Friday, March 06, 2015

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 6 /3// 2015 ) 11 படங்கள் முன்னோட்ட பார்வை

1 எனக்குள் ஒருவன்

2 தொப்பி


3ரொம்ப நல்லவன்டா நீ
4 என் வழி தனி வழி
5 WILD CARD
6 இரவும் பகலும்

7 முரட்டுக்கைதி
8 ஆயா வடை சுட்ட கதை #6/3/15

9 சேர்ந்து போலாமா?


10 ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை


11 டர்ட்டி பாலிடிக்ஸ்


1 எனக்குள் ஒருவன் - பீட்சா, சூது கவ்வும், அட்டகத்தி, வில்லா, தெகிடி உள்ளிட்ட படங்களை எடுத்த திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரிக்கும் படம் எனக்குள் ஒருவன். இதில் நாயகனாக சித்தார்த், நாயகியாக தீபா சன்னிதி நடிக்கின்றனர். நரேன், சிறிஷ்டி டாங்கே, மகாதேவன், யோக்ஜேபி, மகேஷ், அஜய்ரத்னம் ஆகியோரும் நடிக்கின்றனர்.


இப்படத்தை பிரசாத் ராமர் இயக்குகிறார். படம் பற்றி சி.வி.குமார் பிரசாத்ராமர் ஆகியோர் கூறியதாவது:-


திரில்லர், காதல், காமெடி படமாக தயாராகிறது. நாயகன் சித்தார்த் தியேட்டரில் டிக்கெட் கிழிப்பவராக வருகிறார். அவருக்கு இரவில் தூக்கம் வருவது இல்லை. நல்ல தூக்கத்துக்காக லூசியா மாத்திரை சாப்பிடுகிறார். அப்போது தூக்கத்தில் கனவுகள் வருகிறது. அந்த கனவு உலகத்தில் வேறு மனிதனாக வாழ்கிறார். ஒரு கட்டத்தில் நிஜ வாழ்வுக்கும் கனவு வாழ்வுக்கும் இடையே எது நிஜம் எது கனவு என்ற குழப்ப நிலை வருகிறது. இதனால் வரும் பிரச்சினைகளே கதை. சென்னையில் பெரும் பகுதி படப்பிடிப்பு நடந்துள்ளது. மார்ச் மாதம் படம் ரிலீசாகிறது.


இசை: சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு: கோபி அமர்நாத், எடிட்டிங்: லியோ ஜான்பால்.


இவ்வாறு கூறினார்கள். 2 தொப்பி - தொப்பி திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகி மக்களின் மனதினைக் கவரும் என்று அப்படத்தின் தயாரிப்பாளார் தெரிவித்துள்ளார்.
"மதுரை சம்பவம்", வெளிவர இருக்கும் "சிவப்பு எனக்கு பிடிக்கும்" ஆகிய படங்களை இயக்கிய யுரேகாதான் இந்தத் தொப்பி படத்தையும் இயக்கியுள்ளார்.குரங்கணி காட்டின் பசுமையான பின்னணியில் படமாக்கப்பட்டுள்ள தொப்பி காவலனாக வேண்டும் என்ற வேட்கையுடன் உள்ள ஒரு இளைஞனை பற்றிய கதை.
குற்றப் பின்னணியை களமாகவும், கலாச்சாரமாகவும் கொண்ட அந்த இளைஞனுக்கு அவனது லட்சியக் கனவை அடைய அதே குற்றப் பின்னணி தடையாக இருக்கிறது என்பதுதான் தொப்பியின் மூலக் கதைக் கரு.
வைரமுத்துவின் பாடல்கள், மற்றும் மைனா புகழ் எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு படத்தின் தரத்துக்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறதாம். ராயல் ஸ்கிரீன்ஸ் என்னும் புதிய நிறுவனத்தின் சார்பில் எஸ். பரமராஜ் தயாரித்துள்ளார் இப்படத்தினை.
தொப்பி திரைப்படத்தின் மூலமாக மலையாள கரையின் புது வரவாக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்துள்ளார் புதுமுக கதாநாயகி ரக்‌ஷா ராஜ்.
இயக்குநர் யுரேகாவின் இயக்கத்தில் ராயல் ஸ்க்ரீன்ஸ் தயாரிக்கும் திரைப்படம் "தொப்பி". இத்திரைப்படத்தில் அறிமுகமாகும் ரக்‌ஷா ராஜ் பரத நாட்டியம், குச்சுப்புடி, மோகினி ஆட்டம், மற்றும் பல நடன கலைகளில் சிறுவயதில் இருந்தே பயிற்சி பெற்றவர்.
தொப்பி படத்தின் கதாநாயகனாக தொகுப்பாளரான முரளி ராம் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான் பவர் ஸ்டார் தன்னுடைய சர்ச்சை பேச்சால் பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகளை சம்பாதித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
3ரொம்ப நல்லவன்டா நீ-மாருதம் படத்தை இயக்கியிருக்கும் ஏ.வெங்கடேஷ் இயக்கியிருக்கும் இன்னொரு படம், ரொம்ப நல்லவன்டா நீ. சின்னத்திரை மற்றும் எப்எம்மில் ரசிகர்களை கவர்ந்த மிர்ச்சி செந்தில் இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். 
பொதுவாக ஏ.வெங்கடேஷ் படம் என்றால் ஆக்ஷன் அடிதடி என்று பொறி பறக்கும். மாறாக இந்தப் படத்தில் காமெடி த்ரில்லர் என்று புதுரூட் பிடித்திருக்கிறார். 
ஷுட்டிங் நடக்கும் போது, அதில் நடிப்பவர்களே நடிப்பு என்பதை மீறி வாய்விட்டு சிரித்த சம்பவங்கள் நடந்திருக்கிறது. அந்தளவு காமெடி செமையாக வொர்க் அவுட்டாகியுள்ளது என்றார் செந்தில். செந்திருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் புதுமுகம் ஸ்ருதி பாலா.
இவர்கள் தவிர ரோபோ சங்கர்,  வெண்ணிறாடை மூர்த்தி, ஜான் விஜய் என நகைச்சுவை பட்டாளமே இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
படத்தைப் பார்த்த சென்சார் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் தந்ததோடு படக்குழுவை பாராட்டவும் செய்ததாம்.4 என் வழி தனி வழி -எல்லாம் அவன் செயல்’, ‘அவன் இவன்’ உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஆர்.கே
தற்போது இவர் ‘என் வழி தனி வழி’ என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிப்பவர் பூனம் கவுர். மற்றும் இவர்களுடன் மீனாட்சி தீக்ஷித், ரோஜா, சீதா, தலைவாசல் விஜய், இளவரசு, விவேக், சம்பத், ஆஷிஷ் வித்யார்த்தி, ராதாரவி, விசு, பரோட்டா சூரி ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தை ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே ஆர்.கே. நடித்த எல்லாம் அவன் செயல் படத்தை இயக்கியிருக்கிறார். படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. முதலில் படத்தின் இசையை விஜய் அவரது வீட்டில் வைத்து வெளியிட்டார். அதன்பிறகு என் வழி தனி வழி படத்திற்கான விழா சென்னை வடபழனியிலுள்ள ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடைபெற்றது. அப்போது நடிகர் ஆர்.கே பேசும் போது” என் வழி தனி வழி’ இது ஒரு போலீஸ் அதிகாரி பற்றிய விறுவிறு கதை. இப்படம் ஜனவரி 23ல் வெளியாகிறது.
படத்தில் பாடல்களுக்கு எனக்கு ஆட வரவில்லை, சுமாராகத்தான் ஆடியுள்ளேன். ஆட ஆட அது சரியாக வருமென்று நம்புகிறேன். 2015–ல் மூன்று படங்கள் தயாரிக்க முடிவு செய்துள்ளேன். இதே படக்குழுவைக் கொண்டு அடுத்து ‘வைகை எக்ஸ்பிரஸ்’ என்கிற  படம் எடுக்க இருக்கிறோம். பிப்ரவரியில் படப்பிடிப்புக்குச் செல்கிறோம். இந்த ’என் வழி தனி வழி’ படம் எங்கள் முந்தைய ‘எல்லாம் அவன் செயல்’ படத்தைப் போல பத்து மடங்கு நன்றாக வருமென்று நினைக்கிறேன்” என்று கூறினார்.


5  ஆயா வடை சுட்ட கதை-முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் படம் ‘ஆயா வடை சுட்ட கதை’. இந்தப் படத்தை புதுமுக இயக்குனர் பனிந்ரா.
சிறுவயதில் நாம் எல்லோரும் ஆயாவிடம் வடையை திருடி சென்ற காக்கையிடம் இருந்து ஒரு நரி அந்த வடையை தந்திரமாக எப்படி பறித்தது என்பதை நாம் படித்திருப்போம். அந்த கதையை சற்று காமெடி கலந்து காதலுடன் சொல்லப் போகிறார்கள்.
100 குடும்பங்கள் இருக்கும் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு பால், பேப்பர் மற்றும் தண்ணி கேன் சப்ளை செய்பவர்கள் இந்த 100 குடும்பங்களையும் தெரிந்து வைத்திருப்பார்கள்.
இந்த கதையில் யார் ஆயா, யார் காக்கா, நரி என்பதை சஸ்பென்ஸாக வைத்துள்ளோம். படம் பார்த்தால் தான் புரியும் என்கிறார் இயக்குனர் பனிந்ரா. புதுமுகங்கள் அவிடேஜ் மற்றும் சுபர்ணா நடிக்கும் இந்த படத்தின் அத்தனை கலைஞர்களும் புதுமுகங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


6  முரட்டுக்கைதி- இது ஏதோ தெலுங்கு டப்பிங் படம் போல

7  இரவும் பகலும் வரும் - ஆர்எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் ஏ.தணிகை வேல் வழங்க ஸ்கை டாட் பிக்சர்ஸ் சார்பாக பாலசுப்ரமணியம் பெரியசாமி தயாரிக்கும் படம் ‘இரவும் பகலும் வரும்’. பால ஸ்ரீராம் இயக்கும் இப்படத்திற்கு தினா இசையமைக்கிறார். ‘அங்காடித் தெரு’ மகேஷ், அனன்யா, ஏ.வெங்கடேஷ், ஜெகன், சாமிநாதன், யுவராணி, சஞ்சனா சிங், ஷகிலா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் இயக்குனர் பால ஸ்ரீராம், பிரபல இயக்குனர் ஏ.வெங்கடேஷிடம் உதவி இயக்குனராகப் பல படங்களில் பணியாற்றியவர்.
படத்தைப் பற்றி இயக்குனர் பால ஸ்ரீராம் கூறுகையில்,
“பொறியியல் படிக்கும் ஒரு கல்லூரி மாணவன், எல்லோரும் மதிக்கும் வகையில் நல்ல முறையில் நடந்து கொள்ளும் நல்ல பண்புகளை கொண்டவன். காலையில் கல்லூரிக்கு செல்லும் கதாநாயகன், இரவில் மட்டும் திருடனாய் உலாவுகிறான். அவன் ஏன் திருடன் ஆனான்? எதற்காகத் திருடுகிறான் என்பதே ‘இரவும் பகலும் வரும்’ படத்தின் கதை.

எனது குரு ஏ.வெங்கடேஷ் எனது முதல் படத்திலேயே நடிக்கப் பெரிதும் ஒத்துழைப்பு கொடுத்தார். படத்தின் கதாநாயகி அனன்யாவிடம் கதையை சொல்லி முடித்த கனத்திலேயே 1 ரூபாயை முன் தொகையாகப் பெற்றுக் கொண்டு படத்தில் நடிக்க சம்மதித்து விட்டார்,” என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் இயக்குனர் பால ஸ்ரீராம்.
இப்படத்தின் படப்பிடிப்பு  நாமக்கல், தொட்டியத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி, சென்னையின் முக்கிய இடங்கள் என சுமார் 50 நாட்கள் நடைபெற்றுள்ளது. கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தற்கு தினா இசையமைக்கிறார்.

8 WILD CARD- Nick Wild (Jason Statham) is a Las Vegas bodyguard with lethal professional skills and a personal gambling problem. When a friend is beaten by a sadistic thug, Nick strikes back, only to find out the thug is the son of a powerful mob boss. Suddenly Nick is plunged into the criminal underworld, chased by enforcers and wanted by the mob. Having raised the stakes, Nick has one last play to change his fortunes...and this time, it's all or nothing. From two-time Academy® Award-winning writer William Goldman (Best Original Screenplay, Butch Cassidy and the Sundance Kid, 1969; Best Adapted Screenplay, All the President's Men, 1976)

சேர்ந்து போலாமா?’.-மலையாளத்தில் பல படங்களை இயக்கிய அனில் தமிழில் இயக்கும் முதல் படம் ‘சேர்ந்து போலாமா?’.
இதில் நாயகனாக வினய், நாயகியாக மதுரிமா நடிக்கின்றனர். இவர்களுடன் ‘தலைவாசல்’ விஜய், தம்பி ராமையா, நந்து உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
இதன் படப்பிடிப்பு முழுக்க முழுக்க நியூசிலாந்தில் நடக்கிறது. இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட்டை ரவி மாத்யூ எழுதியிருக்க, சஞீவ் சங்கர் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தை ‘ஐஸ்வர்யா எண்டர்டெய்ன்மெண்ட்’ நிறுவனம் சார்பில் சசி நம்பீசன் தயாரிக்கிறார். இது ஒரு த்ரில்லர் சப்ஜெட் மூவி.


10 ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை -சினிமா டூ ஹோம் (சிடூஎச்) திட்டத்தை பிப்.15 ம் தேதி திரைப்படத்துறையினர் கலந்து கொள்ளும் விழாவாக நடத்தப் போவதாக இயக்குநர் சேரன் கூறியுள்ளார்.
'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை' திரைப்படத்தை இயக்கி, படத்தை ‘சிடூஎச்’ திட்டத்தின் மூலம் முதல் வெளியீட்டு படமாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தார், சேரன்.
இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அறிவுறுத்தலின் பேரில் இந்தத் திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக நேற்று சேரன் அறிவித்தார்.
மேலும், திரைப்படத் துறையின் ஒட்டு மொத்த ஆதரவைப் பெற்று ‘சிடூஎச்’ திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளார். இது குறித்து சேரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
சினிமா டூ ஹோம் திட்டத்திற்கு தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஆதரவு தெரி வித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக படங்களை திரையிட முடியாத தயாரிப்பாளர்கள் எங்களுடன் சேர்த்து படத்தை ரிலீஸ் செய்யவும் தயாராகி வருகிறார்கள். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சினிமா டூ ஹோம் திட்டத்தின் முதல் வெளியீட்டை சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடத்தலாம் என்றும், இதில் தமிழ்த் திரைப்படத் துறையைச் சார்ந்த முக்கிய பிரபலங்களை கலந்து கொள்ளச் செய்யலாம் என்றும் கூறியுள்ளது.
தயாரிப்பாளர் சங்கத்தின் ஆதரவு கிடைக்கும்போது சினிமா டூ ஹோம் திட்டத்தில் பல பெரிய படங்கள் வெளியாக வாய்ப்புகள் உள்ளன. அதனால் இந்த திட்டத்தில் பணியாற்றும் விநியோகஸ்தர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் நல்ல பலன் கிடைக்கும்.
எனவே, தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைப்படி திட்டத்தை பதினைந்து நாட்கள் தள்ளி வைத்திருக்கிறோம். வருகிற 15-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் திரைத்துறையினர் கலந்து கொள்ளும் பெரிய விழாவாக நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.
இவ்வாறு சேரன் தெரிவித்தார்.

நித்யா மேனன் நடிப்பில் ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கையை தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் சேரனே இயக்கி தயாரித்தார். எப்போதோ வெளியாக வேண்டிய படம் வியாபார சிக்கல் காரணமாக இன்னும் வெளிவராமல் உள்ளது. இந்தப் படத்தை தனது இயக்குனர் நண்பர்களுக்கு திரையிட்டு காட்டி வருகிறார் சேரன். பிரபல இயக்குனர் சமுத்திரகனியும் படத்தைப் பார்த்தார். அது அவரது நினைவுகளை கிளறிவிட்டது.
சமுத்திரகனி சினிமாவில் போராடிக் கொண்டிருந்த நேரத்தில் அவருக்கு ஆதரவு அளித்து, தங்க இடம் தந்து, உணவளித்தவர் குருசாமி என்ற அவரது நண்பர். சமுத்திரகனியை உற்சாகப்படுத்தி சினிமாவில் சேர வைத்ததே குருசாமிதானாம். சமுத்திரகனி இன்று இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என வெற்றிகரமாக இருக்கிறார். ஆனால் குருசாமியால் வெற்றி பெற முடியாததுடன் இறந்தும் போய்விட்டார்.
சேரனின் படம் பார்த்ததும் குருசாமியின் நினைவுகள் சமுத்திரகனியை துரத்த, அவரது குடும்பத்தை தேடிச் சென்று வறுமையில் இருந்த அந்தக் குடும்பத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்துள்ளார். இனியும் தொடர்ந்து செய்யப் போவதாகவும் நம்பிக்கை தந்து திரும்பியிருக்கிறார்.
சினிமா, ரசிகர்களைதான் பாதிக்கும். சேரனின் சினிமா ஒரு இயக்குனரையே பாதித்திருக்கிறது.


11 டர்ட்டி பாலிடிக்ஸ்’  திரையுலகம் மட்டுமில்லை; ஒட்டுமொத்த இந்தியாவுமே படபடப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது, ‘டர்ட்டி பாலிடிக்ஸ்’ திரைப்படத்தை. இரண்டு காரணங்கள்...  ஒன்று, மல்லிகா ஷெராவத்; இன்னொன்று, அர்விந்த் கெஜ்ரிவால்.

‘என்னது டெல்லி முதலமைச்சர், பாலிவுட் படத்திலா’ என்று வியப்பவர்களுக்கு ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்!

டெல்லியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களில் வெற்றி பெற்று, டெல்லி முதலமைச்சர் நாற்காலியில் கெஜ்ரிவால் அமர்வதற்கு சரியாக ஒரு வருடத்துக்கு முன்பு, ‘டர்ட்டி பாலிடிக்ஸ்’ திரைப்படத்தின் இயக்குநர் கே.சி.பொக்காடியா, கெஜ்ரிவாலை அணுகினார். ‘‘இந்த கேரக்டர் ஒரு உண்மையான அரசியல்வாதியை அப்படியே பிரதிபலிக்கும். எனவேதான் உங்களைத் தேடி வந்தேன். எனக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி நடித்துத் தர வேண்டும். இதில் நீங்கள் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும்!’’ என்கிறார் இயக்குநர்.

‘‘மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றுதான் நான் அரசியல் துறையைத் தேர்ந்தெடுத்தேன். சினிமா துறை எனக்கு செட் ஆகாது!’’ என்று கதையை முழுதாகக் கேட்கும் முன்னரே பலமாக மறுத்துவிட்டாராம் கெஜ்ரிவால்.
‘‘கெஜ்ரிவால், ஒரு நேர்மையான அரசியல்வாதி, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் ஒரு நல்ல தலைவர் அவர். அவரை மனதில் வைத்துத்தான் இந்த கேரக்டரை உருவாக்கினேன்!’’ என்று ஸ்டேட்மென்ட் விடுக்கிறார் பொக்காடியா.

இப்போது கெஜ்ரிவால் கேரக்டரில் நடித்திருப்பவர், நஸ்ருதீன்ஷா.
thanx -  dinamani , maalaimalar, all cine web sites


0 comments: