Thursday, August 06, 2026

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி-ஆகஸ்ட் 7,2026 ல் வெளியாக இருக்கும் தமிழ்ப்படங்கள் - ஒரு முன்னோட்டம்

 இந்த வாரம் வெள்ளிக்கிழமை மூன்று தமிழ்ப்படங்கள் வெளியாகின்றன.அவை

1 டி சி
2 ஜி டி என்
3 போட்டோகிராபர்



1 டி சி.  (ஆக்சன் திரில்லர்)

மாநகரம்,கைதி,விக்ரம், போன்ற வெற்றிப்படங்களில் இயக்குநராகக்களம் இறங்கிய. லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் முதல் படம்.


 வசந்த் ரவி,பாரதிராஜா நடித்த ராக்கி(2022), இயக்குநர் செல்வராகவன் நடித்த சாணிக்காயிதம்(2022),தனுஷ் நடித்த கேப்டன் மில்லர்(2014). ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் தான் இந்தப்படத்தின் இயக்குநர்.12 வருட இடைவெளிக்குப்பின் களம் இறங்குகிறார்.


நாயகனாக நடிக்கும் லோகேஷ் கனஜராஜூம் சரி,இயக்குநரான அருண் மாதேஸ்வரனும் சரி ,வன்முறைக்குபெயர் போனவர்கள்.இவர்கள் படங்களில் வன்முறை  தெறிக்கும்,ரத்த ஆறு ஓடும்.

ட்ரெய்லரைப்பார்த்தால் கதி கலங்குகிறது.ட்ரெய்லரிலிருந்து யூகிக்கும் கதை அமைப்பு.

நாயகி கமல் நடித்து மணிரத்னம் இயக்கிய நாயகன் படத்தில் வரும் நாயகி சரண்யா போல சிவப்பு விளக்குப்பகுதியை சேர்ந்தவர்.ஏழ்மை காரணமாக நாயகியின் பெற்றோரே விற்று விட்டனர்.போலீசிடம் மாட்டிக்கொள்ளும் நாயகியை நாயகன் காப்பாற்றுகிறார்.நாயகியைத்துரத்தும் ஒரு கும்பல்,அந்த போலீஸ் வில்லன் இவர்களைக்கொன்று குவித்து நாயகன்  ஜெயிப்பதுதான் கதை  மாதிரி தெரிகிறது.





ரசித்த வசனங்கள்


1 தெரிஞ்சவங்க கிட்டே எதுவும் சொல்ல முடியாது,தெரியாதவங்க கிட்டே எது வேணாலும் சொல்லலாம்.

எப்படி?

இனிமேல் தெரிஞ்சுக்கப்போறதில்லை என்ற தைரியம் தான்.

2 தப்பு செஞ்சா தட்டிக்கேட்க போலீஸ் வரனும்,ஆனா அந்த போலீசே தப்பு செஞ்சா யார் வர்றது!?

3 போலீசையே போட்டுத்தள்ளும் அளவு அவன் பெரிய ஆளா?

4 நீ இங்கே வர்றதுக்கு முன்னாடி என் உயிர் போகாது

அனிரூத் தான் இசை.சண்டைக்காட்சிகளில் பரத நாட்டியத்துக்கான பிஜி எம் போட்டிருக்கிறார்.3 நிமிட ட்ரெய்லரில் 10 வெட்டுக்குத்து ,நான்கு கெட்ட வார்த்தைகள்.

மென்மையான மனம் கொண்டவர்கள் ,கர்ப்பிணிப்பெண்கள் பட ட்ரெய்லரைப்பார்ப்பதையே தவிர்ப்பது நல்லது.

இந்தப்படத்தில் வாமிகா கோபி ,சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இருவரும் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள்.

இது சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பு என்பதால் மெயின் தியேட்டர்களை வளைத்து விடுவார்கள் என நம்பலாம்.





2 GDN (ஜி டி நாய்டு). பயோகிராபிக்கல்  ஹிஸ்டாரிக்கல் டிராமா

ராக்கெட்ரி என்ற சொந்தப்படம் எடுத்த மாதவனின் அடுத்த சொந்தப்படம் இது.இந்தியாவின் எடிசன் என்று போற்றப்படும் ஜி டி நாய்டு வின் வாழ்க்கை வரலாறைத்தான் படமாக எடுத்திருக்கிறார்.

1947 க்கு முன் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் பல புகழ் பெற்ற கண்டுபிடிபுகளின் தந்தை ஜி டி நாய்டு.சில காரணங்களால் ஆங்கிலேய அரசாங்கம்  அவரை எதிர்த்தது.அவற்றை மீறி அவர் எப்படித்தன் சாதனைகளை நிறைவேற்றினார் என்பது தான் மொத்த திரைக்கதையும்.


இதில் மாதவன் தான் நாயகன்.இயக்கம் கிருஷ்ணகுமார் . ராம்குமார்.தயாரிப்பு மாதவன்+ மாதவன் மனைவி சரிதா மாதவன்.இசை 96 பட  புகழ் கோவிந்த் வசந்தா .


ட்ரெய்லர் பார்க்கும்போது பிரம்மாண்டமாக இருக்கிறது.சத்யராஜ்,ஜெயராம்,மாதவன் மூவரின் கெட்டப்பும் ,நடிப்பும் வித்தியாசமாக இருக்கிறது.

பிரியாமணி ,துஷாரா  ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 இது.சுசி கணேசன் இயக்கத்தில் வெளி வந்த பைவ் ஸ்டார் படத்தில் நடித்த   கிருஷ்ணா தான். தனது முழுப்பெயரான கிருஷ்ணகுமார் என்ற பெயரில் களம் இறங்குகிறார்.

ரசித்த.  வசனங்கள்


1 அந்த ஆள் ஒரு பைத்தியம்.வயசான காலத்துல தன் சொந்த பில்டிங்கையே தீ வைத்துக்கொளுத்தியவர்.

2 சட்டத்துக்கு எதிர் கள்ள நோட்டு அடிச்சதாகவும் ,சொத்துக்களைப்பதுக்கியதாகவும் நாயுடு  மீது குற்றச்சாட்டு இருக்கு.

3.  நீங்க அநியாயமா அதிக வரி போட ஆரம்பிச்ச பின் தான் நாயுடு எதிர்த்தார்.அதுவரை வரியை ஒழுங்கா கட்டிட்டு தான் இருந்தார்.

 4 வெள்ளைக்காரன் தான் நம்ம எதிரி ,அவனை எதிர்த்து சண்டை  போடனும்னு பார்த்தா நம்ம ஊர்க்காரனே நமக்கு எதிரி போலயே?

5 ஆங்கிலேயன் - எங்கே வந்து யார் கிட்டே பேசிட்டு இருக்கீஙகன்னு புரியுதா?

ஜி டி நாயுடு - எந்த நாட்டில் வந்து யார் கிட்டே என்ன பேசிட்டு இருக்கீங்க? என்பதை கூடிய சீக்கிரம் புரிய வைக்கிறேன்.

6 இப்போது  ஜி டி நாயுடு இதுவரை தான் கண்டுபிடித்த அத்தனை கண்டுபிடிப்புகளையும் தீயிட்டுக்கொளுத்தப்போகிறார்.

7 மனசு சுத்தமானவன் சொல்றது பலிக்கும்.

8 வேட்டையாடும்போது வேட்டைக்காரன் இல்லாம ஒரு சிங்கம் அழுதுச்சுன்னா வீரத்தோட இலக்கணமும் மாறிடும்


ட்ரெய்லரைப்பார்க்கும்போது கமர்ஷியலாகவும் ஹிட் ஆகும்,விருதுகளையும் குவிக்கும் எனத்தெரிகிறது.



3 போட்டோகிராபர். சைக்கலாஜிக்கல் மிஸ்ட்ரி திரில்லர்

அறிமுக இயக்குநர் அஷ்ரப் கதாநாயகனாக நடித்து  இயக்கி இருக்கும் படம் இது .மதிகெட்டான் சோலை என்ற பிரபலமான வனபகுதியில் இருக்கும் மர்மங்களை வெளிக்கொணரும் கதை இது.

கமல் நடிப்பில் வெளிவந்த குணா படத்துக்கு மதிகெட்டான் சோலை என்று தான் முதலில் டைட்டில் வைத்தார்கள்.நாயகன் மனநிலை தவறியவன் என்பதைக் குறிக்கும் விதமாகத்தான் மதிகெட்டான் என்ற சொல்.சோலை என்பது அவன் இருக்கும் இடத்தைக்குறிப்பிடுவது.ஆனால் ரசிகர்கள் அந்த டைட்டிலை விரும்பாததால் குணா என டைட்டிலை மாற்றினார் கமல்.

நாயகியாக ஜனனி நடிக்கிறார்.ட்ரெய்லரைப்பார்க்கும்போது. ஒளிப்பதிவு ,லொக்கேஷன் இரண்டும் பிரமாதமாக இருக்கும் எனத்தோன்றுகிறது


ரசித்த வசனங்கள்


1 எல்லா போட்டோகிராபருக்கும் வாழ்க்கைல ஒரு பெஸ்ட் க்ளிக் இருக்கும்.அந்த ஒரு   க்ளிக்   ஒரு சரித்திரத்தை சொல்லும்

2 உசுரு பெருசா?தங்கம் பெருசா?

3 கண் இமைக்கும் நேரத்துல காடு தன் முகத்தை மாத்திக்கிட்டே இருக்கும்.

4 காட்டுக்குன்னு ஒரு சுடுகாடு கிடையாது.எந்த உசுரு வாழனும்?எந்த உசுரு சாகனும் ?என்பதை இந்தக்காடுதான் முடிவு செய்யும்.

5 காட்டைப்பொறுத்தவரை இங்கே கனுசன் தான் பேய்.

6 காட்டில் சாகனும்கறதுதான் உன் குறிக்கோளா?

7 கடவுள் என்னைக்காப்பாற்றுவாரா?இல்லை,என்னைக்காப்பாற்றுபவர்தான் கடவுளா?


பட ட்ரெய்லரைப்பார்க்கும்போது ஒரு மலையாளப்படம் பார்ப்பது போல் உணர்வு வருகிறது.நிச்சயம் ஹிட் அடிக்கும்.


இந்த வாரம் போட்டிக்குக்களம் இறங்கி இருக்கும் மூன்று படங்களுமே ரசிகர்கள் வரவேற்பைப்பெறும் வித்தியாசமான படங்களாக இருக்கும் என்பது என் கணிப்பு.