Thursday, April 09, 2015

மான் விழியாள்க்கு ட்வின்ஸ் சிஸ்டர் இருக்காங்களா?ஒரு வெட்டி ஆராய்ச்சி

1  வீரன் தொடர் வெற்றி கொடுக்கையில் அவனைப்போற்றும் உலகம் ஒரே ஒரு தோல்விக்கு அவன் காதலியையும் பழிக்கும்.இதுதான் உலகம்==============2 தோல்வி அடைந்த வீரனுக்குத்தேவை ஆறுதல் வார்த்தைகளே!,தூற்றுவதால் தூற்றுபவருக்கு என்ன பயன்?

==============3 சன் டிவி வம்சம் தொடர் ல மூன்று முடிச்சு படத்தின் புகழ்பெற்ற படகு கொலை சீனை அப்டியே உல்டா பண்ணி இருக்காங்க.சப்பா===============

4 அன்றாட வாழ்க்கைக்கு அன்னக்கொடி

பத்தும் பத்தாததுக்கு பவளக்கொடி
# கிராமத்து சொலவடை


===============

5 தோல்வி அடைந்தவர்களைக்கேவலமாகப்பேசுபவர்கள் இதுவரை தோல்வியையே சந்திக்காதவர்களாக இருப்பார்களோ?


============


6 அன்பே!,யவண ராணி!,நம் காதல் சாம்ராஜ்யத்தில் நீ தான் என் நிரந்தர கடலை ராணி!


==============


7 பெற்ற குழந்தையைக்கூட நேரில் பார்க்காமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் நீ பணியாற்றினாலும் வெற்றி பெறா விட்டால் உலகம் உன்னை தூற்றும்


==============


8 போன வருசம் என் பிறந்த நாள் அன்னைக்கு ஏன் கோவிச்ட்டேன்.தெரியுமா?னு சம்சாரம் போன் பண்ணி இப்ப கேட்குது.=============9 நாளை பந்த் அப்டின்னா  இன்னைக்கு  நைட் ஒர்க் வெச்சு கணக்கை  நேர்  பண்றாங்க  பார்த்தீங்களா? அவங்க  100 வருசம்   உயிரோட இருப்பாங்க
===================
10  ஒருத்தர் PH பண்ணி “ சார்.நான் ட்விட்டருக்கு  புதுசு.முரட்டுத்தமிழச்சிக்கு டி எம் அனுப்பலாமா?”னு  கேட்கறார்.யோவ், அதான் முரட்டு-னு இருக்கே?
===============
11  மைனாவின்  அப்பா(வும்)  ட்விட்டர்ல  இருந்தா ஹேண்டில் நேம் =மைனாவின் நைனா
===============
12  FB  ல  ஒரு  கல்யாணமாகாதகன்னிப்பொண்ணு “  மை  நியூ  பேபி”னு போட்டிருந்தது, ஆடிட்டேன். நல்ல வேளை, நாய்க்குட்டி  ஃபோட்டோ
=================
13  தன்னை  விட  11  வயசு இளையவரா  இருக்கும்  பொண்ணு  கிட்டே  “  நீ  என்னை  லவ்  பண்றது  கன்ஃபர்ம்தானே?”னு  நப்பாசையா  கேட்பான் நெட் தமிழன்
=================
14    மான்  விழியாள்க்கு  ட்வின்ஸ் சிஸ்டர் இருக்காங்களா?னு யாரும்  குழம்ப  வேண்டாம், அது கண்ணாடி முன்  நிக்குதுனு நினைக்கேன்
=================
15  என்னமோ  வாரம் பூரா  காஷ்மீர் பார்டர்ல  மிலிட்ரிகாரரா இருந்தா  மாதிரியும் இன்னைக்கு  மட்டும்  வெட்டியா  இருப்பது  மாதிரியும் சீன் போடுவான்  தமிழன்
====================
16  FBல  பொண்ணுங்க  யாராவது”HOW WAS TODAY?"னு ஃபார்மாலிட்டிக்கு  கேட்டா நல்லா  இருந்தாக்கூட “ டல்லா இருக்கேன்”னு அடிச்சு விடுவான் நெட் தமிழன்
================
17  டெய்லி  ஏதோ  ஒரு பொண்ணைத்துரத்திட்டு  கடலை போட்டுட்டு   மேகத்தை  துரத்தியவன், சோகத்தை விரட்டியவன்னு ஹேண்டில்  வெச்சுக்கறாங்க

=====================
18  நாத்திகவாதியைக்கூட  நம்பிடலாம்.முருக பக்தனை நம்பவே  கூடாது ..வள்ளி , தெய்வானைனு  சைடுல ஏதாவது  ஓட்டிக்கிட்டு இருப்பாங்க
=================
19  சாத்துக்குடி ஆரஞ்சுப்பழத்தின் தோலை உரிக்க சோம்பேறித்தனம் கொள்பவர்களுக்காக இயற்கை படைத்தது தான் கொடை ஆரஞ்சு.3 விநாடியில் உரிக்கலாம்


============

20 தனுஷ் கோடி களில் சம்பளம் வாங்குவார் என்று இயற்கைக்குத்தெரிந்து இருக்கிறது # தனுஷ்கோடி நகரம்


====================

0 comments: