Wednesday, April 29, 2015

மீனம்மாக்கு மென்சன் போட்டு பேசுபவர்கள்-யுவர் அட்டென்ஷ்ன்ப்ளிஷ்

1  உலகில்  உள்ள அனைவரும்   தன்  வாழ்வின் அதிகபட்ச  அவமானத்தை  தன்  எதிர்  பால்  இனத்தால்  அடைந்திருப்பார்

=================


காதலியிடம்  உன்  வறுமையை  மறைக்க  வேண்டுமானால்  உன் அன்பை அளப்பரிய  அளவில்  காட்டி  விடு

==================


3  FB ல  பொண்ணுங்க “பாத்திரம் கழுவணும், துணிய மடிச்சு வைக்கணும், பூ கட்டணும், தோசை சுடணும், துவையல் அரைக்கணும்னு சொல்லிட்டு  எதுவுமே  செய்யாம


==================

சமூக வலைத்தளங்களில் அதிகம்  பரிச்சயமற்ற நபர்  பொதுவெளியில்  உங்களிடம் அதீத  உரிமை  எடுத்து  விளித்தால் உங்கள்  கண்டனங்களை உடனே பதிவு செய்க


================

5   ஆன்மீக உரை ஆற்றும்போது நெக்லஸ் மங்கையர்க்கரசி 10 முழம் ஜாதி மல்லிகைப்பூ வெச்ட்டு வருது.எதுனா குறியீடா?


================

6 வாரம் 1 தடவை தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்துக்குளினு அப்பா சொன்னா கேட்காம 1000 ரூ குடுத்து பியூட்டிபார்லரில் ஆயில் மசாஜ் செய்வான் தமிழன்


===============7 'உன்னை எனக்கு பிடிச்சிருக்கு ஆனால் கல்யாணம் பண்ணிக்கமுடியாது' என்ற வாக்கியத்தை பயன்படுத்தாத ஆண்கள் அரிது!


============


8 அன்பே! உன் கடைக்கண் பார்வையை விட உன் அக்காவின் ஷாப்பிங் மால் பார்வை என்னைக்கவர்ந்திழுக்கிறதே!


============


9 உன் இதழ் தேடி வியர்த்து போனது என் இதழ்கள் ."


சும்மா அடிச்சு வுடாதீம்மா.உடலில் வியர்க்காத பாகம் உதடுதான்னு ஜூவாலஜி மிஸ் ஜூலி சொல்லுச்சே?

================

10 கடல் வாழ் உயிரினம் உதாரணம் சொல்.
மீன்.மீனம்மா.கடலை வாழ் உயிர் இனம் உதா = மீனம்மாக்கு மென்சன் போட்டு பேசுபவர்கள்


==============

11 அ ழகியே! உன் மேல் அளவு  கடந்த  
ஆ  சை! உடனடியாய்
இ ச்  1  கொடுத்தால்
ஈ  என சிரித்து  உன்னுடனே  இருப்பேன்!#  எல் கே ஜி கவுஜ


====================

12 ஒரு  பொண்ணு  டி பி ல  முதுகைக்காட்டி  நிக்குது.அந்தப்பக்கமா  போனா  முகம்  தெரியற மாதிரி ஏதாவது  ஆப்ஷன்  இருக்கா? டெக்னிக்கல் புலிகளே!


==================

13  காதலியின் கன்னம்  என்பது  காதலன்  ஆசையாய்க்கடிப்பதற்கே!
உரிமை உள்ளவளின்  உதடு உன்மத்தன்  உதடு  கவ்வுவதற்கே!


=====================

14   டி எம்  தவிர்ப்பீர்னு  பொண்ணுங்க  எச்சரிக்கை  போர்டு  வெச்சா “ஏன்  மேடம்  டி எம்  தவிர்க்கனும்?”னு  டி எம்லயே  போய்  விசாரிப்பான் தமிழன்


=================


15  ஏப்19: சர்வதேச சைக்கிள் தினம். காதலியை பேக்கில்  கேரியர்  இல்லாத சைக்கிளில்  ரைடு  கூட்டிட்டுப்போய் எஞ்சாய்  செய்ய உகந்த தினம்


====================

16 ஒரு பொண்ணு  பயோல சென்னை/கன்யாகுமரி/பெங்களூர்-னு போட்டிருக்கு.கண்டக்டர்  ஃபேமிலியா இருக்குமோ?பிறந்த ஊரு/வளர்ந்த ஊரு/வாழும்  ஊரா இருக்கும்


====================

17  அன்சாரிமஸ்தான்  ஏதோ  ஒரு  பொண்ணு  கூட  டி எம் ல  கில்மாக்கடலை போட்டுட்டு அதை  நியாயப்படுத்த  பெண்நட்பு , வரம்  வரமிளகாய்னு அடிச்சு விடறாரு


===================


18  வீட்ல  எலி 1  லக்ஸ் சோப்பை  கவ்விக்கிட்டு போகுது.நான்  என்னமோஅனிமல் பிளானட்  ஆள் போல்  அதை  ஃபாலோ  பண்ணிட்டிருக்கேன்#குளிக்குமா?சாப்டுமா?


=================19  பாக்கெட்ல  10  ரூபா  மட்டும் வெச்சுகிட்டு  கேர்ள்  ஃபிரண்ட் கிட்டே” உனக்கு  என்ன  வேணும்  சொல்லு, நானாச்சு  வாங்கித்தர”னு உதார் விடுவான்===================


20   இந்தப்பொண்ணுங்க  வெறும்  வாய்ல  முழம்  போடறதுல வல்லவள்கள். நேர்ல ஒரு ப்ளம் கேக்  கூட வாங்கித்தர மாட்டாங்க,சும்மாஃபோட்டோஷேர்ல 150கேக்===========================

0 comments: