Wednesday, March 25, 2015

கமல் VS சேரன்

1  பெரும்பாலான பெண்கள்  ஆண்களுக்கு  ஏழரைகள்  தான்  என்பதை  நாசூக்காக  சொல்லவே   பெண்கள் தினம்  மார்ச் 8-ல்   கொண்டாடப்படுதோ?========================
2  பெண்களை  வெளிப்படையாகத்திட்டுபவர்களால் ஒருபோதும்  பெண்ணுக்கு  ஆபத்து  வராது..எல்லா ஆபத்தும்   பெண்களுக்கு  வாழ்த்து  சொல்பவர்களாலேதான்
======================
பெண்ணை  வெறுப்பவன், பெண்ணால்  பாதிக்கப்பட்டவன்  ஒதுங்கிப்போவான். பெண்ணை ரசிப்பவன், பெண்ணுக்கு  பாதிப்பை  ஏற்படுத்துபவன்  நெருங்கிவருவான்
====================
பப்பாளிக்காய்  பறித்து   அதன்  பாலை  அப்டியே  எடுத்து  பசும்பால் 50%  கலந்து  3 நாட்கள்   3  வேளை  அருந்தினால்  அல்சர் குணம்  ஆகும்
====================

5  உண்மையான  அன்பு  என்பது   நாம்  அன்பு  கொண்டவர்  மனம்  மாறினாலோ , நம்மை   விட்டு விலகினாலோ  அதே  அன்பை  காலம்  முழுக்க  வைத்திருப்பதே

==================
6  இங்கே இருக்கற எல்லா  ஆண்களும்  பொறுமைசாலிகளே! பொண்ணு.ங்க  பண்ற  அலப்பறைகளை  மவுனமா  பார்த்துட்டு  கம்முனு இருக்கானே?
============================
உனக்கு  வரப்போகும் “டார்லிங்” “யாமிருக்க பயமே” என அச்சுறுத்தும் “காஞ்சனா”வாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டால்  உன் குடும்பத்தில் “யாவரும் நலம்”
====================
தியாகு = நான்  முத  சம்சாரம்  கூடவே  போய்டறேன்


தாமரை = விடமாட்டேன்.உயிர்  உள்ளவரை போராடுவேன்
இதுக்கு என்ன தான்  வழி?
 2  கோடி  குடு


=====================


9  தியாகு  ஒரு  சந்தர்ப்பவாதி , சராசரி ஆண். அவரிடம்   தாமரை  போன்ற கவிதாயினி  எப்படி  ஏமாந்தார்  என்பது விடை  இல்லா  வினா.==================10  நல்லவேளை, சொல்வதெல்லாம்  உண்மை  நிகழ்ச்சிக்கு  தியாகு - தாமரையை  அழைக்கலை.தாமரை  மறை கழண்டிருக்கும்


===================


11  உன் எதிரி ஒரு ஆண் எனில் கவனமாக இரு.
உன் எதிரி ஒரு பெண் எனில் இரு மடங்கு எச்சரிக்கையோடு இரு


=============

12 50 ரூபாய்க்கு ஒரிஜினல் டிவிடியே வந்தாக்கூட 10 ரூபா எம்ப்டி டிவிடி 50 வாங்கி காபி பண்ணி 20 ரூபாக்கு வித்து 100% லாபம் பார்ப்பான் தமிழன்


==============

13 என்னை  யார்  எதிர்த்தாலும்  எனக்கு   கோபம்  வராது-சரத்அன்னைக்கு   விஷால்  எதிர்த்துப்பேசுனப்போ  செம  காண்டானீங்களே? அது  ஏன்?


================


14  மகளிர் தினத்தன்னைக்கு கல்யாணம் ஆகாத  கன்னிப்பொண்ணாப்பார்த்து   தேர்ந்தெடுத்து   வாழ்த்து  சொல்றான்  தமிழன்


==================

15  தமிழ்  ஃபாண்ட்  சப்போர்ட்  பண்ணாத  மொபைல்வெச்சிருக்காங்கனு தெரிஞ்சும் பொண்ணுங்க  கிட்டே “ ட்வீட் இன் தமிழ்”னு அசால்ட்டா  சொல்வான் தமிழன்=================


16  திவ்யதர்ஷினி  ஸ்கூல்யூனிஃபார்ம்   போட்டிருக்கு, ஓக்கே ,ஆனா ஸ்கூல்  பொண்ணு  மாதிரி  செயற்கையா  பேசுறது எரிச்சலா   இருக்கு==================


17  ஒரே  ஒரு  பார்வையால்  நாம்  கொண்ட அன்பை அன்பானவருக்கு  உணர்த்தி விட  முடிந்தால் நாம் தான்  உலகின் சிறந்த  சாமார்த்தியசாலி


===================18 உடல் நலம் சரி இல்லாதவரைப்பார்க்கச்செல்கையில் உன் கண்ணில் இருந்து வரும் கண்ணீரே அவருக்கு ஆகச்சிறந்த ஆறுதல்


=================


19 கமல்  விதை  விதைத்தார் , சேரன்   அறுவடை செய்தார்


====================


20  எதிர்காலத்தில்  தியேட்டரிலும்  படம்  ரிலீஸ் ஆகி, அதே நாளில்   டிவிடி  ஒரிஜினலும்  ரிலீஸ் ஆகும்.அப்போ  லாபம்  செமயா  இருக்கும்# கமலின் கனவு====================

0 comments: