Tuesday, March 31, 2015

ATM நம்பர திருப்பி போட்டா போலிஸ் வருமா?

1  இன்னைக்கு என்ன சமையல்?பூரிதொட்டுக்க?இன்னொரு பூரிபுரியல.
குருமா எதும் செய்யல.

===================

2 டேய்.பரிமளா னு எழுதச்சொன்னா பரிமலா னு எழுதி இருக்கே?


டீச்சர்.பரிமலா லட்டு மாதிரி இருக்கும்.அதான் லட்டுக்கு வரும் ல போட்டுட்டேன்


===================

3 ஒரு வரன் occupation - not working. னு இருக்கே?


நல்லா பாருங்க மேடம்.சினிமா கதைக்கருவுக்கான knot making worker ஆக இருக்கப்போகுது


================

4 மிஸ்! இப்டி டால் அடிக்கற மாதிரி டிரஸ்,நகை போட்டிருக்கீங்களே ?உங்க பேரென்ன?


ஆண்"டாள்"


================

5 அந்த ரைட்டர் கதை எழுதுனா வாசிப்பபவரை அப்டியே உள்ளே இழுத்துக்குவாராம்அய்யய்யோ.எப்போ திருப்பி அனுப்புவாரு?


===============

6 டியர்.நீங்க எனக்குத்தெரியாம ஒரு ஆண்ட்ராய்டு போன் வெச்சிருக்கறதை கண்டுபிடிச்ட்டேன்.நல்ல வேளை.பயந்துட்டேன்


=================

7 டாக்டர்.பன்றிக்காய்ச்சல் எனக்கு குணம் ஆகிடுச்சுஅப்டியா?பன்றி க்கு நன்றி சொல்லுங்க.எனக்கு ஒரு ஹார்லிக்ஸ் சொல்லுங்க


===============

8 இன்ஸ்பெக்டர்.குறிஞ்சி மலரை 5 நாளா காணோம்யோவ்.அந்த மலர் பிங்க்கி யா கன்வெர்ட் ஆகி 6,நாள் ஆகுது

================

9 குருவே!மனைவி நீண்ட ஆயுளோடு வாழ கணவர் விரதமிருக்கும் ஏதேனும் நோன்பு உண்டா?ஈரேழு 14 லோகத்திலும் அப்டி ஒரு கணவரே இல்லை சிஷ்யா!

==============

10 சார்! நீங்க டெய்லி காலைல வாக்கிங் போவீங்களா? சூர்ய நமஸ்காரம் செய்வீங்களா?


2ம் இல்லை. பொண்ணுங்களுக்கு காலை வணக்கம் வைப்பேன் FB ல============


11 ஏம்ப்பா? மேரேஜ்க்கு  முன்  அறிவோம் ஃபிகர்  போட்டுட்டு இருந்தியே, இப்போ  என்ன பண்றே?

அரிவோம்   வெஜ்டபிள்ஸ்னு  சம்சாரத்துக்கு  எடுபுடிவேலை


=============


12 லவ் ஃபெய்லியர்ஆண்கள்  தாடி  வளர்ப்பதுபோல் பெண்கள்  ஏன்  சோகப்படறதில்லை?பொதுவா  பொண்ணுங்களுக்கு  ஆம்பளைங்களை  தாடிவிட வெச்சுதான்  பழக்கம்


======================


13   சார்! ஆம்பளை  தன் ரகசியத்தை உளறிடுவானாமே? நிஜமா?

 கண்ணா! உளர்ற  மாதிரி  நடிப்பான்,அதை  பொண்ணுங்க  நம்பி ஏமாந்துடுவாங்க================


14  காதலியைவிட  அழகான பொண்ணு கிடைச்சா  இந்த காதலிய உட்டுட்டு அந்த அழகியை காதலிக்க மாட்டான் ஆண் என்பது  நிஜமா?

ஆமா.பழைய காதலியை  விட மாட்டான்=================

15  டாக்டர்! ஆ”லிவ்” ஆயில் ல சமைச்சா  நீண்ட நாள்  உயிர்  வாழலாமா? அதிர்ச்சியான நியூசா இருக்கு?

 மேடம்! நீங்க  சமைப்பீங்க  என்பதே ஷாக் நியூஷ்


==================


16  மாப்ளை! பொண்ணை  நேர்ல பார்க்காமயே   அழகிய  தேவதைனு எப்டி சொல்றீங்க?


FB ல  அழகிய  தேவதைனு அக்கவுண்ட்  வெச்சிருக்கே?===================

17  ATM நம்பர திருப்பி போட்டா போலிஸ் வருமா?


நெம்பரை  நேரா  போட்டா  பணம் வரும். திருப்பிப்போட்டா  பாஸ்வொர்டு  ராங்க்னு  வரும், அம்புட்டுதான்


=========================


18    டியர்!  நான்  சாகும்போது கடைசியா  உன்  முகத்தைப்பார்க்கனும்.

அதெப்பிடிடா  முடியும்?  புருசன்   ஒத்துக்க மாட்டானே?=====================


19  மிஸ்!  ஸ்டைலுக்காகவா  சில  முடியை  மட்டும்  முன்னால  தள்ளி  விட்டிருக்கீங்க?


 யா. பின்னால  தள்ளி  விட்டா அது  ஜடை, முன்னாலன்னா ஜாடை


====================


20   டியர்! தோசை ஏன் ரெண்டா பிஞ்சு இருக்கு?அத்தான்.தோசை "முருக"லா வேணும்னீங்களே? அதான் இது வள்ளி தோசை.இது தெய்வானை தோசை


===================

0 comments: