Sunday, April 05, 2015

சன் டி வி யை அம்பானி குரூப்க்கு வித்துட்டாங்களா?

1  மிஸ்! உங்க ஏரியாவில் ஆயிரக்கணக்கானோர் மயங்கி விழுந்திருக்காங்க்ளே? எதனால?அவங்க எல்லோரும் என் அழகுல மயங்குனவங்க.ஹிஹி=================

2 தலைவரே இப்போ நடக்கும் மேட்ச்ல எந்த அணிக்கு உங்க ஆதரவு ?நம்ம ஆதரவு எப்பவும் மகளிர் அணிக்கே.


===================


3 சார்.பச்சை சட்டை போட்டவனைத்தான் அடிப்போம்.இது நம்ம ரத்தத்தில் ஊறினது.இப்ப என்ன பண்ண?


எப்படியும் அந்த மஞ்ச சட்டை பச்சை பச்சையா பேசுவாக


================

4 டியர்.10 வருசமா லவ் பண்றீங்க.எப்போ தான் கல்யாணம் பண்ணிக்குவீங்க?கல்யாணமா?எங்க பரம்பரைக்கே அந்தப்பழக்கம் கிடையாது


==================

5 டியர்.நீ டிஎம்கே வா?


ஆமா.எப்டித்தெரியும்?"டெய்லி என்னை மீட் பண்ண வர்றப்போ 100 ரூபா தாங்க"னு கேட்கறியே?


=================

6 டியர்.ட்விட்டர் ல,ஃபேஸ்புக்ல என் பிரண்ட்ஸ் எல்லாம் என்னை லூசுன்னுதான் கூப்பிடுவாங்க.


இது என்ன பிரமாதம்?,நான் கூட அப்டித்தானே கூப்பிடறேன்?


=========================


7 இன்ஸ்பெக்ட்ர்.ஸ்டேஸன் வாசல் படிக்கட்டை ஏன் இடிச்சு எடுத்துட்டீங்க?


மக்கள் கொடுத்த பல புகார்களுக்கு ஸ்டெப்ஸே எடுக்கலைனு புகார் வருது.ஹிஹி


=====================

8 மிஸ்! என்னை ஏன் அன்பாலோ பண்ணீட்டீங்க?


சாரி டா செல்லம்.நேத்து தூக்கக்கலத்துல 10 பேரை அன்பாலோடு.10தோட.11 அத்தோட நீயும் 1

======================

9 ஆபீஸ்க்கு 5 நிமிசம் லேட்.இதுல சைன் பண்ணுங்க.


ok சார்.நேத்து நைட்.1 மணி நேரம் லேட்டாதான் வீட்டுக்கு விட்டீங்க.நீங்க என் டைரில சைன் பண்ணுங்க


================

10 நான் எப்போ Twitter ல join பண்ணேன் னு எப்டி பாக்க?


ட்விட்டர் ஓனர்ட்ஜாக்கு அனுப்ச்ச அப்பாய்ன்ட்மென்ட் லெட்டர்ல கார்னர்ல டேட் இருக்குமே ?


===============

11 டாக்டர்.அடிக்கடி பசி எடுக்குது.இதுக்கு என்ன செய்யனும்?


வெரி சிம்ப்பிள் மேடம்.வீட்ல சும்மாதானே இருக்கீங்க?அடிக்கடி சாப்டுங்க


===============


12 பாட்டுக்கேட்டுட்டேதான் நீங்க பாத்திரம் கழுவுவீங்ளா?


ஆமா.வேலை ஒழுங்கா செய்ங்கனு சம்சாரம் பாட்டு பாடும்.அதைக்கேட்டுட்டேதான் செய்வேன்

================


13

ஆஸ்திரேலியா = கோப்பையைக்கொடுத்திடுங்க


இந்தியா = பேங்க்ல வாங்குன லோனும் ,மேட்ச் ல ஜெயிச்ச கப்பும் இந்தியனுக்கு 1,திருப்பித்தரமாட்டான்


================


14 ரைட்டர் மேடம். கதையின் நீளத்தை இன்னும் குறைத்திருக்கலாம்!"


ஸாரி .டிரஸ் வேணா கம்மியா போடுவோம்.ஆனா மத்ததெல்லாம் ஜாஸ்தியாத்தான்

====================

15 ஒரு சின்னஞ் சிறிய சிறுகதை எழுதி இருக்கேன்.


மேடம்.சிறுகதைன்னாலே சின்னக்கதைதான்.ஒருவேளை சின்னஞ்சிறுசுக கதையோ?


======================

16 ஜட்ஜ் = நீங்க பரம ஏழைங்கறதுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கா?


தலைவர் = சன் டி வி யை அம்பானி ரிலையன்ஸ் க்ரூப்க்கு 5,லட்சம் கோடிக்கு வித்துட்டோம்

================

17 டியர்.சன் டி வி யை அம்பானி குரூப்க்கு வித்துட்டாங்களாம்


அய்யய்யோ.அப்போ வாணிராணி சீரியல் வருமா வராதா? #,அவரவர் கவலை


=================

\18 டாக்டர்.எனக்கு சன் டி வி தெரிய மாட்டேங்குது.


ஐ டாக்டர் ஐவராதினி = அம்பானி க்ரூப் வாங்கிட்டாங்க.4 நாள் யாருக்குமே தெரியாது

===================


19 டியர்.என்னை பேக்கு னு திட்டிட்டீங்களே? உங்க கூட டூ.அட மக்கு! ஒண்ணும் தெரியாத அப்பாவிப்பொண்ணுனு பாராட்டினேன்


===================


20 டியர்.என் அழகை வர்ணிச்சு FBல ஒரு கவிதை போடுங்க.


அய்யய்யோ! மாட்டேன்.பொய்யான தகவல் பரப்புனா.3,வருசம் ஜெயிலாம்.நான் மாட்னேன்


===============

0 comments: