Monday, June 01, 2015

மான் விழி லவ்வரும் கரகாட்டக்காரனும்

1    முகூர்த்தம் 7 மணிக்கு.நீங்க 8 மணிக்கு வந்தாப்போதும்.

சு சாமி = ஏன்?
தாலி கட்றப்ப குழப்பம் வந்துடக்கூடாதில்ல?============

2 ஜட்ஜ் = மணமகளுக்கு தாலி கட்டி கலாட்டா பண்ணீங்களா?
கைதி = கலாட்டா பண்ணது நிஜம்.தாலி கட்ற கெட்ட பழக்கம் எங்க பரம்பரைக்கே இல்லீங்கோ

===========


3 டியர்.என் கண்ணுக்குக்கீழ் ஏதாவது கரு வளையம் தெரியுதா?
இல்ல.உனக்கு உன் தங்கைக்கு னு உன் சர்க்கிள் ல யாருக்கும் பிளாக் சர்க்கிள் இல்ல


=============


4 கல்யாண மாலையில்

அரசு வேலையில்  உள்ள உலகம் பூரா  டூர்  அடிக்கும் ஜாலி  மாப்ளை  தேவை 

 ஓ. அதுக்கு  நீங்க  மோடியைத்தான் கட்டிக்கனும்


==============


5 ஜட்ஜ் = எதுக்காக உன்  காதலனை ஊட்டி ல  இருந்து  தள்ளி  கொலை  செஞ்சே?
 புஷ்பா = ஆசையா  புஷ்-னு கூப்பிட்டாரு, கட்டளை வாக்கியம்னு நினைச்ட்டேன்===============


6 டியர், உனது நினைவுகளை துவைத்துவிடவே எண்ணினேன்  , முடியல

 ஏம்மா, உன் துணியையே 10  நாளா  துவைக்காம  இருக்கே


===============


இந்தி யா வந்தா திணற திணற பிரியாணி செய்து போடணும் .


தமிழா,இங்க்லீஷா வந்தா?==============

8 டியர், என்  உடல்  அழகைப்பார்த்தா  என்னை காதலிச்சீங்க?

அதான்  8 கஜம்  சேலைல  இருக்கியே, எப்டித்தெரியும்?  வேற யாரும் சிக்கலை 


=================


ஜட்ஜ் = எதுக்காக ஆண்டவன் மீது ஆணையிட்டு சாட்சி சொல்றீங்க?


கைதி = சப்போஸ் ஏதாவது தப்புன்னா பாதிப்பு ஆண்டவனுக்குத்தானே?


==========

10 மிஸ்!,உங்களுக்கு போன் பண்ணா ஆப் னு வருதே?
ஆபீஸ்லயே வெச்ட்டு.வந்தா.OFFனு தான் வரும்.OFFICEன் சுருக் OF

==============

11 சார்."எமக்கட்டை"ன்னு துறுதுறுன்னு இருக்க சின்னப் பிள்ளைங்கள சொல்லுவாங்களா? மதுரைப் பக்கம்,


தெரிலீங்ளே.நமீதா வகையறாவை செம கட்டை ம்போம்


==============

12 கடவுளே! ஏன் கலக்கமா இருக்கீங்க?


நேர்மையா ஆட்சி நடத்துவேன்.இது ஆண்டவன் மீது ஆணைனு ஆளாளுக்கு என் தலையை உருட்றாங்க


===========

13 எனக்கு அடிக்கடி வீட்ல இருந்து மட்டும் கால் வரும்.


ஓஹோ! அப்போ நீங்க வீட்லயே இருக்க மாட்டீங்களா?


==============

14 மேடம்.தூங்காவனம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பத்தி கேட்டா எதும் பேச மாட்டேங்கறீங்களே?
த்ரிஷாவின் மம்மி = லிப் கிஸ்னு சொல்லி கடிச்சு வெச்ட்டாராம்
==============

15 என் படத்தோட கதையை தயாரிப்பாளருக்கு நான் சொல்லவே இல்லை.


ஆடியன்சுக்கே கடைசி வரை சொல்லலியே?==============

16 எனக்கு தந்த விருதை ட்விட்டர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.


ஓ.குட்.சம்பளத்தை?
அஸ்கு புஷ்கு.அது எனக்குத்தான்


===============


17 டாக்டர் ,கோபம் வரும் போதல்லாம் சாப்ட தோணுது இது என்ன வியாதி?

தெரியலையேம்மா, ஆனா ரொம்ப செலவு வைக்கும்வியாதி,ஹோட்டல் ஓனராப்பாத்து கட்டிக்கோ====================

18  எதயோ மறந்துட்டோம்னு ரொம்ப நேரமா யோசிச்சு பாத்தா சோறு திங்க மறந்தது ஞாவகத்துக்கு வருது :-/"
ஏம்மா."திங்க"கிழமையே இப்டியா?


============


19 டியர், என் மொபைல் நெம்பரை ஏன் கரகாட்டக்காரன் -னு சேவ் பண்ணி வெச்சிருக்கே?
இந்த மான் எந்தன் சொந்த மான்-னு சிம்பாலிக்கா சொல்ல # மான்விழிலவர்


================


20 சார்! எனக்கு ஏன் இன்க்ரீமெண்ட் இல்ல?
உங்களுக்குத்தான் தம் அடிக்கும், பழக்கமே இல்லையே? எப்படி “ஊதிய” உயர்வு கேட்க முடியும்?


=================

0 comments: