Thursday, March 26, 2015

கை முறுக்குத்திருடனும் , தமிழ் டீச்சரும் டி எம்மில் பேசியது என்ன? அட்ராசக்க அம்பலம்

1  உங்க காதலை ஏத்துக்கனும்னா எனக்காக ஏதாவது தியாகம் செய்யனும்.தியாகம் செய்ய மாட்டேன்.அதே சமயம் தியாகு போல் விட்டுட்டு ஓடிட மாட்டேன்===============

2 எனக்கு எதிரியை  அழிச்சோ, அடிச்சோ  பழக்கம்  இல்லை, அணைச்சுப்போய்த்தான்  பழக்கம்.

ஏன்?

 ஏன்னா  என்  எதிரியே  என்  சம்சாரம் தான்


===============


3  அத்தான்,அர்ஜெண்ட்டா  எனக்கு   குழந்தை  வேணும்


எதுக்கு?

குட்டீஸ் சுட்டீஸ்  நிகழ்ச்சில  கலந்துக்க 


=================


4  டொக்  டொக்

யார்யா  அது? நடு  ராத்திரில  அதுவும்  முத ராத்திரில?

நாங்க  “நடுவுல  கொஞ்சம்  டிஸ்டர்ப்  பண்ணுவோம்” டீம்ல  இருந்து வாரோம்


====================


5  அத்தான்! அவரை  பிடிக்கும்னேன், அப்பா அவரைக்காய் சாம்பார்  வெச்சுத்தந்தார்

ஓஹோ! உங்க  ஃபேமிலில  லேடீஸ்ங்க  யாரும்  சமைக்கவே  மாட்டாக?


==================6  DR,திருப்பதி லட்டு ,பழநி பஞ்சாமிர்தம் அடிக்கடி சாப்ட்டா சுகர் வருமா?ஆமான்னு சொன்னா சாமி குத்தம் ஆகிடும்.இல்லைன்னா தொழில் தர்மம் போய்டும்.


===========


7 மிஸ்! உங்க ஸ்கூட்டி நல்ல கண்டிஷன்லதானே இருந்துது.ஏன் வித்துட்டீங்க?


ஆபீஸ்ல "ஆக்டிவ்வா"இருந்தாதான் இன் க்ரீமென்ட்னாங்க


============


8 சார்.முதல்வன் ,தோரணை 2 பட டிவிடியும் எதுக்கு கைல வெச்சிருக்கீங்க?


முதல்வன் தோரணை யே என் கிட்டே இல்லைனு யாரும் சொல்லிடக்கூடாதுனுதான்

=============


9 சார்.உங்களுக்கு ராக்கிங் ஸ்டார் னு எப்டி பட்டப்பேர் கிடைச்சது?வர்றவன் போறவன் எல்லாம் என்னை ராக்கிங் பண்ணிட்டுப்போவான்


===============

10 எந்தக்கேள்வி கேட்டாலும் தெரியாதுன்னு பதில் சொல்றியே?ஏன்?டீச்சர்.பொண்ணுங்களுக்கு தெரியும்னு சொல்றவனைவிட தெரியாதுன்னாத்தான் பிடிக்குமாமே?


==============

11 டாக்டர்! ஹை ஹீல்ஸ் போடுற பெண்களுக்கு ஹைட்டோட சேர்ந்து தைரியமும் அதிகமாகிடுமா?

பேக் பெய்னும், குதிகால்  வலியும்  அதிகமாகும்================

12  மேடம்.பாட்டுப்பாடும்போது ஏன் லட்டு சாப்பிடறீங்க?


அப்போ தான் ஸ்வீட் வாய்ஸ்னு சொல்வாங்க

=============


13 பூக்கடைல வந்து ட்ரையர் இருக்கா?னு கேட்கற?


ஏம்மா! உதிரிப்பூவை தண்ணில முக்கி வெச்சிருக்கே.எடை போடும்போது பாதி வெய்ட்டை அதே இழுத்துக்குமே?


==============


14 மல்லிகைப்பூ முழம் எவ்ளவ்?


50 ரூபாங்க.


அடேங்கப்பா.அந்த காசுக்கு மல்லிகைப்பூ மாதிரி 10 இட்லியே சாப்பிடலாமே?
இட்லியை தலைல வெச்சுக்க


=================


15 மேடம்,3 மாசத்துக்கு ஒரு வாட்டி உங்களுக்கு திருமண நாள் வாழ்த்து குவியுதே? எப்டி?இதுவரை 4 கல்யாணம் பண்ணீட்டேன்,பாசக்காரப்பசங்க


=================

16 பிணங்களின் படங்களை தயவு செய்து பகிர வேண்டாம்மேடம், நான் நடைப்பிணமா வாழ்ந்துட்டு இருக்கேன், என் ஃபோட்டோவை ஷேர் பண்ணலாமா?


===============


17 டீச்சர். முருக்கு , முறுக்கு எது சரி?


அரிசி முறுக்குன்னா சின்ன ரு , வறுத்த அரிசி முறுக்குன்னா பெரிய று


================

18 டீச்ச்சர். முறுக்கு க்கு சின்ன ரு வருமா? பெரிய று வருமா?


சிம்ப்பிள் . சின்ன முறுக்குன்னா சின்ன ரு, பெரிய முறுக்குன்னா பெரிய று


================

19 இந்தப்படத்துல தற்காப்புக்கலை வீரரா வர்றேன்


உங்களைக்காப்பாத்திக்குவீங்க சரி.படத்தை யார் காப்பாத்துவா?

=================


20 டியர்.நீ போடும் தாவணி தான் என் கட்சிக்கொடி!


நான் தான் தாவணி,துப்பட்டா எதுவும் போடறதே இல்லையே?


==================

3 comments:

Seeni said...

அனைத்தும் நல்ல நகைச்சுவை ..

Unknown said...அனைத்தும் சுவையே!

balaamagi said...

அத்துனையும் சூப்பர்.