Thursday, April 16, 2015

எலி காமெடி , புலி காமெடி எது டாப்?

1  அமைச்சர் ஸ்மிருதி ராணி தங்கி இருந்த அறையில் ரகசிய கேமரா.# ஏதாவது சிக்குச்சா? வாட்சப் க்ரூப்ல கேட்டா தெரியும்


===============2 ஆண்பாவம்' படத்தை ரீமேக் செய்ய ஆசை: உதயநிதி #  வேணாம் சார் , ரசிகர்கள் பாவம்
===============3  எப்போது வேண்டுமானாலும் சட்டசபைத் தேர்தல் வரலாம் -தம்பித்துரை பரபரப்புப் பேச்சு"# அது என்ன சிம்பு படமா ?
==============4 தேர்தலைச் சந்திக்கத் தயாராகுங்கள் - அதிமுகவினருக்கு தம்பித்துரை அறிவுரை"# ஒரு ஓட்டுக்கு 2000 ரூபாயாமே?வாங்க நாங்க ரெடி! தர நீங்க ரெடியா?
==============5 முதல்வர் ஓ.பி.எஸ் டெல்லி பயணம்: மோடி அளிக்கும் விருந்தில் பங்கேற்கிறார் # பபே சிஸ்டம் தான்.நின்னுட்டே சாப்பிடலாம்
==============6 வாய்ப் பேச்சு ் போதுமா?செயலிில் காட்ட வேண்டாமா.. மோடிக்கு குஷ்பு கேள்வி # சொல்வதைத்தான் செய்வார்.ஆனா எப்போ செய்வார்னு யாருக்கும் தெரியாது===============7 என்னை யாரும் விலைக்கு வாங்க முடியாது - சரத்குமார் # லீசுக்கு எடுத்து ஓட்டலாமா?
==============8 ஏசுவின் வழியில் தான் நான் பயணம் செய்கிறேன்

#கருணாநிதி #சரி.யாரோட வழியில் பணம் செய்யறீங்க?செம சம்பாதிப்பா இருக்குு!"

==============

9 தினமும் 60 சிகரெட் குடித்தாலும் புற்றுநோய் வராது: பா.ஜ.க. தலைவர் ராம்பிரசாத் சர்மா #,இருமி இருமியே செத்துடுவான்.


============

10 சட்டசபைக்கு தேர்தல் வந்தால் சந்திக்க தயார்-வைகோ#  எதுவுமே  படிக்காதவன்  எக்சாம் ஹால்க்கு  முதல் ஆளா  வந்துடுவான்


====================11  பாடப் புத்தகங்கள் விலை உயர்கிறது: 2 முதல் 4 மடங்கு அதிகரிப்பு  #  விலை உயர்த்திய  அரசுக்கு  வரும்  தேர்தலில்  நல்ல  பாடம்  கற்பிப்போம்


==========================]


12  புகையிலைக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பில்லை-BJP MP# அப்டியா/ உங்க  பொண்ணுக்கு  ஒரு செயின் ஸ்மோக்கர்  மாப்ளையை  கட்டி வைங்கபார்ப்போம்


===========================13 13  இணையதள முன்பதிவு டிக்கெட்களுக்கு சேவை கட்டணம் 100 சதவீதம் உயர்வு: ரயில் பயணிகள் கடும் அதிருப்தி# டபுள்  டெக்கர்  கவர்மெண்ட் போல


=======================
14 ஜெயலலிதா விடுதலையாக வாய்ப்பு இருக்கிறது!- சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பேட்டி#  முன்  கூட்டியே தேர்தல்னு உதார்  விட்டப்பவே  டவுட்=================


15 ஏசுவின் வழியில் தான் நான் பயணம் செய்கிறேன்-கருணாநிதி  #  ஆனா  ஏசு  கிட்டே  10 பைசா  சொத்தில்லை, தலைவர்  கிட்டே 1000  கோடியைத்தாண்டி====================================

16 எலி காமெடியை பார்த்து பிரஷர், சுகரை குறையுங்கள்: வடிவேலு வேண்டுகோள் # எலி  காமெடியோ  புலி காமெடியோ  சிரிக்கற மாதிரி  இருந்தா  சரி


============================


17 

ஒரு ஜிபி 3ஜி சேவை ரூ.68 க்கு கிடைக்கும்: பி.எஸ்.என்.எல் அறிவிப்பு # வாட்சப்  உபயோகிப்பாளர்க்கு  ரொம்ப சவுகரியம் , குறிப்பா......


=======================


18  மீனவர்கள் நலனில் அக்கறையுடனிருக்கிறோம் - தமிழிசை சவுந்தரராஜன்...# எந்த  நாட்டு  மீனவர்கள்  நலனில்?னு விளக்கமா  சொல்லிடுங்க மேடம்=================================


19  நீதிபதிகள் செய்வது புனிதமான பணி: பிரதமர் மோடி புகழாரம்  # நாம செய்வது எப்பவும் புனிதப்பயணப்பணி!?


=======================


20  சட்டசபை தேர்தல் வந்தால் 
சந்திக்க தயார் - வைகோ # சந்தித்த வேளையில்  சிந்திக்கவே இல்லை, இழந்துவிட்டேன் டெபாசிட்டை==============

0 comments: