Monday, April 20, 2015

'டண் டணக்கா' விவகாரம்: ரூ.1 கோடி நஷ்ட ஈடு ! அடங்கொன்னியா

ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு இசையமைப்பாளர் இமான், அனிருத், தயாரிப்பாளர் நந்தகோபால், பாடலாசிரியர் ரோகேஷ் ஆகியோருக்கு டி.ராஜேந்தர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அறிமுக இயக்குநர் லட்சுமணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, ஹன்சிகா, பூனம் பாஜ்வா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'ரோமியோ ஜுலியட்'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்துக்காக 'டன் டணக்கா' என்ற பாடலை அனிருத் பாடியிருக்கிறார். அப்பாடலை ரோகேஷ் எழுதியிருக்கிறார்.
ஏற்கனவே இப்பாடலுக்கு டி.ராஜேந்தர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தற்போது படத்தின் தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அதில் கூறியிருப்பது:
"சென்னையைச் சேர்ந்த நந்தகோபால் என்பவர் தயாரிக்கும் படம் 'ரோமியோ ஜூலியட்'. படத்தின் இயக்குனர் லட்சுமணன். இசையமைப்பாளர் டி. இமான். இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடல்-‘டண் டணக்கா… ணக்கா… ணக்கா’ என்று ஆரம்பமாகிறது. இந்தப் பாடலில் டி.ராஜேந்தரின் ஒரிஜினல் குரலை காப்பியடித்து, ‘இமிடேட்’ செய்து பாடியிருக்கிறார்.
பாடலின் பின்னணியில் டி.ராஜேந்தர் பேசும் வசனம் அவர் குரலிலேயே ஒலிக்கிறது. இதன் மூலம் என் கட்சிக்காரரின் பெயரை துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்கள். கட்சிக்காரரிடமிருந்து முறையான அனுமதி இல்லாமலும் அவர் பேசும் வசனத்தை, பின்னணியில் ஒலிக்கச் செய்திருக்கிறார்கள்.
இது, பல ஆண்டுகளாக பல்வேறு படங்களில் நடித்து தனக்கென்று ஒரு தனிநடை ஸ்டைலை வைத்திருக்கும் என் கட்சிக்காரரின் தனி நபர் உரிமையையும், ‘காபிரைட்’ உரிமையையும் இதன் மூலம் மீறியிருக்கிறீர்கள் என்று டி.ராஜேந்தர் சார்பில் வாரான் அண்ட் சாய்ராம்ஸ் நிறுவனம் (வழக்கறிஞர்கள் தியாகேஸ்வரன், ராமகிருஷ்ணன்) வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
இதே பாட்டும், பதிவு செய்யப்படும் காட்சிகளும் ‘யூ ட்யூப்’ தளத்திலும், சாட்டிலைட் சானலிலும் வெளியிடப்பட்டுள்ளது (ஆடியோ_வீடியோ வடிவில்). படம் திரையிடப்படுவதற்கு முன்னால் இப்படி ஒரு வெளியீடு ‘பெருமைக்குரிய’ என் கட்சிக்காரரின் பெயரை துஷ்பிரயோகம் செய்யும் நோக்கத்தோடே அமைந்திருப்பதாகத் தெரிகிறது.
இந்நிலையில், இந்தச் செயலுக்காக, சட்டத்துக்குப் புறம்பாக என் கட்சிக்காரரின் முறையான அனுமதியில்லாமல் அவர் பெயரையும், இமேஜையும், அவரது தனிப்பாணி உச்சரிப்பு வசனத்தையும் பயன்படுத்தியிருப்பதற்காக ரூ.1 கோடி நஷ்டஈடு தர வேண்டும்.
மேலும் யூ ட்யூப், சாட்டிலைட் சானல் உள்பட எந்த ஒரு ஊடகத்திலும், எந்த ஒரு தளத்திலும் வெளியிடுவதை உடனே நிறுத்த வேண்டும். அதோடு வழக்கு செலவினங்களுக்காக ரூ.1000 தர வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


நன்றி- த இந்து

  • N Krishnamoorthy  
    இலவச விளம்பரம்
    Points
    36600
    about 2 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       
    • ALFONS  
      எங்க தல எங்க தல டி ஆர் ரூஊஉ
      Points
      440
      about 2 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • Ganesan  
        தமிழ்நாட்டில் கற்பனை பஞ்சம் ஏற்பட்டுவிட்டது!பழையபடத்தின் தலைப்பை காப்பியடிப்பது, ரீமிக்ஸ் என்ற பெயரில் மக்கள் மனம் கவர்ந்த பாடல்களை கொலை செய்வது, பாடல் எழுத தெரியாமல் ஐய்யயோ ஐயையோ என கூப்பாடு போடுவது கர்நாடக,இந்துஸ்தானி ராகங்களில் மெட்டு போட தெரியாமல் ஆங்கில பாணியில் கூச்சல் இடுவது என தமிழ் திரையுலகம் அழிவை நோக்கி நடை போடுகிறது!!
        Points
        630
        about 4 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
        • Senthil  
          உண்மை தான் கேலி நடவடிக்கைகளை இது போல தட்டிக் கேட்காவிட்டால் இதுவும் செய்வார்கள் இன்னமும் செய்வார்கள் டி ராஜேந்தர் தன் படங்களில் இப்படித்தான் மூத்த கலைஞர்களை கேலி செய்தாரா ? இல்லையே ! எதற்கும் ஒரு அளவு இருக்கிறது இது ஒரு படிப்பினையாக இருக்கட்டும் இனி இப்படி முயற்சி செய்பவர்களுக்கு
          about 6 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
          • Shree Ramachandran  
            அற்பத்தனமான செய்தி. அதற்க்கு இந்த பத்திரிகை இலவச விளம்பரம் கொடுக்கிறது.
            Points
            3465
            about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
            • Gnanasekaran  
              இவர்கேட்பதிலும் நியாம் இருக்கத்தான் செய்கிறது. ஒருவருடைய பொருளை எடுத்து மற்றவர்கள் காசு பார்க்கும்போது அந்த பொருளுக்கு உரியவருக்கு நிச்சயம் மனசங்கட்டம் வரத்தானே செய்யும். அதனால் திரு டி ஆர் சொல்வது நியாயமே.
              Points
              3915
              about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
              • R.M.Manoharan Manoharan  
                டி.ஆருக்கு பேரும்கிடையாது இமேஜும் கிடையாது. அவருடைய படமெல்லாம் எப்போவோ டப்பாவுக்குள் போய் விட்டது. அவருடைய டண்... டணக்கா பாடல் என்ன பெரிய புரட்சிகரமான கருத்துக்களையும், இலக்கிய சொற்றொடர்களையும் கொண்டதா? விலாசமற்ற ராஜேந்தர் விளம்பரத் திற்காக அலைகின்றார். இந்த வழக்கு விசாரணைக்கு வரவேண்டும், ராஜேந்தர் முகத்தில் கோர்ட் நிச்சயம் கரிபூசும். .
                Points
                7325
                about 14 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
                PonrajPethanan  Up Voted
                • Prabhu  
                  டன் டணக்கா என்ற வார்த்தைக்கு இவர் காபி ரைட் வங்கி இருக்கிறாரா.... அய்யகோ இது தெரியாமல் நான் பல முறை சொல்லி இருக்கிறேனே? என் மீது வழக்கு போடுவாரோ? பயமாக இருக்கிறது,,,,,
                  Points
                  520
                  about 14 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
                  PonrajPethanan  Up Voted
                  • Kilikkaadu  
                    அட..திள்ளண்டோம்மாரிடப்பங்குத்து ஆட்டம் ஆடுவேன்..பாட்டு பாடுவேன்..அஜக் தா..அஜக் தா..
                    Points
                    1040
                    about 15 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                    • Sangili Karuppan  
                      அடுத்து t ராஜேந்தர் கு மதிப்பே இருக்காது
                      about 15 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                      • LINGESH  
                        அதென்ன வழக்கு செலவினங்களுக்காக ரூ.1000 தர வேண்டும்". ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு தொடுக்கப்படும் வழக்கிற்கு வெறும் ஆயிரம் ரூபாய்தான் செலவாகுமா?

                      0 comments: