Saturday, April 11, 2015

உருகி உருகிக்காதலித்தோம்னு ரெக்கார்டு கிரியேட் பண்ண ஒரு கிறுக்கு வழி

1  அத்தான். இன்னைக்கு நான்  கோபமா இருக்கேன்.

 என்னமோ  மீதி  364 நாளும் சந்தோஷமா  இருந்தா   மாதிரி  பேசாதே.எப்பவும் நீ  இப்டித்தான்


==================


2  மிஸ்!  நீங்க  பக்குவப்பட்டுட்டீங்களா?

வாட்? யோவ்!


வாசிப்பு  ஒருவரை  பக்குவப்படுத்தனும்னு சொன்னாங்க. என் கதை படிச்சீங்களே?என்ன ஆச்சு?


==================


3  டியர் , என்னை  சீரியசாவா  லவ் பண்றீங்க?

 இல்லியே? சிரிச்சுக்கிட்டேதான்  லவ்வறேன்


==================


4 நான்  ஆட்டோ  ஓட்டிக்கிட்டே  ட்வீட் போடறேன்

  ஓஹோ! இதுதான்  ஆட்டோ  ட்வீட்டா?


==============


5  வாழ்க்கையே  வெறுத்துடுச்சு . பேசாம  சாமியார் ஆகிடலாம்னு  இருக்கேன்.

 பேசிக்கிட்டே    சாமியார்  ஆகிடுங்க. நித்யானந்தா  ரேஞ்ச் ஆகிடலாம்


================


6  டாக்டர்! பஞ்சாமிர்தத்தை  ஒரு  ஸ்பூன் அளவு  நக்கினா  10  கலோரி  எரிக்கப்படுமாமே?  நிஜமா?

ஆமா, அப்டியே  சுகர்  அளவு  40  பாய்ண்ட்  ஏறும்


=================


7  டாக்டர்.டெய்லி   பாதாம் பருப்பு  சாப்பிட்டா   பேட்டை  பிஸ்தா  ஆகிடலாமா?


ம் ம்ம்  எதுக்கும்  பிஸ்தா பருப்பையே  சாப்ட்டுப்பாருங்க


==================


8  மிஸ்! இப்போ  ஒரு இங்க்லீஷ்  ட்வீட்டை  ஆர்டி  பண்ணீங்க  இல்ல?

 ஆமா. எனக்கு  பிடிச்சிருந்தது.அதான்.

அதுக்கு  இப்போ அர்த்தம்  சொல்லுங்க


================

9  மிஸ்டர்! எம் எஸ் சி  படிச்ட்டு   +2  தான்  படிச்சேன்னு  ஏன்  பொய்  சொன்னே?


மிஸ்!  +2 -ன்னா  யூத்னு நினைச்சுக்குவீங்க இல்ல?


===================


10  குருவே!  நீங்களே  சன்னியாசி. முற்றும்  துறந்தவர்.எந்த வேலை வெட்டியும் இல்லை.ஆனா  பிசின்னு  சொல்றீங்க?

ஹிஹி  பிசி வித் ரோசி , கன்னி ராசி


==================


11 உன் மனைவியும், மாமியாரும்
புலிகிட்ட மாட்டிகிட்டாங்கன்னா..
முதலில் யாரை காப்பாத்துவ..?

  புலி  படம்  ஓட்டிட்டு இருக்கும்  ஆபரேட்டரை====================


12  டாக்டர், யாரையாவது  அடிச்சா  நாம  பெரிய ஆள் ஆகிடலாமா?

 அவங்க திருப்பி அடிச்சா   பெரிய ஆஸ்பத்திரி  ஆளா ஆகிடுவீங்க , பரவால்லியா?==================


13  டேய்! அனுஷ்கா  வுக்கு  2 சுழி -னுதானே  வரும்? நீ 3 சுழி -ணு போட்டிருக்கே?

 டீச்சர்.நான்  அணு அணு வா ரசிச்சேன்  ஹிஹி===================

14  டியர்! உன் கையைப்பிடிச்சுக்கிட்டே  நடக்கட்டுமா?

ஏன்? உனக்கு  கண்ணு தெரியாதா?


====================

15  டியர்!ஒவ்வொரு டைம் நாம  மீட் பண்ணும்போதும் ஐஸ்க்ரீம் வாங்கித்தர்றீங்களே? ஏன்?


உருகி உருகிக்காதலித்தோம்னு ரெக்கார்டு  கிரியேட் பண்ணலாமில்ல?


======================


16  மேடம்!  ஆபரேஷன்  பண்றப்போ நகைஇருக்கக்கூடாது. தாலியைக்கழட்டனும்?டாக்டர்.நான் விசேஷத்துக்குப்போகும்போதுதான்  தாலியே  போடுவேன்.பீரோல இருக்கு=================

17  டியர்! உப்புமா செய்யவா?  பத்து நிமிஷத்துக்குள்ள பண்ணிடுவேன்

நீ  10  நிமிசத்தில்  பண்ணிடுவே. நான்  அதை  சாப்பிட அரை  மணி நேரம் ஆகுமே?


=================

18  டாக்டர்! தொப்பை தெரியாத சட்டையை செலக்ட் பண்றது  எப்படி?


அது  சிரமம். அதெல்லாம்  சட்டை  பண்ணிக்காதீங்க================


19    என்கிட்டே  பழகும்போது இடைவெளி  விட்டுப்பழகுங்க.

டியர்.லவ்வரோட   இடை  வெளியை  ஏன்  விட்டுட் டுபழகனும்?


=================


20   ஹலோ! மேனேஜர்  சாரா?  சம்பளம் தந்தாத்தான்  இனி  வேலைக்கு  வருவேன்


நீ  ஆஃபீஸ்க்கு  வந்தாதான்  சம்பளம்  தருவேன்


===============================

0 comments: