Friday, April 24, 2015

முருகர் - வினாயகர் - மோடி - புதிய சர்ச்சை - இந்து முன்னணி அதிர்ச்சி

1  டேய்! நீ வாயைத்திறந்தா பொய் தான் வருது.


இல்லியே அப்பப்ப கொட்டாவியும் வருமே? டியர்!


=============


2 10 வதுபடிக்கும் பையன் கூட ஓடிப்போனீங்களே? சமூகப்பொறுப்பே இல்லியா ?


கில்மா டீச்சர் கிரிஜா = 8 வது படிக்கும்போதே கூப்ட்டான்.போகல,பொறுப்பு


===============

3 டியர்! இப்டி இம்சை பண்ணிட்டே இருந்தா எப்டி சமையல் பண்ண?


ம்க்கும், உன் சமையலே ஒரு இம்சை தானே?

=============

4 க்ளாஸ் ரூம்லயே எதுக்காக டீச்சரை அலாக்கா தூக்குனே?


ஹெச் எம் ரூம்ல தூக்குனா அவரு பொறாமைப்படுவாரு

================

5 எதுக்காக கடையைச்சாத்தீட்டீங்க?


கடைய நல்லூர் டீச்சரைப்பார்க்க டூர் பஸ் போகுதாம்

=============

6 டியர்! நான் நானேவா இருந்தா பிடிக்குமா?


புரியல.உங்கப்பா கொடுக்கும் சீர் கார் நானோவா இருந்தா பிடிக்கும்


================


7 டாக்டர்.மழைல நனைஞ்சுட்டே ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா?தாராளமா.சாப்பிடுங்க.அப்போ தான் என்னை மாதிரி டாக்டர்ங்க சாப்பிடமுடியும்


================

8 சுஹாசினி = படத்தைப்பாருங்க.ஆனா விமர்சனம் பண்ணாதீங்க.


சிபி =,தியேட்டருக்குள்ளே விடுங்க.ஆனா டிக்கெட் கேட்காதீங்க.


=============

9 மாமா.பொண்ணைப்பார்க்கலாமா?
தாராளமா.பாருங்க.ஆனா நொட்டை சொல்லிட்டு இருக்கக்கூடாது#,சுஹாசினிப்ரியன்==============

10 டியர்.என்னை பிக்கப் பண்ண ரயில்வே.ஸ்டேஷன் வருவீங்க்ளா?


வாசல் வரை வருவேன்.

ஏன்?
உள்ளே வந்தா 10 ரூபா டிக்கெட்.நீ தருவியா?


==========

11 பன்னீர் 1 லிட்டர் குடுங்க.


ம்.இந்தாங்க.

என்னங்க?பாட்டில்ல ரோஸ் வாட்டர்னு இருக்கு.ஆனா வெள்ளையா இருக்கு?ஏமாத்தப்பார்க்கறீங்களா ?

=================

12 அத்தான்.பக்கத்து வீட்டுக்காரி புது புடவை எடுத்திருக்கா.எனக்கும் வேணும்.


சரி வாங்கிட்டாப்போச்சு.பை த பை , அவ மாசமா இருக்கா போல


============

13 டியர்.முதல்ல எல்லாம் 2 கன்னத்திலும் கை வெச்சுக்கொஞ்சுவீங்க. இப்போ ஒரு கை தான். ஏன்?


இன்னொரு கைல செல்லில் ஸ்டேட்டஸ் போடனும்

==========


14 டியர் ! கவுன் போட்டா உனக்கு நல்லாருக்கும்
ஓஹோ! இதான் கவுன்சிலிங்க்கா?

================


15 மிஸ்! பியூட்டி பார்லர் போய் உங்க கண் இமை மேல QQQ-னு அலங்காரம் பண்ணி இருக்கீங்களே? எதுக்கு?


எனக்கு ஐ க்யூ கம்மினு சொல்லிடக்கூடாது

================


16 டியர்! குட் டச், பேடு  டச்  என்ன வித்தியாசம்?

 நான் அன்பா  உன் கன்னத்தைத்தொட்டா  அது  குட் டச், நீ  கோபமா என் கன்னத்தை தொட்டா அது பேடுடச்


================


17  டாக்டர். டிப்ரசன் இருக்குன்னு எப்படி தெரிஞ்சுக்கறது ?"புருசனை டீப்பா திட்டிட்டே இருப்பீங்க


=====================

18 மாப்ளை.என் பொண்ணு பிரமாதமா இட்லி சுடுவா.இட்லி SOFTடா இருக்கும்.


மாமா.டஹால்டி.இட்லியோ தோசையோ சாப்ட்டா எப்டி இருக்கும்?தீர்ந்தடாதா?


=================

19 மிஸ்! மொட்டை மாடில  இருந்து எதுக்கு  உங்க  ஃபோட்டொவை  கீழே  போடுறீங்க?

 நீங்க  தானே  புதுவருஷத்துக்கு  உங்க  ஃபோட்டோ  போடுன்னீங்க?


=========================


20  முருகா!விநாயகா! யார்  முதலில்  இந்த  உலகைச்சுற்றி வருகிறார்களோ  அவருக்குத்தான்  இந்த  ஞானப்பழம்.

அட  போம்மா!  மோடி தான்  ஜெயிப்பாரு


=========================

0 comments: