
கோப்புப் படம்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கருத்து சுதந்திரம் தொடர்பான வழக்கில், சட்டப் பிரிவு 66-ஏ என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
சமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட பக்கங்களில் வெளியிடப்படும் கருத்துகள், விமர்சனங்கள் அவதூறாக இருந்தால் சம்பந்தப்பட்டவரை கைது செய்ய வழிவகை செய்யும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66ஏ முறையானதுதானா என்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்தியாவில் சுதந்திரமாக கருத்துகளை தெரிவிக்கவும் வெளியிடவும் பேச்சுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2000-வது ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66ஏ மற்றும் அதில் 2009-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி, சுதந்திரமாக கருத்துகள் வெளியிட தடை விதிக்கப்பட்டது.
இச்சட்டப் பிரிவின் கீழ் கைது செய்யப்படும் நபருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க வாய்ப்பிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், "சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துகள், விமர்சனங்கள் அவதூறாக இருந்தால் தொடர்புடையவரை கைது செய்ய வழிவகை செய்யும் சட்டப் பிரிவு 66-ஏ , அரசியல் சாசனத்துக்கு எதிரானது. பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்தை நேரடியாகப் பறிப்பதாகவே இது உள்ளது.
மேலும் இச்சட்டப்பிரிவில் உள்ள சில வார்த்தைகள் பொதுப்படையாக இருப்பது ஏற்புடையதல்ல. ஒருவருக்கு அவதூறாக தெரியும் விஷயம், மற்றவருக்கு அவதூறாக இல்லாமல் இருக்கலாம். எனவே இச்சட்டப்பிரிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66-ஏ ரத்தாகிறது" என நீதிபதிகள் தெரிவித்தனர்.
வழக்கு பின்னணி:
கடந்த 2012-ல், சிவசேனா முன்னாள் தலைவர் பால் தாக்கரே மறைவை அடுத்து மும்பையில் அக்கட்சியினர் நடத்திய கடையடைப்புப் போராட்டத்தை விமர்சித்து ஃபேஸ்புக்கில் கருத்து வெளியிட்ட ஷாஹீன் தாதா என்ற இளம்பெண்ணும் அதற்கு விருப்பம் வெளியிட்ட அவரது தோழியும் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, ஸ்ரேயா சிங்கால் என்ற சட்ட மாணவி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்த வழக்கில், கடந்த மே 2013-ல் உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில், சமூக வலைத்தளங்களில் தெரிவித்த கருத்துக்காக ஒருவரை கைது செய்யும்போது ஐ.ஜி அளவிலான உயர் அதிகாரிகளை கலந்தாலோசிக்காமல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என தெரிவித்தது.
தொடர்ந்து கடந்த பிப்ரவரி 26-ம் தேதி, இந்த வழக்கு நீதிபதிகள் சலமேஸ்வர், ரோஹின்டன் நரிமன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், 'தேசிய பாதுகாப்பு, தீவிரவாத அச்சுறுத்தல் போன்ற விஷயங்களுக்கு மட்டுமே தகவல் தொழில்நுட்ப சட்டம் பயன்படுத்த முடியும். சமூக வலைதளங்களில் மாற்று கருத்துகள், விமர்சனங்களை வெளியிடுவது குற்றமல்ல. இந்திய குடிமகன் தனது அடிப்படை பேச்சுரிமையை பயன்படுத்துவதை தடுக்க முடியாது.
இதை தடுக்கவும் மத்திய அரசு விரும்பவில்லை. இதற்கும் தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவுகளுக்கும் தொடர்பில்லை. இருப்பினும், சட்டப் பிரிவு 66ஏ துஷ்பிரயோகம் செய்யப்பட வாய்ப்பிருக்கிறது என்ற காரணத்துக்காக மட்டுமே அதை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என குறிப்பிட்டுவிடமுடியாது' என வாதிட்டார். அரசு தரப்பு வழக்கறிஞர் தனது இறுதி வாதத்தை நிறைவு செய்தார்.
நீதிபதிகள் தரப்பில்,சட்டப்பிரிவு 66-ஏவில் சில பொதுப்படையான சட்ட வார்த்தைகள் அடங்கியுள்ளன. அவ்வாறான வார்த்தைகள் அச்சட்டப்பிரிவை தவறாக பயன்படுத்த வழிவகை செய்யும் என தெரிவித்தனர். தொடர்ந்து நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.
நன்றி - த இந்து
- அரசியலமைப்பு சாசனத்தை மீறும் வகையில் ஒரு சட்டம் இயற்றப்பட்டால் அச்சட்டம் செல்லது என அறிவிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு உள்ளது என அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சட்டம் தெரியாது தான்தோன்றித் தனமாக கருத்துக்களை பதிவிடும் சில மரமண்டைகளுக்கு நன்றாக உரைக்கும் படி நீதிமன்றம் இத்தீர்ப்பை உரத்த குரலில் வெளியிட்டதில் மாடற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.about 4 hours ago · (3) · (0) · reply (0) ·Points2030
- GOVINDARAJANவாய்மையும் சில சமயம் வெல்லும் என்று சுஜாதா ஒரு கதை எழுதி இருக்கிறார். இம்முறை வாய்மை வென்று விட்டது. மகாராஷ்ட்ராவில் சில அரசியல் வாதிகள் தாங்கள் இந்த நாட்டின் மன்னர்கள் என்று நினைத்து கொண்டிருகிறார்கள். எப்போதும் உண்மை வென்று விடுவதில்லை இந்தியாவில். தினமும் செய்தி தாளை படித்தாலே இந்த உண்மை புரியும். ஆனாலும் இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.about 6 hours ago · (2) · (0) · reply (0) ·
முருகன் தில்லைநாயகம்
இனி மேல் இணைய தளங்களில் கருத்து பதிவிடுவோர் உண்மையான அவர்களது ஊர்களையும் படத்தையும் மறைக்க வேண்டியதில்லை.தைரியம் புருஷ லட்சணம்.about 7 hours ago · (4) · (0) · reply (0) ·Points4635- Saraasarisaamiபுதியன ஒன்றும் இல்லை இந்த தீர்ப்பில். உடனடி கைது கிடையாது. அது ஒன்றுதான் வித்தியாசம். மற்றபடி கேஸ் எல்லாம் போடுவார்கள். தீர்ப்பு வந்தபிறகு கைது செய்வார்கள். இதில் என்ன புதுமை உள்ளது?about 7 hours ago · (0) · (0) · reply (0) ·
- M.PARTHASARATHY.கருத்து சுநந்திரம் தேவை ஆனால் கட்டுப்பாடு அதைவிட தேவைabout 7 hours ago · (1) · (0) · reply (0) ·Points620
R.M.Manoharan Manoharan
தகவல் தொழில் நுட்ப சட்டப்பிரிவு 66-ஏ ரத்து இந்தியாவில் நீதி இன்னும் மர்ணிக்கவில்லை என்பதை தெளிவு படுத்துகிறது. நீதிபதிகள் சலமேஸ்வர், ரோஹின்டன் நரிமன் வணக்கத்திற்குரியவர்கள். சமூக வலைதளங்களின் கழுத்தை நெறுக்கிக்கொண்டிருந்த துரு பிடித்த சங்கிலி அகற்றப்பட்டுவிட்டது. அவைகள் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளன.about 8 hours ago · (1) · (0) · reply (0) ·Points5990Jalilmohamed Riyadh at Riyadh, KSA
எதற்கு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று தந்தார்கள் மூதாதையர்கள்.நாம் அடிமைகளாக ஊமையர்களாக நல்ல உழைப்பாளிகளாக வாழ்ந்திருக்கலாம்.கேவலப்பட்ட இந்த இந்தியமனிதர்கள் ஆண்டுதான்.மனிதர்களை வேறுபடுதிப்பார்கிரார்கள்.அடிமைகளாக நாம் எந்த மனிதனுக்கும் கீழ் வாழ வேண்டியதில்லை.நீதி துறைகளும் இப்போது நேர்மையோடு இல்லைabout 8 hours ago · (2) · (0) · reply (0) ·Points1030J K Sreenivasan Jaykay Balaji plastics Trading at own bussiness
" ஒருவருக்கு அவதூறாக தெரியும் விஷயம், மற்றவருக்கு அவதூறாக இல்லாமல் இருக்கலாம். " அருமையான விளக்கம் ஆனால் இதை கூட சட்ட நிபுணா்கள் சொல்லி தான் புரிந்து கொள்ளும் நிலையில் நம் கருத்து சுதந்திரம் இருக்கிறது ....about 8 hours ago · (0) · (0) · reply (0) ·Points720- Kumarஇப்போது கருத்துகளுக்காக பெண்ணை உள்ளே பிடிச்சி போட்ட மகாராஷ்டிர அசோக் சவான் அரசும், கருத்துகாக இன்னும் வழக்கு நடந்திக் கொண்டிருக்கும் UP ஆசம் காணும் என்ன சொல்ல போகிறார்கள்? பெருமாள் முருகனுக்கு இன்னொரு பிறப்பு கிடைக்குமா? இதை எல்லாம் விடுத்தது விஸ்வரூபம் பார்ட் 2 வுக்கு இந்த சட்டம் பொருந்துமா இல்லை 72 சங்கங்களுடன் பேசித் தான் படத்தை வெளியிட வேண்டுமா?about 8 hours ago · (2) · (0) · reply (0) ·Points1105
- Kodumudiமக்கள் ஊமைகளாகவும் மடையர்களாகவும் இருந்தால் அரசியல் மற்றும் மத தலைவர்களுக்கு கொண்டாட்டம். தட்டிகேட்பவனை தீவிரவாதி என்பதும், உரியமையை கேட்பனை குண்டர் என்பதும் இவர்கள் எடுக்கும் அஸ்திரம். வெறுமனே உண்டது உறங்கி சொரணை அற்று இருந்தால் வடிவேல் ஜோக்கில் வரும் "இவன் ரொம்ப நல்லவன்டா எவளவு அடிச்சாலும் தாங்குறான்". என்று ஆகிவிடும். யாருக்கு வேண்டும் சொரனையற்ற சோறும் நீரும் இளைஜர்களே உண்மையில் சரிஎன்று படால் மட்டும் செவி சாயுங்கள் இல்லையேல் சத்தம் வரும் திசை நோக்கி உங்கள் கூறிய கருத்து அம்பை விடுக்க தயங்காதீர்கள். கருத்து சொற்கள் பிரயோகிக்க படும் போதுதான் இன்னம் சில புது சிறகுகள் முளைக்கும். நாம் வணங்கும் கடவுளையே அரசியல் சாயம் பூசி லாபம் தேடும் ஈனர்கள் இவர்கள்.about 9 hours ago · (2) · (0) · reply (0) ·Points565
Seyed Muhammed Self-employed at Chennai
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்போம்.அத்தோடு 120 கோடிக்கு மேல் மனித வளம் கொண்ட ஒரு நாட்டில் அரசுகள் அவசரக் கோலத்தில் சட்டங்கள் இயற்றுவதும்.அதனால் மனிதன் காயப்படுவதும்,வதைபடுவதும்.பிறகு அந்த சட்டமே தவறு என முடிவு செய்து காலவதியாக்குவதும்/ஓரங்கட்டுவதும்/ரத்து செய்வதும் நாகரிக சமுகத்திற்கு சரியா?இது வளர்ச்சிக்கான வழி முறையா?யோசிக்க வேண்டிய பனியின் முனையில் நம் நாடுள்ளது.அரசியல் வழி காட்டல்,நீதி பரிபாலினம் என நமக்கான அரசியல் சாசனம் நூற்றுக்கும் மேல் திருத்தங்களை கண்டுள்ளது.இதுவே சட்ட விதிகளுக்கான அடிப்படைகளுக்கு எதிரானது விரோதமானது.திருத்தம் என்பது நடைமுறை அவசியங்களின் நிர்ப்பந்தத்தால் விளையும் அவசர கால நடவடிக்கை.அது தொடரக் கூடாது.ஆனால் நம் நாட்டில் அவசர கால திருத்தங்கள் சட்டங்களாக சட்டத்திற்கான சாசனமாக மாறிக் கொண்டிருக்கிறது.இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.இது குறித்த ஒரு கவலையை நமது ஜனாதிபதியும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் அவசர சட்டம் பற்றிய கருத்தில் தெரிவித்திருந்தார்.ஆதலால் எங்களைப் போன்ற சாமான்யர்களின் எதிர்பார்ப்பு திருத்தம் அல்ல.மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் சாசனம்.about 9 hours ago · (5) · (0) · reply (0) ·Points2790- NATHAN PRAKASHகருத்து சுதந்திரம் கருவருக்கப்படுவதை தடுத்துள்ளது உச்ச நீதிமன்றம் ,தீர்ப்பை வரவேற்போம் ,நல்ல கருத்துள்ள உண்மைகளை உலகுக்கு வெளிப்படுத்துவோம்
0 comments:
Post a Comment