Sunday, April 19, 2015

காஞ்சனா-கண்மணி எது கல்லா அதிகம் கட்டும்? த இந்து அலசல்

கோப்புப் படம்
கோப்புப் படம்
'முனி' , 'காஞ்சனா' படங்கள் வரிசையில் அடுத்த படம், ராகவா லாரன்ஸ் இயக்கும் படம், காமெடி கலந்த ஹாரர் படம் என்ற இந்த காரணங்களே 'காஞ்சனா- 2'வைப் பார்க்க வைத்தது.
'முனி', 'காஞ்சனா'வுக்குக் கிடைத்த பாஸிடிவ் கமென்ட் 'காஞ்சனா- 2'வுக்குக் கிடைக்குமா?
கதை என்ன?
'முனி', 'காஞ்சனா' பார்த்தவர்கள் அடுத்த பார்ட் என்பதால் இந்தப் படத்தின் கதையைக் கேட்க மாட்டார்கள் என்பது குழந்தைகளுக்குக் கூட தெரிந்த விஷயம்.
டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் டிவி ஷோவுக்காக டாப்ஸியுடன், ராகவா லாரன்ஸ் அண்ட் கோ கடற்கரையை ஒட்டிய பங்களாவில் தங்குகிறார்கள்.
உடான்ஸாக ஒரு பேய்க்கதையை கிரியேட் பண்ண, அங்கு நிஜமாகவே ஒரு பேய் இருக்கிறது. பேய்க்கும், அவர்களுக்கும் என்ன ஆச்சு? இதான் படத்தின் லைன்.
மதுரை ராமர் ''என்னமா இப்படி பண்றீங்களேம்மா? என்னப்பா இப்படி கட்டிப்பிடிக்குறீங்களேப்பா?'' என வசனம் பேசும்போது தியேட்டர் முழுக்க சிரிப்பலை.
அதிரடி கிளப்பும் இசையில் மாஸ் ஹீரோ ரேஞ்சில் அட்டகாசமாக என்ட்ரி ஆகும் ராகவா லாரன்ஸ் டான்ஸூக்கு ரசிகர்களின் கை தட்டல் காதைக் கிழித்தது. அவர் தம்பி எல்வினும் சேர்ந்து ஆடினார்.
பேய் என்றால் பம்மிப் பதுங்கி, பாத்ரூமுக்குக் கூட வாட்ச் மேன் வைக்கும் பயந்தாங்கொள்ளி கேரக்டரில் அப்படியே வழக்கம்போல நச்செனப் பொருந்திவிடுகிறார் ராகவா லாரன்ஸ்.
இயக்குநர் ராகவா லாரன்ஸ் பழைய கல்லில், சுட்ட தோசையையே திருப்பி சுடுகிறார். மாவை மட்டும் கொஞ்சம் மாற்றி இருக்கிறார்.
ரியாக்‌ஷன்கள், பயம் கலந்த சுபாவம் , கமென்ட் அடிப்பது என லாரன்ஸின் நடிப்பை ரசிகர்கள் ரொம்பவே என்ஜாய் செய்தனர்.
இன்னா மச்சான் எதுவும் புதுசா இல்லையே... அப்படியே 'காஞ்சனா' எஃபக்ட் இருக்கே என பின் சீட்டில் இருந்தவர் சொல்லிக்கொண்டிருந்தார்.
அறிமுகக் காட்சியில் டாப்ஸி க்யூட். ஆனால், பேயாக மாறும்போது பெரிதாய் பயம் வரவில்லை. அந்த பிஞ்சு முகத்துக்கு பேய் மேக்கப்பா என்று பக்கத்தில் இருந்தவர் சலித்துக்கொண்டார்.
மயில்சாமியுடன் ராகவா லாரன்ஸ் பேசுவதைப் பார்த்து 'அவனா நீ' என்ற ரேஞ்சில் மனோபாலாவும், சாம்ஸூம் அலறும் காட்சிகள் கிச்சு கிச்சு டைப்.
ஸ்ரீமன் ஃபெர்பாமன்ஸில் செமத்தியாக ஸ்கோர் செய்துவிட்டார். பேய் பட ப்ராபர்ட்டிக்கு பூஜா, மதுமிதா,மனோபாலா, சாம்ஸ் , சுஹாசினி ஆகியோர் ஓ.கே ரகம்.
காமெடியோடு, பயம் வரவைக்க வேண்டும் என்பதற்காக இரண்டையும் பேலன்ஸ் பண்ண முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ராகவா லாரன்ஸ். அதுவே ஒரு கட்டத்தில் ஒரு காட்சி காமெடி, ஒரு காட்சி த்ரில்லர் என்ற ஃபார்முலாவுக்குள் பயணிக்கிறது.
ரசிகர்கள் எப்போதெல்லாம் பயப்படுகிறார்களோ, அப்போதெல்லாம் சத்தம் போட்டு கத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். பயத்தை மறைப்பதற்காகவும் ரசிகர்கள் சத்தம் போட்டதுதான் ஹைலைட்.
இடைவேளைவரை இந்த காமெடி - பயம் என்ற ஆடு புலி ஆட்டமே தொடர்ந்தது. இதனால் பாப்கார்ன் பக்கமே எட்டிப்பார்க்கவில்லை.
டெம்ப்ளேட் வில்லனாக ஜெயப்பிரகாஷ். கொடுத்த வேலையை சரியாய் செய்கிறார்.
மொட்டை சிவா கேரக்டரில் நடித்திருக்கும் லாரன்ஸ் மாஸ் ஹீரோ எஃபக்டில் பன்ச் பேசுகிறார்.
''நீ மோசமானவன்னா நா ரொம்ப மோசமானவன்
நீ பொறுக்கின்னா நா கேடுகெட்ட பொறுக்கி
நீ மாஸ்னா நா பக்கா மாஸ்'' என பேசும் போது தியேட்டரில் விசில் பறக்கிறது.
நித்யாமேனன் கொஞ்ச நேரமே வந்தாலும் நடிப்பில் நிறைவு செய்கிறார்.
பாட்டோ, டான்ஸோ ஈர்க்கவே இல்லை. இசை என்று காது கிழிய இரைச்சலைக் கூட்டி இருக்கிறார்கள். பல முக்கியக் காட்சிகளில் இசை இம்சை.
ஃபிளாஷ்பேக் காட்சி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 'முனி' ராஜ்கிரண் ஃபிளாஷ்பேக், 'காஞ்சனா' சரத்குமார் ஃபிளாஷ்பேக் தந்த தாக்கம் 'காஞ்சனா-2'ல் இல்லை. அதனால்தானோ என்னவோ காமோசோமேவென்று காட்சிகள் நகர்கின்றன.
கிளிஷேவான ஃபிளாஷ்பேக் காட்சியால் அலுப்பும், சலிப்புமே மிஞ்சுகிறது. அதுவும் இழுவையாக இழுப்பது முடியல சாரே...
ஏழு வயது குழந்தை முதல் 80 வயது கிழவி வரை லாரன்ஸ் போடும் கெட்டப் எந்த விதத்திலும் உதவவில்லை.
வழக்கம் போல, கிளைமாக்ஸூக்கு முன் ஒரு பாடல் காட்சி. வழக்கமான முடிவு.
ஆனால், காட்சிகளின் நேர்த்தியில் லாரன்ஸ் ரொம்பவே கவனமில்லாமல் எடுத்திருக்கிறார். லாஜிக், மேஜிக் என எதையும் யோசிக்காமல் அவசர கதியில் எடுத்திருக்கிறார்.
படம் முடிந்து மூன்றாவது தளத்தில் இருந்து தரை தளம் வரும் வரைக்கும் மற்றவர்கள் பேசுவதைக் கேட்க காதைக் கொடுத்தோம்.
''முதல் பாதி ஓகே. இரண்டாம் பாதி இழுவை''
''காமெடி இருப்பதால் படம் பார்க்கலாம்''
''முதல் இரண்டு படங்களில் இருந்த பிளாஷ்பேக் மாதிரி இதில் இல்லை.''
''சுவாரஸ்யமும். விறுவிறுப்பும் இரண்டாம் பாதியில் இல்லை.''
''சென்டிமென்ட் இல்லாத கமர்ஷியல் கிளைமாக்ஸ்''
''கிராபிக்ஸ் காட்சிகளுக்கு இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்.''
''ரத்தம்...சத்தம்... குழந்தைகள் பார்க்க முடியாது போல...''
''அம்மா கோவைசரளாவுக்கு கூட லோ ஹிப் சீன் வைப்பது அநியாயம்.''
ரசிகர்களுக்கு ஒரு செய்தி: இதைத் தொடர்ந்து 'முனி - 4' படமும் வரப்போகிறது. இது இனிப்பான செய்தியா? கடுப்பான செய்தியா? நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.


 • Movie is good to see....review is not done in correct way....its good entertainment movie for all...logic not required in this kind of movie...
  about 2 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
     
  • Review is bad....movie is good to see..
   about 2 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
   • Selvam  
    Super padam
    about 11 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
    • முனி 4 கடுப்பான செய்திதான்
     about 12 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
     • Not bad..அ     'ஓ காதல் கண்மணி' படத்தின் மூலம் மீண்டும் ஒரு காதல் கதையை சொல்லியிருக்கிறார் மணிரத்னம்.
     30 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் இருக்கும் மணிரத்னம் - பி.சி.ஸ்ரீராம் கூட்டணி, 20 வருடங்களுக்கு மேல் இசை வெள்ளம் பாய்ச்சும் ஏ.ஆர்.ரஹ்மான் என படத்தின் காம்போ ட்ரெய்லரிலேயே காதல் பல்ஸை ஏற்றியது.
     'ஓ காதல் கண்மணி' திரைப்படம் வசப்படுத்தியதா?
     திட்டமிட்டு இணைந்து வாழும் ஜோடிகள். தெகிட்டாமல் போகும் 'அந்த' வாழ்க்கை. மண வாழ்க்கையின் வல்லமையைச் சொல்லித் தரும் நிகழ்வுகளைக் காணும் வாய்ப்பு. புது வாழ்க்கையைத் தொடங்கும் 'முடிவு'. இவற்றைக் காட்சிகளால் டபுள் ஓகே சொல்ல வைக்கிறது திரைக்கதை.
     'அலைபாயுதே' திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள் ஆகின்றன. அதற்குப் பிறகு முழுமையான காதல் படம் தந்து பேக் டு தி ஃபார்ம் ஆகி சின்ன சிரிப்போடு கை குலுக்கி இருக்கிறார் மணிரத்னம்.
     டைட்டில் கார்டில் ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம் பெயரைப் பார்க்கும்போது தியேட்டரில் அவ்வளவு விசில் பறக்கிறது. சிரிப்பும் சந்தோஷமுமாய் கலந்துகட்டி கை தட்டுகிறார்கள்.
     ரயில்வே ஸ்டேஷனில் துல்கர் சல்மான் பதறியபடி நித்யா மேனனைப் பார்க்கிறார். நித்யா மேனன் ஹை ஹீல்ஸ் செருப்புடன் ஃபிளாட்பார்மில் இருந்து ரயில் வரும்நேரத்தில் விழுந்துவிடுவதைப் போல காட்டும்போது, துல்கர் பரபரப்பாகிறார்.
     நல்லவேளை, நித்யா மேனன் டிராக்கில் விழவில்லை. இந்த மனவோட்டத்தில் ரசிகர்கள் அமைதியாய் படம் பார்க்க ஆரம்பித்தனர்.
     சர்ச்சில் ஒரு திருமணம் நடக்கிறது. நித்யா மேனன் துல்கரைப் பார்த்து என்னை ஞாபகம் இருக்கா என கேட்கிறார். இருக்கு என்று சைகையில் சொல்கிறார். ரசிகர்கள் புன்னகையோடு படம் பார்க்கின்றனர்.
     இங்கிருந்து படம் முழுக்க நித்யா மேனன் ஆட்சிதான். குண்டு கன்னங்களில், அழகான கண்களில் சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்களில் செல்லமாய் சிணுங்கி ஃபெர்பாமன்ஸில் சிக்ஸர் அடிக்கிறார். வேண்டாம் என்பதைக் கூட சிரித்துக்கொண்டே சொல்லும்போது நித்யா மேனன் தனியாய் ஈர்க்கிறார்.
     துள்ளலான துல்கர் சல்மானுக்கு ஓரளவே கைதட்டல் கிட்டியது. நித்யா மேனனுக்கு மட்டும் பஞ்சமே இல்லாமல் படம் முழுக்கக் கைதட்டல்கள் கிடைத்துக் கொண்டே இருந்தன. 'மௌனராகம்' கார்த்தி, 'இதயத்தைத் திருடாதே' அஞ்சலியின் அப்டேட் வெர்ஷனாக நித்யா மேனன் ஜொலித்தார்.
     பிரகாஷ்ராஜ் அறிமுகக் காட்சியில் மட்டும் ஸ்ட்ரிக்ட் ஆபிஸர். அதற்குப் பிறகு மனிதர் பின்னி எடுக்கிறார். பவானி அப்படிதான். காலையில கணபதின்னு கூப்பிடுவாங்க பாரு. அப்போ எல்லாம் சரியாகிடும் என ஜஸ்ட் லைக் தட்... போகிற போக்கில் சொல்லி அன்பை புரியவைக்கிறார்.
     பிரகாஷ்ராஜ் மனைவியாக நடித்திருக்கும் லீலா சாம்சன் கவுன்டர் டயலாக் கொடுத்து அசத்தினார். கணபதி நீங்க ஓல்ட் ஃபேஷன். கார்ல போகும் போது சிக்னல்ல இண்டிகேட்டர் போட்ட பிறகும், கை காட்டிட்டு இருப்பீங்க என்ற கமென்டுக்கு தியேட்டரே வெடித்துச் சிரிக்கிறது.
     சில வசனங்கள் கூட மனதில் பச்சக்கென்று ஒட்டிக்கொள்கின்றன.
     "ரெண்டு பேரும் ஒரே அறையிலா தங்குறதா? இல்லை. ஒரே அறைதான் இருக்கு. நான் பக்கத்துல இருக்கும்போது நல்ல பையனா நடந்துப்பியா? முடியாதுதான்."
     "நீ பக்கத்துல இருக்கும்போது நான் நல்ல பொண்ணா நடந்துக்க முடியுமா? முடியும்."
     "நல்ல படத்துக்கு மொக்கை கிளைமாக்ஸ் மாதிரி இருக்கு நீ பேசுறது."
     "தப்பு கண்டிபிடிச்சேன்னு சொல்லலை. தப்பு கண்டுபிடிக்காதேன்னு சொல்றேன்."
     "ஆம்பளப் பையனை கெஞ்ச வைக்காதே."
     மணிரத்னம் படத்தில் எல்லோரும் கொஞ்சம் கம்மியாய் பேசுவார்கள். இதில் ரொம்ப கம்மியாய் பேசவில்லை. ஆனால், வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கேன் என நித்யா மேனன் அம்மா பேசும் போது ரசிகர்கள்... உவ்வே.... மணிரத்னம் படத்தில் இப்படி ஒரு வசனமா என ஒவ்வாமையை வெளிப்படுத்தினர்.
     துல்கர் - நித்யா மேனன் கெமிஸ்ட்ரி செம. ரசிகர்கள் உச் கொட்டும் அளவுக்கு நெருக்கமும், கிறக்கமும், கெஞ்சலும், கொஞ்சலுமாய் நடித்திருக்கிறார்கள்.
     இடைவேளையில் எந்த ட்விஸ்ட்டும் இல்லை. ஆனால், சின்ன சிரிப்போடு கடக்க முடிகிறது.
     கேன்டீனில் ரசிகர்கள் பாப்கார்ன் கொறித்தபடி பேசியபோது காதைக் கொடுத்தோம்.
     ''என்னப்பா கதையே இல்லை. இதுக்குப் போய் கூட்டிட்டு வந்த'' என ஒரு நண்பர் அலுத்துக்கொண்டார்.
     ''கதையா முக்கியம். ஜாலியா போச்சுல்ல. லவ் ஸ்டோரியில என்ன மச்சான் புதுசா எதிர்பார்க்கிற?'' என்று பதில் அளித்தார்.
     ''நித்யா மேனன் சான்ஸே இல்லைப்பா...'' என காதலியிடம் சொன்னவர் செம பல்பு வாங்கினார்.
     ''பழகிய காதல் காட்சிகள் இருந்தாலும் பார்க்க நல்லா இருக்கு'' என்றார் ஒருவர்.
     மனைவியிடம் மனஸ்தாபத்தில் தனியாய் படம் பார்க்க வந்தவர் போல. படம் பார்த்த எஃபக்டில் போனில், காதலாகி கசிந்துருகிக் கொண்டிருந்தார்.
     ''யூத் பல்ஸை அப்படியே பதிவு பண்ணியிருக்கார் பாரு. அங்கே நிக்குறார் மணி சார்'' என்று சிலாகித்துக் கொண்டிருந்தார் ஒரு மணி ஃபேன்.
     இடைவேளைக்குப் பிறகு படத்தில் பெரிய மாற்றம் இல்லை. துல்கர் அண்ணன் குடும்பம் திடீரென்று மும்பைக்கு விசிட் அடிக்கிறது. நித்யா மேனன் அம்மாவும் விசிட் அடிக்க இருவருக்கும் சின்ன மனஸ்தாபம்.
     அதற்குப் பிறகு கொஞ்சம் நீளமாக இழுத்து கிளைமாக்ஸ். எந்த சேதாரமும் இல்லாமல் முடித்திருக்கிறார்கள்.
     ரம்யா, வினோதினி, கனிகா, பேபி ரக்‌ஷனா ஆகியோர் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
     ஒரு ஃபீல் குட் மூவி பார்த்த திருப்தி என்ற சிரிப்போடு ஒரு ஜோடி கடந்து போனது.
     காதல் புதுசு இல்லை. காட்சிகள் புதுசு இல்லை. வசனங்கள் கூட ரொம்ப புதுசு இல்லை. காதலர்களுக்கான உருக்க நெருக்கம் மட்டும் இருக்கு. அப்புறம் என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா?
     காதலர்களின் எக்ஸ்பிரஷன்களை மட்டும் பாருங்கள். அந்த எனர்ஜியும், ரொமான்ஸூம் உங்களுக்கும் தொற்றிக்கொள்ளும். மணிரத்னம் எக்ஸ்பிரஷன்கள் மூலம் ரசிகர்களுக்கும் காதலைக் கடத்தி இருக்கிறார். 'காதல் கடத்துநர்'னு இனி மணி சாரை தாராளமாக அழைக்கலாம்.
     படம் முடிந்து வெளியே வந்ததும் ஒருவர் போனில் சத்தமாய் பேசிக்கொண்டிருந்தார்.
     "செல்லம்... நாளைக்கு ஓ.கே கண்மணி டிக்கெட் புக் பண்ணிட்டேன்... இந்தப் படம் பார்த்தா நமக்குள்ளே இனிமே சண்டையே வராது பாரேன்" என்றார் ஒருவர். எதிர்முனையில் என்ன ரியாக்‌ஷன் இருந்திருக்கும்?
     சுருக்கமாகச் சொல்லணும்னா, காதல், காட்சி, வசனம், மேக்கிங் எதைப்பற்றியும் கவலைப்படாமல் உங்களுக்குள் காதலைப் பார்க்க வேண்டுமா?
     ஓ.கே கண்மணி பார்க்கலாம்.
     இல்லைப்பா. பத்து நாள் பட்டினியா இருக்கேன். ஒரு வேளை பிரியாணி கொடுத்து சமாதானம் பண்ணாதீங்க என்று சொல்பவரா நீங்கள்? ஸாரி பாஸ். உங்களுக்காக மட்டுமே அந்த மவுஸ் பிரச்னை இருக்கு. அந்தப் பக்கம் போய் விளையாடுங்க பாஸ்.
     படத்தைப் பார்த்து முடித்தபின் நமக்குத் தோன்றியது இதுதான்...
     'ஃபர்ஸ்ட் ஆஃப் பார்த்துட்டு, 'அந்த அறிக்கையை அப்படியே டைப் பண்ணிக்கலாம்... தமிழ்க் கலாச்சாரம், இந்தியப் பண்பாடு, பாரதக் குடும்ப முறை' என்று தங்கள் ஆபிஸுக்குப் போன் அடிக்கும் காவலர்கள், இரண்டாம் பாதி முடித்த பிறகு அப்படியே யூ டர்ன் அடித்து, "படத்துக்கு யூ சர்டிபிகெட் கொடுக்கச் சொல்லி போராட்டத்தை மாத்திப்போம்" என்று கட்டளை இட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!     • இளமை.....
      about 2 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
         
      • தேவை இல்லா கலாசார திணிப்பு..டைரெக்டர் தன வீட்டில் இதை அனுமதிப்பாரா?
       Points
       1020
       about 3 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
       Manisundarrajan  Up Voted
       • GSB  
        மணிரத்தினம் back in action. felt very light. Nitya Menon is the highlight. Worth the time and money.
        about 5 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
        • Suresh  
         கண்டிப்பா பார்க்கணும் டவுன்லோட் பண்ணி சுஹாசினி மேம்க்கு மரியாதை கொடுத்து
         about 5 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
         • Romba alaga soliirukkanga.super padam.nanum end wfe m like pannunum.this is our first film after our marriage.excellant maniratnam sir.thank you OK kanmani all workers.best and first film for us by.Mrs.Jeyanthi MANIKANDAN
          about 6 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
          • ஒகே கண்மணி இல்ல awesome kanmani
           about 6 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
           • Gowtham  
            வேர்ல்ட் கிளாஸ் வொர்ஸ்ட் படம்
            about 14 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
            • This movie is real life love story....unmaiyana kadhal kaviyam...don't forgot to watch this movie... OK KANMANI is OK.
             about 14 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
             • மணிரத்னம் தகுதியான டைரக்டர் இல்லை. அவருடைய படமும் பார்க்க தகுதியானது இல்லை
              about 17 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
              • Navin  
               ஒருத்தர் அவருடைய மனைவி இடம் இந்த படத்துக்கு நான் டிக்கெட் எடுத்துட்டேன்னு சொன்னாராமா . இந்த படம் பார்த்தால் நமக்குள்ளே சண்டையே வராதுன்னு அவர் பேசிக்கிட்டாராமா . அதை இவர் அவர் பக்கத்துலையே நின்னுட்டு கேட்டுட்டு இருந்தாராம் . படத்த மட்டும் விமர்சனம் பண்ணுங்க சார். படம் உங்களுக்கு பிடிச்சுருக்குன்னு ஏன் இப்படி எல்லாம் கதை விடரிங்க ? எவ்வளவு பொய் பேசறிங்க சார். நீங்க ஒவ்வொருத்தர் பக்கத்தாலையும் பொய் நின்னு என்ன பேசிட்டு இருக்காங்கன்னு பார்த்திங்களா? இல்ல அவங்க தான் கத்தி பேசிட்டு இருந்தாங்களா? (யூத் பல்ஸை அப்படியே பதிவு பண்ணியிருக்கார் பாரு. அங்கே நிக்குறார் மணி சார்'' என்று சிலாகித்துக் கொண்டிருந்தார் ஒரு மணி ஃபேன்) இப்படி எல்லாம் யாரு சார் தியேட்டர்ல பேசறாங்க ? நானும் நிறைய படம் தியேட்டர்ல பார்க்கறேன் அப்படி யாரும் எல்லார் காதுலயும் கேட்கிற மாதிரி பேசறது இல்ல . பத்திரிக்கையில் இருக்கறவங்க கொஞ்சபாவது உண்மையை எழுதுங்கள்
               Points
               535
               about 17 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
               mbasheer  Up Voted
               • நுணலும் தன் வாயால் கெடும் .சுகஷினி ????
                about 17 hours ago ·   (1) ·   (6) ·  reply (0) · 
                kilikkaadu  Up Voted
                vinithanand  Down Voted
                • பொதுவாகவே மணிரத்னம் படம் பார்க்கிற எண்ணம் போய் பலவருசமாச்சு.இப்போ நீங்க படம் நல்லாருக்குன்னு சொன்னாலும் 'தகுதி' பற்றி சுகாசினி பேசினதற்காகவே போவதில்லை என பலரும் நினைக்கிறோம்.விமர்சிக்க தகுதியில்லாதவர்கள் படம் மட்டும் பார்க்க தகுதி வேண்டாமா? தகுதியெல்லாம் இன்றி எல்லோரும் பார்க்கின்ற வகையில் தொலைக்கட்சியில் ஒளிபரப்பும் போது பார்க்கலாம் என நினைக்கிறேன்.
                 Points
                 4025
                 about 18 hours ago ·   (11) ·   (2) ·  reply (1) · 
                 kilikkaadu · manamamanama · ArunK · Sivasankaran · MSA · சக்திவேல்Sakthi · kumar · abu · ajay · Saravanan · Nallavan  Up Voted
                 vinithanand  Down Voted
                 • சக்திவேல் Sakthi good at own business 
                  மிகச் சரியான வாதம் மிஸ்டர். ராஜன். உங்களது பட்டியலில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
                  about 7 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                 • ஒரு அழகான காதல் கவிதை படித்த உணர்வு வசனங்களில் மணி (மணிரத்னம் ) ஒலிக்கிறது (ஒளிக்கிறது)
                  about 20 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
                  vinithanand  Up Voted
                  • money and mani வேஸ்ட் ....
                   Points
                   555
                   about 23 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                   • Nizar Ahamed Owner at Travel Update - Sam Exim - Vellinila 
                    தமிழில் காதல், அதிரடி - இப்போ லேட்டஸ்ட் பேய் இதைவிட்டால் கதை எழுதுவதற்கு ஆள் இல்லை போல...
                    Points
                    530
                    about 23 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                    •   
                     காதலர்களின் இன்றைய மன நிலை தடுமாற்றம் நாளை பற்றிய எதிர்பார்ப்பு என நூறு சதவீத அழகான காதல் கதை. ஒன்றுமில்லா விஷயத்தை அழகாக ரசிக்க தருபவந்தான் கலைஞன் ... கண்மணி காதலர்களை ஈர்க்கும்
                     Points
                     410
                     a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                     • ஓ காதல் கண்மணி பாட்டு வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து கூறியது கேளிகூத்தகவுள்ளது அதாவது படம் நன்றாகவுள்ளது என்றால் பத்திரிக்கை மற்றும் இன்டர்நெட் மூலமாக பாராட்டுங்கள் சரியில்லை என்றல் தொலைபேசில் எங்களுடன் பேசுங்கள் என்று பேசுவது எப்பொழுதுமே மக்கள் முட்டாளாகவே வாழவேண்டும் இவர்கள் பையில் பணம் நிரப்பவேண்டும் இது என்ன கொடுமை பாஸ்
                      a day ago ·   (5) ·   (0) ·  reply (0) · 
                      ArunK · MSA · ajay · Saravanan · navin  Up Voted
                      • கூடிய விரைவில் உலக தொலைகாட்சியில் ஒளி பரப்பபடும்
                       Points
                       860
                       a day ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
                       ArunK · MSA  Up Voted
                       • Navin  
                        (படம் முடிந்து வெளியே வந்ததும் ஒருவர் போனில் சத்தமாய் பேசிக்கொண்டிருந்தார். "செல்லம்... நாளைக்கு ஓ.கே கண்மணி டிக்கெட் புக் பண்ணிட்டேன்... இந்தப் படம் பார்த்தா நமக்குள்ளே இனிமே சண்டையே வராது பாரேன்" என்றார் ஒருவர். எதிர்முனையில் என்ன ரியாக்‌ஷன் இருந்திருக்கும்?) அது எப்படி சார் ஆளாளுக்கு மக்கள் அப்படி பேசினாங்க இப்படி பேசினாங்க புருடா விட்ரிங்க . ஒருத்தர் போன் பேசினார்னு சொன்னிங்க இல்ல அது சுத்த பொய் உங்களின் கற்பனையை கலந்து அடிச்சு விட்டீங்க .
                        Points
                        535
                        a day ago ·   (9) ·   (0) ·  reply (0) · 
                        Mano · venkat · Sivasankaran · gowtham · MSA · ajay · navin  Up Voted
                        • நான் படம் பார்க்கவே விரும்பவில்லை எஏன்ன சுகாசினி பேச்சு தான் காரணம்.அப்ப கடல் பார்த்தேன்னு நினைக்கஆதிங்க.
                         Points
                         255
                         a day ago ·   (7) ·   (0) ·  reply (0) · 
                         RAVINDRANPILLAI · ArunK · gowtham · MSA · ajay  Up Voted
                         • kathi inri ratham inri satham inri kalavaram inri oru azhagana kadhal oviyam..
                          a day ago ·   (1) ·   (1) ·  reply (0) · 
                          Saravanan  Down Voted
                          • இவர் இந்த படத்தில் எப்படி நடித்து உள்ளார் என்பது தெரியவில்லை. நான் இன்னும் இரண்டு மூன்று நாட்கள் கழித்து தான் இந்த படத்தை பார்க்கபோகிறேன். அனால் முதல் நாள் முதல் ஷோ காஞ்சனா 2இல் இந்த நடிகை நித்யா மேனன்... ஐயோ அம்மா... சும்மா மிரட்டியிருக்கிறார். ஐயோ அந்த கிளைமாக்ஸ் பேய் சண்டை... ஐயோ அம்மா. மெர்சலாயிட்டேன். லாரன்ஸ் மற்றும் அந்த மொட்ட தலை மதிரவாதி பேய் சண்டை பயங்கர ரகளை...
                           Points
                           3905
                           a day ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
                           ArunK  Up Voted
                           • குப்பை படம்.
                            a day ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
                            gowtham  Up Voted
                            • இன்னும் எத்தன வர்ஷம் தான் சொன்னதையே சொள்ளபோரான்களோ
                             Points
                             1020
                             a day ago ·   (0) ·   (0) ·  reply (1) · 
                             • நீங்க புதுசா சொல்லுங்க..
                              a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                             • என் கையில் மௌஸ் இருக்கிறது,எனக்கு அதை முவ் பண்ண தெரியும் .
                              a day ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
                              ArunK · ajay  Up Voted
                              • Raja  
                               Legend is back
                               a day ago ·   (1) ·   (2) ·  reply (0) · 
                               gowtham  Down Voted
                               • Vasim  
                                ஓகே கண்மணி -ஓகே
                                a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                                • ஆஹ்!!! நான் தூங்கபோரன்...
                                 Points
                                 3905
                                 a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                                 • Akash  
                                  என்ன சொல்ல வரீங்க ....? படம் நல்ல இருக்கா இல்லையா...?
                                  Points
                                  105
                                  a day ago ·   (6) ·   (0) ·  reply (0) · 
                                  ArunK · abdulrahman · Rasigan · ajay · paamaran  Up Voted
                                  • காசு கொடுத்து பார்த்தீங்களா? வாழ்க டோரென்ட்...

                                  0 comments: