Monday, March 02, 2015

நான் ஆளான தாமரை, இன்னைக்கு நைட் பூரா தூங்கல


அதிகாலையில் தினம் நீ எழுந்து விட்டால் வெற்றிமலையின் அடிவாரத்தில் இருக்கிறாய் என்று அர்த்தம்

===========

பெற்றோரை வணங்கி அவர்களை மதித்து அவர்கள் சொல் கேட்டு நடந்தால் வெற்றிக்கனி உன் உள்ளங்கையில்.இது விநாயகர் காட்டிய வழி!


=============

3
சன் டி வி நேசமங்கையர்க்கரசி யின் ஒரு.வருட ஆன்மீக உரை கேட்டதில் நான் தெரிந்து கொண்டது 1 மேடம்ட்ட.365 பட்டுப்புடவை 2 நெக்லஸ்.15, இருக்கு


==============

4  சாமிக்குப்படைக்க கற்பூர  வாழை  வாங்கிட்டேன், கூந்தல்ல  கற்பூரமுல்லை  சூடிக்கிட்டேன், தனியா  எதுக்கு கற்பூரம் ( சூடம்) வாங்கனும்னாளாம்  


==============

5  மாமனார்  வீட்டுக்குப்போய் சாப்ட்டா  கேவலம்னு வீம்பா இங்கயே  இருந்துட்டு சம்சாரம்  பார்சல்  கொண்டு வந்தா  தன் வீட்டில் சாப்டுவான் தமிழன்


================


6  பொண்ணுங்க சேலைத்தலைப்பு  லேசா  விலகுனாலே பதறி  சரிசெய்வாங்க.மானாட மயிலாட ல நமீதா ஜாக்கெட்டை 5 இஞ்ச் தோள் ல இருந்து  இறக்கி இருக்கு
===================


கல்யாணம் ஆன  பொண்ணுங்க   ஒரு பாதுகாப்புக்காக  தங்கள்  குழந்தை  ஃபோட்டோவை டிபியா  வெச்சாக்கூட  சிங்காரவேலனா மாறி  பார்த்துக்குவான் தமிழன்


==================


பெற்றோருக்கு மரியாதை செலுத்தினால் ,அவர் சொல் கேட்டு நடந்தால் எல்லா நற்பண்புகளும் தானாக வந்து சேர்ந்திருக்கும்

===============மீன ராசி அன்பர்களே! பெண்களால் இன்னைக்கு ஆபத்து வருமாம்.சம்சாரத்திடம் உஷாராக இருக்கவும்


=================


10  ஷமிதாப் விருதுக்கு அனேகன் கலெக்சன்/கமர்ஷியல் ஹிட்டுக்கு .தனுஷ் கலக்கும் கமல் பார்முலா


================

11 ரசிகர்களைக்கவரும் படம் ஷேர் மார்க்கெட் மாதிரி.ரசிகைகளைக்கவரும் படம் ம்யூச்சுவல் பன்ட் மாதிரி


===============

12 பேக் யூ நெக் ஜாக்கெட்டில் உன் கூந்தல் ஒத்தை ஜடையாய் பாய்ந்து கிடப்பது கரும்பு அம்பை நாணில் ஏற்றிய வில் போல் காட்சி அளிக்கிறது


================

13 தன் பேருக்கு முன்னால் ஸ்ரீ ஸ்ரீ என பட்டப்பேரை போட்டுக்கொண்டவர்கள் ஸ்ரீ தேவி ,ஸ்ரீ திவ்யா ரசிகராகவும் இருக்கலாம்


=============


14 புது கெட்டப்பில் புலி பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில்.ஐ ஆம் வெய்ட்டிங்


=============


15  மாமூல் மசாலா வாக இல்லாமல் 1000ல் ஒருவன் ,2ம் உலகம் போல் சயின்ஸ் பிக்சன் த்ரில்லரில் முதல் முறையாக தோன்றும் புது கெட்டப்பில் புலி


===============


16  காதலை கண்கள் மூலம் வெளிப்படுத்துவதில் டாப் கமலா? கார்த்திக்கா? 


அது சரியா தெரில.ஆனா கரெக்ட் பண்றதுல கமல் தான் முன்னிலை      


===============


17  ரசிகர் மன்றம் இல்லாமயே இத்தனை ரசிகர்கள் பெற ஏதாவது ட்ரிக் வெச்சிருக்கீங்ளா ? அஜித் = பொதுவா நான் ட்ரிக் பன்றதில்லை.இப்போதைக்கு ஹாட்ரிக்் 

=================18  அசாதாரணமான வெற்றி விளம்பர விரும்பிகள் ,பிரம்மாண்டத்தின் முன் எளிமையான வெற்றியாகத்தெரியும் #,ஆம் ஆத்மி ,அல்டிமேட் ஆத்மி===============


19
நீ ஊர் சுற்றிக்கொண்டே இருந்தால் வெற்றி தேவதை உன் எதிரியுடன் சுற்ற கிளம்பி விடுவாள்


================


20 பிஜேபி = நான் ஆளான தாமரை


 ஆம் ஆத்மி = இன்னைக்கு நைட் பூரா தூங்கல # 10 2 15  டெல்லி  ரிசல்ட்

=======================
 

0 comments: