்.17-ல் 'ஓ காதல் கண்மணி' வெளியாவது சந்தேகம்.கடல்  பட  நட்ட ஈடு கோரிக்கை  #  அட பொறுங்கபா.  ரிலீஸ்  பண்ண  விட்டா  அதுக்கு  ஓக்கே சொல்வாரு

===============

நீதிபதிகள் செய்யும் பணியானது கடவுளுக்கு அடுத்தப்படியானது’ -  மோடி # பிரதமர்  செய்ய வெண்டிய  பணி  கடவுளுக்கு  மேலானது,ஆனா  செய்யலையே?


==============


3  முன்னாள் ADMK MP மலைச்சாமி பா.ஜ.க.வில் இணைந்தார் #  தாமரை இலைல  வேணா " தண்ணி"  ஒட்டாம  இருக்கலாம், ஆனா  பூவில்  ஒட்டும், ஒட்டிக்கிச்சு


================

புதிய பட நிறுவனம் தொடங்கினார் சிம்ரன்;விஜய்,அஜித் படங்கள் தயாரிக்க திட்டம் # சிம்”ரன்”  எடுக்கும்  படம்  ஆச்சே?  நல்லா ஓடிடும்


=================

5  பெண்களிடம்  வாதிடும்போது நீ  உன்  மூளையை  100 மடங்கு உபயோகிக்கவேண்டி  வரும்.முடிந்தவரை  பெண்ணுடன்  வாதிடுவதைத்தவிர்# படித்துறை சிந்தனை


================


மலையாள இயக்குனரை 2-வது திருமணம் செய்த நடிகை ஜோதிர்மயி #  ஒளிமயமான  எதிர்காலம்  என் உள்ளத்தில்  தெரிகிறது- இயக்குநர்  செல்  ரிங்க்  டோன்


===============


7  குஷ்பூ வுக்கு தலைவர் ஆகும் தகுதி உண்டு -EVKS.# அடிக்கடி கட்சி மாறும் எல்லோருமே தலைவர்கள் தான் ,ராம்தாஸ், வை கோ,குஷ்பூ


=================

8 அந்தக்கால பெருசு 1 லட்சுமிராய் கிட்டே எப்படி பாடும்?
வா"ராய்!" நீ வா"ராய்"! போகும் இடம் வெகு தூரம் இல்லை நீ வா ராய்!


=============


9 ரசிகர் மன்றங்கள் ஒருங்கிணைப்பு: ‘‘எனக்கு அரசியல் ஆசை கிடையாது’’ -விஷால் # எனக்கு இனிப்புன்னாலே அலர்ஜி.அந்த பாயாச பக்கெட்டை இங்க வை்


==============

10 எல்லா மதங்களையும் ஒன்றாக பார்க்க வேண்டும் என்பது திமுகவின் கருத்து-கலைஞர்
நம்ம அல்ட்டிமேட்.எய்மே எல்லா மத வாக்கும் வேணும் என்பதுதானே?,====================


11 தொடக்கப்பள்ளி,நடுநிலைப்பள்ளிகளுக்கு இணையதள வசதி-மத்திய அரசு # ஸ்கூல்லயே தமிழன் இனி பிட்டுப்படம் பார்ப்பான்


=============


12 ராகுல் பாதுகாப்பாக உள்ளார், சாதனை நாயகனாக திரும்பி வருவார்: சல் குர்ஷித் # சாதனை படத்தோட நாயகன் சிவாஜிதானே? அவர் மாதிரி கெட்டப்ல வருவாரா?


================

13 தேமுதிகவுக்கு இனிமேல்்"ஏறுமுகம் தான் - விஜயகாந்த்# சகாப்தம் சினிமால ஊத்திக்கிச்சு.அரசியல் சங்காத்தமும் ஊத்திக்கிச்சு.எப்டி ஏறுமுகம்?=================


14 முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி: 100 ரூ டூ 10 ரூபாய்க்கு இறங்கியது.. # பாக்யராஜ் சார்க்கும் மார்க்கெட் இல்ல.அவர் கண்டுபிடிப்புக்கும் மார்க்கெட் இல்ல


=================

15 இதய நோய் வருமுன் காக்கும் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்: அப்துல்கலாம்..#முக்காவாசி இதயநோய் பொண்ணுங்களாலதான் வருது


=================

16 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி: சீமான் அறிவிப்பு#,இதுல ரிஸ்க் பேக்டர் என்னான்னா 234 வேட்பாளருக்கு ஆள் பிடிக்கனும்================


17 திருடப்போன இடத்தில் பர்ஸை மறந்து விட்டு வந்த திருடன் – மாட்டிவிட்ட டிரைவிங் லைசென்ஸ் @கோவை #,நீதி = திருடப்போகும்போது வெறுங்கையோட போகனும்


================

18 50 நாட்களில் ஆம் ஆத்மி விஐபிகளின் கட்சியாக மாறிவிட்டது: காங்கிரஸ் குற்றச்சாட்டு # மோர் சாப்ட்டா.வெய்யிலுக்கும் வயிற்றெரிச்சலுக்கும் நல்லது===============

19 என்னுடன் திருமாவளவன் வந்து வாழ வேண்டும்... கோவைப் பெண் மீண்டும் பரபரப்பு # அப்டி அழைப்பை ஏற்று அவர் வந்தா வாழ வந்தான் ஆகிடுவாரு ஆளவந்தான்


==============

20 கால் முறிந்து, உருகுவேயில் சிகிச்சை பெறும் ராகுல்காந்தி.அம்பலம்# மத்தியில் கை க்கு பலத்த அடி..இப்போ கைக்கு கால்லயும் அடியா ?


===============

0 comments: