சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமிக்கு ஆதரவாக, பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் ஆதரவுக் குரல் பெருகியவண்ணம் உள்ளது.
இதற்காக, #WeStandWithTrafficRamasamy என உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக், சென்னை அளவிலான ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ஞாயிற்றுக்கிழமை மதியம் தொடங்கி முன்னிலை வகித்துள்ளது.
டிராபிக் ராமசாமி மீதான நடவடிக்கையை விமர்சித்து பலரும் ட்விட்டர் பதிவுகளை இட்டு வருகிறார்கள். அத்துடன், டிராபிக் ராமசாமி இதுவரை சமூக ஆர்வலராக மேற்கொண்ட செயல்பாடுகளை அவர்கள் நினைகூர்ந்து வருகின்றனர்.
முன்னதாக, காரை உடைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக வேப்பேரி ஹோட்டல் உரிமையாளர் கொடுத்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட டிராபிக் ராமசாமி, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், அவரது உடலில் சர்க்கரை அளவு குறைந்ததும் சிறுநீரக பாதையில் பிரச்சினை இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
இதையடுத்து, டிராபிக் ராமசாமியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து உடனடியாக அண்ணாசாலையில் உள்ள பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றி, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இதன் தொடர்ச்சியாக, நேற்று காலை 9 மணி அளவில் டிராபிக் ராமசாமி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவரது உடல்நிலை நன்றாக இருக்கிறது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியை அதிகாலையில் கைது செய்து சிறையில் அடைத்ததற்கான நியாயமான காரணத்தை அரசு தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது நினைகூரத்தக்கது.
- K.J.Sebhastianவெட்கம். 6 கோடி மனிதர்களும் முட்டாள்கள் என்ற எண்ணம் தான் எல்லா அத்துமீறல்களுக்கும் கரணம்about 17 hours ago · (1) · (0) · reply (0) ·
- Gowthul Alamஎன்ன ஒரு நல்ல மனிதர் நாம் கடவுளிடம் அவர் நலமாக வேண்டுவோம்about 19 hours ago · (0) · (0) · reply (0) ·
Ravi Jayavijayan
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி. சமூக சேவை செய்யும் நல்லவர் சிறைக்கு உள்ளே. தண்டிக்கப்பட்ட குற்றவாளி சிறைக்கு வெளியே. வாழ்க தமிழ்நாடு. ஜெ ரவிPoints1595Vasanthan Manivannan Engineer at Naraiuran Controls India Pvt Ltd
மக்கள் முதல்வரை விமர்சித்தல் தமிழக முதல்வர் சும்மா இருப்பர ஒரு நாட்டுக்கு ஒரு முதல்வர் தன இருக்க வேண்டும். புகழ் படும் புலவர்கள் நடத்தும் ஆட்சியில் இவருக்கு ஏன் இந்த வேலைPoints160S Sivakumar Sankaranarayanan Librarian at Doordarshan National (DD1)
தமிழக காவல் துரையின் அவல நிலை..Points135- Kalyanபோக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கின்ற டிஜிட்டல் பேனர்களை எடுக்க சொல்லி வற்புறுத்தி வருகிறார்.இதில் எந்த கட்சி என்று பேதம் பார்க்காமல் சமூக கண்ணோட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு பெரியவரை அதிகாலையில் போய் தமிழக காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்து இருக்கிறார்கள்.அ.தி.மு.க ஆட்சியை நினைக்கும் போது "விநாசகாலே விபரத புத்தி" நினைவுக்கு வருகிறது.Points165
Ramachandran Textiles
இவர் வயதானவர் அது மட்டுமல்ல இவர் சமூக ஆர்வலர் இவர் மீது பளிவாங்கும் நோக்கத்தில் சிலர் வேன்டுமென்ரே பொய் குட்றம் சாட்டு கிரார்கள் ஆகயாள் இவருக்கு தயவு செய்து மக்களுடய ஆதாரவு வேன்டுகிரேன். ராமசந்திரன் பிள்ளை மதுரை தமிழ்நாடு கன்சூமர் தலைவர்a day ago · (1) · (0) · reply (0) ·- Pulliyappanநீதி மன்றமும் இல்லாதிருந்தால் இந்த ஆட்சி கொடுங்கோல் ஆட்சி தான்.எப்பயாவது அவரை வெளியே நடமாட முடியாத அளவுக்கு படுக்க வைக்க பினாமி ஆட்சி தலைவி எண்ணப்படி செய்கிறது.Points430
- Clitusநல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய குடிமகன்.நல்ல இந்திய கa day ago · (1) · (1) · reply (0) ·
- SUBRAMANIANஇப்போதும் சொல்கிறேன் தமிழனுக்கு அறிவு குறைய காரணம் இந்த மீடியா உலகம்தான் .தயவு செய்து கேட்க்கிறேன் உண்மையை மட்டும் உரக்க சொல்லுங்கள் ,அம்மா துதி பாடாதீர் . எதிர்கால சமுகத்திற்கு நாம் எதாவது நல்லது செய்து விட்டுப்போவோமே .a day ago · (0) · (0) · reply (0) ·
- Laxlaxmanaperumalநல்ல தமிழ்மகன் (ஜயா டிராபிக் ராமசாமி)Points455
- Jayarathanட்ராபிக் Ramasamij அவர்கள் மதிப்புமிகுந்த சமூக சீர் திருத்ததவாதி, நாம் அனைவரும் அவர்க்கு பாதுக்காப்பாகவும் முழு ஆதரவும் தர மக்கள் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கவேண்டும் மக்கள் சேவைல்யில் க. ஜெயரதன் - சமூக ஆர்வலர் லிபர்ட்டி பௌண்ட்செசன்2 days ago · (2) · (0) · reply (0) ·
- JAIKANTHவயதையும் அனுபவித்து வரும் நோயையும் காரணம் காட்டிதான் இந்த மூதாட்டி ஜெயலலிதா ஜாமீன் பெற்றார். அதுவும் கண்டிசனல் பெயில் கொடுத்தார்கள் . இப்போது எண்பத்து இரண்டு வயது முதியவரை எந்த அடிபடையில் கைது செய்தார்கள்? விடிந்தால் ஓடி ஒளிந்து கொள்வாரா? விடியும் வரைகூட கருணை காட்ட தெரியாத துறைதான் காவல் துறையா? காஷ்மீரில் 150 பேரை கொன்ற தீவிரவாதியை அந்த அரசு விடுதலை செய்யுமாம் . ஆனால் மக்கள் சேவையாற்றும் ராமசாமி போன்றவர்களுக்கு கொலை மிரட்டல் விட்டார் என்று கைது நடவடிக்கை. இதுதான் நாம் பெற்ற சுதந்திரமா? இதைதான் இந்திய அரசியல் அமைப்பு பெருமை பேசுகிறதா? இந்த விசயத்தில் போலீஸ் நீதி மன்ற தீர்ப்பை மீறி உள்ளது.காவல் துறை செய்யவேண்டிய செயலை செய்து நீதியை காப்பாற்றினால் அவர்களுக்கு சிறைதான் பரிசா?2 days ago · (4) · (0) · reply (1) ·
Arul Siva
பத்திரிக்கைகள் உண்மையான தரவுகளை தருகிறதா என்கின்ற சந்தேகம் வலுக்கிறது. மதிபிற்குரிய சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியை - புரசைவாக்கம் பகுதியில் இருந்த பதாகைகளை அகற்றுமாறு போராட்டம் நடந்தபொழுது ஏற்பட்ட தகராற்றில் - வேப்பிரி காவல் நிலையத்தில் புகர் செய்யப்பட்டதன் பெயரில் கைது செய்யப்பட்டார். இதற்கும் முன்னால் முதல்வர் விட்டிற்கு அருகில் பதாகைகளை அகற்றுமாறு போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டார் என மற்ற கட்சியின் தலைவர் திரித்து கூறுவதை பரப்புவதா?
நன்றி - த இந்து
0 comments:
Post a Comment