Wednesday, March 18, 2015

தமிழ் நாட்டின் ( கோடம்பாக்காம்) கள்ளக்காதல் இளவரசன் யார்?

1  கெஜ்ரிவால் மக்கள் பக்கம் நிற்கிறார்,மோடி தொழிலதிபர்கள் பக்கம் நிற்கிறார் -அண்ணா ஹசாரே#நீங்க யார் பக்கம் நிற்கறீங்க?===========
2 ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில்கள் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது :# ஜெ

‘அம்மா ரயில்' விட்டு அம்மா பட்ஜெட் போட்ருவோ(ம்)மா

============

3 தமிழகத்தில் பாஜகவை விட பாமகவே பெரிய கட்சி-அன்புமணி. #ஆமாங்ணா.பாரதிய ஜனதா கட்சி =10 எழுத்து.பாட்டாளி மக்கள் கட்சி =11 எழுத்து


===========

4 4 பேரை ஏமாற்றி திருமணம் செய்த பெண் 5-வது திருமணத்தின் போது கைது #5 வது முதலிரவு நடந்துச்சா?இல்லையா?ன்னு தெரியலையே.தமிழனுக்கு எத்தனை கவலை


===========

5 கட்டண உயர்வு இல்லை, பெண்கள் பெட்டியில் கண்காணிப்பு கேமரா: ரெயில்வே பட்ஜெட்டுக்கு பயணிகள் வரவேற்பு.# அந்த கேமரா திருடு போகாம கண்காணிக்கனும்===============
6 சோனியாவும் ராகுல் காந்தியும் கட்சியை ஒருங்கிணைந்து நடத்துகின்றனர்: காங்கிரஸ் # ராகுல் லாங்க் லீவ் ல இருக்காரே.சும்மா அடிச்சு விடாதீங்க
=========================
7 இங்கிலாந்தில் மேடை நிகழ்ச்சியில் பாடகி மடோனா தவறி விழுந்ததால் பார்வையாளர்கள் அதிர்ச்சி.# போட்டிருந்த 5% டிரஸ் ம் அவிழ்ந்து விழுந்துடுச்சா?
====================
8 ரெயில்வே பட்ஜெட் வருங்காலம் மற்றும் பயணியை கருத்தில் கொண்டுள்ளது-மோடி # நாளை கிடைக்கும் பலாக்காயை விடுங்க.இன்னைக்கு கிடைக்குமா கிலாக்காய்?=======================9 ப.சிதம்பரத்துக்கு Z+ பாதுகாப்பு ரத்து# அப்பாடா.மக்கள் வரிப்பணம் மிச்சம்
=================
10 ரயில்வே பட்ஜெட் கானல் நீர் என்கிறார் வைகோ; விஜயகாந்த் வரவேற்பு # கேப்டனுக்கு பதநீர்?
====================
11 சிவப்பு நிற புடவையில் 'ஹாட்' லுக்கில் வந்த வித்யா பாலன் # அவங்க புடவை கட்னதே ஒரு ஹாட் நியூஸ் தான்
================
12 கால் தடுக்கி கீழே விழுந்த மடோனா- சக நடிகர் கோட்டை பிடித்து இழுத்ததால் விபரீதம் @ லண்டன் # நீதி = கையைப்பிடிச்சி இழுக்கனும்==============13 காக்கிசட்டை ல விஜய்'யின் மாஸ்


டயலாக்
உள்ளது - சிவ கார்த்திகேயன்
# அதைத்தான் அவர் படத்துலயே பார்க்கறோமே.ஜெராக்ஸ் ஆப் ஜெராக்ஸ் எதுக்கு?


=============

14 கருப்புப்பணவிவகாரம்் யாரையும் தப்பவிட மாட்டோம்;பழிவாங்க் மாட்டோம்-மோடி # மாமியார் வீட்டுக்குப்போகமாட்டோம்.மச்சினியைப்பார்க்காம வர மாட்டோம்=========

15 ஊர் ஊராகச் செல்வோம், தெருத் தெருவாக செல்வோம்.. பயணங்கள் முடிவதில்லை.. மு.க.ஸ்டாலின் #3 வதா சொன்னீங்களே அது மெகா ஹிட்.மத்த 2 படம் தெரியல்============

16
கௌதம் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் பெயர் ‘அச்சம் என்பது மடமையடா’!# கொஞ்சம் கூட மரியாதை இல்லாத டைட்டிலா இருக்கேனு சொல்வாங்களோ?

=============

17 ஸ்டாலின் ஒரு துளசி செடி, இணைப்புப் பாலம்... ஜெகத்ரட்சகன் புகழாரம்! # அப்போ அழகிரி கார்த்திகா செடியா?


=============

18 புலி பதுங்குவது பாய்வதற்குத்தான்.. மீண்டும் பலமோடு வருவார் ராகுல்காந்தி: அந்தோணி # எனக்கென்னமோ புலிக்கு நேரம் சரி இல்லைனு தோணுது


=================


19 கமல் ஹாஸனை இயக்குகிறார் பிரபு தேவா! # மாலை மலர் ஹெட்டிங் நியூஸ் " காதல் இளவரசரை இயக்கும் கள்ளக்காதல் இளவரசர்!"? எப்டி ஐடியா?

============

20 ரூ. 29 க்கு இன்றைய மதிய உணவை சாப்பிட்ட பிரதமர் மோடி # 5 வருசமும் அப்டி சாப்டுவாரா? ஸ்டண்ட் அடிக்க எப்பவாவது ஒருக்கா தானே?


====================

0 comments: