Sunday, March 29, 2015

எவர் க்ரீன் ஹீரோ யார்?

டாக்டர்.எனக்கு உடம்பு பூரா அடிபட்டிடுது அடிக்கடி.ஏன்?அடிக்கடி ஜோக்ஸ் படிச்சு மொட்டை மாடில இருந்து விழுந்து புரண்டு சிரிப்பேன்


==============


2 டாக்டர். கட்டவெரல்ல கல்லுகுத்துனா கல்லீரலுக்கு நல்லதாமே?நிஜமா?


யோவ்.அப்போ பாம்பு கொத்தி வாய்ல நுரை வந்தா நுரையீரலுக்கு நல்லதா?


==============


3 நர்ஸ் நளினா = ஒரு மணி நேரமா ரிசப்ஷன்ல வெயிட் பண்றீங்க.எந்த டாக்டரைப்பார்க்கனும்?


லொள் ஆள் = செல் போன் சார்ஜ் ஏத்த வந்தவனுங்க=


===============

4 என் பேரு பன் பேபி.என் தங்கச்சி பேரு பப்ஸ் பாபி


ஓஹோ.வெஜிடபிள் பப்சா? எக் பப்சா?=


==============


5 வழக்கமா பொண்ணு கூட தனியா பேசனும்னுதானே மாப்ளை கேட்பாரு?


ஆமா.ஆனா இவரு கூச்ச சுபாவியாம்.பொண்ணோட தங்கச்சியும் இருக்கனும்கறாரு

==============

6 ஆபீஸ் டைம் ல லேடி ஸ்டாfஸ் கிட்டே பேசிட்டிருக்கக்கூடாது.அட போங்க சார்.ஸ்கூல் ல படிக்கும்போதும் இதான் சொன்னாங்க.நாங்க எப்போதான் முன்னேற?


================


7 ஒல்லியா ஒரு சின்ன வீடு வெச்சிருந்த நீங்க இப்போ குண்டா ஒரு சின்ன வீடு வெச்சிருக்கீங்களே?


சின்னக்கோடு பக்கம் பெரிய கோடு போடும் டெக்னிக்தான்

==================

8 ஜோசியரே! நீங்க சொன்னபடி கல்யாண முருங்கைப்பூ வை டெய்லி கூந்தல் ல வெச்சேன்.மேரேஜ் ஆகிடுச்சு.


குட்.டைவர்ஸ் ஆக ஏதாவது பூ இருக்கா?

==================

9 அளவு சாப்பாடு எவ்ளவ்?


ஏ சி ரூம்ல சாப்ட்டா 100 ரூபா.சும்மா FANமட்டும் போதும்னா 80 ரூபா.FAN ,லைட் எல்லாம் ஆப் பண்ணிடுங்க.60 ரூபா.ok?


==============


10 நீ ஏன் பொண்ணுங்க பின்னாலயே சுத்திட்டு இருக்கே?


ஜோடியா போலாம்னு கூடவே நடப்பேன்.அவங்க பயந்து வேகமாப்போவாங்க.பின் தங்கிடறேன்


================11 பொண்ணு மாமிச மலை மாதிரி இருக்கே மாமா?


போட்டோ அனுப்பும்போதே என் பொண்ணு ஒரு குணக்குன்று னு சொல்லி இருந்தேனே மாப்ள?


=================

12 டியர்.நான் ஓக்கே சொல்லலைன்னா சூசைட் அட்டெம்ப்ட் பண்ணுவீங்களா?ச்சே ச்சே அடுத்த சைட்க்கு அட்டெம்ப்ட் .ஆனா அந்த மடம் ஆகாட்டி சந்தைமடம்


===============


13 குருவே! சம்பிராதய படி எண்ணெய் சட்டி கழுவுனா எமனுக்கு ஆகாதாமே?


இப்டியே வேலை செய்ய முடைப்பட்டு எதுனா சாக்குபோக்கு சொல்.ஊரே உனை கழுவி ஊத்தும்

===============

14 நீங்க  ஜி மெயில்  யூஸ்  பண்றீங்களா? ஹாட் மெயிலா?


அஃபிசியலா  ஜி மெயில்,  வாட்சப்  வீடியோக்கு  ஷேரிங்க்கு  ஹாட் மெயில், மேட்சுக்கு மேட்ச்


======================


15  பெண்டிங்க்  ஒர்க்ஸ்  எல்லாம்  முடிச்ட்டேன்.


ஓஹோ. ஆஃபீஸ்  ஒர்க்கா?


 இல்லை. ஹேர்பின்  பெண்ட்  மாதிரி  இருக்கும் இடை  பற்றிய  கவிதை  ஒர்க்ஸ்


=====================

16 நெத்தில  நாமம் போட்ட பெண்கள் பார்த்ததில்லை.ஏன்?

பொதுவா  பொண்ணுங்களுக்கு  ஆம்பளை நெத்தில  நாமம்  போட்டுத்தான்  பழக்கம்


=================


17   ஒரு சில பாடல்கள் கேட்குறப்ப அப்ப செய்துட்டு இருக்குற வேலைய ஒரு நிமிஷம் மறக்கடிச்சிடுது

என்ன  வேலை?


பாட்டு கேட்கற வேலைதான்,ஹிஹி


======================


18  டியர்,சாம்பார்ல சால்ட்  கம்மியா இருக்கு.


சாரிங்க,வந்திருப்பது  உங்க  வீட்டு  சொந்தம்தானேன்னு அ”சால்ட்”டா  இருந்துட்டேன்======================


19  வழிவதை அனுமதிக்காத பெண்ணிடம், யாரும் வாலாட்டுவதில்லையாமே?ஏன் அப்டி?

என்ட்ரி குடுக்கும்போதே கேட்டை படீர்னு சாத்துனா எப்டி வருவான் தமிழன்?


===============


20 டாடி.ராமர் ஏன் நம்மை மாதிரி இல்லாம பச்சை கலர் ல இருக்காரு?

ஏன்னா அவர் தான் "எவர் க்ரீன் ஹீரோ" ஆச்சே?


====================


=================

0 comments: