Tuesday, March 10, 2015

ட்விட்டர்ல பிரபல ரவுடி ஆக குறுக்கு வழி என்ன?

1  நான் நல்லா சமைப்பேன் ,நான் நல்லா டீ போடுவேன் ,நான் வீட்டு வேலை எல்லாம் செய்வேன் ,எல்லா எடுபுடி வேலையும் செய்வேன் #,நாமும் சொல்லி வைப்போம்===============2 உயிருக்கு உயிரான காதலியே /காதலனே ஆகினும் உன்னை அவமானப்படுத்தி இருந்தால் உயிர் உள்ளவரை அந்த சம்பவத்தை மறந்து விடாதே!
================3 ஆண்களை வாழ்த்த "ஆயுஷ்மான் பவ" கேர்ள்ஸ்க்கு "தீர்க்க சுமங்கலி பவ"


புருசனை போட்டுத்தள்ளிய கள்ளக்காதலியை
தீர்த்த சுமங்கலி பவ============


4 பிரபல ரவுடி ஆக குறுக்கு வழி.யாரோ யாரையோ பூடகமா திட்டும்போது ஊடால புகுந்து ஏய் என்னையா சொன்னே?னு கம்பு சுத்தனும்


===============


5 நண்பனை 10 பேர் அடிக்கும்போது சண்டையை விலக்கி விட வந்தா நண்பனை விட்டுட்டு நம்மை அடிக்கறாங்க #,தமிழேண்டா

===============


6 வைகறை யில் நாலரைக்கு நீ நிதம் எழுந்தால் உன் வாழ்வு வளர் பிறை.
ஏழரைக்கு எழுந்தால் என்றென்றும் தேய்பிறை ஏழரை


===============

7

கூந்தலில் ரோஜா வை நேராக சூடிய அழகியின் முதுகில் இலைகளும் ,தலைகீழாக சூடிய அழகியின் முதுகில் ரோஜா இதழ்களும் உதிர்ந்து அழகு சேர்க்கிறது


=============


8 முழுதாக பின்னப்படாத ஒத்தை ஜடையின் நுனி பிளவு பட்டு பின்னிப்பிணைந்த இரு சாரைப்பாம்புகள் சண்டை இடுவது போல் நிற்கின்றன


================


9 கல்யாணமான 3 வது மாசத்துலயே சம்சாரத்தை மாசமாக்கி அம்மாவீட்டுக்கு அனுப்புவது தான் ஆணின் பிரசவ வைராக்யம் போல


=============


10

ஈரோடு SPB சில்க்ஸ் சேல்ஸ் கேர்ள்ஸ்க்கு மயில் கழுத்து கலர் சேலையிலிருந்து கேரட் கலர் சேலை யூனிபார்ம் ஆக்கியதை வன்மையாக கண்டிக்கிறோம்


=============


11 சந்தனக்கிண்ணத்தில் ரோஜா இதழ்களால் புள்ளி வைத்தது போல் உன் கன்னத்தில் பருக்கள்


=================


12 பெரும்பாலான மாடர்ன் கொண்டைகள் வலையால் போர்த்தப்பட்டு பூச்சரத்தை ஒதுக்கி விடுவதால் சோபை இழக்கின்றன


=================


13 என்னை பாலோ செய்யும் 25,400 பேரும் ,நான் பாலோ செய்யும் 14,000 பேரும் மாசம் 10 ரூபா தந்தால் நான் வேலைக்கே போக வேண்டியதில்லை -சாரு பட்டறை


===============


14 நேர்மையான அக்கவுன்ட்ன்ட் தன் காதலிக்கு ஆகும் செலவை தினசரி டைரியில் எழுதும்போது தண்டச்செலவு ன்னு எழுதுவாரோ?


===============


15 கை ரேகை ஜோசியரா ஹீரோ நடிச்சா வில்லனிடம் " இன்னைக்கு உன்னை ஒரு கை பாத்துடறேன்"னு பஞ்ச் பேசுனா எடுபடாது


================

16 அன்னபூரணி வீட்டில் பூரி சுட்டா அன்ன பூரி நீ!


==============

17 உன் காதலி விஜய் ரசிகை எனில் " புத்திசாலி நீ" என புகழவும்
உன் காதலி அஜித் ரசிகை எனில் புத்தி"ஷாலி நீ" என புகழவும்


================

18 இந்தப்பொண்ணுங்க கண்ணு எல்லாம் சும்மாவே அழகா இருக்கும்.இதுல மை வெச்சு எக்ஸ்ட்ரா டெக்ரேசன் பண்ணி அதிஅழகு ஆக்கிக்கறாங்க


=================

19 உன் சந்தோஷத்தை இரு மடங்கு ஆக்குபவள் பெண் என்பதன் குறியீடே பெண்கள் கூந்தலில் பூச்சரத்தை இரண்டாக மடித்து வைப்பதன் அர்த்தம்


================

20 இந்தியப்பிரதமரின் உடை ஏலம் போகிறது.
இந்தியனுக்கு மானம் போகிறது


==============

1 comments:

Siva said...

Innaikku ungaloda indha post romba rasichi padichen...