Friday, April 17, 2015

ஓ காதல் கண்மணி - சினிமா விமர்சனம்

தமிழ்சினிமாவை  அடுத்த  கட்டத்துக்கு தன்   அக்னி நட்சத்திரம்  மூலம்  கொண்டு  சென்ற  மாயாஜால  இயக்குநர்  மணி ரத்னம்  தன்  முந்தைய  இரு  தோல்விகளால்  பாதிக்கப்பட்டு  அலைபாயுதே வின்  லேட்டஸ்ட் வெர்ஷனை    சொல்லி  ஜெயிக்க முயற்சித்திருக்கிறார் .அவர்  எந்த  அளவு தமிழ்க்கலாச்சாரத்தைக்கெடுத்திருக்கார்னு  பார்ப்போம்,


ஹீரோ  ஹீரோயின்  இருவரும்  அலைபாயுதேவில்    வீட்டுக்குத்தெரியாமல் தாலி கட்டிட்டு  அவங்கவங்க வீட்டில் வாழ்ந்து  வருவாங்க.இந்தப்படம் வந்ததும்  பல  லவ்  ஜோடிகள்  இதை   ஃபாலோபண்ணி  பெற்றோர்கள் வயிற்றில் புளியைக்கரைச்சாங்க 


இப்போ  உலகம்  மாறிடுச்சு. அப்டேட்டா  தப்பு  பண்ணனும் இல்லையா?  அதனால  திரைக்கதையை  மாடர்னா  எழுதி  இருக்காங்க. 


ஹீரோயின்  கல்யாணம்  எனும்  சடங்கில்  நம்பிக்கை இல்லாதவர். ஹீரோ  சும்மா  இருந்தாலும்  இவரே  கில்மாக்கு  வெத்தலை  பாக்கு  வெச்சு  அழைச்சு  பாயாசம்  பரிமாறுகிறார். ஸ்வீட்டைட்தொடக்கூடாதுன்னு   சுகர் பேஷண்ட்டுக்கு  சொன்னாலே  பக்கத்தில்  இருந்தா  சாப்பிடத்தான்  செய்வான்.நம்ம  ஹீரோ  மட்டும்  என்ன  செய்வான்?

ஹீரோ  தன்  வீட்டுக்கு  ஹீரோயினை  கூட்டிட்டு வந்து  தன்  ரூமிலேயே தங்க  வெச்சுக்கறார்.  தாலியே  கட்டிக்காம  , மேரேஜ்  எதுவும்  பண்ணிக்காம  2 பேரும்  ஒரே   ரூம் ல  டெய்லி  பிசியா  இருக்காங்க .


 இவங்க  வாழ்க்கைல  ஏற்படும்  பிரச்சனைகள்  தான்  கதை 


ஹீரோ வா துல்கர்  , அருமையான  நடிப்பு ,  நல்ல  பர்சனாலிடி . பொண்ணுங்க  விசில்  எல்லாம்  அடிக்குதுங்க . ஓப்பனிங்  சீன்ல ஒரு  காலேஜ்  ஃபிகரு  தன்  ஹேண்ட்  பேக்கில்  மடிச்சு பத்திரமா  வெச்சிருந்த  சுடி துப்பட்டாவை தூக்கி  வீசுது.   பாரதியார்  பார்த்தா  மனசு  நிறைஞ்சிருக்கும் . பெண்கள்  எந்த  அளவு  முன்னேறிட்டாங்கனு ஹீரோயினா   நித்யா மேனன். அடர்  புருவ அலங்கார  அழகி .சுருட்டைக்கூந்தல்  குழலி,ஸ்லீவ்லெஸ் ல  அசால்ட்டா  வலம்  வர்றார்  இடம்  வற்ரார். இயக்குநர்  தயங்கித்தயங்கி இந்த  சீன்ல  சட்டை  மேல் பட்டனை  கழட்டனும்னு  சொன்னா  ஜூஜூபி  மேட்டர்னு  சர்ட்டையே கழட்டும்  துணிச்சல்  உள்ளவர்  இவரைப்போல   துணிவான  பொண்ணுங்களை    வாட்சப் தமிழனுக்கு  ரொம்பப்பிடிக்கும்/


காமெடிக்குனு   ஒரு  புரோட்டா  சூரியோ  , சதிஷோ  இல்லாதது  ஹப்பாடான்னு  மூச்சு  விட  வைக்குது.


படத்தில்  வில்லனே  கிடையாது . ஆல்ரெடி  சுஹாசினியே  வில்லி வேலை  செய்வார்னு  முன் கூட்டியே  மணி  கணிச்ட்டார்  போல 


 பிரகாஷ்  ராஜ்  கெஸ்ட் ரோல் குட் , அவருக்கு  மனைவியா வருபவரின்  நடிப்பு  குஜராத்திய  விருதுப்பட  நாயகி  போல்   நல்லாருக்கு (
பிரகாஷ்ராஜ் மனைவியா நடித்தது "லீலா சாம்சன்" - former censor board chairman, Kalakshetra Chair, Bharatnatyam expert, social worker)


பி சி ஸ்ரீராமின் ப்பதி  ஒளிப்பதிவு    கலக்கல்   ரகம் இளைஞர்களின்  நாடித்துடிப்பை  தன் மணிக்கட்டில்  வைத்திருக்கும்  ஏ ஆர் ரஹ்மான் தன்  பங்களிப்பை  செவ்வனே  நிறைவேற்றி  இருக்கார் . பிரமாதப்படுத்தவில்ல்லை  எனினும்  ஓக்கே ரகம்


ஒரு தயாரிப்பாளராக  லாபம்  சம்பாதித்து விடும்  அளவு  படம்  எடுத்த  மணி  ஒரு  இயக்குநராக   பழைய  தோல்விகளில்  இருந்து  வெளியே  வந்து  விட்டார்  என  தைரியமாக  சொல்லலாம்.


மனதைக் கவர்ந்த  வசனங்கள் 


முதல் பிரச்னை டயலாக் = கல்யாணம்கறது முட்டாள் தனம் #,மாதர்.சங்கங்கள் ஸ்கூட்டி ஸ்டார்ட் பண்ணலாம்


2 ஹலோ!நான் தான் உன்னோட.16 வது கேர்ள் பிரண்ட் பேசறேன்


ஓ.நான் 10 வது னு நினைச்ட்டேன் #okk3   லைப் ல எப்பவும் 2 வது சான்ஸுக்காக.வெய்ட் பண்ணிட்டிருக்கக்கூடாது.முதல் சான்ஸ்ல யே.# ஏ ok k

4 பசங்க திரும்பிப்பார்க்கனும்னு எதுனா டிராமா போடுவேன் #okk


5  ஹீரோயின் =,டேய்.சும்மா உதார் உடாத.நீ உன் லைப் ல இது வரை 1,பொண்ணை சும்மா கைல தொட்டுக்கூடப்பார்த்திருக்க மாட்டே #OKK 


போய்ட்டாரு.

ம்

ஒரேயடியா.விட்டுட்டுப்போய்ட்டாரு

ம் #,மணிரத்னம்டாடேய்.நீ என்னை என்ன.செய்வே?

கட்டிப்பிடிப்பேன்.
அப்ரம்?
அப்ரம்
10 முத்தம் தருவேன்
அப்ரம்#,okk டேய்.இது தமிழ்ப்படம்டா
கதவைத்தாழ்ப்பாள் போட்டு
9 என்னடா சொல்றே?லாட்ஜ் ல ஒரே ரூம்ல தங்கனுமா?ம்.ஏன்னா ஒரு ரூம்தான் இருக்கு #okk ( சீன் பை செல்வராகவனா?)


10 டாடி.என் ரூம்ல இவ தங்கறா.
ஓ அப்போ நீ? நானும் அங்கயே
நோ.அதுல நம்பிக்கை இல்ல #okk

ஓ.மேரேஜே பண்ணியாச்சா?


11  டேய் , என்னை  சந்தேகப்படாத  என்  பாஸ்க்கு 86  வயசு .’’

ஓ  அப்போ 85   வயசு லேடியை  பி ஏ வா வெச்சுக்காம  ஏன்  உன்ன?.


12   தாலிகட்டிக்காம  லிவ்விங்க்  டுகெதரா  வாழும் வாழ்க்கை  கேவலமானது # காம்ப்ரமைசிங்  டயலாக்
 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


 1 தமிழ் சினிமா வின் ட்ரெண்ட் செட்டர் இயக்குநரும் ,காதல் கதை ஸ்பெஷலிஸ்ட்டுமான மணிரத்னம் -ன் ஓ காதல் கண்மணி வெற்றி பெற வாழ்த்து2 80 % பேர் காலேஜ் மாணவிகள் தான்

இது இயக்குநருக்கான அங்கீகாரமா?ஹீரோவுக்கான ரசிகைகளா? தெரியல.ஈரோடு அபிராமி3 138 நிமிசம் #okk


4  டைட்டிலிலேயே எல்லோரையும் முந்தி சிக்சர் அடிப்பது நம்ம ஏ ஆர் ஆர்.


5 இந்தியாவின் முக்கிய்மான ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தனது வழக்கமான பாணியிலிருந்து விலகி மது அம்பாட் பாணியில் கேமரா ஆங்கிள்


6 நாகேஷ் கதை சொல்லும் காதலிக்க நேரமில்லை உல்டா சீன் #,யூ டூ மணி


7 ஹீரோயின் கேரக்டர் பேரு தாரா வாம்.ஏதோ குறியீடு போல .9 கிரகங்களும் உச்சத்தில் இருந்தாலும் அச்சப்படாமல் ஆளை மாத்திடுமோ?


8 நாயகி நித்யமேனனுக்கு ஆடை வடிவமைப்பு நம்ம சுஹாசினி போல.ஸ்லீவ்லெஸ் ஆல்வேஸ்


9 ஹீரோயினுக்கு ஆறுதல் சொல்ல ஹீரோ தன் இடது கையால ஹீரோயின் இடது கையை தடவறாரு.ஏன் வலது கை வலங்கைமான் போய்டுச்சா?


10 ஏற்கனவே அபாய கட்டத்தில் இருக்கும் தமிழ்க்ககலாச்சாரத்தை கெட்டுக்குட்டிச்சுவராக்கி மாடர்ன் பிகர்களை குற்ற உணர்வில்லாமல் தப்பு செய்யவைக்கும் கதைக்கரு11 பறந்து செல்லவா பாட்டு சீன்ல ரஹ்மானை ஓவர்டேக்க ஸ்ரீராம் ஹீரோயினுக்கு ஒரு டாப் ஆங்கிள் ஷாட்.வெச்சிருக்காரு.வாட்டே சீன்


8 மணிரத்னம் ப்டத்துல ஹீரோயின் எப்பவும் முற்போக்குவாதியா இருப்பாங்க.ஹீரோ தேமேன்னு இருக்காரு.இது கமல் கணக்கா பொஸுக் பொசுக்னு இச்


9 இளமைக்க்கொண்டாட்டமான 70 நிமிடங்கள்.இடைவேளை.பார்த்தவரை படம் ஓக்கே #okk


10  ஓ காதல் கண்மணியை மலையாளத்தில் டப் பண்ணினா டைட்டில் ஓ கில்மா கவுரி -ன்னு வெச்சா டப் பார்க்கலாம்


இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்1  
போஸ்டர்   டிசைன்  ,  மார்க்கெட்டிங்  , ஹீரோ  ஹீரோயின்  செலக்‌ஷன்  எல்லாம்  அற்புதம்


2   நீண்ட  இடைவெளிக்குப்பின்  பி சி ஸ்ரீ ராமின்   ஒளிப்பதிவில்  கலக்கலான  காட்சி அமைப்பை  படமாகியது


3  படத்தினைப்பற்றி  ஒரு எதிர்பார்ப்பு வரனும்  எனதற்காக  சம்சாரத்தை  விட்டு  பரபரப்பு  பேச்சு  கிளப்பி   விட்டது

  
4   தனது  டிரேட்  மார்க்கான    ரயில்  , மழையை  பொருத்தமாக  பயன்படுத்தியது  குதிரையை  விட்டுட்டார்   அரேபியன்  குதிரை  மாதிரி  ஹீரோயினே  இருக்கும்போது தனியா  எதுக்கு  ஒரு குதிரைன்னு  விட்டுட்டார்  போல 


இயக்குநரிடம்  சில கேள்விகள்


1   ஓப்பனிங்   சீனில் பிரகாஷ்ராஜ்  அந்த   குக்கரை  எடுத்து  வைக்கும்  காட்சியில்  சறுக்கல். அது  காலி குக்கர் . வசனத்தில்  சாப்பாடு  வெச்சிருக்கேன்னு  வருது2    பிரகாஷ்  ராஜின்  ஃபிளாஸ்பேக் சீனில்   தன்  நண்பன்  கொடுத்த  லவ் லெட்டரை   அவளுக்குக்கொடுக்கும்போது  அந்த  லெட்டரில்  நண்பனின்   சைன்  இல்லாததால்  பிரகாஷ் ராஜ்தான் லவ்வுவதாக 
 நினைத்ததா  சொல்றார். ஏன்  ? லெட்டர்  தரும்போது  இது  நான்  தர்ற  லெட்டர்  இல்லை  என்  ஃபிரண்ட்  தந்ததுனு  சொல்ல மாட்டாரா? 


3   லாட்ஜில்  தனித்தனி  கட்டில  படுக்கும்   ஹீரோ  ஹீரோயின்  இருவரும்  யோக்யமாய்  இருப்பது  மகிழ்ச்சி, ஆனா  ஹீரோ  பேண்ட்  சர்ட்  இன்  பண்ணி படுத்திருக்கார் ,  ஹீரோயின்  ஹீரோ கண்  முன்னால  நம்ம  கண்  முன்னால டிரஸ்  மாத்தி  பெட்டிகோட்  மட்டும்  போட்டுட்டு  வருதே  இது ஏன்>4   மேரேஜ்க்கு  முன்பே  கில்மா  பண்ணும்  2 பேரும்  தடுப்பு  சாதனம்  ஏன்  யூஸ்  பண்ணலை? பிளான்  பண்ணித்தானே  2  பேரும்    தப்பு  பண்றாங்க? 5  வழக்கமா   தன்  படத்தில்  வசனங்கள்  கம்மியா  வெச்சு  படத்தில்  யாரையும்  அதிகம்  பேச விடாமல்  செய்யும்    நீங்கள்  உங்க மனைவியை  ஓவரா  பேச  விட்டது  ஏனோ?  சுஹாசினியிடம்  சில  கேள்விகள்


1   ஐஸ்வர்யாராயே   பொண்ணா  மண மேடைல  உக்காந்தாலும்  4 பேர்  4 விதமா  பேசத்தான்  செய்வாங்க அழகை விமர்சனம்  பண்ணுவாங்க . ஒரு அழகியை விமர்சனம் பண்ண  விமர்சிப்பவன்  அழகா  இருக்கனும்னு  அவசியம்  இல்லை 2  பெஞ்ச்  ரசிகன்  கூட  படம்   பார்த்துட்டு   டப்பானா  டப்பான்னு  சொல்லிடுவான் , அவன்  கிட்டேப்போய்  எதும்  சொல்லாதேம்பீங்களா? 3  ஜெயா  டி வி ல  ஹாசினி  டைம் ல  ரிவ்யூ பண்ணீங்களே  நாங்க  உங்க  கிட்டே அதுக்கு  என்ன  தகுதி  இருக்கு?  படிச்சிருக்கீங்களா? விமர்சிக்கன்னு  கேட்டமா?

4  அப்புறம்  முக்கியமான  மேட்டர்,   கோபமா உங்க  கருத்தைச்சொல்லும்போது  முகத்தைக்கோபமாவே  வெச்சுக்குங்க .  சிரிச்சுட்டே  கழுத்தை  அறுக்காதீங்க .5  இவங்க  இவங்க  தான்  விம்ர்சனம்  பண்னனும்னு  சொல்லும்  நீங்க   டிகிரி  முடிச்சவன் மட்டும்  தான்


சி  பி  கமெண்ட்  =ஓ காதல்  கண்மணி = கருத்து  ரீதியில்   கண்டனங்கள்  , காட்சி அமைப்பு  ரீதியில் வந்தனங்கள் -விகடன் மார்க் = 43ரேட்டிங் = 3 / 5ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 43குமுதம்  ரேங்க் ( கணிப்பு) =ஒக்கே ரேட்டிங் =  3 / 5

 காஞ்சனா 2  - சினிமா விமர்சனம்


http://www.adrasaka.com/2015/04/2.html0 comments: