Friday, April 03, 2015

கிருமி - மாறுபட்ட சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் -இயக்குநர் பேட்டி

‘கிருமி’ படத்தில் கதிர், ரேஷ்மி மேனன்
‘கிருமி’ படத்தில் கதிர், ரேஷ்மி மேனன்
குறும்படங்கள் மூலம் சினிமா இயக்குநராகும் இளைஞர்கள் வரிசையில் மேலும் ஒருவர் சேர்ந்திருக்கிறார். ‘கிருமி’ படத்தை இயக்கிவரும் இயக்குநர் அனுசரண். அவர் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல் குறும்பட அனுபவங்களைக் கொண்டு ‘கிருமி’ படத்தை இயக்கிவருகிறார் அனுசரண்.
இப்படத்தின் டீசர் யூடியூபில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அனுசரணை சந்தித்தோம்.
அனுசரண்
உதவி இயக்குநராக பணியாற்றாமல் சினிமா இயக்க எப்படி கற்றுக் கொண்டீர்கள்?
ஆஸ்திரேலியாவில் ஒரு வருடம் படித்தேன், 4 வருடங்கள் பணியாற்றினேன். அங்கிருந்த போது நிறைய இசை வீடியோக் களையும் 2 குறும்படங்களையும் எடுத்துள்ளேன்.
நான் எடுத்த குறும்படங் களுக்கு ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அப்படத்தை திரைப் பட விழாக்களில் திரையிட்டார் கள். அந்த குறும்படங்கள் மூலம்தான் நான் சினிமாவைக் கற்றுக்கொண்டேன்.
சரியான அனுபவம் இல்லாமல் ஒரு படத்தை இயக்குவது கஷ் டமாக இல்லையா?
இப்படத்தை ஆரம்பிக்கும் போது எனக்கு சவாலாகத்தான் இருந்தது. இங்கு எப்படி பணி யாற்றுவார்கள் என்று தெரி யாததால் சிறிது குழப்பமாக இருந்தது. மேலும் உதவி இயக்குநர்கள் எப்படி உதவுவார் கள் என்றும் தெரியாமல் இருந் தது. என்னுடைய குறும்படத் துக்கு நானே ஒளிப்பதிவு செய் துள்ளேன். இப்போது ‘கிருமி’ படத்துக்கு நானே எடிட்டிங் செய் திருக்கிறேன். எனக்கு ஒளிப்பதி வும், எடிட்டிங்கும் தெரியும் என் பதால் நடிகர்களிடம் இருந்து என்ன வாங்கவேண்டும், படத் துக்கு என்னவெல்லாம் தேவை என்பதில் தெளிவாக இருந்தேன்.
படப்பிடிப்பில் என்னைச் சுற்றி என்ன நடந்தாலும், அது எதற்காக நடக்கிறது என்பதை கவனித்தேன். படப்பிடிப்பு தொடங்கி முதல் 2 நாட்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டேன். அதற்கு பிறகு படத்தை இயக்குவது சுலபமாகிவிட்டது. நான் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாததால் ‘கிருமி’ படத்தில் எந்த ஒரு இயக்குநரின் சாயலும் இருக்காது.
‘கிருமி’ படத்தின் கதைக்களம் என்ன?
இது போலீஸ் சார்ந்த ஒரு த்ரில்லர் படம். தினமும் பார்க்கிற விஷயத்தைத்தான் படமாக பண்ணியிருக்கிறேன். என்னுடைய அலுவலகம் அமைந்துள்ள இடத்துக்கு போலீஸுடன், போலீஸ் நண் பர்கள் குழுவினர் வரு வார்கள். போலீஸைவிட அவர்கள்தான் மிதப்பாக இருப் பார்கள்.
அவர்கள் தன்னைத் தானே போலீஸாக நினைத்துக் கொள்வார்கள். அது எனக்கு புதுமையாக இருந்தது. இவர் களுக்கு ஒரு பிரச்சினை வந்தால் அது எந்தளவுக்கு போகும், அவர்களுக்கு போலீஸார் எந்த அளவுக்கு துணைக்கு வருவார்கள் என்று யோசித்தேன். அதை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளேன்.
இந்தப் படம் தமிழ் சினிமா வுக்கு எந்த விதத்தில் புதுமை யானதாக இருக்கும்?
தமிழ் சினிமாவில் எதார்த்த மான படங்கள் குறைவு. எனது படம் அந்தக் குறையைப் போக் கும். எதார்த்தமான படமாக இருந்தாலும் அடுத்தடுத்த காட்சி யில் என்ன நடக்கும் என்று ரசிகர்களின் ஆர்வத்தை தூண் டக்கூடிய வகையில் இதன் திரைக் கதையை அமைத்திருக்கிறேன்.
படத்தின் தயாரிப்பாளர் ஜெய ராமன், ரஜினியிடம் பல ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றியவர். அந்த வகை யில் ரஜினியைச் சந்தித்து பேசியிருக்கிறீர்களா?
இன்னும் இல்லை. அவரது வீட்டுக்கு சென்று அவருடைய கையால் இப்படத்தின் பாடல் களை வெளியிட ஆசைப்படு கிறோம். அது கூடிய விரைவில் நடக்க வாய்ப்பு இருக்கிறது. நல்ல படங்கள் வந்தால் அந்தப் படத்தில் சம்பந்தப்பட்டவர்களுடன் ரஜினிகாந்த் போனில் பேசி வாழ்த்து சொல்வார் என்று கேள் விப்பட்டிருக்கிறேன். அந்த வகை யில் எனது படமும் அவருக்கு கண்டிப்பாக பிடிக்கும். அவரது வாழ்த்துகளுக்காக காத் திருக்கிறேன்.



நன்றி  - த்   இந்து

0 comments: