Tuesday, April 07, 2015

சவுக்குக்கு சடன்பிரேக் இனி போடமுடியாது ! 144 டூ 66 ஏ

1   ஆட்டுகறி உண்னும் இந்துக்கள் ஏன் மாட்டு கறி உண்ணக்கூடாது சுப.வீ # கோமாதா எங்கள் குலமாதான்னு அதுக்கும் ஒரு எசப்ப்பாட்டு வெச்சிருக்கோம்=================
2 எத்தனை சிறைகள் உண்டோ அத்தனை சிறைகளையும் திறந்து வையுங்கள்- கருணாநிதி # வெளில இருக்கும் ஆள் உள்ளே போகவா?உள்ளே இருக்கும் கைதி வெளியே போகவா?
==============3 பா.ஜ., மதவாதக் கட்சி என்றால், பா.ம.க. சாதிவெறி கொண்ட கட்சி - திருமாவளவன் # நம்ம கட்சி எப்டீங்ணா ? மக்களுக்காகப்பாடுபடும் கட்சிங்களா?
===================
4 'அம்மா' முதல்வராக அன்னதானம்.. 'கோ'தானம்.. அண்ணா தி.மு.கவினரின் அதிரடி பூஜைகள்!! # முதல்ல உங்க எல்லாருக்கும் தேவை நிதானம்
===============5 MGRன் எங்க வீட்டுப் பிள்ளை ரீமேக். ஹீரோவாக நடிக்கும் அதிர்ஷ்டம் யாருக்கோ? # எங்க தளபதி நடிச்சா டாப்பா இருக்கும்.டூயல் ரோல்.2 கெட்டப்
==============
6 பேய்ப் படத்துக்கு ஒப்பந்தம்: திருமண அறிவிக்குப் பின் த்ரிஷாவுக்கு குவியும் வாய்ப்பு# கல்யாணம் ஆகிட்டாலே பொண்ணுங்க பேய் ஆகிடறாங்க
=============7 பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க இயலாது! உச்சநீதிமன்றம் தீர்ப்பு # சரோஜாதேவி ,திரைச்சித்ரா,இந்துநேசன் ,சினிமித்ரன் இது ஓக்கேவா?
===============
8 இந்தியாவை வெல்வது கடினம் ஆஸி.. கேப்டன் ;;;கிளாா்க்

# டப் வாங்கிட்டு ஆடறவங்க நாங்க இல்ல.எதிரிக்கு டf பைட் குடுக்கறவங்க


=============


9 பொதுவில் எச்சில் துப்புவது பன்றிக்காய்ச்சல் "பரவ" முதல் காரணம்.-செய்தி.#,நாம லவ் புரபோஸ் பண்றப்ப பொண்ணுங்கதான் தூ னு துப்புவாங்க

=============

10 பேஸ்புக்கில் தவறான தகவலை பரப்பினால் மூன்று வருட சிறை!-செய்தி#இந்தத்தகவலை க்கூட FBலதான் படிச்சேன்.சரியான தகவலா? தவறான தகவலா?


============

11 மோடியின் 10 மாத பயணசெலவு 319கோடி-
#லேடின்னா கூட்டுக்குடும்பத்துக்கு வெடி வைப்பதும் ,மோடின்னா நாட்டு நலனுக்கு அடி வைப்பதும் சகஜம் தானே?


===============


12 உங்களுடன் இருப்போம்... அன்னா ஹசாரேவுக்கு கருணாநிதி ஆதரவு! # ஒரு  சொம்பு பசும்பால்ல  ஒரு துளி ஆலகால  விஷம் சேர்ந்தமாதிரி======================13 உங்களுடன் இருப்போம்... அன்னா ஹசாரேவுக்கு கருணாநிதி ஆதரவு! #  தலைவருக்கு  எப்பவும் ஏதோ  ஒரு அண்ணாவை  டபாய்க்கனும்


===========================


14 தமிழகத்தில் வாக்குக்கு காசு கொடுக்கும் கலாச்சாரத்தை திராவிடக்கட்சிகளே தொடங்கின-ப சி # கலைஞரும் ,ஜெ வும் னு தைரியமாச்சொல்றக்கு என்ன ?=============15 தமிழக முதல்வர் பன்னீர் செல்வமா..? ஜெயலலிதாவா..? - கருணாநிதி.# 2016 ல் திமுக.வின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலினா? கலைஞரா?================
16 தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது - ஓ.பி.எஸ் #  சமாதி  கூட  அமைதிதான்.அதைச்சொல்றாரா?

==================
17 எங்கள் ஆட்சியில் புத்தகத்தைப் பார்த்தே தேர்வு எழுதலாம்: லாலு அதிரடி # அடடே! காபி அடிக்கறதையே கவுரவமா சொல்றீங்ளே?தேவா,விஜய் ரசிகரா?==============


18 அது அற்ப சந்தோசம்… ஆபாச செல்ஃபிக்கு எதிரா கொதித்த ஸ்ரீதிவ்யா# அற்பனுக்கு சந்தோஷம் வந்தா அர்த்த ராத்திரியிலும் வாட்சப்பில் பரப்புவான்


=================


19 மறக்காதீர்.் மோர் கொடுக்காமல் இருக்காதீர்... அதிமுகவினருக்கு ஜெ. உத்தரவு! # தொண்டர்கள் மோர் குடுப்பாங்க.தலைவி கோர்ட்க்கே அல்வா கொடுப்பாரு

============

20 வலைதளத்தில் சர்ச்சை கருத்து தெரிவித்தால் கைது செய்ய தடை- '66ஏ' பிரிவு செல்லாது: சுப்ரீம் கோர்ட் # சவுக்குக்கு சடன்பிரேக் இனி போடமுடியாது


==============

0 comments: