Thursday, April 02, 2015

நண்பேன்டா - சினிமா விமர்சனம்

ஹீரோ  வழக்கம்  போல்  ஹீரோயினை  எதேச்சையாப்பார்த்து  பார்த்ததும்  லவ்வறாரு. ஃபிரண்டோட ரூம்ல  தங்கறாரு. எதிர்  வீட்ல தான்  ஹிரோயின். 


ஹீரோயின்  ஒரு  பேங்க்ல ஒர்க்  பண்ணுது.ஹீரோ  பல  ரூட்  விட்டு பிராக்கெட்  போடறாரு.அதுக்கு  ஹீரோயின்   டிமிக்கி  கொடுத்துட்டே  இருக்கு . இடைவேளை  ட்விஸ்ட்டா   என்னைப்பத்தி  பயங்கரமான  ஒரு  ஃபிளாஸ்பேக் இருக்குனு பில்டப்  தருது . என்னைப்பத்தின  பழைய  விஷயங்களைத்தெரிஞ்சுக்கிட்ட  பின்  லவ்  பண்ணுனு  சொல்லுது. எங்கே  சிம்பு  பிரபுதேவா  ஆர்யா  மேட்டரெல்லாம்  வெளில  வந்துடுமோன்னு  தமிழன்  பதர்றான்.அப்போதான்  ஹீரோயின்  சொல்லுது . நான்  ஒரு  கொலை  செஞ்சு  ஜெயில்  தண்டனை  பெற்ற  குற்றவாளிங்குது

 இந்த  பயங்கரமான   ட்விஸ்ட்டோட  இடைவேளை, இதுக்குப்பின்  என்ன  ஆகுது  ?  என்பதே  மிச்ச  மீதிக்கதை


ஹீரோவா  தமிழ்  நாட்டின்  மக்கா    நாள்  முதல்வர்  உதயநிதி  ஸ்டாலின் . ஆள்  நல்லா  தேறிட்டார் .  டயலாக்  டெலிவரி   , டான்ஸ்  மூவ்மெண்ட்  எல்லாம்  ஓக்கே  . வசனத்தில்  சிம்புக்கு  மறைமுகமா  கவுண்ட்ட்ர்  கொடுக்கறார்


ஹீரோயினா நயன்  தாரா..டிரஸ்சிங்  சென்ஸ் ராணி. , தென்னகத்தின்  மான்செஸ்டர்  கோவை  மாதிரி  மான்  செஸ்ட் டர்  இந்தப்பாவை . ஹை ஹீல்ஸ்  போட்டு  இவர்  நடக்கும்போது போதை  த:ளும்புது.  பாடல்  காட்சிகளில்  ஆடை  அலங்காரம்  அசத்தல் , பல  காட்சிகளீல்  குஷ்பூக்கே  டஃப்  ஃபைட்  தர்றார் , நடிப்பில்  இல்லை  பேக் யூ  லோஓஓஓஒ  நெக்  ஜாக்கெட் டிசைனில். ஒரு  மெடிக்கல்  மிராக்கிள்  ட்விட்டர்ல  நயன்  ஃபோட்டோ  போட்ட  லேடி  ட்வீட்டர்  இன்னைக்கு  போட்ட நெயில்  பாலீஸ்  கலர் ல நயனும் வருது, வாட் எ  கோ  இன்சிடெண்ட்?


 காமெடியனா  நிஜமான  ஹீரோவா சந்தானம்  முன்  பாதியில்  ஹீரோவுக்கு  நிகரான  காட்சிகள்  பின் பாதியில்  ஹீரோவை  விட  அதிக  காட்சிகள் . பெரிய  அளவில்  கவுண்ட்ட்டர்  குடுக்கலை  இருந்தாலும்  மக்கள்  ரசிக்கறாங்க  


 மனோபாலா  காமெடி  லைட்டா  பண்றாரு

  வில்லனா  வரும்  நான் கடவுள்  மொட்டை  வரும்போதெல்லாம்  தியேட்டர்  ஆரவாரம்

மனதைக் கவர்ந்த  வசனங்கள்

1  காலைல சூப்பர் பிகரை பாத்தேண்டா
எவனாவது சுமாரான பிகரைப்பார்த்தேன்னு சொல்றீங்ளா? #,ந


2 ஸ்ரீ தேவியை சின்ன வயசில் பாத்தா எப்டி இருக்கும்?
கை விரல் சூப்பிக்கிட்டே இருக்கும் # ந


3 யார்ரா இவன் ?அவசரத்தில் செஞ்ச அண்டா மாதிரி ? # ந


4 பொண்ணுங்களுக்கு பின்னாலயே பாலோ பன்ற பையனை விட முன்னால டேரா வர்ற பையனைத்தான் பிடிக்கும் #,ந


5 இந்த சாங் போட்டதும் ஆடுன பொண்ணை அயிட்டம்னு எப்டி கண்டுபிடிச்சே?


சந் = ஏன்னா இது ஐட்டம் சாங் #,ந


6 உனக்கும்  லவ்  ஃபெய்லியரா?


ஏன்? எந்திரன்  சிட்டிக்கே   லவ்  இருக்கும்போது  எனக்கு  இருக்கக்கூடாதா>? # ந7  பீடிக்கட்டு  மாதிரி  இருக்கான்  ? , இவன்  தான்  பி டி  மாஸ்டரா? 

அய்யோ  , அப்பா.

இவன்  தான் உங்கப்பனா?  # ந8 சந் =  என்னடா?  பாய்  விட்டுக்கல்யாணத்துல  சாம்பார்  சாதம்  போட்ட மாதிரி  பார்க்கறே? @ ந


9என்னடி ?மான்  தயிர்  சாதம்  சாப்பிட்ட மாதிரி  ஒரு  சத்தம்?


ஃபோன்ல  உங்களுக்கு  கிஸ்  கொடுத்தேன் # ந


10  க்ளீன்  சேவ்  செஞ்ச  கிங்க்காங் மாதிரி இருப்பீங்களே  , இப்படி  முகமூடி  போட்ட  மூஞ்சூறு  மாதிரி  ஆகிட்டீங்களே? ,சந்தானம்  டூ  மொட்டை 


 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்
1கை தட்ட கூச்சல் போட 80,பேர் அடியாள்கள் கூட்டிட்டு.வந்திருக்காக.கும்தலக்கடி கும்மாவா?கழகம்னா சும்மாவா?# ந


2 காக்கி சட்டை ஓப்பனிங் சீன் சிங்கம் உல்டா ரீமிக்ஸ்.#,ந3 டேய் ஜோக் சொன்னபின் கை தட்டுங்கடா.250 ரூபா வாங்கிட்டு.2000,ரூபாக்கு கை தட்டாதீங்கடா #,ந


4 காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் என்ட்ரி ,கெட்டப் சூப்பர்.ஹீரோவே இவர் தான்


5 2 லவ்வர் லாலி பாப் 2 கோடி நாயகி நயன் என்ட்ரி.ஹைஹீல்ஸ் போட்ட ஹைலிட்டா போல்டா கிளாமர் காட்டும் போர்ன்விட்டா


6 ஹீரோயின் பேரு "ரம்"யா.ஏதோ குறியீடு


7

நயன் டிசர்ட் ல LOVE PINK னு வசனம்
பிங்க்கி பிங்கி பாங்கி

8 அவள் என்னைப்பார்த்த் பாடலில் நயனின் சின்ட்ரெல்லா கவுன் கலக்கல்.ஆடை வடிவமைப்பாளர் ராக்கிங்


9 உலகப்புகழ் பெற்ற பெறப்போகும் நயன் டாஸ்மாக் ல.சரக்கு வாங்கும் சீன்10 உதயநிதி டூ நயன்.= நான் லவ் டார்ச்சர் பண்ற.ஆளில்லை #,சூசகமா சிம்புவை தாக்கறாரா ?


11 லெமனா தேகத்தில் தகதகக்கும் தமனா என்ட்ரிஇயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள் 


1   எம்  ராஜேஷ் சிஷ்யர்  என்னும்  லேபிள்   நல்ல   வியாபாரம்  ஆக  உதவி

2  சந்தானம்  ஹீரோ  என  உதயநிதியிடம்  சொல்லாமல்  சமாளிச்சது . அவர் தான்  ஹீரோ  என  நம்ப வெச்சது


3  நயன்  தாராக்கு ஆடை  அலங்காரம்  அசத்தல்


4    ஃபாரீன்  லொக்கேஷனில்  ஆடும்  டூயட்  சீன் இந்தியன்  அக்கடான்னு  நாங்க  பாட்டு டான்சை  நினைவுபடுத்தினாலும் அருமை  ,க்ரூப் டான்சர்ஸ்  கலக்கல்  ஃபிகர்ஸ் ,அதுவும்  ஃபாரீன்  ஃபிகர்ஸ்
இயக்குநரிடம்  சில கேள்விகள் 


1   டாட்டா  பிர்லா  பட  ஆர் பார்த்திபன்  கவுண்டமணி  காம்போ  காட்சிகள்  பல இடங்களில்  உல்டா2  பேங்க்  ல  ஒர்க்  பண்ணும்  ஹீரோயினுக்கு  ஏன்  லேடீஸ்  ஹாஸ்டல்? அபார்மெண்ட் அலாட்    இருக்காதா? 


3  ஹீரோவின்  நண்பரின்  வீட்டு  எதிரே  தனி  வீடு  போல்  சில  காட்சிகள்   ,  லேடீஸ்  ஹாஸ்டல் போல்  சில  காட்சிகள்  . எடிட்டிங்  ஃபால்ட்டா?


4   திருடியா க  வரும்  அந்த  வில்லி  கேரக்டர்   போர்சன்  தேவையே  இல்லாதது


5   எம் ராஜேஷ்  ஃபார்முலாவை  அச்சு அசல்  பிசகாமல்  அப்டியே  டிட்டோ  உல்டா  அடிக்கனுமா/?
சி  பி  கமெண்ட்  =நண்பேன்டா- சந்தானம்  காமெடி , நயன் தாராவின்  கிளாமர் காப்பாத்திடும் -   விகடன் மார்க்  - 41,ரேட்டிங் = 2.75 / 5,  ஏ, பி யில் 15 நாள் ஓடும்ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) -  41குமுதம்  ரேங்க் ( கணிப்பு)  =  ஓக்கே ரேட்டிங்  =  2.75 / 5

டிஸ்கி - கொம்பன் - சினிமா  விமர்சனம்

aa


a


aa

a


Puthukkottai rkp
 Embedded image permalinkaFuture cm film .house full
 Embedded image permalink

1 comments:

Unknown said...

தமிழன் பதறுரான் சூப்பர் கமென்ட்