Tuesday, April 07, 2015

ட்விட்டருக்கு பிரேக் விடப்போறேன்

1  3 காலேஜ் பொண்ணுங்க முன் சீட்டில்.ஒரு பெண்ணின் காதலன் ஏதோ மெசேஜ் அனுப்பி இருக்கான்.அதுக்கு மத்த 2 பேரும் ரிப்ளை.ஆ! புதுஸா.இருக்கே
============
2 தியேட்டர்ல படம் பார்க்கப்போனா படத்துல சுவராஸ்யம் இருக்கோ இல்லையோ படம் பார்க்க வர்றவங்க பண்ற கூத்து செம
============
3 என்னைப்பார்க்க வரும்போது ஒரு முழம் பூ கூட வாங்கிட்டு வர முடியாதா?னு கள்ளக்காதலி கோவிச்சுக்குது.அவன் கிளம்பிப்போறான்.கேன்ட்டீன்ல ஏது பூ?
=========
4 குருவி கொத்தித் தின்னு குடோன்


காலியாகுமா??
அருவியில் குளிக்காம குற்றாலம் ட்ரிப் ஜாலியாகுமா?=================


5 ஒரு பொண்ணு நம்மை அடடே! ன்னு பாராட்னா உடனே டைம் பார்க்கனும்.பகல் டைம்னா ஓக்கே.நைட் டைம்னா உன் பாராட்டில் பிழைனு சொல்லிடனும்(அடday,அடநைட்)


===========


6 வேண்டும்  எல்லா வரங்களையும்  காதலனிடம்  பெற்று விட்டு சாபங்களை  மட்டுமே  தந்து  விட்டுச்செல்லும்  தேவதைதான்  பெண்!=================
நமக்கெல்லாம் 4 பொண்ணுங்க இருக்கும் இடத்துல நிக்கவே சங்கோஜமா இருக்கும்.இந்த கோபிநாத் 43 பொண்ணுங்க கிட்டே போய் உக்காந்துக்கிட்டாரு
==============8 2015ன் எதிர்பாராத வெற்றிப்படங்கள்


1 ராஜ தந்திரம்
2 கள்ளப்படம்


============

9 சம்சாரம் சுடுதண்ணியைப்பிடிச்சு நம்ம மேல ஊத்துனாக்கூட தாங்கஸ் பார் எ வார்ம் வெல்கம்னு.சொல்ற பரம்பரைங்கய்யா நாம எல்லாம்


============

10 வலைப்பூ பதிவர்கள் ,ட்விட்டர்கள் மெகா ட்வீட்டப்பில் பெண்கள் பங்கு கொள்ளாமைக்கு முக்கியக்காரணம் சரக்கு அடிக்கும் சங்கமமாக ஆகிப்போனதால்


============

11 ரோமியோ ஜூலியட் ப்ரமோவில் ஜெயம் ரவி டன்டணக்கா பாட்டுக்கு ஆடிய ஸ்டெப்பில் கையை ஆட்டுவது "வந்துடாதே!மாட்டிக்காதே"என எச்சரிப்பதுபோல் இருக்கு


=================


12 குடிகாரர்களைக்கேவலமாகப்பார்த்த தலைமுறை தாண்டி குடித்து சீரழிவதை FBயில் பெருமையாக ஸ்டேட்டஸ் போடும் தலைமுறை உருவாகி விட்டது


===============


13 குடிகாரர்களுக்கு ஆயுள் குறைவு.ஆண்மை குறைவு . ஆரோக்யம் குறைவு .குடும்ப நிம்மதி குறைவு


============

14 பிரச்னை இருக்கு.அதுக்கு தீர்வு காண்போம்னு சொன்னா அப்டி சொன்னதையே பிரச்னை ஆக்கி தீர்வைக்காண மாட்டான் நெட் தமிழன்


=============

15 நானும் ட்விட்டருக்கு பிரேக் விடப்போறேன்.இனிமே டெய்லி 8 மணி நேரம் மட்டும் தான் வருவேன்.மீதி 16 மணி நேரம் FBக்கு

==============

16 இந்த பூமி என்னை நிராகரிக்கும் முன் நீ என்னை நிராகரிப்பதன் காரணத்தை சொல்லிவிடு! நீ கிடைக்காவிட்டாலும் என் தவறு எது என்றாவது தெரியப்படுத்து!


=============


17 காதல் பரமபத விளையாட்டில் ஆண் எப்போதும் காதலியை ஏற்றி விடும் ஏணியாகவே இருப்பான்.பெண் எப்போதும் இறக்கி விடும் பாம்பாகவே இருப்பாள்


============

18 எங்கிருந்தாலும் வாழ்க என்பது ஆணின் வாழ்த்து .
என்னுடன் இருக்கும்போது மட்டும் வாழ்க! பிரிந்தால் வீழ்க!என்பது பெண்ணின் நினைப்பு================

19 போன்ல 1த்தன் சித்ராவை சித்துன்னு கூப்ட்டு கொஞ்சிட்டு இருக்கான்.நல்ல வேளை.சித்தி ன்னு கூப்டலை.உறவே மாறி இருக்கும்================

20 ஜாதி மல்லிகைப்பூ வாங்கும்போது கூட நல்ல உயர்ந்த ஜாதி மல்லியாத்தாங்கனு கேட்பாங்களோ பொண்ணுங்க


============

0 comments: