Friday, March 20, 2015

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 20 /3// 2015 ) 11 படங்கள் முன்னோட்ட பார்வை

1   வலியவன் - சண்டிகா

2 கள்ளப்படம் - அப்ராமி

3 திலகர் - அன்னபூரணி


4 அகத்திணை

5பட்ற

6  மூச்


7  இரவும்  பகலும் - சீனிவாசா


ஆயா வடை சுட்ட கதை -

9 நான் சத்ரியன்
10 கடவுள் பாதி மிருகம் பாதி


11 வெத்துவேட்டு -தெவி அபிராமி
நன்றி - தமிழ்  சினி டாக்

1   வலியவன். -   எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் ஜெய் மற்றும் ஆன்ட்ரியா ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கும் படம் வலியவன்.
சமீபத்தில் தான் இப்படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. ஆக்ஷன் கலந்த ரொமான்ஸ் படமாக உருவாகி வரும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இந்த வாரத்தில் தொடங்க இருக்கிறது.
இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ஜெய் மற்றும் ஆன்ட்ரியாவின் ரொமான்ஸ் காட்சிகளை படமாக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
மேலும் இந்த படத்தை எஸ்.கே. ஸ்டுடியோஸ் தயாரிக்கின்றனர்.2   கள்ளப்படம் -  இறைவன் பிலிம்ஸ் சார்பில் ஆனந்த் பொன்னிறைவன் தயாரிக்கும் படத்துக்கு கள்ளப்படம் என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தை ஜெ.வடிவேல் இயக்குகிறார். இவர் மிஷ்கினிடம் உதவியாளராக பணியாற்றியவர். படம் பற்றி அவர் சொல்கிறார்.

சினிமாவில் போராடும் நான்கு இளைஞர்களின் கதையே இப்படம். ரஜினி, கமலை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற அவர்களின் கனவும் அதற்காக சந்திக்கிற போராட்டங்களும் திரைக்கதை யாக்கப்பட்டு உள்ளது. இப்படத்துக்கு இசையமைக்கும் கே. ஒளிப்பதிவு செய்யும் ஸ்ரீராம் சந்தோஷ், எடிட்டிங் காகின் என இப்படத்தில் பணியாற்றுபவர்களே நடித்துள்ளனர். நாயகியாக லட்சுமி பிரியா வருகிறார். ஆடுகளம் நரேன், சிங்கம்புலி செந்தில், செப்தாமு போன்றோரும் நடித்துள்ளனர். சினிமா வாய்ப்புக்கு அலைந்து அடிவாரத்தில் உழவும் பலரின் வேதனை வரிகளை படத்தில் காட்டியுள்ளோம். இதில் பலரது போராட்ட அனுபவங்களும் இருக்கும்.

சென்னை, திருவள்ளூர், தண்டலம், மூணார் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இயக்குனர் பாலா படத்தை பார்த்து விட்டு இது கள்ளப்படம் அல்ல நல்லப்படம் என்றார். பாடல், மிஷ்கின், மணி அமுதன்.
தமிழ் சினிமா சில நாட்களாக சிறிய பட்ஜெட் நல்ல படங்களின் வருகையால் சிறப்பாகவே உள்ளது. அந்த வகையில் தரமான இயக்குனர் மிஷ்கினின் உதவி இயக்குனர் வடிவேல் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் கள்ளப்படம்.
சினிமாவில் மெட்டா என்று ஒரு வகை திரைக்கதை ஜாலம் உள்ளது. அப்படியென்றால், சினிமாவிற்குள் சினிமாவை பற்றி எடுக்கும் ஒரு வகை ஜானர் தான் இந்த மெட்டா பிலிம். உதாரணமாக வெள்ளித்திரை, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய படங்களை சொல்லலாம். அந்த வகை கதையம்சம் கொண்டது தான் இந்த படமும்.a

5  ஆயா வடை சுட்ட கதை-முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் படம் ‘ஆயா வடை சுட்ட கதை’. இந்தப் படத்தை புதுமுக இயக்குனர் பனிந்ரா.
சிறுவயதில் நாம் எல்லோரும் ஆயாவிடம் வடையை திருடி சென்ற காக்கையிடம் இருந்து ஒரு நரி அந்த வடையை தந்திரமாக எப்படி பறித்தது என்பதை நாம் படித்திருப்போம். அந்த கதையை சற்று காமெடி கலந்து காதலுடன் சொல்லப் போகிறார்கள்.
100 குடும்பங்கள் இருக்கும் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு பால், பேப்பர் மற்றும் தண்ணி கேன் சப்ளை செய்பவர்கள் இந்த 100 குடும்பங்களையும் தெரிந்து வைத்திருப்பார்கள்.


இந்த கதையில் யார் ஆயா, யார் காக்கா, நரி என்பதை சஸ்பென்ஸாக வைத்துள்ளோம். படம் பார்த்தால் தான் புரியும் என்கிறார் இயக்குனர் பனிந்ரா. புதுமுகங்கள் அவிடேஜ் மற்றும் சுபர்ணா நடிக்கும் இந்த படத்தின் அத்தனை கலைஞர்களும் புதுமுகங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் – மார்ச் 20, 2015
இன்று 2015 மார்ச் 20, வெள்ளிக்கிழமையன்று 9 நேரடி தமிழ்ப் படங்கள் ரிலீஸாகியுள்ளன.
1. கள்ளப்படம்
10842235_10204597834480605_1703040182192755376_o
இயக்குநர் மிஷ்கினின் பிரதம சீடரான வடிவேல் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் இயக்குநர் வடிவேல், லட்சுமி பிரியா, ஸ்ரீராம் சந்தோஷ், காகின் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.  ஸ்ரீராம் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். காஜின் படத் தொகுப்பு செய்திருக்கிறார். கே இசையமைத்திருக்கிறார். ஆனந்த் பொன்னிரவன் தயாரித்திருக்கிறார்.
2. பட்ற
Patra_Movie_Posters_1
‘பட்ற’ என்ற தலைப்பில் ஜி.கே.சினிமாஸ் என்ற புதிய நிறுவனத்தின் சார்பில் வீ.காந்திகுமார் தயாரிக்கும் புதிய படம்  இதில் மிதுன் தேவ் ஹீரோவாகவும், வைதேகி ஹீரோயினாகவும் நடித்திருக்கின்றனர். மற்றும் சாம் பால், ரேணிகுண்டா கணேஷ். புலிபாண்டி, ஆதேஷ் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். சுனோஜ் வேலாயுதன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரூபன் எடிட்டிங் செய்திருக்கிறார். சாமி, லோகு இருவரும் கலைத்துறையை கவனித்திருக்கின்றனர். மிரட்டல் செல்வம் தனது சண்டை காட்சிகளால் மிரட்டியிருக்கிறார். யுகபாரதி, கெளதம் எழுதிய பாடல்களுக்கு ஸ்ரீகிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். ஷங்கர் மகாதேவன், ஹரிச்சரண், முகேஷ், மாளவிகா, நிவாஸ், ரீட்டா, மான்ஸி, கிருஷ்ணா, சந்தோஷ், பிக்னிக் ஆகியோர் பாடியிருக்கின்றனர். எழுதி, இயக்கியிருக்கிறார் ஜெயந்தன்.
3. ஆயா வட சுட்ட கதை
aayaa vada sutta kathai-poster
ஸ்டுடியோ 9 சுரேஷ் மற்றும் பிக்சல் ஃபிலிம்ஸ் புரோடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘ஆயா வட சுட்ட கதை.’ இதில் அவிட்டி என்பவர் ஹீரோவாக அறிமுகமாகிறார். சுபுர்ணா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் துரைப்பாண்டி, ரங்கபாஷ்யம் மற்றும் பல புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – எஸ்.பி.பாலாஜி. வி.விஜயன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். முகமது இலியாஸ் கலை இயக்குநர். திரில்லர் முகேஷ் சண்டை பயிற்சியாளர். கோபி நடனப் பயிற்சியை செய்துள்ளார். சமீர்-சிவா இருவரும் இசையமைத்திருக்கிறாகள். வசந்த்-நவின் பாடல்களை எழுதியுள்ளனர். வி.பனீந்திரா எழுதி, இயக்கியிருக்கிறார்.
4. திலகர்
thilagar-movie-posters-3
Finger Print Pictures சார்பில் மதியழகன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். இதில் கிஷோர், அனுமோல், மிருதுளா, துருவா, பூ ராம், நீத்து சந்திரா ஆகியோர் நடித்திருக்கின்றனர். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கண்ணன் இசையமைத்திருக்கிறார். கோலா பாஸ்கர் எடிட்டிங் செய்திருக்கிறார். கலை இயக்கத்தை ஆர்.கே.விஜயமுருகன் செய்திருக்கிறார். ஜி.பெருமாள் பிள்ளை எழுதி, இயக்கியிருக்கிறார்.
5. காலக்கட்டம்
kalakattam-posters- 3
ஜெய் இந்திரா முவீஸ் சார்பில் ஏ.பி.ஆர். தயாரிப்பில் ஐ. உமாசேகர் இணைத் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் இது.  பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்த பவன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். மற்றொரு நாயகனாக கோவிந்த் அறிமுகமாகிறார். கதாநாயகியாக சத்யஸ்ரீ அறிமுகமாகியுள்ளார். மேலும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், கானா பாலா, உமா, ரஞ்சன், கிங்காங், ஆனந்தி, கொட்டாங்குச்சி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – பி.எம்.எழில் அரசன், இசை – ஏ.ஆர்.மகேந்திரன், படத் தொகுப்பு – கே.சங்கர், நடனம் – விஜி சதீஷ், சண்டை பயிற்சி – டான் அசோக், தயாரிப்பு மேற்பார்வை – ராஜேந்திரன், இணை தயாரிப்பு – ஐ.உமாசேகர், தயாரிப்பு – ஏ.பி.ஆர்., கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – கே.பாஸ்கர்.
6. வெத்துவேட்டு
vethuvettu
விபின் மூவி பட நிறுவனம் சார்பாக எஸ்.குமார், A.ராமசாமி, D.சரவண மாணிக்கம், R.மூர்த்தி, A.லட்சுமணன் ஆகியோர் இணைந்து  தயாரித்திருக்கிறார்கள்.
ஹரீஷ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக ‘விழா’ பட நாயகி மாளவிகா மேனன் நடித்திருக்கிறார். மற்றும் இளவரசு, கஞ்சா கருப்பு, ‘ஆடுகளம்’ நரேன், மீரா கிருஷ்ணன், சுஜாதா, தென்னவன், ஸ்ரீரஞ்சனி, பிளாக் பாண்டி, கோபால், மணி, மாக்கான், கிரேன் மனோகர், போண்டாமணி, வெங்கல்ராவ், சின்ன சில்க் உமா, நந்தகுமார், ‘கம்பம்’ மீனா, நாஞ்சில் சரண் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு    -   காசி, இசை – தாஜ்நூர், பாடல்கள் – யுகபாரதி, கலை  -  உமாசங்கர்,  நடனம்   -  தினா, ஸ்டண்ட்    -  ஆக்சன் பிரகாஷ், தயாரிப்பு மேற்பார்வை -  A.V.பழனிச்சாமி, இணை தயாரிப்பு  -  A.லட்சுமணன், தயாரிப்பு  -   எஸ்.குமார், A.ராமசாமி, D.சரவணமாணிக்கம், R.மூர்த்தி, A.லட்சுமணன், கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் – எஸ்.மணிபாரதி.
7. அகத்திணை
agathinai
ஸ்ரீஹரிணி பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் அகத்திணை. இதில் நாயகனாக வர்மா அறிமுகமாகிறார். இவர் சாப்ட்வேர் என்ஜினீயர். லண்டனில் டெலிவிஷன் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். நாயகியாக மகிமா நடிக்கிறார். ஆடுகளம் நரேன், ஜி.எம்.குமார், ஜார்ஜ், நளினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி யு.பி.மருது இயக்குகிறார்.
ஒளிப்பதிவு: அகிலன், இசை: மரியா மனோகர், எடிட்டிங்: சசிகுமார், ஸ்டண்ட்: மிராக்கில் மைக்கேல். நடனம்: எஸ்.எஸ்.பாலாஜி.
8. கடவுள் பாதி மிருகம் பாதி
kadavul-paathi-mirugam-paathi-movie-posters-3
செலிப்ஸ் அண்ட் ரெட் கார்பட் நிறுவனம் சார்பில் ராஜ் தயாரித்து இயக்கும் படத்துக்கு கடவுள் பாதி மிருகம் பாதி என பெயரிடப்பட்டு உள்ளது. இதில் ராஜ் முக்கிய கேரக்டரிலும் நடிக்கிறார். அபிஷேக் இளம் காதலனாக வருகிறார். இவர் ஆர்யா தயாரிக்கும் படித்துறை படத்தின் நாயகன். மலையாளத்திலும் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஸ்வேதா விஜய் நடிக்கிறார்.மைனா சேதுவும் முக்கிய கேரக்டரில் வருகிறார். ஒளிப்பதிவு: கிஷோர்மணி, இசை: ராகுல்ராஜ், பாடல்: கருணாகரன்.
9. இரவும் பகலும் வரும்
iravum-pagalum-varum-movie-poster
ஆர்.எஸ்.எஸ்.எஸ். பிக்சர்ஸ் எஸ். தணிகைவேல் வழங்க ஸ்கை டாட் பிலிம்ஸ் சார்பில் பாலசுப்ரமணிய பெரியசாமி தயாரித்திருக்கும் படம் இரவும் பகலும் வரும்.
இதில் நாயகனாக ‘அங்காடி தெரு’ மகேஷ், நாயகியாக அனன்யா நடிக்கின்றனர். ஏ.வெங்கடேஷ், நண்டு ஜெகன், சஞ்சனா சிங், யுவராணி, சாமிநாதன் ஷகிலா ஆகியோரும் முக்கிய கேரக்டரில் வருகிறார்கள். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி பாலா ஸ்ரீராம் இயக்குகிறார்.அ
0 comments: