
கடந்த 2008-09ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பு அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது வாக்காளர்களைக் கவர்வதற்காகப் பல சலுகைகளை பட்ஜெட்டில் அறிவித்தார்.
அருண் ஜேட்லி தாக்கல் செய்த 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், தொழிற்துறையினரில் இருந்து தனிநபர் வரை எல்லோருக்கும் ஏதோ ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ப.சிதம்பரம் தாக்கல் செய்த பட்ஜெட்டிலிருந்தும், அருண் ஜேட்லி தாக்கல் செய்திருகும் பட்ஜெட்டிலிருந்தும் சில முக்கிய அம்சங்கள்:
துறை
|
ப. சிதம்பரம் ( 2008-09 பட்ஜெட்)
|
அருண் ஜேட்லி (2015-16 பட்ஜெட்)
|
பொதுமக்கள்
|
# வரி விலக்கு வரம்பு ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்வு.
# பெற்றோருக்கு மருத்துவ காப்பீட்டு தொகை கூடுதலாக ரூ.15 ஆயிரம் வரை விலக்கு.
|
# தனிநபர் வருமான வரி மற்றும் வரி விலக்கு உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை.
# சில பிரிவுகளில் வரி குறைப்பு.
|
தொழில்துறை
|
# நிறுவனங்களுக்கான வரியில் எந்த மாற்றமும் இல்லை.
# உற்பத்தியை அதிகரிக்க எல்லா பொருட்களுக்கும் 2 சதவீதம் சென்வாட் குறைப்பு.
# பல பொருட்களுக்கு சுங்க வரி குறைப்பு.
# சேவை வரி விலக்கு ரூ.8 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்வு.
|
# நிறுவனங்களுக்கான வரி அடுத்த 4 ஆண்டுகளில் 25 சதவீதமாகக் குறைக்கப்படும்.
# அடிப்படை சுங்க வரி 12.36 சதவீதத்தில் இருந்து 12. 5 சதவீதமாக உயர்வு.
# சேவை வரி 12 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்வு.
# உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு ரூ.70 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
# ரூ.20 ஆயிரம் கோடியில் தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியம்.
|
சிறுதொழில்
|
# சிறுதொழில் வளர்ச்சி வங்கிக்கு (சிட்பி) ரூ.4,000 கோடி நிதி.
|
# சிறு தொழில்களுக்கு உதவ ‘சிறு தொழில் மேம்பாட்டு மறுநிதியளிப்பு முகமை’ (முத்ரா) வங்கி, ரூ.20 ஆயிரம் கோடி முதலீட்டில் தொடங்கப்படும்.
|
சமூக நலன்
|
# ராஷ்டிரிய ஸ்வஸ்தியா பீமா யோஜ்னா - வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மருத்துவ காப்பீட்டுக்கு ரூ.30 ஆயிரம்.
# ஆம் ஆத்மி பீமா யோஜ்னா - ஏழைகளுக்கு காப்பீடு.
|
# ஏழைகள் ஆண்டுக்கு ரூ.12 செலுத்தினால், ‘பிரதம மந்திரி சுரக்க்ஷா பீமா யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்துக்கு விபத்து காப்பீடு.
# ‘அடல் பென்ஷன் யோஜனா’ திட்டத்தில் பிரீமியம் தொகையில் 50 சதவீதத்தை அரசு செலுத்தும்.
|
விவசாயத்துறை
|
# ரூ.60 ஆயிரம் கோடி கடன் ரத்து செய்யும் திட்டம்.
# நீர்ப்பாசன திட்டங்களுக்கு நிதி வழங்க ரூ.100 கோடி
|
# விவசாய கடனுக்கு ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
# ஒருங்கிணைந்த தேசிய வேளாண் சந்தை உருவாக்கப்படும்.
|
கீழ்தட்டு மக்கள்
|
# சம்பளதாரர்களுக்கும் விவசாயிகளுக்கும் சலுகைகள்.
|
# எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகள்.
|
- Sureshஒப்பிட்டை பாருங்கள் 2008-09 மற்றும் 2015-16 . இது சரிதானா ? காங்கிரஸ் இன் 10 வருட கொள்ளையினால் சீரழிந்து போன பொருளாதாரம் இப்போது தான் வலுவாக ஆரம்பித்து இருக்கிறது . ஒன்று செய்யுங்கள் பிஜேபி யின் 2002-03 நிதி நிலை அறிக்கையையும் 2008-09 தையும் ஒப்பிடுங்கள் . புதிது புதிதாக வரி போட்டது யார் ? காங்கிரஸ் ஆட்சியில் நடந்த கொள்ளைகள் போன்ற வற்றையும் ஒப்பிடுங்கள்about 8 hours ago · (0) · (2) · reply (1) ·Points35970
- PSMAYOஇது தான் மோடியின் முதல் பட்ஜெட், இதன் பலன் காலம் செல்ல செல்ல தான் தெரியும், பொருளாதாரம் இப்போது தான் வலுவாக ஆரம்பிம்பதக்கு சர்வதேச கச்சா என்னை விளையும் காங்கிரஸ் தீட்டி விட்டு சென்ற திட்டங்களும் தான். ஆதார் மற்றும் பல திட்டங்கள் பிஜேபி செய்தது போல் பிரபலபடுதபடுகின்றது. உலக அளவில் இந்தியாவை வலுவான தேசமாக ஆகியது காங்கிரஸ் தான் என்பதை யாராலும் மறுக்க இயலாது.about 3 hours ago · (0) · (0) · reply (0) ·
- D.Thirumalai Kumarஎன்ன இங்கு மோடி ரசிகர்களை காணோம்.about 8 hours ago · (1) · (0) · reply (1) ·Points15960
Rafiyudeen Rafeek at Self-Employed
என்ன தான் இருந்தாலும் வேட்டி கட்டிய தமிழன் , தமிழன் ஒரு படி மேலே தான் என்பதை சிதம்பரம் நிருபித்து விட்டார்.about 9 hours ago · (2) · (0) · reply (0) ·Points1330- ராமராசுஎதற்காக இந்த ஒப்பீடு...? தேவையற்றது. ப.ஜ.க அறிக்கை எதிர்கால நோக்கத்தில். காங்கிரஸ் கட்சியின் அறிக்கை "வாக்கு வங்கி" நோக்கில். ஒன்று மட்டும் உண்மை... மிக சாமானியனும் இன்று ஓரளவேனும் சுய மரியாதையுடன் இருபதற்கு, வளரும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதற்கு, காங்கிரஸ் கட்சியின் திட்டங்கள்தான் காரணம் என்பதை ஊடகங்கள் ஏனோ கண்டுகொள்வது இல்லை. பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காங்கிரஸ் கட்சி மீது இருந்தாலும், பல மதங்கள், பொழிகள், ஆயிரக்கணக்கான சாதிகளைக் கொண்ட நமது நாட்டில் இப்போதைய அளவிற்கு வளர்ச்சியைக் கொண்டுவந்ததில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் பங்குண்டு. குறைகளைச் சுட்டுக்காட்டும் ஊடகங்கள் அரசியல் பேதமின்றி நிறைகளையும் சுட்டிக்காட்டுதல் வேண்டும். அதுதான் நடுவு நிலையான பத்திரிகை தர்மமாக இருக்கும். ஏழைகளுக்குக் கொடுத்தால் அது வாங்கி என்றும், பெரும் நிறுவனங்களுக்குக் கொடுத்து தனிப்பட்டவர்கள் பெரும் பயன்பெற்றால் "எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கை" என்று சொல்வதை என்னவென்று சொல்வது...!about 10 hours ago · (1) · (0) · reply (0) ·Points745
- காமாட்சிவந்தவனுக்கு, இருந்தவன் எவ்வளவோ மேல்........ காங்கிரஸ் - சில குடும்பங்களுக்கான ஆட்சி பாஜக - வணிக நிறுவனங்களுக்கான ஆட்சி ?????? - மக்களுக்கான ஆட்சி பாவம் நாம்...............about 12 hours ago · (0) · (0) · reply (1) ·
- vinothநீங்கள் சொல்வது தவறு. நாட்டில் இப்பொது ஊழல் இல்லை. காங்கிரஸ் நிறைய ஊழல் செய்துள்ளது அது அனைவருக்கும் தெரியும். இப்பொது நீங்கள் ஒரு கம்பெனி நடத்து கர்றேர்கள் என்று எடுத்து கொள்வோம். நீங்கள் பெருகினால் கண்டிப்பாக உங்கள் கீழ் வேலை செய்யும் வேல்லையட்களும் அனைவரும் பயன் பெறுவார்கள். வரியை குறைதல் நமக்லவா நல்லது. தப்பாக sinthikaathirgalabout 6 hours ago · (0) · (0) · reply (1) ·
- Sureshஇது முழுக்க முழுக்க பொய் ஒப்பிடீ. சென்ற வருடம் அருண் ஜேட்லி அவர்கள் 150000 வரை வருமான வரி விலக்கு அளித்தார் . அதை கருத்தில் கொள்ளவில்லை . conveyance allowance இரட்டிப்பு அதுவும் இல்லை இங்கே. மருத்துவ காப்பீட்டு தொகை 15000 இல் இருந்து 25000 அதுவும் இல்லை. . சேவை வரியை கொண்டு வந்ததே சிதம்பரம் தான் அந்த உண்மை இல்லை இங்கே . மொத்தத்தில் paid சர்வீஸ் என நினைக்கிறன் . சிதம்பரம் 2 க ஊழலில் இருந்தார் . அருண் ஜேட்லி இல்லை அதையும் சொல்லி இருக்கலாமேabout 13 hours ago · (0) · (3) · reply (0) ·Points35970
Merlin Raj at CSI Institute of Technology
சிதம்பரம் ஒரு பொருளாதார மேதை ...இந்திய நாட்டிற்கு அவரது அனுபவம் கட்டாயம் தேவை ....about 13 hours ago · (9) · (0) · reply (0) ·- Samyஇதை பார்க்கும் பொது பத்தாவது மாணவனையும்(அருண்-ஜேட்லி/மோடி ), Phd முடித்த பொருளாதார நிபுணரையும்(சிதம்பரம்/ மன்மோகன்) யார் சிறந்தவர் என்பது போல் உள்ளது...... என்ன செய்ய அடுத்த 4 ஆண்டுகள் இந்தியாவின் தலை விதி இப்படிதான் இருக்கும்..... ஆனா ஒன்னு... இனிமேலாவது காங்கிரஸ் விளம்பர உத்தியை வகுத்து கொள்ள வேண்டும்..... இனி வரும் காலங்களில் ஒரு சிலரால் பேசப்படும் காங்கிரஸ்சும் பிஜேபியும் ஒன்று என்ற வாதத்தை மிக கடுமையாக மறுத்து தகுந்த ஆதாராத்தொடு எதிர் கொள்ள வேண்டும்...... கடைசியாக..... காங்கிரஸ் விவசாயத்துறைக்கு கடனை தள்ளுபடி செய்ததை விடவா ஒரு சாதனை தேவை.... ஆனால் பிஜேபியிடம் அதை எல்லாம் எதிர் பார்க்க முடியாது.....about 14 hours ago · (7) · (0) · reply (0) ·Points22675
- JPதிரு. சிதம்பரம் வாக்காளர்களைக் கவர்வதற்காகப் பல சலுகைகளை பட்ஜெட்டில் அறிவித்தார் என்றும், திரு. ஜெட்லி தொழிற்துறையினரில் இருந்து தனிநபர் வரை எல்லோருக்கும் "ஏதோ ஒன்றை" அறிவித்தார் என்று சொல்லுபோதே இதில் உள்ள உண்மை புலபடுகின்றது. மக்களின் நலமே மகேசனின் நலம் என்பதை இந்த இருவரில் யார் நிருபித்து இருகின்றார்கள் என்பதை மக்கள் அறிவார்கள். ஒப்பிட்டமைக்கு நன்றிகள்.about 15 hours ago · (0) · (0) · reply (1) ·Points1130
- Ganesanஎனக்கு இருவருக்கும் உள்ள ஒற்றுமையே தெரிகிறது.இருவருமே ஏழை,நடுத்தர மக்களின் விரோதிகள்.பெரும் பண முதலைகளின் கைக்கூலிகள்.எந்த விலையையும் குறைக்கவோ,வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுக்கவோ செய்யாமல் சேவை வரியை ஏற்றி அதன் மூலம் மக்களின் தலையில் மேலும் வரிச்சுமையை ஏற்ற இவர்களால் மட்டுமே முடியும்.about 16 hours ago · (0) · (0) · reply (0) ·Points490
- M.RAJAMOORTHYசிதம்பரம் இந்த நாட்டின் பொருளாதரத்தை சரிந்துவிடாமல் காத்தவர் உண்மையில் பிரதமராகும் தகுதி திறமை அனைத்தும் இருந்தும் தமிழனாக பிறந்ததால் கிட்டாமல் போயிற்று.அனைத்து பட்ஜெட்டுகளையும் பார்த்தாலே தெரியும் இவரின் திறமை. ம.இராசமூர்த்திabout 18 hours ago · (5) · (0) · reply (0) ·
Kulasekar Erk Former Indian Bank Branch Manager. at IndianBank
இருவருமே தொழில்துறைக்கு அதிக முக்கியத்துவம் தந்துள்ளனர். அதற்கு தொழில்துறை முன்னேறவேண்டும் என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொள்வோரும் உண்டு, அவர்கள் சார்ந்த கட்சியனரின் நிதினிலைஉயர தொழில்துறை உதவ வேண்டும் என்ற அர்த்தமும் கொள்பவர்கள் உண்டு. மற்றதிலும் பெரிய மாற்றமில்லை. ஒருவர் நன்கு சேர்த்துவைத்துள்ளார். இன்னொருவர் இப்போதுதான் தொழிலுக்கு புதுசு.about 18 hours ago · (0) · (0) · reply (0) ·Points5135- AR VENKATACHALAMஅரசியல் வாதி அயல் நாட்டில் பதுக்கிய பணத்தை இங்கு கொண்டுவர வேறு திட்டம் இல்லியா, வேளைக்கு சென்றவர்களை ஏன் தொல்லை கொடுகிர்கள்a day ago · (0) · (0) · reply (0) ·
Ramesh Sargam at Deccan Chronicle Holdings Limited
இதில் ஒரு விஷயம் எல்லோரும் கவனிக்க வேண்டியது அவசியம். காங்கிரஸ் ஆட்சியில் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அப்பொழுது பட்ஜெட் தயார் செய்யவில்லை. இப்பொழுதுள்ள பிஜேபி ஆட்சியிலும் இப்பொழுதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தயார் செய்யவில்லை. இருவரும் வெறும் ஒப்புதல் கொடுத்தனர். அன்று நிதி அமைச்சகத்தில் உள்ள அதே அதிகாரிகளே (ஒரு சிலரை விட்டு) இந்த வருட பட்ஜெட்தையும் தயார் செய்தனர் என்பதை யாரும் மறுக்க முடியாது.a day ago · (0) · (0) · reply (0) ·Points17835Ramamurthy Murthy
வொவ்வொரு பட்ஜெட்டின் போதும் எல்லா நிதிதுறை நிபுணர்களும், அதாவது முன்னாள் நிதி அமைச்சர்களான பிரணாப் முகர்ஜி (தற்போதைய ஜனாதிபதி ), ப. சிதம்பரம், யஸ்வந்த் சின்ஹா, மன்மோகன் சிங்க், மற்றும் ரிசர்வ் பேங்க் கவர்னர் ரகுராம் ராஜன் மற்றும் பிரதம மந்திரி , ரங்கராஜன், அமர்த்திய சென் போன்ற பொருளாதார வல்லுனர்கள் அடங்கிய ஒரு குழு , தற்போதைய நிதி மந்திரி அருண் ஜெட்லி யுடன் கலந்து, நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப நிதி நிலைமையை அறிக்கையும்(பட்ஜெட்) சமர்ப்பித்து இந்த நிறை/குறை விவாதங்களை உலகின் கண்களில் இருந்தும் , மக்களின் சந்தேகங்களில் இருந்தும், கட்சி பாகுபாடின்றி ஒப்புகொள்ள செய்து நாட்டின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தலாம். இந்த குழுவுக்கு உதவ, மாநில பிரதிநிதிகளாக எல்லா மாநில பொருளாதார வல்லுனர்களும் உப குழுக்களாக உதவி செய்து, ஒரு முழு ஒப்புதலுடன் நாட்டை நடத்தி சென்றால், நாடு மிக விரைவில் உலக நாடுகளின் கவனத்தை கவரமுடியும். எதிர்பார்க்கும் முதலீடுகளும் அவர்களிடம் இருந்து வரத்தொடங்கும்.a day ago · (0) · (0) · reply (0) ·Points285R.M.Manoharan Manoharan
மேலே கண்ட ஒப்பிடலைக்காணும்போது ப.சிதம்பரமே அனைத்து தொகுதி களிலும் முன்னணியில் எளிதாகக் காணப்படுகிறார். வரிவிலக்கு வரம்பை ரூ.40,000/-த்திலிருந்து ரூ.1,50,000/- என்று உயர்த்தியது; சேவை வரி விலக்கு ; சிறு தொழில் வளர்ச்சிக்கு ரூ.4,000 கோடி நிதி; பலதரப்பட்ட சமூக நலன் காப்பீட்டுத்திட்டங்கள்; விவசாயிகளின் ரூ.60,000/-கோடி கடன் ரத்து; அம்மாடியோ ! ப.சிதம்பரத்தின் அப்போதைய திட்டங்களை இப்போது படிக்கும்போது இதுவன்றோ சூப்பர் பட்ஜெட். சிதம்பரம் ஏன் அவற்றை சூப்பர் பட்ஜெட் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளவில்லை. இதைத்தான் நிறைகுடம் ததும்பாது என்பரோ ! ஆர் எம் மனோகரன்a day ago · (0) · (0) · reply (2) ·Points5220- ராமராசுஉண்மைதான் நண்பரே.. நல்லதுக்குக் காலம் இல்லை என்றும் நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும் என்பதெல்லாம் இப்போதுதான் மக்களுக்குப் புரிந்து இருக்கும். விளம்பரத்திடம் மக்கள் விலைபோய்விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். காங்கிரஸ் கொண்டுவந்த போது எதிர்த்தவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக அமல்படுத்துகிரார்கள். ஆதார் அட்டை போன்ற அவசியமான ஒன்றை ஏதோதோ சொல்லி பாராளுமன்றத்தையே முடக்கிவிட்டு, இப்போதோ அதையே தீவிரமாக அமல்படுத்துவதை மக்கள் ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலைக்குத் தள்ளிவிடப்பட்டுள்ளார்கள். ஒரு தமிழனின் அறிக்கையை தமிழ் ஊடகங்களே மோசமாகக் காட்டும்போது..... என்ன சொல்ல..about 6 hours ago · (0) · (0) · reply (0) ·
- நன்றி - த இந்து
0 comments:
Post a Comment