Saturday, April 25, 2015

ஒரு பொண்ணு fb ல ஃபீலிங்க் அலோன் -னு ஸ்டேட்டஸ் போட்டா என்ன அர்த்தம்?

1  ஒரு பொண்ணு தன் பேருக்குப்பக்கத்துல @WORKனு போட்டிருக்கு.நமக்கு வேலை வெட்டி இல்லைன்னு குத்திக்காட்டுதோ என்னவோ?===============
2 நம் அன்புக்கு உரியவர் வீட்டில் இல்லாத போது அவர் வீட்டுத்தெருவில் உலாப்போவது /வீட்டைப்பார்வையிடுவது இவை எல்லாம் அலாதி சுகம்
================
3 தாமரையோட  கணவர்  தியாகு  தாமரைக்கு தாத்தா மாதிரி  இருக்காரு. இதுல டர்னிங்  பாயிண்ட்  தியாகுவின்  இன்னொரு  தொடுப்பு  பேத்தி  மாதிரி இருக்கு
===================
4   பொதுவெளியில்  ஒரு  பெண்ணிடம்  எப்படிப்பேச வேண்டும்? என்ன  பேச வேண்டும்  எனும் குறைந்த  பட்ச  நாகரீகம்  கூட சிலருக்கு  இல்லை
======================5  தாமரை  போல்  கவிதை எழுத   எனக்கும்  ஆசை.ஆனா  அவரோட  (முன்னாள்  2வது ) புருஷன்  போல்  தலை  எல்லாம்  நரைச்ட்டா  என்ன பண்ண?னு பயமா  இருக்கு
===================6  பப்ளிக்கா  இன்ன  டைம்ல  ஐ லவ்  யூ  சொல்றேன்னு பில்டப்  கொடுத்துட்டு தமிழே தெரியாத  ஃபாரீன்  ஃபிகர்ட்ட  காதலைச்சொல்வான் வீரத்தமிழன்
==================
7  நான்  கூட   எப்பவும்  ஜாலி  மூடுல தான்  இருப்பேன்,ஆனா  அதை  எல்லார்கிட்டேயும்  சொல்லிட்டு  இருக்க மாட்டேன்# அய்யய்யோ  இப்போ  சொல்லிட்டனே

=================
8  1289 பேர்  கூட  உக்காந்து  தியேட்டர்ல  ஹோம்  அலோன்  படம்  பார்த்துக்கிட்டு fb ல  ஃபீலிங்க்  அலோன் -னு  ஸ்டேட்டஸ்  போட்டா அது  சோகம் ஆகாது
====================
9  தமிழ் பேசும் தூய தமிழ்ப்பெண்களுடன் மட்டுமே கடலை போடுவது எனும் உயர்ந்த லட்சியத்துடனும் , கொள்கையுடனும் வாழும் அனைவருக்கும் வாழ்த்து
==============10 நூத்துல ஒரு பொண்ணுதான் நம்ம க்ளிக்சை பாராட்டுது.ஆயிரத்தில் ஒரு பொண்ணுதான் நம்ம டிபி யை பாராட்டுது.ஹூம் ;-))
=================
11 கோலம் போட்டுட்டு இருந்த முன் பின் அறிமுகம் ஆகாத பொண்ணுக்கு த பு வாழ்த்து சொன்னேன்.அது அலறி அடிச்ட்டு அம்மாவைக்கூப்பிடுது
===================
12 உன்  அத்தனை  கோபத்தையும் , வசவுகளையும்  ஒரு  நொடியில் மறக்கச்செய்து  விடும்  உன் மீது  நான் கொண்ட அன்பு!

====================
13  ஓ  காதல்  கண்மணி   படம்  க்ளிக்  ஆகுதோ இல்லையோ  ஹீரோக்கு  ஹீரோயின்  க்ளிக்  ஆகிடும்  போல. அப்டி  ஒரு  கெமிஸ்ட்ரி.நல்லா  இருங்கடே!
=======================
14 இனிய  தமிழ்ப்புத்தாண்டு  வாழ்த்துனு  தமிழ்ல  சொல்லாம  ஹேப்பி  தமிழ்  நியூ இயர்  டூ மை  ஃபாலோயர்ஸ்னு  இங்க்லீஷ்ல சொல்வார்  நெட் தமிழர்

======================
15  சினிமா  பட  டைட்டிலுக்கு  பஞ்சம்கறாங்க. இங்க  வந்து  பாருங்கய்யா. ட்விட்டர்  ஹேண்டில்சை.டக்கரான  விதவிதமான  ஐடியாக்கள், களை  கட்டுது
=======================
16  குழந்தைகளிடம் நீங்கள்.எந்த அளவு குழந்தைத்தனமாகப்பழகுகிறீர்களோ அந்த அளவு பக்குவப்பட்டிருக்கிறீர்கள் என அர்த்தம்==============


17 யோக்கியனாய் ,கண்ணியமானவனாய் வாழ்பவனுடையை தனிமைப்பொழுதுகள் படைப்புசார் பணியில் இருக்கக்கூடும்


============

18 எளிதில் மின் கடத்திக்கு உதாரணம் சொல் எனக்கேட்டால் உன் உள்ளங்கையுடனான என் உள்ளங்கை சேர்ப்பு என்பேன்


============

19 தாமதமாய் வாழ்த்துச்சொன்னேன்.கோபமாய் நீயே வெச்சுக்கோ என்றாள்!,சரி.வெச்சுக்கறேன்ட்டேன்


================


20 இயற்கை  அழகான  சூரிய உதயத்தைக்கூட   டீ  கப்  காம்பினேஷன்ல  எடுக்க  தமிழனோட  மூளைல  மட்டும் தான் யோசனை உதயமாகும்

======================


0 comments: