Tuesday, March 24, 2015

பப்பாளிக்காய் பால் 3 நாள் தொடர்ந்து குடிச்சா அல்சர் குணம் ஆகிடுமாமே?

1  டியர், யார் கிட்டேயும் குழைய மாட்டோம், எங்க பரம்பரைல யாருமே அப்டித்தான்.
ஓஹோ. சாப்பாடு கூட குழைய விட மாட்டீங்களா?பருக்கையா இருக்கு


================

2 டியர், எப்பவும் என்னை திட்டிட்டேஇருக்கீங்களே? நல்லதா 4 வார்த்தை பேசுனா என்ன?நல்லகாலம்பிறக்குது,னு சொல்ல நான் என்ன குடுகுடுப்பைக்காரனா?====================3 டாக்டர்.பொண்ணுங்க அரிசி அதிகமா சாப்டா,கல்யாணத்தன்னைக்கு மழை வருமாமே?நிஜமா?


மஞ்சக்காமாலை வேணா வரும்.மழை எப்டிம்மா வரும்?==================4 சரித்திரம் - வரலாறு என்ன-வித்தியாசம்?
நயன் தாரா வுக்கு 2 லவ்வர் என்பது வரலாறு.
1 1/2 கோடி சம்பளம் வாங்கிய முதல் தமிழ் நடிகை -சரித்திரம்


==================


5 டாக்டர்.எனக்குத்தூக்கத்துல கனவு வர மாட்டேங்குது.


அட போம்மா.அவனவன் தூக்கம் வர மாட்டேங்குதுனு புலம்பறான்==============


6 டாக்டர்.என் சம்சாரத்துக்கு மூக்குத்தி குத்தினா எனக்கு கவர்மென்ட் ஜாப் கிடைக்கும், அதிர்ஷ்டம் வரும்கறாங்க?யோவ்.மூக்குல ரத்தம் வரும்


================

7 டாக்டர்.என் எதிரே ஆம்பளை நின்னாக்கூட எனக்கு பொண்ணு மாதிரியே தெரியுது?கண் குறைபாடா?


தெரியல.டாக்டர்ட்ட கேளுங்க.நான் நர்ஸ்


=================

8 டியர்.நீ கோபமா இருக்கும்போது ஒரு கிஸ் கொடுத்ததும் உடனே சமாதானம் ஆகிட்டியே?


ம்க்கும்.இல்லைன்னா விடிய விடிய சமாதானப்படுத்திட்டே இருப்பீங்க


===============


9 டாக்டர்.பசிக்கி ஆனா சாப்பிட பிடிக்கல


அந்த டிபன் பாக்சை இந்தப்பக்கம் தள்ளும்மா.நானாவது சாப்பிடறேன்.10 நிமிசம் முன் தானே 10 பூரி சாப்ட்டே?

=============

10 டாக்டர்.பலாப்பழம் சாப்ட்டா கில்மா மூடு வருமாமே? நிஜமா?


அதென்ன பலான பழமா?மூடு வர? முழு பழத்தையும் நீ ஒருத்தனே சாப்ட்டா பேதி வேணா வரும்


=============

11 டியர்.லவ் பண்ணும்போது ஏன் கண்ணை மூடிக்கறீங்க?


ஏன்னா இது கண் மூடித்தனமான காதல்


==================


12 பாட்ட ரசிக்கணும்ன்னா கண்மூடித்தனமா கேட்கணுமா?


ஆமா.ஆனா டிரைவிங்க்ல இருக்கும்போது அப்டி பண்ணக்கூடாது


==================

13 ஆபீஸ் மீட்டிங்கில் டேமேஜர் = நான் 2 மணி நேரமா நடத்துன win win situation . தீம் புரிஞ்சுதா?


தலை தான் விண் விண் னு வலிக்குது

=====================


14 டாக்டர்.மீன் சாப்பிட்ட உடனே தண்ணி குடிச்சா மீனுக்கு உயிர் வந்துடுமா?


எதுக்கும் சுடு தண்ணியாக்குடிம்மா.செத்துடும்

===============


15 மாப்ளை.என் பொண்ணை உலகம் தெரியாம வளர்த்துட்டேன்.


மாமா.அது கூடத்தேவலை.சமையல் செய்யத்தெரியாமயும் வளர்த்திட்டீங்க

==============

16 மிஸ்! எதுக்காக என்னை பளார் பளார்னு 4 டைம் அறையறீங்க?


டைம் கேட்டியே? 4 1/2,சிம்பாலிக் ஷாட்

===========

17 சன் டிவில ரொம்ப நேரமா என்ன தேடறீங்க?


சின்ன பாப்பா, பெரிய பாப்பா -னு சொன்னாங்க.2 பெரிய பீப்பாங்கதான் இருக்கு, பாப்பா எங்கே?


===================18 ஜட்ஜ் = புதிய  தலைமுறை  ஆஃபீசை  தாக்கிய  ஆட்களை  ஏன்  நீங்க தடுக்காம  வேடிக்கை பார்த்தீங்க?

போலீஸ் = வேடிக்கை எம் வாடிக்கை


====================19  டாக்டர், பப்பாளிக்காய்  பால்   3  நாள்  தொடர்ந்து  குடிச்சா  அல்சர்  குணம்  ஆகிடுமாமே?ஆமா, ஆனா  தமிழன்  அந்தப்பால்லயும்  அஸ்கா கலப்பானே?


======================

20    டியர், இன்னைக்கு  எங்க  வீட்ல  அப்பாவும் , அண்ணனும்  இல்லைனு எப்டித்தெரியும்?

மகளிர்  தின  வாழ்த்து சொல்ல  போயிருப்பாங்கனு கெஸ்சிங்=======================

0 comments: