Wednesday, March 11, 2015

சிவகார்த்திகேயன் அடுத்த விஜய்?

1  இதுவரை ட்வீட்சே போடாம புதுசா அக்கவுன்ட் ஆரம்பிச்ச பொண்ணு கிட்டே கூட " உங்க ட்வீட்ஸ்.எல்லாம் நைசுங்க!"னு சொல்வான் நெட் தமிழன்============2 நான் இனிமே ஒவ்வொரு ஜோக் ட்வீட் போட்டதும் 387 பெண் ட்வீட்டர்சுக்கும் மென்சன் போட்டு ஒரு ஸ்மைலி கூட போடல , ஒர்த்தா இல்லியா?னு கேட்கப்போறேன்===============3 முன்னே பின்னே லாட்ஜுக்கே போகாதவன் கிட்டே முதல் இரவில் சம்சாரம் சிங்கிள் காட்டா? டபுள் காட்டா?னு கேட்டுச்சாம்===============4 நைட் படுக்கும்போது 25700 பாலோயர்ஸ் இருந்தாங்க.காலைல பார்த்தா 100 பேரைக்காணோம்.புலிக்குட்டிங்களா இருக்குமோ?;-))
==============5 தன்னோட முன்னேற்றத்துக்கான பாதையில் எப்படி பயணிக்கலாம்?னு சிந்திக்காம எதிரி தோத்துட்டா பரவாயில்லைனு நினைப்பான் தமிழன் # பாகிஸ்தான் மேட்ச்
===============6 கல்யாணப்பந்தியில் அமரும்போது அருகில் சுகர் பார்ட்டியும் எதிரில் பிகர் பார்ட்டியும் இருக்கும்படி அமர்
===============
7 மண மேடை ல டெக்ரேட்டட் பூவிலிருந்து ஒரு பூ எடுத்துக்குடுத்து ஒருத்தன் பிகரை கரெக்ட் பண்ணிட்டிருக்கான்.இந்த ஐடியா நமக்குத்தோணாம போச்சே சே!
===============
8 குடித்து விட்டு மனைவியை உதைத்த புதின் ஜெர்மன் டெலிவிஷனில் புதிய ஆவணப்படம் # வேற கில்மா வீடியோ ஏதாவது ரிலீஸ் ஆகி இருக்க்கா?
==============
9 கல்யாண மண்டபத்தில் கைக்குழந்தையோட இருக்கும் பொண்ணுங்க கிட்டே எவனெவன் எல்லாம் நிஜமாவே குழந்தையைக்கொஞ்சறான்?னு நோட் பண்ணிட்டு இருக்கேன்
==============
10 ஸ்பாம் ட்விட் பிரச்சனையை சரி செய்ய உதவின அனைவருக்கும் நன்றி. காலைல பயத்தில ஊரை விட்டே ஊர்மிளாவோட போய்டலாம்னு இருந்தேன்:-)"============

11 மணப்பெண்ணின் தோழிகள் எல்லாரையும் சைட் அடிக்கவே 1 மணி நேரம் ஆகும் போல.இதுல கடலை வேற போடனும்.ஆம்பளைக்குதான் எத்தனை பணிச்சுமைகள்


==============
12 நெத்திச்சுட்டி அணிந்த அழகிகள் நகையை இடம் சுட்டி பொருள் விளக்குவது போல் அவ்வப்போது அதை சரி செய்கிறார்கள்=============
13 காக்கிசட்டை ஹிட் ஆகிட்டா சிவகார்த்திகேயன் அடுத்த விஜயாம்.ஆண்டவா!,எது நடந்தாலும் நல்லதுக்கே;-))
===============14 காக்கிசட்டை ,வருத்தப்படாத வா் சங்கம் அளவுக்கு ஓடிட்டா இன்னொரு ஆபத்தும் இருக்கு.ஸ்ரீ திவ்யா ராசியான ஜோடி ஆகி கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிடும்=============
15 நைட் மண்டபத்துல பிகருங்க போட்டிருந்த நகைகளை எல்லாம் காலைல பிகரோட அம்மா போட்டிருக்கு.யாரை ஏமாத்தப்பாக்கறீங்க?==============

16 கல்யாண மண்டபத்தில் சுமாரா 1000 பொண்ணுங்க சராசரியா 30 பவுன் போட்டிருந்தாலும் 30000 பவுன் .750000000 ரூபா.போலீஸ் பாதுகாப்பே இல்லை


===============

17 பெரும்பாலான கல்யாணப்பொண்ணுங்க முகூர்த்தப்பட்டுப்புடவையா மங்களகரமா மஞ்சள் புடவை கட்டாம சிவப்பு/மெரூன் தான் கட்டறாங்க


=================

18 டாஸ் வென்றது இந்தியா - முதலில் பேட்டிங்! #IndvsSA" # கப்பை ஜெயிக்கறமோ இல்லையோ டாஸ் ஜெயிச்சடறோம்


===============


19 ஒட்டியாணம் கற பேர் ல நிறைய பொண்ணுங்க தங்க நிற கவரிங் பெல்ட் போட்டு மண்டபத்தில் சுத்திட்டு இருக்குங்க


==============

20 கழுத்துல மைனர் செயினோ மேஜர் செயினோ ஒருத்தன் போட்டிருந்தா சர்ட் பட்டன் ரெண்டை கழட்டி விட்டுக்கறான்.டேய்

==================

0 comments: