Monday, April 06, 2015

தென்னிந்திய பெண்கள் மூக்குத்தி அணிவது வலது பக்கமா? இடது பக்கமா?

1  மாமா! பொண்ணுக்கு சமையல் தெரியுமா?
ம்ம் கிச்சன் ரூம் ல நீங்க சமைச்சா அதான் சமையல்னு கரெக்ட்டா தெரிஞ்சுக்குவா.புத்திசாலி=====================

2 டாக்டர்.நீங்க சொன்னபடி நித்திரைக்கு முன் மாத்திரை சாப்ட்டேன்.தூக்கமே வர்லை.
என்னதான் வருது?
நர்ஸ் மித்திரை நினைவுதான் வருது


=============


3 மிஸ்! வாக்கிங் போகும்போது எதுக்கு பூனை மாதிரி மியாவ்னு சவுன்ட் தர்றீங்க?


ஏன்னா இது CAT வாக்.ஹிஹி


============


4 புலிக்கு பிறந்தது பூனை யாகுமா?


ஆகும்.ஒரு வேளை அது நடத்தை கெட்ட புலியா இருந்தா.


==============

5 ஸார்.கான்டக்ட் சர்ட்டிபிகேட் தரும்போது எதுக்கு ஒரு பர்லாங் நடக்கச்சொல்றீங்க?


இது நன்னடத்தைச்சான்றிதழ்.உங்க நடை எப்டி?னு பார்க்கவேணாமா?


=========


6 ஏய் மிஸ்டர்! நீ எனி ஹெல்ப் ஷாலினி வகையறாவா?


நோ.வாக்கிங் போறப்ப விழுந்துட்டீங்க.உதவினேன்.எனி ஹெல்ப் அஜித் டைப்.மைன்ட் இட்=============


7 மாமா.கார் வாங்கித்தர்றதா சொல்லிட்டு 2 பைக் வாங்கிக்கொடுத்திருக்கீங்க?


நல்லா எண்ணிப்பாருங்க.4,வீல் இருக்கில்ல? 2*2 வீலர் = 4 வீலர்


=============

8 டியர்.என்னை எவ்ளவ் பிடிக்கும்?


நீ 50 கிலோ இருக்கே.2 கிலோ பிடிக்கும்


================

9 நான் ஐஞ்சாவது படிச்சபோது, கூட படிச்ச பையன் பேரு ஆண்டவன்.


மிஸ் !,அவன் ஏன் உங்க கூட படிச்சான்? தனியா அவன் வீட்லயே போய் படிச்சிருக்கலாமே?

==============


10 டாக்டர்.நான் ஆரம்பத்தில் பார்த்த அனுஷ்கா வும் லச்மிராயும் நமீதாவும் இப்ப இல்லையே?அதெப்டி.?ஆரம்பத்தில் 9தாராவும் ,டாப்சியும் தானே?


==============

11 ஏய் மிஸ்டர்.ஜோக் சொல்லச்சொன்னா எதுக்கு எனக்கு கிச்சு கிச்சு மூட்றே?


மிஸ்! என் ஜோக்குக்கு சிரிப்பே வர மாட்டேங்குதுனு பொண்ணுங்க சொன்னாங்க


================


12 டாக்டர்! FB ல 100 லைக்ஸ்க்கு கம்மியா விழுந்தா என் பொண்ணு தூங்க மாட்டேங்குது.்


நானே என் ஸ்டேட்டஸ்க்கு 50 லைக்ஸ்கூட விழலைனு கவலையா இருக்கேன்


================


13 சார்.மேடை ஏறுனதும் எதுக்கு கெட்ட வார்த்தை பேசறீங்க?


ஒரு சில வார்த்தைகள் பேசுமாறு கேட்டீங்களே?


================


14 டைரக்டர் சார்! உங்க  படத்துல  வில்லனுக்கும்  காதலி  இருக்கே? எப்படி?

பெரும்பாலான ஆம்பளைங்க  வில்லாதிவில்லனுங்க தானே?


=========================


15  வாழ்வில் நாம் தினம் அல்லது அடிக்கடி சந்திக்கும் ஒரு ரசனையான பொருள் பெயர் சொல்லமுடியுமா?


பக் வீட் காரியின் சேலை


============


16 டியர்.உன் வெட்கத்தை மறந்து என்னைக்கட்டிப்பிடி பார்ப்போம்.


ஆ! வெட்கமா?,அப்டின்னா என்ன?மறந்துடுச்சே?


================

17 டாக்டர்.டெய்லி சென்ட் (பாடி பர்ப்யூம்) போட்டுக்கிட்டா பிகருக்குப்பிடிக்குமா?


உங்க கிட்டே பல சென்ட் நிலம் இருந்தா பிடிக்கும்


=============

18 டாக்டர்.அடிச்சு போட்ட மாறி நல்லா தூங்கனும்...
அதுக்கு என்ன வழி?


500 ரூபா பீஸ் குடுத்தா ஊசி போடாம அடி போடறேன்


==============

19 அய்யோ கடவுளே! கடவுள் ங்கற பேர்ல ட்விட்டர் ல ஐடி ஆரம்பிச்ட்டாங்க


பக்தா! அது கூடத்தேவலை.கடவுளின் கீப் னு ஒரு அக்கவுன்ட்.ஹூம்


==============

20 தென்னிந்திய பெண்கள் மூக்குத்தி அணிவது வலது பக்கமா?
இடது பக்கமா? #டவுட்.


கீப் லெஃப்ட் என்ற விதி இதுக்குப்பொருந்தாது


==================

0 comments: