Tuesday, April 28, 2015

விஜய் டி வி வழங்கிய”சொதப்பப்போவது யாரு ? “

நடப்பு ஆண்டின் 'விஜய் அவார்ட்ஸ்' நிகழ்ச்சி பெரும் சர்ச்சைகளையும், விடை தெரியா கேள்விகளையும் எழுப்பி இருக்கிறது.
சிவகார்த்திகேயன் பதிலடி:
நிறைய நிகழ்ச்சிகளில் எங்கள் குடும்பத்துப் பிள்ளை என்று சிவகார்த்திகேயனை முன்னிலைப்படுத்துவது விஜய் டிவி-யின் வாடிக்கை. கடந்த ஆண்டு விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனை அழுததை மறுபடியும் மறுபடியும் போட்டு டிஆர்பி-யை எகிறவைத்தனர். ஆனால், இம்முறை சிவகார்த்திகேயன் பேசியதை அவர்களால் ஒளிபரப்ப முடியாது.
ஏனென்றால், "இந்நிகிழ்ச்சி அதிகாலை 2 மணி வரை போகும். குடிக்க தண்ணிக் கூட தரமாட்டார்கள். அடுத்த முறை வரும்போது எல்லாம் புளி சோறு, தக்காளி சோறு கட்டிக் கொண்டு வந்துவிடுங்கள்" என்று மேடையில் பேசினார் சிவகார்த்திகேயன்.
எப்போதுமே விஜய் அவார்ட்ஸ் என்றால், சிவகார்த்திகேயன் முதல் ஆளாக வந்து இறுதிவரை இருந்து சிறப்பிப்பார். ஆனால், துல்கர் சல்மானுக்கு சிறந்த புதுமுக நடிகர் விருது (வாயை மூடி பேசவும்) கொடுத்து முடித்தவுடன், எங்கு சென்றார் என்று தெரியவில்லை.
நிகழ்ச்சி முடியும்வரை அவரை காண முடியவில்லை. மேலும், 'ரஜினி முருகன்' படத்தின் பர்ஸ்ட் லுக், விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில்தான் வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தார்கள். ஆனால் வெளியிடவில்லை. மாறாக ட்விட்டர் தளத்தில் 6 மணிக்கே வெளியிட்டு விட்டார்கள்.
விருது வாங்காமல் வெளியேறிய இளையராஜா
எப்போதுமே பெரும்பாலான விருது வழங்கும் நிகழ்ச்சியில் இளையராஜா கலந்து கொள்வதில்லை. ஆனால், 'செவாலியே சிவாஜி கணேசன் விருது' வழங்குகிறோம் என்று பல தரப்பட்ட முயற்சிக்கு பிறகு இளையராஜா அழைத்து வந்தார்கள். "வந்தால் ஒரு மணி நேரம்தான் இருப்பேன். விருது வாங்கிவிட்டு கிளம்பிவிடுவேன்" என்று கூறிவிட்டுதான் கலந்து கொண்டிருக்கிறார்.
ஆனால், அவர் வந்த சமயத்தில் அவ்விருது வழங்குவதற்கு சிவாஜி குடும்பத்தினர் மற்றும் பெரிய நடிகர்கள் யாரும் இல்லை. இதனால் சிறிது நேரம் அமர்ந்திருந்த இளையராஜா, விருது வாங்காமலே கிளம்பிவிட்டார். இறுதிவரை சிவாஜி குடும்பத்தினர் இவ்விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. யாருக்கு இந்த வருடம் செவாலியே சிவாஜி கணேசன் விருது என்பதையும் தேர்வுக்குழு அறிவிக்கக்கூடவில்லை.
எரிச்சலடைய வைத்த டி.டி
எப்போதுமே டிடி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில், அவரே பேசிக் கொண்டிருப்பார். அவருடன் உரையாடுபவர்கள் பேசுவதற்கு கொஞ்சமே நேரம் ஒதுக்குவார். நேற்றைய விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியை கோபிநாத் மற்றும் டிடி தொகுத்து வழங்கினார்கள். அதிலும், ஒரு கட்டத்தில் டிடி என்ன பேசுகிறார் என்பது பலருக்கு புரியவே இல்லை. கே.எஸ்.ரவிகுமார் அதை மேடையிலேயே போட்டு உடைத்தார். ஸ்பெஷல் ஜூரி இன்னொவேஷன் விருதினை, கோச்சடையான் படத்துக்காக செளந்தர்யா ரஜினிகாந்த் சார்பில் பெற்றுக் கொண்டார் கே.எஸ்.ரவிகுமார்.
டிடி மைக்கில் எப்படி இருக்கிறீர்கள் என்றவுடன், நல்லா இருக்கேன் என்று பயங்கரமாக கத்தினார். உடனே, "முன்னாடி மைக் இருந்தாலே பேசுவது நல்ல சத்தமாக கேட்கும். முன்னாடி மைக் இருந்தாலும் கத்துவது டிடி மட்டும்தான்" என்றார். பல இடங்களில் அவர் என்ன பேசினார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.
வழங்கப்படாத சிறந்த பொழுதுபோக்கு நடிகர் விருது
வருடந்தோறும் சிறந்த பொழுதுபோக்கு நடிகர் விருது என்பது விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் பெரிய விருதாக கருதப்படுகிறது. இம்முறை அந்த விருது யாருக்கு என்பதை அறிவிக்கவே இல்லை. அதிலும், இம்முறை விஜய், கார்த்தி, சூர்யா போன்ற பெரிய நடிகர்கள் யாருமே கலந்து கொள்ளவில்லை. நடிகர்களில் கமல், தனுஷ் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டார்கள். ஆர்யா, ஜெயம் ரவி இருவருமே கலந்து கொண்டாலும் பாதிலேயே வெளியேறிவிட்டார்கள். முன்னணி நடிகைகளில் ஹன்சிகா, லட்சுமி மேனன் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டார்கள்.
சுவாரசியமே இல்லாத விழா
கடந்த ஆண்டு ஷாருக்கான் - விஜய் இணைந்து நடனம், சிவகார்த்திகேயன் அழுதது, விஜய் சேதுபதி - நயன்தாரா காமெடி உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் இருந்தன. இந்தாண்டு கமல் - ஸ்ருதிஹாசன், குஷ்பு - ஹன்சிகா இணைந்து நடனமாடிய சிறு நடனம், சிவகார்த்திகேயன் - துல்கர் சல்மான் விருது கொடுத்தது போன்ற சின்ன விஷயங்களைத் தவிர வேறு எந்த ஒரு சுவாரசியமே இல்லாத விழாவாக அமைந்தது.
அதிலும் பிரபுதேவா, லட்சுமி மேனன், ஸ்ருதிஹாசன், பூஜா குமார் ஆகியோர் நடனமாடினார்கள். சில நடிகர்கள் மேடையிலேயே, என்ன இன்னும் ஃபுட்டேஜ் போதவில்லையே என்று கலாய்த்ததும் அரங்கேறியது. குறிப்பாக, பல நடிகர்கள் பாதியிலேயே வெளியேறியதும் நடைபெற்றது. ஒரு குறுந்தகவல் - லட்சுமி மேனன் நடனமாட அழைக்கப்பட்ட போது மணி நள்ளிரவுக்குப் பின் 1 தான் மக்களே!
ஆச்சரிய ஒற்றுமை
தொலைக்காட்சி உரிமை கொடுத்த படத்துக்கு பெரும்பாலான விருதுகள் கிடைத்தது ஒரு ஆச்சரியமான ஒற்றுமை. 'குக்கூ', 'ஜிகர்தண்டா', 'காவியத்தலைவன்' உள்ளிட்ட படங்கள் விஜய் டி.வி இடம் உரிமை இருக்கிறது.
விருதுப் பட்டியல்:
லிங்கா படத்துக்காக ரஜினிக்கு ஃபேவரிட் நடிகர் விருது, வேலையில்லா பட்டதாரி படத்துக்காக தனுஷுக்கு சிறந்த நடிகர் விருது, அதே படத்துக்கு சிறந்த படத்துக்கான விருது, விஜய் நடித்த கத்தி திரைப்படத்துக்கு ஃபேவரிட் படம் விருது, வேலையில்லா பட்டதாரி படத்தின் 'அம்மா அம்மா' பாடலுக்கு ஃபேவரிட் பாடல் விருது, கத்தி படத்துக்காக ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஃபேவரிட் இயக்குநர் விருது, நடிகை ஹன்சிகாவுக்கு ஃபேவரிட் ஹீரோயின் விருது (மான் கராத்தே), சிறந்த பாடலாசிரியர் - கபிலன் (யான் படத்தில் இடம்பெற்ற 'ஆத்தங்கரை ஓரத்தில்' பாடல்)... இந்த விருதுப் பட்டியல் போதுமென்று நினைக்கிறேன்.
ட்விட்டரில் ரசிகர்கள் கலாய்ப்பும் கோபமும்:
விஜய் அவார்ட்ஸ் குறித்து ட்விட்டரில் உடனுக்குடன் ரசிகர்கள் தெறித்த நூற்றுக்கணக்கான கருத்துகளில் பலவும் #RIPvijayawards என்ற ஹேஷ்டேகை தாங்கி வந்தது கவனிக்கத்தது.


நன்றி - த இந்து

 • Kumaran20197  
  விஜய் டிவி நிறுவனத்தின் எதிர்காலம்?????????????
  Points
  165
  44 minutes ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
     
  • Sharuk  
   கரெக்ட் இது பம்மாத்து விருது , விஜய் டிவி ஒரு வேஸ்ட் டிவி
   about 2 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
   • வே. பாண்டி பாண்டி at Retired 
    இந்த நிகழ்ச்சி பற்றி முக நூலில் கிண்டலடித்து வீடியோ காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜய் டிவி வர வர குப்பை டிவியாக மாறிக் கொண்டு வருகிறது..
    Points
    490
    about 15 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
    Satish  Up Voted
    • Kumar  
     தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கு மலேசியாவில் விருது கொடுப்பது எப்படி? இவை அனைத்தும் வெறும் விளம்பரங்களுக்காக... 8 மணி நேரம் நடத்தப் படும் மெகா சீரியல்கள் மட்டுமே...ஆனால் நடிப்பது மட்டும் வெள்ளித் திரை நட்சத்திரங்கள்...
     Points
     3880
     about 16 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
     • Muthu Mani  
      எந்த நேரமும் யாரையாவது வைத்து கத்தவிட்டு கொண்டு இல்லையென்றால் கதற(அழுக ) விட்டு கொண்டு இருக்கும் இந்த தொலைகாட்சியின் விருதுகள் வழங்கும் விழாவில் இவ்வளவு உள்குத்து இருக்கின்றதா ?இதெல்லாம் அவர்களுக்கே கேவலமான விசயமாக தெரியவில்லையா ? டிடி யின் நிகழ்சிகளில் தற்பொழுது அவரின் தலைக்கனம் பட்டவர்த்தனமாக வெளிபடுகிறது. அதன் வெளிப்பாடே இந்த சொதப்பல் . டிடி யின் ஓவர் பேச்சு ரொம்ப அருவெறுப்ப இருக்கு,இத கண்டிக்காதது விஜய் டிவி இன் மோசமான செயல்பாடு .....
      about 16 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • ஆதவன் Adhavan  
       சென்ற வாரம் முனைவர். அப்துல் கலாம் ஒரு தனியார் கல்லூரி மாணவர்களுடம் அறிவியல் உரையாடல் செய்தார். அது இன்றைய முன்னேறி கொண்டிருக்கும் இளைய சமுதாயத்துக்கு முக்கியமானது. ஆனால் அதை பற்றி யாரும் செய்தியாக எழுத வில்லை. தேவை இல்லாத விஜய் அவார்ட்ஸ் பற்றி எழுதி இன்றைய இளைய சமுதாயத்தை திசை திருப்புவது ஊடகங்களின் பெரும் பங்கு.
       Points
       175
       about 16 hours ago ·   (1) ·   (1) ·  reply (0) · 
       Shaik  Up Voted
       Jay  Down Voted
       • Ramesh  
        தலைவா மாதிரி தான் லிங்கா வுக்கு விருது என்று எங்களால் எடுத்துக்க முடியாது , ஆனா லிங்கா படத்துக்கு எப்படி vote விலுந்துருக்குமுன்னு தெரியல ஆன்லைன்ல விஜய் அஜித் ரசிகர்களுட்கள் இனயாஆ எந்த ரசிகர்களும் கிடயாது ,இப்படி இருக்கும்போது எப்படி ரஜினியல வின் பண்ண முடியும் இந்த முறை விஜய் டிவி கு இருந்த மரியாதை போச்சு இனிமேல் நாங்க விஜய் அவார்ட்ஸ் கு வோட்டு போடறத இல்ல பாக்க போறதும் இல்ல
        about 17 hours ago ·   (0) ·   (1) ·  reply (0) · 
        Jay  Down Voted
        • Raja  
         2016 ல தனுஷ்க்கும் கமலுக்கும் தான் மொத்த award கொடுக்கணும்னு நினைக்கிறேன் ..............என்னா............அவங்க ரெண்டு பேர்தான் வருவாங்க................
         Points
         365
         about 18 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
         raja  Up Voted
         • Dharmalingam  
          டுபாகூர் அவார்ட்ஸ் பத்தி நீங்க எழுதாதிங்க சார்
          about 18 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
          • Ssss  
           Time factor...
           about 19 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
           • Vel  
            VIJAY.TV is my fav.channel. but, VIJAY.TV மக்களின் ஆதரவை இழக்க ஒரே காரணம் "விஜய் விருது". actor vijay சிறந்த நடிகர். இருபினும் அவரது சினிமா வாழ்வில் மிகவும் பெரிதும் ஏமாற்றிய படம் "தலைவா". அந்த படத்துக்கு, 2014 fav.hero award கொடுத்தது மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விஜய் விருது 2015 மீண்டும் 1.முறை மக்களை பெரிதும் ஏமாற்றியது. லிங்கா ரஜினி fav.hero award எந்த கணக்குல கொடுத்தாங்கன்னு தெரியல? எவ்ளோ vote விலுந்துருக்குமுன்னு மக்களுக்கே தெரியும். climax.ல தலைவரு parachute fight.ku vote விழுந்துருக்கும்? இது மக்கள் vote.a இல்ல vijay.tv teams vote.a? IPL CRICKET players ஏலம் எடுக்கற மாதிரி, தனுஷ்க்கு 4.வருசத்துக்கு AWARD FIX பண்ணிடாங்க. 2014.ல் சிறந்த படங்களில் நடித்த (வீரம்)அஜித், (கத்தி)விஜய், (குக்.கூ)தினேஷ் இவர்களுக்கு விருது வழங்கி இருக்கலாம்."Jury லிஸ்டில் கே.வி.ஆனந்த் மற்றும் நடிகை நதியா வேஸ்ட்! விருதுக்கு சற்றும் தகுதி இல்லாத சிலரை தேர்ந்தெடுத்து விருது கொடுப்பது முட்டாள் தனம். விஜய் விருது:- "திறமைக்கு கொடுக்காமல் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு மட்டும் கொடுக்கப்படும் விருது"..!
            about 19 hours ago ·   (0) ·   (1) ·  reply (0) · 
            Jay  Down Voted
            • Feroz  
             குறிப்பு: நெடுஞ்சாலை படத்துக்கு எந்த விருதும் கிடைக்கவில்லை..
             about 19 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
             Satish  Up Voted
             • வைஷ்ணவ  
              சன் டிவி, விஜய் டிவி 3 வருடங்களுக்கு முன், அதிகம் பார்ப்பேன்.. இப்போது எல்லாம் பார்க்கவே கூடாதுன்னு ஒதுக்கும் சேனல்கள் இவைகள்.. இன்னும் சொல்ல போனால் இதை பற்றி எல்லாம் ஒரு விமர்சனம் போட வேண்டுமா? என்பதே கேள்வி. - வைஷ்ணவ தேவி
              Points
              185
              about 19 hours ago ·   (7) ·   (0) ·  reply (1) · 
              • வே. பாண்டி பாண்டி at Retired from Bangalore
               சரியாகச் சொன்னீர்கள். பாராட்டுகள். உங்களை மாதிரி தான் நானும். இந்த இரண்டு சேனல்களையும் நான் இப்போது பார்ப்பதேயில்லை.
               about 15 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
              • Karthikeyan  
               ஹன்சிக்க வுக்கு எதுக்கு விருது......
               Points
               105
               about 20 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
               • Rajesh  
                விஜய் டீவி விருது கொடுப்பதை நிறுத்தவும்... மக்களை ஏமாற்றும் வேலையை நிறுத்தவும் ....
                about 20 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                • Angel  
                 கோமாளிகளின் கூத்து. Donot waste your valuable time.
                 about 20 hours ago ·   (4) ·   (0) ·  reply (0) · 
                 J · ஆதவன்Adhavan · CHANDRAN  Up Voted
                 • Jegan Nathan Sales at Bajaj Finserv 
                  தரமான படங்களுக்கு நல்லதொரு அங்கிகாரம் கிடைக்கவில்லை .....
                  about 20 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                  • Jegan Nathan Sales at Bajaj Finserv 
                   தரமான படங்களுக்கு சிறந்த அங்கிகாரம் கிடைக்கவில்லை ....
                   about 20 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                   • ஸ்ரீபாலாஜி  
                    எந்த நேரமும் யாரையாவது வைத்து கத்தவிட்டு கொண்டு இல்லையென்றால் கதற(அழுக ) விட்டு கொண்டு இருக்கும் இந்த தொலைகாட்சியின் விருதுகள் வழங்கும் விழாவில் இவ்வளவு உள்குத்து இருக்கின்றதா ?இதெல்லாம் அவர்களுக்கே கேவலமான விசயமாக தெரியவில்லையா ?முதலில் இந்த அந்நியநாட்டு தொலைகாட்சியை ஓரம்கட்டி முடக்கவேண்டும் !
                    Points
                    8855
                    about 21 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
                    J · Rajesh · CHANDRAN  Up Voted
                    • ரகு  
                     விமர்சனத்தில் புகழ்ந்தால் வாசகர் புகழ்வதும் இகழ்ந்தால் இகழ்வதும் வாடிக்கை
                     about 21 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                     • Sameer  
                      எப்ப பாரு யாரையாவது அழவச்சு வேடிக்கை காட்டி மக்களை ஏமாற்றும் விஜய் டி.வி. இனியாவது தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும். எத்தனையோ முதுபெரும் சாதனையாளர்கள் இருக்க செவாலியே சிவாஜி விருதை ஷாருக் கானுக்கு வழங்கியதே ஒரு ஏமாற்று வேலை தான். மேலும் இவர்கள் ஒளிபரப்பும் சீரியல்கள் எல்லாமே இப்போது அபத்தனமான சீரியல்கள். நீயா, நானா நிகழ்ச்சியில் ஏமாந்த சோனகிரியாக பார்த்து வெளுத்துவாங்குவதில் கோபிநாத் நிகழ்ச்சியின் நம்பகத்தன்மையே சிதைத்துவருகிறார். மொத்தத்தில் விஜய் டி.வி. மக்கள் மனதில் இருந்து வெகுதூரம் போய்விட்டது.
                      Points
                      1255
                      about 21 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
                      KayAar · CHANDRAN  Up Voted
                      • Karunakaran Duraisamy  
                       அரைத்த மாவயே அரைக்கும் ஒரு டிவி
                       about 22 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
                       CHANDRAN  Up Voted
                       • Annamalai Margasagayam at Retired as H. M. 
                        சூப்பர் சிங்கர் நடத்தும் விஜய் டி வி தமிழார்களுக்கு அனுமதி இல்லை என்று மலையாளீகள்,தெலுங்கர்கள் மற்றும் கன்னடர்கள் மட்டும் கலந்துகொள்ளலாம் என்ற நிபந்தனையுடன் போட்டி நடத்தட்டுமே தமிழே தெரியாத தமிழ் பாடகர்கள் வாழ்க தமிழ் !
                        about 22 hours ago ·   (4) ·   (0) ·  reply (0) · 
                        CHANDRAN · jeromejoseph  Up Voted
                        • Karikalan  
                         vijay awards beast awards don't forget Jessica judgement
                         about 23 hours ago ·   (0) ·   (2) ·  reply (0) · 
                         jeromejoseph  Down Voted
                         • Karthicjk  
                          oru வழியா ப்ரோக்ராம் நாரி போச்சா???? இந்த தன்னடக்கம் தனுஷ் கு எப்போ பார்த்தாலும் அவார்டா?? அவருக்கே போர் அடிக்கலையா?? தம்பி தனுசு வளருற பிள்ளைகளுக்கு வழி விடுப்பா.....
                          about 23 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
                          jeromejoseph · ManavaiYogesh  Up Voted
                          • MUTHUPANDR  
                           சிவகர்த்திகேயன் பெரிய அப்பாடக்கர் கிடையாது.அஜித்,விஜய்,சூர்யா மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து வாங்கிய விருதை சிவகர்த்திகேயன் சுலபமா வாங்குவார்.முதலில் அவர் ஒரு நடிகரே கிடையாது.தனுஷ் புண்ணியத்தில் பிலிம் ஓடுது.
                           about 23 hours ago ·   (6) ·   (0) ·  reply (1) · 
                           manimegala · KayAar · Rajesh · CHANDRAN · jeromejoseph · ManavaiYogesh  Up Voted
                          • MUTHUPANDR  
                           விஜய் டிவி அவர்கள் வாங்கிய படத்திற்கு தான் விருது கொடுப்பார்கள் ஒவ்வொரு வருடமும் ஒரு நடிகரை காக்க பிடிப்பார்கள் .துப்பாக்கி,கும்கி,மைனா,விஸ்வரூபம்,ஜிகர்தண்டா,காவியத்தலைவன்,மான் கராத்தே, போன்ற படங்கள் அவர்கள் உரிமம் பெற்றது.திறமையானவர்கள் ஏராளம் உள்ளனர். விஜய் அவார்ட்ஸ் செல்பிஷ் அவார்ட்ஸ்..................
                           about 23 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
                           yours · CHANDRAN · jeromejoseph  Up Voted
                           • Kingpearl  
                            டிவி சேனல்களின் நிகழ்சியின் தரம் குறைந்துகொண்டே போகிறது.
                            Points
                            1320
                            about 24 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
                            yours · jeromejoseph  Up Voted
                            • மஞ்சூர் ராசா  
                             விருது வழங்குகிறேன் என்று சொல்லி ஏற்கனவே கேலிக்கூத்தாக இருந்த நிகழ்வை மேலும் குப்பையாக்கிவிட்டனர்.
                             Points
                             745
                             about 24 hours ago ·   (4) ·   (0) ·  reply (0) · 
                             yours · CHANDRAN · jeromejoseph  Up Voted
                             • SKR  
                              சிவகர்த்திகேயன் , அனிருத் , தனுஷ் என்று விஜய் டிவி நிர்வாகம் சொல்பவர்களுக்கு விருது கொடுபதற்கு தேர்வு குழு உறுபினர்கள் என்று நான்கு பேர் . மக்களை முட்டாள் என்று எண்ணுகிறார்கள் ..

                             2 comments:

                             கதம்ப உணர்வுகள் said...

                             இவ்ளோ விஷயங்கள் நடந்திருக்கா விஜய் டிவி அவார்ட் ஃபங்க்‌ஷனில்...

                             கதம்ப உணர்வுகள் said...

                             சரியான தலைப்பு.. சொதப்ப போவது யாரு அட்டகாசம்பா...